-
29 ஆக., 2021
சட்டத்தரணி கௌரி சங்கரியின் உடல் தகனம்
www.pungudutivuswiss.com
கொரோனா தொற்றினால் உயிரிழந்த சிரேஸ்ட சட்டத்தரணியும், ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் மனைவியுமான கௌரி சங்கரி தவராசாவின் இறுதி கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன. இன்று காலை பொரளை பொது மயானத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்ற இறுதி நிகழ்வில், மேல் நீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதியரசர்கள், சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்று அஞ்சலி செலுத்தியுள்ளனர். |
நான்கு தசாப்த சட்டத்துறை வரலாற்றில் சரித்திரம் படைத்த தமிழச்சி தவராசா கௌரிசங்கரி
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
கௌரிசங்கரி தவராசா ..இந்தவார செய்திகளில் முன்னிடத்தை பிடித்த இலங்கை தமிழச்சி இவர் . 1955 இல் யாழ் மாவட்டம் அளவெட்டியில் பிறந்து இலங்கை சட்டக்கல்லூரியில் சட்டக்கல்வி பயின்று புங்குடுதீவை சேர்ந்த ஜனாதிபது சட்டத்தரணி கே வி தவராசாவை காதல்மணம் கொண்டு கொழும்பில் குடியேறி 2021 ஆகஸ்ட் 23 இறைவனடி சேர்ந்த அதியுன்னத சிறப்புமிகுசட்டவல்லுனர் தமிழ் பெண்மணி தான் கௌரிசங்கரி தவராசா . எழுபதுகளின் இறுதியில் சட்டவாளராக நீதிமன்றம் ஏறிய இவர் எடுத்த எடுப்பிலேயே அந்த காலத்தில் பரபராகப்பேசப்பட்ட குட்டிமணி தங்கதுரை வழக்கில் தனது சட்டக்கூர்மையை தீட்டி பதம் பார்த்தவர். 40 வருடங்களுக்கும் மேலாக இலங்கையில் மாறி மாறி வந்த இரு பெரும்பான்மை கட்சி அரசுகளும்பயங்கரவாத சட்டத்தை கையிலெடுத்து வைத்துக்கொண்டு ஆட்சிக்காலத்தை ஓட்டிய போது அந்த பெரும்தீச்சுவாலையினுள்ளே குழியோடி வெற்றிகண்டவரலாற்றுப்பதிவைசாதனையாக்கியவர் . சட்டக்கல்லூரியில் இருந்து இணை சேர்ந்த கௌரிசங்கரியும் தவராசாவும் வாழ்வில் மட்டுமல்ல தொழில் ரீதியாகவும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல என்று அடிக்கடி நிரூபிப்பதும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சட்டத்துறையில் வருகின்ற சிக்கல்களை தீர்ப்பதிலும் வழிகாண்பதிலும் ஒட்டிக்கொண்டவர்கள்
குமார் பொன்னம்பலம் , ரவிராஜ் போன்ற இவர் வழிநின்ற சகசட்டவாளர்களை உயிர்ப்பலி வாங்கிய இனவாத காட்டுமிராண்டி அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் தம்முயிரை துச்சமென எண்ணி இனத்துக்காக நீதிக்காக நித்தமும் நெஞ்சுரம் கொண்டு நீதிமன்ற படிகளேறி தன்னினம் காத்த வீரத்தமிழச்சி இவர் . கடந்த கடந்த 40 வருட இலங்கை வரலாற்றில் பதிவான பரபரப்பான பேசப்பட்ட எந்த வழக்கை அலசிப்பார்த்தாலும் இவர்களது சட்டநுணுக்க தூக்கலும் வாதத்திறமை வழிகாட்டலுமே உயர்ந்து நிற்கும் . பயங்கரவாத தடைசட்டத்தின் கீழ் கைதாகி சிறையில் வாடிய வாடிக்கொண்டிருக்கின்ற தமிழரின் அத்தனை வழக்குகளிலும் இவரும் துணைவருமாக உதவிய காலச்சுவடுகள் தான் படிந்திருக்கும் , மொழி ,மதம் ,இனம் .என்ற வேறுபாடு கடந்து ஏழை பணக்காரன் வர்க்கபேதம் மறந்து நீதி நியாயம் ஒன்றே மூச்சாக கொண்டு போராடி மீட்டவர்கள் இவர்கள் . அரசியல் கைதிகள் , ஊடகவியலாளர்கள் அரசியல்வாதிகள் அரசியல்பழிவாங்கல் கைதிகள். நிதிமோசடி வழக்குகள் என அத்தனையையும் தனது சட்டமூளை கொண்டு தகர்த்தெறிந்து நீதிதேவதையை வாழ வைத்தவர் பலரின் ஏழ்மை நிலைகண்டு இலவசமாக ஆஜராகி வெற்றி பெற்றுக்கொடுது அவர்களது வாழ்வை மீட்டுக்கொடுத்தவர்இவற்றை வைத்து எந்தவித சுயவிளம்பரமும் செய்துகொள்வதே இல்லை . பெரும்பான்மை இனம் சார் அரசுகள்.. கட்சிகள் அரசியவாதிகள். அமைப்புக்கள் மூலம் இவரது திறமையை பயன்படுத்துமுகமாக அங்கீகரிக்குமுகமாக பல உயரிய பதவிகள் வரக்கூடிய சந்தர்ப்பங்களை கூட உதறி தள்ளியவர் . அந்த பதவிகளுக்கு அடிமையாகினால் தான் சார்ந்த இனத்துக்கு நேர்மையான உண்மையான நீதியை பெற்றுக்கொடுப்பது இயலாத காரியம் என்ற எண்ணத்தில் இறுதி வரை சட்டத்தரணியாகவே வாழ்ந்து காட்டியவர் . கொழும்பில் வாழ்ந்து கொண்டே எத்தனையோ அரசியல் ஆடுபுலிஆட்டத்துக்குள்ளும் பணமுதலைகளின் சதிவலைகளுக்குள்ளும் நீந்தி கரை சேர்ந்தவர் . கே வி தவராசா அவர்கள் கொழும்பு மாவட்ட தமிழரசுக்கட்சி தலைவராக இருக்கும் வேளையில் அதனால் வருகின்ற உயிராபத்துக்கள் ,பயமுறுத்தல்கள், சட்டக்குறுக்கீடுகள் ,அரசியல் பழிவாங்கல்கள் ,என அத்தனையையும் வெட்டியெறிந்து கணவ்ருக்கு உறுதுணையாகவும் உதவிக்கரமாகவும் வாழ்ந்து பெருமை சேர்த்தார் . ஆசிய பசிபிக் வலயத்தில் முதல் நூறு சிறந்த பெண்மணிகள் வரிசையில் இடம்பிடித்து நாட்டுக்கும் இனத்துக்கும் புகழ் தேடி தந்தார் .வெளிநாட்டு ராஜதந்திரிகள் தூதுவர்களிடம் இவரது நீதியான மனிதாபிமான செயல்பாடுகள் நல்ல பெயரை பெற்றிருந்தது .கொரொனா பெரும்துயர் காலத்திலும் கடமையொன்றே பெரிதென எண்ணி மற்றுமொரு பரபரப்பான வழக்கில் நீதிமன்று ஏறிய இந்த இரும்புப்பெண்மணி தன்வாழ்நாள் முழுக்க உயிருக்குயிராய் நேசித்த சட்டதொழில் கடமை நேரத்திலேயே காலனின் பிடிக்குள் சிக்கி பலியான கொடுமை எம்மவரை கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது . எத்தனை எதிரிகளையும் தனியொருத்தியாக நின்று நேரில் எதிர்கொண்டு தன் சட்டப்புலமையால் தூக்கியடித்து வெற்றி கண்ட தமிழச்சியே உன் வெற்றிகள் மட்டுமே மாலையாக உன் கழுத்தில் வீழும் கோலங்கள் தான் நாம் கண்டோம் . தோல்வியே காணாத உன் கருப்பு மேலாடைக்குள் கொடுங்கோலன் காலனவன் எப்படி நுழைந்தான் அதுகூட . அதிசயமே. இருந்தாலும் நீ நீதிக்காய் வாழ்ந்தாய் வரலாறு படைத்தாய் . உனது இந்த நேரியவாழ்க்கை இலங்கை வரலாற்றில் எழுதப்படும் உன் ஆத்மா சாந்தியடையட்டும் ..சாந்தி . சாந்தி. சாந்தி.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)