புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 ஜூலை, 2019

இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?இந்தியா-நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை


இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் மான்செஸ்டரில் இன்று நடைபெறும் அரைஇறுதிப்போட்டியில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தல்: வைகோவின் மனு ஏற்கப்பட்டது மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் வைகோவின் மனு ஏற்கப்பட்டது.

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 11 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக சார்பில் வில்சன் சண்முகம், என்.ஆர். இளங்கோ ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளனர். திமுக ஆதரவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மனு தாக்கல் செய்துள்ளார்.

கர்நாடக அரசியலில் அதிரடி திருப்பம்: மந்திரிகள் கூண்டோடு ராஜினாமா பதவி

விலகிய எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதாதளம் (எஸ்) கூட்டணி அரசை காப்பாற்றும் வகையில், பதவி விலகிய எம்.எல்.ஏ.க் களுக்கு மந்திரி பதவி கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மந்திரிகள் அனைவரும்

7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் தான் முடிவெடுக்க வேண்டும் - சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

7 பேர் விடுதலை விவகாரத்தில் எங்கள் வேலையை சரியாக செய்தோம், இனி ஆளுநரே முடிவெடுக்க வேண்டும் என சட்டசபையில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
சட்டப்பேரவையில் 7 பேர் விடுதலை தொடர்பான கேள்விக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

யாழ்.கொக்குவிலில் வாள்வெட்டு குழு அட்டகாசம்! -3 வீடுகள் சேதம்-

யாழ்.கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து 3 வீடுகளுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல், வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தும் வகையில் அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்துள்ளது.

கூட்டமைப்பின் ஆதரவைக் கோரிய ரணில்! - அலரி மாளிகையில் நடந்த 2 மணிநேர சந்திப்பு

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாளையும், மறுதினமும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று மாலை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சுமார் இரண்டு மணி நேரம்

பிரபாகரனின் படத்துடன் வாரஇதழ்- விநியோகித்தவர் கைது செய்யப்பட்டு விடுதலை

தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் புகைப்படம் அச்சிடப்பட்ட வாராந்த இதழை கடைகளுக்கு விநியோகிக்க சென்றவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். விசாரணைகளுக்குப் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு,5 கட்சிகள் ஆதரவு

முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு,5 கட்சிகள் ஆதரவ முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் 16 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 5 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட

ad

ad