இலங்கையின வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது சுங்க அதிகாரிகளிடம் கையளிக்கும் தங்குமிட முகவரி கொழும்பு முகவரியாக வழங்கப்படுவதாகவும், எனினும் அவர்கள் வேறு முகவரியில் தங்கியிருப்பதாகவும் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் விமான நிலையத்தில் தரையிறங்கும் வடக்கைச் சேர்ந்த இரட்டைக் குடியுரிமையாளர்கள் சமர்ப்பிக்கும் விமான நிலைய வருகைக்கான (immigration arrival card) அட்டையில் பதியப்படும் விபரங்கள் சேகரிக்கப்பட்டு புலனாய்வுப்பிரிவின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக நாட்டுக்குள் பிரவேசிக்கும் இரட்டைக் குடியுரிமையாளர்கள் விமான நிலையத்தில் கொடுக்கும் முகவரியிலா தங்கியிருக்கிறார்கள் என ஒப்பிட்டு பரிசோதிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் புலம்பெயர் தமிழர்கள் அதிகளவில் வாக்களிக்கலாம் என அரசாங்கம் எதிர்பார்ப்பதும், இரட்டைக் குடியுரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனரா? என கண்காணிப்பதற்குமே இந்த புதிய நடைமுறை என தெரிய வருகிறது.