புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 செப்., 2019

பாஜக தலைவர் பதவியை ஏற்கச் சொல்லி ரஜினிக்கு அழுத்தம்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டதினால் அவர் பாஜக கட்சியல் இருந்து விலகி தனது பொறுப்பை ஏற்க தயாராகிவிட்டார்.இந்நிலையில் தமிழக பாஜகவின் தலைமை பொறுப்பை ஏற்பதற்கு தலைவர்கள் பின்னடித்து வருவதாக தமிழக புலனாய்வு ஊடகங்கள் தெரிவிக்கின்றது.

மைத்திரி- மஹிந்த சதியே காரணம்

புதிய அரசியல் அமைப்பு தடைப்பட்டுப் போனதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே பிரதான காரணம் என இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா குற்றம்சாட்டியுள்ளார்.

வாள்வெட்டு கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – கொக்குவில் பிடாரி அம்மன் ஆலயம் அருகே உள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த கும்பல் ஒன்று, வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி தளபாடங்கள் மற்றும் உடமைகளை அடித்து நொருக்கி விட்டுத் தப்பிச் சென்றுள்ளது. நேற்று முன்தினம் இரவு நடந்த இச் சம்பவத்தின் போது

கோத்தா வந்தால் கொடூரங்கள் தலைவிரித்தாடும்

கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவியேற்றால், நாட்டில் மீண்டும் படுகொலைகள், ஆட்கடத்தல்கள் உட்பட கொடூரங்கள் தலைவிரித்தாடும் என அமைச்சர் ரவீந்திர சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதியாக

பேச்சுக்களை குழப்ப 'மொட்டு' முயற்சி

கோத்தாபய ராஜபக்‌ஷ வெற்றிபெறுவதை விரும்பாத பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சிலரே, சுதந்திரக் கட்சியுடன் நடத்தும் பேச்சுகளைக் குழப்பும் வகையில் செயற்படுகின்றனரா என்ற சந்தேகம் வலுப்பதாக லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

தேர்தலை நடத்தும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லை

மாகாண சபைத் தேர்தலை புதிய முறைமையின் கீழோ அல்லது பழைய முறைமையின் கீழோ நடத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதற்கு, ஜனாதிபதிக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தின் ஐந்து நீதியரசர்கள் அடங்கிய குழாம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

டிசெம்பர் 2ஆம் திகதிக்குள் ஜனாதிபதி தேர்தல்

நவம்பர் 10ஆம் திகதிக்கும் டிசெம்பர் 8ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்துக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ad

ad