புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

23 ஜூலை, 2013

தமிழீழ உணர்வாளர் 'ஈழத்துணை திரு.அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு
தாய்த்தமிழகமாம் திண்டுக்கல் மாவட்டத்தில் M.R.F நகரில் வசிக்கும் தமிழீழ உணர்வாளர் 'ஈழத்துணை திரு.அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு உலகதமிழர் பேரமைப்பின் கொடி அணிவித்து பொதுமக்களின் இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது.
யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை
தரித்து நின்ற வாகனத்தை அடித்து சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவக இளைஞர் அணித் தலைவரும் மாநாகர சபையின் முன்னாள் உறுப்பினருமான நிசாந்தன் சற்றுமுன் யாழ். நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
யாழில் பேரூந்துக்காக காத்து நின்ற இளம் பெண்ணை முத்தமிட்ட முதியவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு
யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இளம் பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டதுடன் அப்பெண்ணை முத்தமிட்ட முதியவரை இங்கு கூடியிருந்தவர்கள் அடி உதை கொடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், ஆசனப் பங்கீடுகள் விபரம்!
வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.
கொழும்பில் மினி சூறாவளி: பல வீடுகள், வாகனங்கள் சேதம் - ஒருவர் பலி
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
டி சேரம், தேசிய வைத்தியசாலை, கிருலப்பனை மற்றும் தெமடகொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மின்சார தடையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நடிகை மஞ்சுளாவுக்கு திரையுலகம் அஞ்சலி
 


நடிகை மஞ்சுளா(வயது 60)  சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று(23.7.2013) மரணம் அடைந்தார்.
வடக்குத் தேர்தல் வர­லாற்று திருப்­பு­முனை வெற்­றி­யாக அமைய வேண்டும் : சம்பந்தன் எம்.பி. 
news
 சர்வதேசத்தின் நிலைப்பாட்டை அறிந்தே தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்பின் வட­மா­காண சபை முத­ல­மைச்சர் வேட்­பாளர் தெரிவு இடம்­பெற்­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கே சர்­வ­தே­சத்தின் ஆத­ரவும் மக்­களின் அங்­கீ­கா­ரமும் கிடைத்துள்­ளன. எனவே, எந்த விலை கொடுத்­தா­வது கூட்­ட­மைப்பை பாது­காக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். வட மாகாண சபைத் தேர்தல் வர­லாற்று திருப்­பு­முனை வெற்­றி­யாக அமைய வேண்டும்.

உலக வில்வித்தைப் போட்டி : வெண்கலம் வென்றது இந்தியா

உலக கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 3) கொலம்பியாவில் உள்ள மெடெலின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் அணிக்கான காம்பவுண்ட் பிரிவில் நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான

ஒன்ரோறியோ மாகாண அரசியலில் முக்கிய இடத்தினைப் பிடிக்கப் போகும் கென் கிருபா

எதிர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ரோறியோ மாகாண இடைதேர்தலில் வெற்றி யாருக்கு என்ற கருத்துக் கணிப்புக்களும் ,
பிரான்சில் முஸ்லிம்கள் போராட்டம்: 20 கார்கள் எரிந்து சாம்பலானது

பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து தலைநகர் பாரிசில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு தேர்தலில் ஈபிடிபியின் சார்பில் 9 பேர் போட்டி
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோழமைக் கட்சியான ஈபிடிபிக்கு 10 வேட்பாளர்களை போட்டியில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தல்: யாழில் அரசுக்கு ஆதரவு தேடும் இராணுவத்தினர்
வடமாகாண சபைத் தேர்தல் களம் தற்போது யாழ்.குடநாட்டில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
வடமாகாண முஸ்லிம் மக்கள் தொடர்பாக த.தே.கூட்டமைபின் நிலைப்பாடு என்ன?: நல்லாட்சிக்கான மக்கள் அமைப்புவடமாகாண முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக அறிவிக்க வேண்டுமென நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் குழுவொன்று இன்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுபினருமான மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பானத்தில் சந்தித்துள்ளது.
யாழில் பாடசாலை மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர்! பொலிஸ் விசாரணையில் சிக்கினார்
யாழ்.மாவட்டத்தில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்பிற்கும் ஆசிரியர் ஒருவர், மாணவிக்கு கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி
ஜீப் மீது பஸ் மோதல்: 16 பேர் பலி
கர்நாடக மாநிலத்தில் குல்பர்கா-பிஜப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜிந்தகி என்ற இடத்தில், ஜீப் மீது தனியார் பஸ் பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில்

விழுப்புரத்தில் செந்தமிழன் சீமானைக் கைது செய்த பொலிஸ்! (Photos)

1002554_10200273641063367_818007673_n
விழுப்புரம் அடுத்த வானூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள திங்கள்கிழமை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார்.
இப்பகுதியில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனை மீறி ஊருக்குள் நுழைந்ததாக சீமான் உள்ளிட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறைந்த இயக்குநர் மணிவண்ணன் படத்திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள வந்தபோது சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
45452_10200154475565100_1880357539_n
969931_10200154471324994_263392437_n
1075736_10200154488405421_230109818_n

ad

ad