முல்லைத்தீவுநாயாறு கடல் பகுதியில் நீராடச் சென்ற ஐந்து பேர் கொண்ட இளைஞர் குழுவில் இருவர் நீரில் மூழ்கியதில் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் இன்று நேற்று மாலை இடம்பெற்றுள்ளது |
-
29 ஏப்., 2024
நாயாறு கடலில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கினார்!
வடக்கில் தகுதியற்ற அதிகாரிகளுக்கு உயர் பதவி - கல்வியை சீரழிக்கும் சதி என்கிறார் சந்திரசேகரன்!
வட மாகாணத்தில் கல்வியில் தகுதியற்றவர்களுக்கும், குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தேசிய மக்கள் சக்தி குற்றம் சுமத்தியுள்ளது. |
ஆவரங்காலில் காய்ச்சலுக்கு 5 வயதுச் சிறுமி பலி
யாழ்ப்பாணம் - ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமி காய்ச்சல் மற்றும் வாந்தி காரணமாக சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்துள்ளார் |
நாளை நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டமா?
நாடாளுமன்றத்தை கலைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
நாடாளுமன்றத்தை நாளை கலைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டது. எவ்வாறாயினும், இந்த விவாதங்களை அடிப்படையாகக் கொண்ட உண்மைகள் முற்றிலும் தவறானவை என்று அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. |
பாரதிபுரத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்த 5 பொலிசாருக்கு மரணதண்டனை
கந்தளாய் - பாரதிபுரம் கிராமத்தில் 28 வருடங்களுக்கு முன்னர் 8 தமிழ் மக்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஐந்து பொலிஸாருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது |
26 ஏப்., 2024
முறிகண்டியில் விபத்து - சிப்பாய் பலி, 7 பேர் காயம்
முல்லைத்தீவு - முறிகண்டி பகுதியில் இன்றுகாலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் பலியானார். மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர் |
பிள்ளையானைப் பிடித்தால் உண்மைகளை அறிந்து கொள்ளலாம்
பிள்ளையானை கைது செய்து விசாரணை நடத்தினால் 2005 முதல் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் வரையிலான அனைத்த உண்மை தகவல்களையும் அறிந்துகொள்ளலாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார் |
தமிழரசுக் கட்சி வழக்கு -ஜூனுக்கு ஒத்திவைப்பு
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது |
சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளுக்கு 30 ஆம் திகதி முதல் தடை!
எதிர்வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை இலக்காகக் கொண்டு இடம்பெறும் மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது |
பசில்- ரணில் பேச்சில் இணக்கம் - பரந்துபட்ட கூட்டணிக்கு தயார்
பரந்த அரசியல் கூட்டணியை உருவாக்குவதற்கான அதன் முதல் நடவடிக்கையாக, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஏனைய கட்சிகள் மற்றும் குழுக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடியதுடன் மே தினத்திற்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை கருத்தில் கொண்டு அரசியல் பணிகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளார் |
சம்பந்தனுக்கு 3 மாத விடுமுறை!
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சம்பந்தனுக்கு சம்பளத்துடன் கூடிய மூன்று மாத கால விடுமுறை வழங்க நாடாளுமன்றம் இன்று அனுமதி வழங்கியது |
ஈரான் ஜனாதிபதியின் விமானத்துக்கு முன்னால் புறப்பட்ட இஸ்ரேலிய விமானம்
இலங்கையிலிருந்து ஈரான் ஜனாதிபதியின் விமானம் புறப்படுவதற்கு முன்னர் இஸ்ரேலிய விமானமொன்று அங்கிருந்து புறப்பட்டது என விமானங்களின் பயணங்களை கண்காணிக்கும் பிளைட்ராடர் 24 .கொம் தகவல் வெளியிட்டுள்ளது |
25 ஏப்., 2024
வெடுக்குநாறி மலை விவகாரம் - தொடர்கிறது மனித உரிமை ஆணைக்குழுவின் விசாரணை
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டமை தொடர்பில் வவுனியா மனிதவுரிமை ஆணைக்குழுவினரால் நெடுங்கேணிப் பொலிசார் மற்றும் வனவளத் திணைக்கள அதிகாரிகளிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. |
சூல கொடிதுவக்குவுக்கும் சஹ்ரானுக்கும் என்ன தொடர்பு? [
பயங்கரவாதி சஹ்ரானுக்கும் இராணுவ புலனாய்வு பிரிவின் அப்போதைய பணிப்பாளர் சூலா கொடித்துவக்கும் இடையிலான தொடர்பு என்ன? களனி கம பகுதியில் வெடிபொருட்கள் அடங்கிய லொறியை சோதனை செய்ய பொலிஸார் முற்படுகையில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அதற்கு தடை விதித்து வாகனத்தை விடுவிக்க அறிவுறுத்தியது ஏன்? என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான காவிந்த ஜயவர்தன கேள்வி எழுப்பினார் |
ஈரான் - இலங்கை ஜனாதிபதிகள் சந்திப்பு - 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் இடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. |
புலிகளுக்கு எதிராக போரிட்ட இராணுவத்தினர் உக்ரைன் - ரஷ்யாவில் தங்களுக்குள் மோதுகின்றனர்
விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக போராடிய இலங்கை இராணுவத்தினர் இன்று உக்ரைன் மற்றும் ரஷ்யா இராணுவத்தில் சேர்ந்து மோதிக் கொள்கிறார்கள். இராணுவ முகாம் உதவியாளர்களாக இலங்கையர்கள் அழைக்கப்பட்டு பலவந்தமான முறையில் யுத்த களத்துக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். சட்டவிரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் இச்செயற்பாடுகள் குறித்து அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார் |
படுகொலைகளுக்குப் பின்னால் இருந்த கோட்டா!
2005 ஆம் ஆண்டு ஜோசப் பரராஜசிங்கம் எம்.பி.,படுகொலை, 2006 ஆம் ஆண்டு ரவிராஜ் எம்.பி.படுகொலை ,2009 ஆம் ஆண்டு இறுதி யுத்த படுகொலைகள், 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆகிய 4 சம்பவங்களின் பின்னாலும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ,முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபாய ராஜபக்ஷவே இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பி. யான சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். |
மன்னார் சிறுமி கொலை குற்றவாளி பொலிஸ் துணையுடன் இந்தியாவுக்கு தப்பியோட்டம்!
தலைமன்னாரில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்த சம்பவத்தில் கைதான சந்தேக நபரான அப்துல் ரகுமான் என்ற நபர் வவுனியா வைத்தியசாலையிலிருந்து தப்பித்து இந்தியாவுக்கு சென்றுள்ளார். பொலிஸாரின் பொறுப்பற்ற செயற்பாடுகள் அதிருப்திக்குரியன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஸவிடம் கேள்வி எழுப்பினார் |
இழுபறியில் தமிழரசு - வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!
திருகோணமலை நீதவான் நீதிமன்றில் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நிர்வாகத் தெரிவு தொடர்பான வழக்கு எதிர்வரும் மே மாதம் 31ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். |
24 ஏப்., 2024
சுதந்திரக் கட்சியை 100 மில்லியன் ரூபாவுக்கு பேரம் பேசிய மைத்திரி
ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ள பிரபல வர்த்தகர் ஒருவரிடம், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை ஏலம் விடுவதற்கு 100 மில்லியன் ரூபா பேரம் பேசியுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர குற்றஞ்சுமத்தினார். |
ஈரானிய ஜனாதிபதிக்கு விசேட பாதுகாப்பு!
ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை விஜயத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. |
பெண்ணுக்கு போதை மருந்து கொடுத்து தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்திய கும்பல்
யாழ்ப்பாணத்தில் போதை ஊசி செலுத்தி பெண்ணொருவரை கும்பல் ஒன்று தவறான செயற்பாட்டில் ஈடுபடுத்தியுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது |
23 ஏப்., 2024
மொட்டுக்குத் துரோகம் - பதவி இழப்பார் விஜயதாச?
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக பதவியேற்ற நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியலமைப்பின் பிரகாரம் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்தார் |
5 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேர் இராணுவத்தை விட்டு ஓட்டம்!
கடந்த ஐந்து வருட காலப் பகுதியில் சுமார் 25,000 பேர் இராணுவ சேவைக்கு சமூகமளிக்கவில்லை எனவும், விடுமுறை பெறாத நிலையிலேயே அவர்கள் சென்றுள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன |
நிரம்புகிறது திறைசேரி! - வரி, சுங்க வருவாய்கள் அதிகரிப்பு
2024 ஆம் ஆண்டின்முதல் காலாண்டில் எதிர்பார்த்த அரச வருமானத்தை விட அதிகமாக கிடைத்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார் |
தமிழரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டம் ஒத்திவைப்பு
இன்று நடைபெறவிருந்த இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார் |
21 ஏப்., 2024
உயிர்த்த ஞாயிறு படுகொலை- யாழ்ப்பாணத்தில் நினைவேந்தல்
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான 5ஆவது ஆண்டு நினைவேந்தல் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் நினைவுகூரப்பட்டது |
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - கொச்சிக்கடை தேவாலயத்தில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடந்து ஐந்து வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு இன்று காலை 8.45 இறகு இலங்கைத்தீவில் உள்ள அனைத்து கிறிஸ்த்தவ தேவாலயங்களிலும் இரண்டு நிமிட அக வணக்கம் செலுத்தப்பட்டது. |
தியத்தலாவ கார் பந்தயத் திடலில் கோர விபத்து - பார்வையாளர்கள் 6 பேர் பலி, 21 பேர் காயம்!
தியத்தலாவ ஓட்டப்பந்தய திடலில் இடம்பெற்ற கார் பந்தயத்தில் கார் மோதி ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று கார் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற கார்களில் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பார்வையாளர்களை மோதிக் கவிழ்ந்து இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் குழந்தையொன்று உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் ஹப்புத்தளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். |
20 ஏப்., 2024
சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குளம் மக்கள் போராட்டம்!
அண்மையில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி நேற்று வவுனியா தரணிக்குளம் கிராம மக்கள் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் |
யாழ். பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு! ]
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிதியாளருக்கு எதிராகப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது |
ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையும் சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள்!
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆதரவாளர்கள் தற்போது ஐக்கிய மக்கள் சக்தியுடன் வேகமாக இணைந்து கொண்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார். |
16 ஏப்., 2024
WelcomeWelcome பொதுவேட்பாளராக வேலன் சுவாமிகள்! - பதிலளிக்க காலஅவகாசம் கோரினார்
ஜனாதிபதி தேர்தலில் தமிழர்கள் சார்பில் பொதுவேட்பாளராக களமிறங்குமாறு சி.வி.விக்னேஸ்வரன், விடுத்த கோரிக்கை தொடர்பில் பதிலளிப்பதற்கு தவத்திரு வேலன் சுவாமிகள் கால அவகாசம் கோரியுள்ளார் |
வெள்ளியன்று வவுனியாவில் கூடுகிறது தமிழரசின் மத்திய செயற்குழு!
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 19ஆம் திகதி வவுனியாவில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கட்சி முகங்கொடுத்துள்ள வழக்குகள் தொடர்பிலும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகளால் முன்மொழியப்பட்டுள்ள பொதுவேட்பாளர் விடயம் சம்பந்தமாகவும் ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் - பிரதமரை தலையிடுமாறு கஜேந்திரன் கடிதம்
கல்முனை வடக்கு பிரதேச செயலகம் சம்பந்தமாக பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுக்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் கடிதமொன்றை அனுப்பியுள்ளார். |
காதலியையும் தாயையும் வெட்டி விட்டு இளைஞன் உயிரை மாய்ப்பு!
யாழ்ப்பாணம் - பண்டத்தரிப்பு , பனிப்புலம் பகுதியில் இன்று அதிகாலை தனது காதலியையும், காதலியின் தாயையும் கூரிய ஆயுதத்தால் வெட்டிய இளைஞன் ஒருவர், தனது உயிரை மாய்த்துள்ளார் |
திருமணம் செய்வதாக சுவிஸ் பெண்ணை ஏமாற்றிய பொலிஸ் உத்தியோகத்தர் மீது முறைப்பாடு
சுவிஸ் நாட்டில் வசிக்கும் பெண்ணை திருமணம் செய்வதாக கூறி சுமார் 50 இலட்ச ரூபாயை மோசடி செய்ததாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது |
12 ஏப்., 2024
வாக்குச் சீட்டில் மொட்டு சின்னம் நிச்சயம் இருக்கும்!- வேட்பாளர் ரணிலாகவும் இருக்கலாம்
பெயர் எதுவாக இருந்தாலும், இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மொட்டுச் சின்னம் நிச்சயம் காணப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, தெரிவித்துள்ளார் |
வெடுக்குநாறிமலை, குருந்தூர்மலை குறித்து நேரில் ஆராய்ந்த அலன் கீனன்! - விரிவான அறிக்கையை வெளியிடுவார்
அண்மையில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த சர்வதேச நெருக்கடி கண்காணிப்புக்குழுவின் ஆய்வாளர் அலன் கீனன், வெடுக்குநாறிமலை மற்றும் குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் விசேடமாக ஆராய்ந்ததாகவும், அதுபற்றிய அறிக்கையொன்றை வெளியிடுவதற்கு அவர் எதிர்பார்த்திருப்பதாகவும் அறியமுடிகின்றது. |
இலங்கையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்
இலங்கை வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50 ஆயிரத்தை கடந்துள்ளது. ஏப்ரல் மாதத்தின் முதல் 9 நாட்களில் 50,537 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது |
11 ஏப்., 2024
கெஹெலியவின் பிணை மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் தரப்பு கோரிக்கை!
விசாரணை முடியும் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை வலுவிழக்க செய்யுமாறு கோரி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தாக்கல் செய்திருந்த மனுவை முதல் சந்தர்ப்பத்திலேயே இரத்து செய்யுமாறு சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று கோரிக்கை விடுத்தார். |
தமிழ்ப் பொது வேட்பாளருக்குப் பின்னால் ராஜபக்சக்கள்? - சந்தேகம் கிளப்புகிறார் சுமந்திரன்
ஜனாதிபதித் தேர்தலுக்கான தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முன்மொழிவுக்குப் பின்னால் ராஜபக்சக்கள் இருக்கின்றார்களா? தீவிரவாத - இனவாத சிங்கள சக்திகள் இருக்கின்றார்களா? போன்ற கேள்விகள் எழுகின்றன என்று, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். |
சர்வதேச நியமங்களை மீறி போராட்டங்களை அடக்கும் அரசாங்கம்! - சர்வதேச மன்னிப்புச் சபை குற்றச்சாட்டு. [Thursday 2024-04-11 06:00]
இலங்கையில் 2022 - 2023 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் உத்திகளைப் பயன்படுத்தி ஒடுக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச்சபை, அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமைக்கு மதிப்பளித்து, அதனை உறுதிப்படுத்துவதற்கு தவறுவது அடக்குமுறையின் குறியீடாகும் எனத் தெரிவித்துள்ளது. |
10 ஏப்., 2024
மொட்டு உறுப்பினரே ஜனாதிபதி வேட்பாளர்!- மஹிந்த திட்டவட்டம்.
ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் உறுப்பினரை களமிறக்கவே தீர்மானித்துள்ளோம். உத்தியோகபூர்வ அறிவிப்பை வெகுவிரைவில் வெளியிடுவோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். |
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது!- கைவிரிக்கிறார் சிவிகே
தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது என தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தரும் வடக்கு மாகாண சபையின் அவைத் தலை வருமான சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்தார். |
5 ஏப்., 2024
மைத்திரிக்கு ஆப்பு வைத்தார் சந்திரிகா! - தலைவராக செயற்பட நீதிமன்றம் தடை.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. |
13 பேரின் ஆதரவை திரட்ட முடியாததால் பாராளுமன்றத்தை கலைக்கும் முயற்சி தோல்வி
113 எம்.பி. க்களின் ஆதரவைத் திரட்ட முடியாத நிலையில், தீர்மானம் நிறைவேற்றி பாராளுமன்றத்தை கலைக்கமேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். |
4 ஏப்., 2024
முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேறினர்!
கொழும்பு திரும்பிய முருகன், ரொபேர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய மூவரையும் கொழும்பு விமான நிலையத்தில் பலமணி நேரம் விசாரணை செய்த அதிகாரிகள் சற்று முன்னர் அவர்களை விடுதலை செய்தனர் |
தலைமன்னார் சிறுமி கொலைக் குற்றவாளி தப்பியோட்டம்
மன்னாரில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர் வவுனியா வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடியுள்ளார் |
3 ஏப்., 2024
யாழ். செல்லும் அனுர - தமிழ்க் கட்சிகளை சந்திக்கமாட்டார்!
யாழ்ப்பாணத்திற்கு நாளை செல்லவுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான அனுரகுமார திஸாநாயக்க,அரசியல் கட்சிகளுடன் எந்தவொரு சந்திப்புக்களையும் நடத்த மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது |
மீண்டெழுகிறது பொருளாதாரம் - வறுமைநிலையில் மாற்றம் இல்லை!
இலங்கையின் பொருளாதாரம் மீண்டெழும் பாதையில் பயணித்தாலும் ஏழைகள் மற்றும் பாதிக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களின் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுத்திய தாக்கத்தினை தணிப்பதற்கான உறுதியான முயற்சிகள் முக்கியமானவை இதனுடன் காத்திரமான நம்பகமான கட்டமைப்புசார் நடவடிக்கைகளுக்கான வழிமுறைகளும் முன்னெடுக்கப்பட வேண்டுமென மாலைதீவு, நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹடாட்ட ரெஸோஸ் தெரிவித்தார் |
முருகன், ரொபட், ஜெயக்குமார் இன்று நாடு திரும்புகின்றனர்!
ராஜீவ் காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்டு 32 ஆண்டுகளாக சிறையில் இருந்து, பின்னர் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முருகன், ரொபட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் இன்று இலங்கை திரும்பவுள்ளனர் |
மைத்திரி, கருணா, பிள்ளையானை கைது செய்து விசாரித்தால் உண்மை வெளிவரும்!
ஈஸ்டர் குண்டுதாக்குதல் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன, கருணா, பிள்ளையான் ஆகியவர்களுக்கிடையே ஏதே ஒன்று மறைந்திருக்கின்றது. ஆகவே இவர்கள் 3 பேரையும் கைது செய்து விசாரித்தால் இந்த குண்டுதாக்குதல் தொடர்பாக சரியான சூத்திரதாரி யார் என்பதை அறிய முடியும் என பாராளுமன்ற முன்னாள் உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்தார். |
2 ஏப்., 2024
பிரதமர் ரிஷி சுனக்கின் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும்: தேர்தல் கருத்துக்கணிப்பு கூறுவதென்ன?
பிரித்தானியாவில் தேர்தலுக்கு முன்பான கருத்துக்கணிப்பில், ஆளுங்கட்சியான ரிஷி சுனக்கின் கன்சர்வேடிவ் கட்சிக்கு கடும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் பிரித்தானியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது |
பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிஸ், இராணுவ, தலையீடுகள்! - ஆசிரியர் சங்கம் கண்டனம்.
பாடசாலை மட்ட நிகழ்வுகளில் பொலிஸ், அரச புலனாய்வாளர்கள், இராணுவத்தினரின் தலையீடுகள் மற்றும் விசாரணை செயற்பாடுகளை இலங்கை ஆசிரியர் சங்கம் வன்மையாக கண்டிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்க உப தலைவர் தீபன் தீலீசன் தெரிவித்துள்ளார் |
வடக்கு சுகாதாரத் திணைக்களத்தில் அதிகளவு சிங்களவர்கள் நியமனம்!
வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக சிங்களவரான வி.பி.எஸ்.டி.பத்திரண சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளராக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி செயற்பட்டுவரும் நிலையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது |