புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 மார்., 2010

புங்குடுதீவு ஓரு நோக்கு

புங்குடுதீவு ஓரு கிராமம் அல்லது ஊர் .எப்படியும் சொல்லி கொள்ளலாம் .ஏன் என்றால் யாழ்ப்பாண குடா நாட்டில் உள்ள கிராமங்களிலேயே ஓரு மிகபெரிய ஊர் இதுவாகும் . யாழ் தீபகற்பத்தின் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளின் மத்தியிலே அமைந்துள்ளது .ஒல்லாந்து நாட்டவர் தமது ஆட்சியின் போதுஇந்த ஏழுதீவுகளுக்கும் ஹோல்லந்தில் உள்ள இடங்களின் பெயர்களை சூடி மகிழ்ந்தனர்.அந்த வகையில் புங்குடுதீவுக்கு மிட்டில்ஹ்பெர்க் என்று நாமம் இட்டு அழைத்தனர் . யாழ்ப்பானதிலிருந்து தெற்கு பண்ணை பாலம் ஊடாக மனடைதீவு சந்தி அல்லைப்பிட்டி அராலி சந்தி வேலணை வங்களாவடி வேலனைதுறை கடந்து புங்குடுதீவுக்கான இலங்கையிலேயே பெரியதான வாணர் தாம்போதி மேலே பயணம் மேற்கொண்டால் புங்குடுதீவை அடையலாம். புங்குடுதீவு சுமார்ஆறு மைல்நீளமும் ஐந்து மைல் அகலமும் கொண்ட நால் புறமும் கடலால் சூழப்பட்டு வேலையுடன் நேரிய பேரு வீதியினால கடலினூடே இணைக்க பட்ட ஓரு பிரதேசமாகும். ஓரளவு சதுர வடிவில் இருந்தாலும் கேரதீவு ஓடான நீரேரியின் பிரிப்பினால் ப எழுத்து வடிவிலும் தோன்றும் .வட கிழக்கே வேலனைத்தீவினையும் மேற்கே நயினாதீவினையும் தென்மேற்கே தூரத்திலே நெடுன்தீவினையும் கொண்டு மத்தியிலே இத்தீவு சீராக அமைந்துள்ளது, தீவின் தெற்குப் பகுதி உயர்வாகவும் வடக்கு பகுதி தாழ்வாகவும் காணபடுகிறது . புங்குடுதீவில் பல வகையான தரை அமைப்புகளும் காணப் படுகின்றன.மடத்துவெளி கரை பகுதிகள் சீனி போன்ற தூய வெள்ளை பளிங்கு மணல் பகுதியாகவும் ஊரதீவு மட்டும் தீவின் தெற்கு பகுதி கரைகள் இளமைன்சல் மணல்பகுதியாகவும் இருகின்றன.மடத்துவெளி ஊரதீவு பகுதிகள் சமதரைகளாக அமைந்துள்ளன.மேல் பகுதி மணல் தன்மையாகவும் சட்டு கீழே நரை நிற மக்கியாகவும் இன்னும் கீழே நல்ல தரமான களிமண்ணாகவும் அமைந்துள்ளது.வல்லன் பகுதி மற்றும் வீராமலை பகுதிகள் விவசாயத்திற்கு சிறந்த சிறிய குறுநி கலந்த கருநிற நிலமாக உள்ளன.குரிசிக்காடு போக்கதை பகுதிக்கு மேற்கே மிக அசாதாரணமான வகையில் செம்மண் பகுதியாகக உள்ளது.பெருங்காடு இருபிட்டி தெற்கு போன்ற பகுதிகள் மேலே குறைந்தளவு மண்ணும் கட் பாங்கான கீழ் பகுதியாகவும் காணப்படுகின்றன. இந்த தரை தோற்ற அடிப்படையில் புங்குடுதீவில் மடத்துவெளி ஊரதீவு இருபிட்டி வடக்கு வல்லன் பகுதிகளில் நெல் பயிர் செய்கைக்கு உட்படுத்த படுகின்றன. வல்லன் வீரமலை நடுவுதுருதி பகுதிகளில் மிளகாய் புகையில வெங்காயம் போன்றன தரமான முறையில் பயிரிடபடுகின்றன-சுமார் நாற்பது ஆண்டுகளின் முன்னே வரை பெரும்பாலான மேட்டு பகுதிகளில் சிறு தானியங்களான வரகு சமை குரக்கன் பயறு உழுந்து பயிர்கள் பயிரிடப்பட்டன.இவற்றை விட நிறைந்த பனை தென்னை வளம் மிக்க கிராமமாக புங்குட்தீவு திகழ்கின்றது. விருட்சங்களாக வேம்பு பூவரசு ஆள் அரசு இத்தி கதியால் முருங்கை சீமைகதியால் போன்றனவும் கடல்கரை ஓரங்களில் ஆவாரை கற்றாளை கள்ளி கொட்டனி போன்ற மருத்துவ குணாசெடிகளும் காணபடுகின்றன

ad

ad