புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 செப்., 2012


யாழில் தாயையும் 2வயது மகனையும் கடத்தி கப்பம் கோரிய தம்பதியர் கைது
யாழ்ப்பாணத்தில் தாய் ஒருவரையும் அவரது 2 வயது மகனையும் கடத்தி கப்பம் கோரிய இரு சந்தேகநபர்களை கைது செய்ததாக யாழ். பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார்.

பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை உடனே திருப்பி அனுப்ப நடவடிக்கை!- ஜி.கே. வாசன்
தமிழ்நாட்டில் பயிற்சி பெறும் இலங்கை இராணுவ அதிகாரிகளை விரைவில் திருப்பி அனுப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இனி இதுபோல் நடைபெறாமல் இருக்கவும் உரிய ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு மத்திய கப்பல்துறை மந்திரி ஜி.கே. வாசன் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து போராட்டம் நடத்த தயாராகும் தமிழக அமைப்புகள்!
இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச, வரும் 21ம் தேதி இந்தியாவிற்கு வருகிறார் ராஜபக்சவின் இந்திய வருகையை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

குடியேற்ற அனுமதி வழங்காவிட்டால் கருணைக் கொலை செய்யுங்கள்: தமிழ் அகதி அவுஸ்திரேலிய அரசாங்கத்திடம் கோரிக்கை
அவுஸ்திரேலியாவில் குடியேற அனுமதி வழங்க முடியாவிட்டால், தம்மை கருணை அடிப்படையில் கொன்று விடுமாறு இலங்கை அகதி ஒருவர் அவுஸ்திரேலிய அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இலங்கை கடற்படையின் அட்டூழியம்! தமிழக மீனவர்கள் 28 பேர் கைது! எச்சரித்து விடுதலை
தமிழக மீனவர்கள் 28 பேர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்றுள்ளனர். கச்சதீவு அருகே இவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் இவர்களை சுற்றிவளைத்து

யுத்த காலத்தில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை மிக சுலபமாக கொள்வனவு செய்தனர்!- சவேந்திர சில்வா
யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் மிகச் சுலபமாக ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்களமயமாக்கும் அரசாங்கத்திற்கு தமிழ் மக்கள் பதிலடி கொடுக்க இத்தேர்தல் நல்ல வாய்ப்பு: ஸ்ரீகாந்தா
வடக்கும் கிழக்கும் இணைந்ததுதான் தமிழரின் தாயகம்.  இதில் ஒரு சதுர அங்குல நிலத்தைக் கூட சிங்கள மயமாக்குவதற்கு நாங்கள் தயாரில்லை என்பதை நாங்கள் இந்த தேர்தலிலே எடுத்துக் காட்டவேண்டும் என யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான ஸ்ரீகாந்தா

விளம்பரம்

ad

ad