உஷார் தமிழா உஷார்!
சதுரங்க வேட்டை மோசடிகள்
மானாட
மயிலாட, சூப்பர் சிங்கர்களுக்குப் போட்டியாக தமிழகத்தில் 'மோசடி’களும்
ஏகப்பட்ட சீஸன்களைத் தாண்டி ஓடிக்கொண்டே இருக்கின்றன. பாரீஸில் ஈஃபிள் டவரை
இரும்பு வியாபாரியிடம் விலைக்கு விற்ற 'அடேங்கப்பா டுபாக்கூர்’கள் உண்டு.
அதற்குச் சற்றும் சளைக்காமல் சென்னையின் எல்.ஐ.சி கட்டடத்தை விலை பேசிய
கில்லாடிகள் இங்கு உண்டு. செய்தி, சினிமா, அக்கம்பக்க அனுபவங்கள்... என
எவ்வளவுதான் 'அலர்ட்’ செய்தாலும், ஏரியாவாரியாக வருடம் முழுக்க புதுப் புது
பாணிகளில் நடந்துகொண்டே இருக்கின்றன 'சதுரங்க வேட்டை’ மோசடிகள். எந்த
விஷயத்தையும் அவ்வப்போது அப்டேட் செய்ய வேண்டுமே. அப்படி