www.pungudutivuswiss.com www.madathuveli.com www.panavidaisivan.com www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com தொடர்புகளுக்கு pungudutivu1@gmail.com

வியாழன், செப்டம்பர் 26, 2013

ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு பான் கி மூனும் பொறுப்பாளி! பன்னாட்டு விசாரணைக்கு ஐநா நடவடிக்கை எடுக்க வேண்டும்!- வைகோ
ஈழத்தமிழர் இனக்கொலைக்கு பன்னாட்டு நீதி விசாரணை தேவை என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
 மகிந்த நாடு திரும்பியதும் முக்கிய முடிவு ; விக்னேஸ்வரனுடன் சந்திப்பு 
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்கச் சென்றுள்ள சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியதும், முக்கியமான பல முடிவுகளை எடுக்கவுள்ளதாக, கொழும்பு ஊடகம் ஒன்று

மாவீரர்களுக்கு கிடைத்த வெற்றி!- அனந்தி எழிலன் சிறப்பு பேட்டி-[ நக்கீரன் ]

இலங்கை வடக்கு மாகாண சபைத் தேர்தலில், முதலமைச்சர் வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கு (1,32,255 வாக்குகள்) அடுத்து, 2வது இடத்தைப் பிடித்திருப்பவர் அனந்தி எழிலன். பெற்றது 87,870 வாக்குகள். தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் எழிலனின் மனைவி ஆவார்.
வாழ்த்துச் சந்திப்புகள், முதலமைச்சரைத் தேர்வுசெய்த கூட்டம் என பரபரப்பாக இருந்தவரை தொலைபேசியில் பிடித்தோம். தாய்த்தமிழகத்தின் மீது பாசத்தோடும் எதிர்பார்ப்புகளோடும் நன்றியோடும் வட இலங்கை மாகாணசபை உறுப்பினர் அனந்தி எழிலன். 
வளர்ச்சியில் பின்தங்கிய இந்தி பேசும் மாநிலங்கள். முன்னுக்கு வந்த இந்தி அல்லாத மாநிலங்கள். தமிழகத்திற்கு மூன்றாம் இடம் ! 

ரகுராம் ராஜன் அறிக்கை நடுவண் அரசுக்கு தெரிவித்த புள்ளிவிவர அறிக்கையின் படி இந்தி அல்லாத மாநிலங்களே இந்திய நாட்டில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது . இந்தியை மட்டுமே பேசும் மாநிலங்களான உ.பி , மத்திய பிரதேசம்
 
ஒடுக்கப்பட்டோரின் விடுதலைக்காக போராடிய தமிழீழ ஆதரவாளர் தோழர் பழ.நீலவேந்தன் தீக்குளித்து மரணம்
தமிழீழ ஈகைச்சுடர் திலீபனின் நினைவு போற்றியும் தமிழகத் தமிழர்களால் சாதியால் ஒடுக்கப்பட்டுவரும் ஆதித்தமிழர்களான அருந்ததியர்களுக்கான 6 சதவீத உள் ஒதுக்கீட்டை வலியுறுத்தியும் கடிதம் எழுதி வைத்துவிட்டு பெரியார் சிந்தனைப் பற்றாளர் தோழர் பழ.நீலவேந்தன் தீக்குளித்து இன்று
கல்லூரி வாயிலில் மாணவி படுகொலை: கடலூரில் பட்டப்பகலில் பரபரப்பு
கடலூர் புனித ஜோசப் கல்லூரியில் முதுகலை பட்டப் படிப்பு படித்து வந்தவர் மகாலட்சுமி. இவர் வழக்கம்போல் கல்லூரி வகுப்பு முடிந்து வியாழக்கிழமை மதியம் வெளியே வந்துள்ளார். அப்போது மர்ம நபர்


ஐ.நாவில் மதுபான விருந்து! மகிந்தவுடன் பிரித்தானிய மற்றும் அவுஸ்திரேலிய அமைச்சர்கள்: அம்பலப்படுத்தி
நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் பிரித்தானியா பிரதிநிதிகள் இலங்கையுடன் மதுபான விருந்தில் கலந்து கொண்டிருந்தனர் என சனல் 4 தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான நவநீதம்பிள்ளையின் அறிக்கை: மனித உரிமை பேரவையில் பிளவு
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான வாய்மொழி மூல அறிக்கை தொடர்பில் மனித உரிமை பேரவை இன்று இரண்டாக பிளவுப்பட்டிருந்தது.
வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களாக துறை சார்ந்த நபர்கள் நியமிக்கப்பட உள்ளனர்
 யாழ்ப்பாணத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சி.வி.கே. சிவஞானம் அல்லது புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகிய இருவரில் ஒருவருக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
வடக்கு மாகாண கல்வி மற்றும் சுகாதார அமைச்சர்களாக அந்த துறைகளை சார்ந்த வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு பேர் நியமிக்கப்பட உள்ளதாக
ஒபாமாவுடனான வட்டமேசை சந்திப்பில் கலந்துகொண்டார் பாக்கியசோதி சரவணமுத்து
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலக முழுவதிலும் உள்ள சிவில் அமைப்புகளின் தலைவர்களை சந்திக்கும் வட்டமேசை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
நாங்கள் வீழ்ந்து விடவில்லை! உரிமைகளை விட்டுக் கொடுக்க மாட்டோம்!
-vikatan 
இனப்படுகொலைப் பயங்கரங்களுக்குப் பிறகு கதறி அழக்கூட உரிமையற்று இருந்த இலங்கைத் தமிழர்கள், தங்களுக்கான அரசியலைத் தாங்களே தீர்மானிக்க அடித்தளமாக, ஓர் ஆரம்பமாக... முதல் முத்திரை வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள்!

நவநீதம்பிள்ளையின் அறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல!- இலங்கை பிரதிநிதி ரவிநாத்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் வாய்மொழி மூல அறிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என இலங்கை அரசாங்க பிரதிநிதி  தெரிவித்துள்ளார்.
சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்று வரும் திருமண சேவைகள்

சுவிஸ் ஒபெர்லாந்து மக்களின் ஒரேயொரு சைவ வழிபாட்டு தலமாக விளங்கும் தூண் வரசித்தி விநாயகர் ஆலய ஆன்மீக சமூக சேவை பணிகளில் திருமண சேவைகளும் சிறந்த பாராட்டத் தக்க வகையில் அமைந்துள்ளன.அண்மைக் காலமாக அதிகரித்து வரும் இந்த ஆலயத்தில் நடாத்தப் படும் திருமண ஏற்பாடுகள் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன. குறுகிய  கால அவகாசம்,எளிய முறையிலான

பாதுகாப்பு, மனித உரிமைகள் போன்ற போர்வையில் சில நாடுகள் மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதை அனுமதிக்கக்கூடாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பல்தரப்பு பங்குபற்றுதலுடன் சர்வதேச பாதுகாப்பை உறுதிபடுத்த விசேடமாக ஐக்கிய நாடுகளுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ள நிலையில் சில நாடுகளின் பொலிஸ்காரர் போன்ற செயற்பாடுகள் உலகத்துக்கு அவசியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

இன்று தியாகி திலீபனின் நினைவு நாள் 

இந்திய அமைதிப்படைக்கு எதிராக ஜந்தம்ச கோரிக்கையினை முன்வைத்து சாகும்வரை உண்ணா நோன்பிருந்த திலீபனிடம் தன் அகிம்சை முகமூடி கிழிந்த நிலையில் தோற்றுப்போன பாரதத்தின் துரோகம் இராசையா பார்த்தீபன் என்று அழைக்கப்படும் லெப்பரினன் கேணல் தியாகி திலீபனால் உலகுக்கு கோடிட்டு காட்டப்பட்ட நாள் செப்டம்பர் 26, 1987!