2023 ஆம் ஆண்டுகான வரவு-செலவு திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. சற்று முன்னர் நாடாளுமன்றத்தில் இரண்டாம் வாசிப்பு மீது இடம்பெற்ற வாக்கெடுப்பில் 121 வாக்குகள் ஆதரவாகவும் 84 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. இதன்படி, 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் 37 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. |
-
22 நவ., 2022
37 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது வரவுசெலவுத் திட்டம்
www.pungudutivuswiss.com
பிறப்புச் சான்றிதழில் முக்கிய மாற்றங்கள் - தேசிய இனத்தை நீக்கவும் யோசனை
www.pungudutivuswiss.com
பிறப்புச் சான்றிதழில் இருந்து இனம் குறித்த தகவலை நீக்கபட வேண்டும் என பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் வதற்கான முன்மொழியப்பட்டுள்ளது. பிறப்புச் சான்றிதழில் சிங்களம், தமிழ், முஸ்லிம், மலாய் மற்றும் இந்திய வம்சாவளியினர் என தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஆகிய பதங்கள் ஆவணத்தில் இருந்து நீக்கப்படும் என பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவிக்ரம தெரிவித்துள்ளார் |
சுமந்திரன் - பிள்ளையான் வாக்குவாதம்!
www.pungudutivuswiss.com
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், கிராமிய உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குமிடையில் ஏற்பட்ட கடும் தர்க்கத்தின் போது பரஸ்பரமாக இருவரும் குற்றச்சாட்டுக்கள், வசைபாடல்கள், சேறுபூசல்களை சபைக்கு தலைமை தாங்கிய பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி தொலவத்த ஹன்ஸாட்டிலிருந்து முழுமையாக நீக்குமாறு உத்தரவிட்டார் |
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)