-
8 ஆக., 2015
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தைக் கூட்ட தடை நீட்டிப்பு news கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அனுமதியின்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டங்களை கூட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இன்று நீட்டித்துள்ளது. நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கட்சியின் மத்தியக் குழுக் கூட்டத்தை கூட்டுமாறு மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் வலியுறுத்திவரும் நிலையில் இந்த தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் பிரசன்னா சோழன்காரச்சி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்தத் தடை உத்தரவு இன்று முடிவுக்கு வந்த நிலையில்இ வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போதுஇ வழக்கில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரான அனுர பிரியதர்ஷன யாப்பா சார்பில் ஆஜரான வழக்கறிஞர்இ பதில் மனு தாக்கல்செய்வதற்குக் கால அவகாசம் கோரினார். இதையடுத்து 24 ம் தேதிவரை அவகாசம் கொடுத்த நீதிபதிஇ தடை உத்தரவையும் அதுவரை நீட்டிப்பதாக அறிவித்தார். கட்சி விதிகளின்படிஇ மத்தியக் குழுக் கூட்டத்தை அழைக்கும் அதிகாரம் தலைவருக்கு மட்டுமே வழங்கப்பட்டிருப்பதாக மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கட்சித் தலைவரின் அனுமதியின்றி இந்தக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு சிலர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக குற்றம்சாட்டிய மனுதாரர்இ இந்தக் கூட்டங்களை நடத்துவது சட்ட விரோதமானதென்று தீர்ப்பளிக்குமாறு கோரி இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.
கட்சித் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் அனுமதியின்றி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு கூட்டங்களை கூட்டுவதற்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை கொழும்பு மாவட்ட
அதிகாரப்பகிர்வை வழங்காத நாடுகளே இரண்டாகப் பிளவு
அதிகாரப்பகிர்வு இடம்பெற்ற நாடுகள் உலகில் பிரிந்ததாக இல்லை என்றும், அதிகாரப்பகிர்வை முன்வைக்காத நாடுகளே பிரிந்துள்ளன என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும்
சர்வதேச விசாரணையில் மாற்றமில்லை
எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர், எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான சர்வதேச
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)