புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஏப்., 2023

விடுதலைப் புலிகளின் ராதா வான்படை உறுப்பினரின் சாட்சியத்தை நிராகரித்து நீதிபதி இளஞ்செழியன் அதிரடி தீர்ப்பு

www.pungudutivuswiss.com
14 வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 3 தமிழ் அரசியல் கைதிகளை 
வவுனியா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கொழும்பில் பெருமளவு அதிரடிப்படையினர் குவிப்பு! பல்கலைக்கழக மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்

www.pungudutivuswiss.com
கொழும்பில் பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி மீது மீண்டும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகங்களில் இடம்பெற்று வரும் அடக்குமுறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.  

லிட்ரோ எரிவாயுவின் விலை பெருந்தொகையால் அதிரடியாக குறைப்பு

www.pungudutivuswiss.com
லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் ஆயிரம் ரூபாவினால் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்துவோம்!

www.pungudutivuswiss.comஅரசாங்கம் கொண்டு வரவுள்ள, பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமூலத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுமாயின் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கம் கொண்டு வரவுள்ள, பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டமூலத்தில் அடிப்படை உரிமைகள் மீறப்படுமாயின் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி உயர் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது

தமிழ்த் தேசிய அரசியல் செய்கிறவர்களால் மட்டுமே எதிர்த்துப் போராட முடியும்!

www.pungudutivuswiss.comஇன்று வடக்கு - கிழக்கில் பல இடங்களிலே நில அபகரிப்புகள் இடம்பெற்றுக் கொண்டுவருகிறது, தொல்பொருள் திணைக்களத்தின் மூலமாக திட்டமிட்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது, இவற்றை எதிர்த்துப் போராடக்கூடியவர்கள் இலங்கை தமிழரசு கட்சியும் தமிழ்த் தேசிய அரசியல் செய்கிறவர்கள் மட்டுமே என ப.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று வடக்கு - கிழக்கில் பல இடங்களிலே நில அபகரிப்புகள் இடம்பெற்றுக் கொண்டுவருகிறது, தொல்பொருள் திணைக்களத்தின் மூலமாக திட்டமிட்டு புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு கொண்டிருக்கிறது, இவற்றை எதிர்த்துப் போராடக்கூடியவர்கள் இலங்கை தமிழரசு கட்சியும் தமிழ்த் தேசிய அரசியல் செய்கிறவர்கள் மட்டுமே என ப.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்

அத்தியாவசிய பொருட்களின் மொத்த விலை குறைப்பு!

www.pungudutivuswiss.comடொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வலுவடைந்துள்ளமையினால், அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களது மொத்த விலை 10 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக அத்தியாவசிய இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

தமிழ் எம்.பிக்களின் அரங்கம் - அழைக்கிறார் மனோ!

www.pungudutivuswiss.com


தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை நாடாளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த. சித்தார்த்தன் எம்.பி., தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி. ஆகியோருக்கு மின்னஞ்சல் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் அரங்கம் ஒன்றை நாடாளுமன்றத்தில் அமைத்திடும் யோசனையை முன்னிறுத்தி தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி., இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி., ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த. சித்தார்த்தன் எம்.பி., தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் சி.வி. விக்னேஸ்வரன் எம்.பி. ஆகியோருக்கு மின்னஞ்சல் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்

ad

ad