இந்தியாவின் நான்கு திசை மாநிலங்களிலும் பெண் முதல்வர்கள் வீற்றிருக்கும் கம்பீரத் தருணம் இது. அந்த ஆளுமைகளின் வாழ்க்கையும் வெற்றித்துளிகளும் சுருக்கமாக இங்கு..!
மம்தா பேனர்ஜி, மேற்கு வங்க முதல்வர்
1955-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ம் தேதி, கொல்கத்தாவின் அந்த சராசரி பிராமணக் குடும்பத்தில், ப்ரமலீஸ்வர் பேனர்ஜி மற்றும் காயத்ரி தேவி தம்பதிக்கு பிறந்தவர், மம்தா பேனர்ஜி. அப்பா ஊட்டிய ஆர்வத்தில் அரசியல் ஆசை ஊற்றெடுக்க, 15 வயதில் அரசியல் பற்றியும், சட்டம் பற்றியும் பேசவும், தெரிந்துகொள்ளவும் ஆரம்பித்தார். கொல்கத்தாவின் ஜோஷ் சந்திர சதிரி சட்டக் கல்லூரியில் சட்டம் முடித்தார். படிக்கும் காலத்திலேயே காங்கிரஸ் கட்சியின் மாணவ அமைப்புக்குத் தலைவரானார். 1976 முதல் 1980 வரை