""ஹலோ தலைவரே...… ராஜ்யசபா தேர்தலில் ஜெ. முதலில் எடுத்த முடிவிலிருந்து பின்வாங்கினாலும், தமிழகத்தில் அ.தி.மு.க கூட்டணியைத் தக்கவைத்துக் கொண்டதோடு, தேசிய அளவிலும் கவனிக்கிற அளவுக்கு மூவ் நடந்திருக்குது.''
-
22 ஜூன், 2013
வெள்ளிக்கிழமை (ஜூன்-14) மாலை நேரம். நமது செல்ஃபோனுக்கு வந்த வெளிநாட்டு அழைப்பு அலறியது. குவைத் சிறையில் இருக்கும் முத்துப்பேட்டை சுரேஷ், மன்னார்குடி காளிதாஸ் இருவரையும் செவ்வாய்கிழமை தூக்கில் போடப்போறாங்க. அவர்களது தண்டனையை குறைக்கும் கருணை மனு மன்னரிடம் நிலுவையில் இருக்கும்போதே தண்டனையை நிறைவேற்றப்போறாங்க. எப்படியாவது தடுத்து நிறுத்துங்க...''
""இது சம்பந்தமான ஆவணங்களை எங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள், நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்வோம்'' என்று அவர்களுக்கு நம்பிக்கையூட்டினோம்.
அதைத் தொடர்ந்து அடுத்த 10-வது நிமிடம் குவைத்தில் இருந்தே தொடர்புகொண்ட சுரேஷின் அப்பா சண்முகசுந்தரம்... ""என் மகன் சுரேஷ், மன்னார்குடி காளிதாஸ், இலங்கை பெண் பிரேமலதா ஆகியோர் இணைந்து இலங்கைப் பெண்ணான பாத்திமாவை 2008-ம் ஆண்டு கொலை செய்ததாக சொல்லி கைது செய்யப்பட்டனர். குற்றம் செய்ததாக கருதி சுரேஷ், காளி தாஸ் இருவருக்கும் தூக்குத் தண்டனை என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது. இந்திய இலங்கை தூதரகம் மூலம் இறந்த இலங்கைப் பெண் பாத்திமா குடும்பத்திடம் பேசினோம். முடிவில் ரூ.12 லட்சம் பணம் கொடுத்துவிட்டால் தூக்குத் தண்டனையில் இருந்து விடுதலை, தண்டனை குறைப்பு செய்ய கடிதம் கொடுப்பதாக சொன்னார்கள். அதன்படி பணம் கொடுத்தோம். அதன்பிறகு, "இந்த இருவருக்கும் மரண தண்டனை கொடுப்பதால் எங்கள் மகள் பாத்திமா உயிருடன் வரப் போவதில்லை. அதனால் சுரேஷ், காளிதாஸ் ஆகியோர் மீது கருணை கூர்ந்து இருவருக் கும் தண்டனை குறைப்பு செய்ய சம்மதிக்கிறோம்' என்று பாத்திமா குடும்பத்தினர் குவைத் மன்னருக்கு கடிதம் கொடுத்தனர். 3 ஆண்டுகளாக அந்த கருணை மனு மன்னரிடம் கிடப்பில் உள்ளது.
இந்த நிலையில்தான் வெள்ளிக்கிழமை சிறைக்கு வந்த சிறை அதிகாரிகள் வேறு வழக்கில் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய மூவருடன் சுரேஷ், காளிதாஸ் இருவரையும் சேர்த்தே அழைத்துச் சென்றுள்ளனர். இது சம்பந்த மாக இந்திய எம்பசி அதி காரிகளிடம் நேரில் போய் கேட்டால் சரி யான பதில் இல் லை. எங்கள் பிள்ளை களை செவ்வாய்க் கிழமை மதியம் (இந்திய நேரப் படி) 2.30-க்கு தூக்கு போடப்போகிறார்கள், அவர்கள் உயிர்களை காப் பாற்றுங்கள்'' என்று கதறினார்.
வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணிக்கு வழக்கு சம்பந்தமான ஆவணங்கள் நமது மெயிலுக்கு வந்து சேர்ந்தன. இந்த ஆவணங்களை வைத்துக்கொண்டு நாகை தி.மு.க. எம்.பி. விஜயனை உடனே தொடர்புகொண்டோம். "உங்கள் தொகுதி முத்துப்பேட்டைக்காரரை தூக்கு கயிற்றிலிருந்து காப்பாற்றுங்கள். தமிழர் களின் உயிர்களை காப்பாற்றுங்கள். காலம் இல்லை. உடனடியாக நடவடிக்கையில் இறங்குங்கள்' என்று அனைத்து விபரங்களையும் போனில் சொன்னோம். அப்போதே ஆவணங்களை எம்.பி.விஜயனுக்கு ஃபார்வர்டு செய்தோம்.
இந்த ஆவணங்களுடன் ஒரு கடிதம் வைத்து பிரதமர் அலுவலகத்திற்கும், மத்தியஅமைச்சர் வயலார் ரவிக்கும் அனுப்பியதுடன் போனிலும் பேசி தமிழர்களை காப்பாற்ற கோரிக்கை வைத்தார் விஜயன் எம்.பி. அடுத்த 10-வது நிமிடத்தில் மீண்டும் நம்மை தொடர்பு கொண்ட விஜயன் எம்.பி., ""பிரதமர் அலுவலகம் என் கடிதத்தை பெற்றுக் கொண்டதாக பதில் அனுப்பிவிட்டார்கள். விரைந்து நடவடிக்கை இருக்கும். சனிக்கிழமை குவைத்தில் அரைநாள்தான் வேலை நாள். அதற்குள் நடவடிக்கை எடுக்க துரிதப்படுத்தியுள்ளோம்'' என்றார் நம்பிக்கையோடு.
சனிக்கிழமை (ஜூன்-15). நம்மை தொடர்பு கொண்ட விஜயன் எம்.பி. ""மீண்டும் அமைச்சரிடம் பேசியிருக்கிறேன். நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் குடும்பத்தினரை நம்பிக்கையுடன் இருக்கச் சொல்லுங்கள்'' என்றார் உறுதியாக.
ஞாயிறு (ஜூன்-16). காலை நம்மை தொடர்பு கொண்ட சுரேஷின் அப்பா சண்முக சுந்தரம்... ""தண்டனையை நிறைவேற்ற அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைமுறைகள் எல்லாம் முடித்துவிட்டு தனியறையில் அடைத்து வைத்துள்ளனர். பயமா இருக்கு'' என்றார். ""நம்பிக்கையுடன் இருங்கள். உங்கள் எம்.பி. விஜயன் மூலம் நடவடிக்கை கள் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது'' என்று நம்பிக்கை யூட்டினோம்.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு நம்மை தொடர்புகொண்ட சண்முகசுந்தரம்... ""தம்பி ரொம்ப நன்றி. எங்கள் பிள் ளைகளை தண்ட னை நிறைவேற்றும் அறையில் இருந்து அழைத்து வந்து பழைய செல்லில் அடைத்துவிட்டார் கள். சிறையிலும் எம்பசி அம்பாசிடரிட மும் போய் கேட்டேன். "உங்கள் பிள்ளை களுக்குத் தூக்குத் தண்டனை இல்லை' என்று சொல்லி இருக்கிறார்கள். நம்பிக்கை பிறந்துவிட்டது. எங்கள் பிள்ளைகளின் உயிர்களை காப்பாற்றிய நக்கீரனுக்கும் முழு முயற்சி எடுத்துக்கொண்ட தி.மு.க. எம்.பி. விஜயன் மற்றும் இந் திய அரசுக்கும் மற்ற வர்களுக்கும் நன்றி...'' என்று தழுதழுத்தார்.
அதன்பிறகு நாம் எம்.பி. விஜயனிடம் தொடர்புகொண்டு நன்றி சொன்னோம். "எனக்கும் அம்பாசிட ரிடம் இருந்து மெயில் வந்துள்ளது. இந்த முயற்சியை எடுக்கத் தூண்டிய நக்கீரனுக் குத்தான் நன்றி சொல் லணும்' என்றார்.
இந்த நிலையில் சுரேஷின் அம்மா மல்லிகா நம்மிடம்... ""என் பிள்ளையை காப்பாற்றுங்கள் என்று நான்கு வருடமாக இந்தியாவில் உள்ள அத்தனை தலைவர் களிடமும் போராடி ஓய்ந்து போனேன். இப்போது திடீரென தூக்கு என்று சொன் னார்கள். இப்ப உங்க முயற்சியால எங்க பிள்ளை உயிர் காப்பாற்றப்பட்டிருக்கு. ரொம்ப நன்றி...'' என்று தழுதழுத்தார்.
துரித நடவடிக்கை எடுத்து இரண்டு தமிழர்களின் உயிர்களை காப்பாற்றிய நாகை எம்.பி. விஜயனுக்கு நக்கீரன் சார்பிலும், தண்டனையில் இருந்து மீண்டவர்களின் குடும்பத்தினர் சார்பிலும் நன்றி கூறிக்கொள்வோம்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)