• கலர் கலராய் போஸ்ரர்கள் வெள்ளை அடித்த சுவர்களெல்லாம் கொள்ளையர்களினதும் கோமாளிகளினதும் படங்கள் ஒன்றுமில்லாத மாகாண சபைதான் ஒதுங்கிவிடலாம்...மந்திகளல்லவா குந்திவிடும். சிந்திப்போம்!! பாலோடு நீர் சேர்த்து பருக கொடுத்தாலும் நிதானித்து நீர் விலக்குமாம் அன்னம் அன்னமாய் சிந்திப்போம் !!! அரியாசனமல்ல சரியாசனம்தான் இலக்கு ..... அழுத கண் காயவில்லை இழந்த வலி தீரவில்லை முறிந்த கால்கள் நிமிரவில்லை துயிலும் இல்லங்களை துவைத்து எடுத்தவனை கொண்டாடி ஒரு கூட்டம்..... காட்டிக்கொடுத்தவனையும் கூட்டிக்கொடுத்தவனையும் தொழுது கைகூப்பி ஒருகூட்டம் ரோசநரம்பை வீணைக்கு இரையாக்கி அதை வெற்றிலைக்கு விற்றுவிட்டு எமக்கு பாடைகட்ட பஞ்சாங்கம் பார்க்கும் ஒருகூட்டம் நாங்கள் ஒரு துரோணரையும் பல துரியோதனர்களையும் கண்டவர்கள் எங்கள் இழவிற்கு எட்டியும் பார்காதவர் செலவிற்கு மட்டுமென்ன தீனுக்கா வருகின்றீர் எங்களை எரித்தவனுக்கு கொள்ளிசுமர்ந்த கொடும்பாவிகள் வேண்டாம் சுள்ளி கொடுத்த சூர்ப்பநகைகளும் வேண்டாம் அந்தரித்து வந்தவரை அள்ளிக்கொண்டுபோய் பணம்பறித்த சண்டாளர்கள் வேண்டாம் மத்தியில் கூட்டுவைத்து மாநிலத்தில் மண்விற்று தாடிவைத்த கேடிகளும் வேண்டாம். பங்கம் விழைவிக்கும் அங்கஜன்கள் வேண்டாம் . வீஷ்மர்கள் இல்லைத்தான் ஏகலைவர்கள் உண்டு பட்டுக்குஞ்சத்திற்கு கனவுதான் ஆனாலும் கட்டியிருப்பதை காவுகொடுக்க முடியுமா? இது ஒன்றும் பாலாறு அல்ல நெருப்பாறுதான் நீந்தத்தான் வேண்டும். நீண்டபயணம்தான் அதற்கு ஓடம்தான் கூட்டமைப்பு ஓட்டைகள் இருந்தாலும் ஒட்டத்தான் வேண்டும். கயவர்களை விரட்ட வீட்டுக்கு வாக்கு விருப்பு வாக்கு மட்டும் அன்னம்போல் சிந்தித்து வாக்களிப்போம்.