புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

7 செப்., 2013

 த.தே.கூ இன் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் 
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் பிரசாரம் யாழ் நகரில் இன்று   காலை 10 மணியளவில் பஸ் நிலையத்திற்கு அருகேயுள்ள வைரவர் கோவிலிலிருந்த்து ஆரம்பமானது.  
போரின் போது புலிகளின் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை!-யாழில் சரத் பொன்சேகா
வன்னியில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தில் விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தளபதிகள் எவரும் படையினரிடம் சரணடையவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: கே.ஆர் 449 வாக்குகளுடன் வெற்றி: எஸ்.தாணு 252 வாக்குகள் பெற்று தோல்வ
 
2013 2015ம் ஆண்டுக்கான தமிழ்த் திரைப்பட சங்கத்தின் தலைவர் பதவி உள்பட பல்வேறு பதவிகளுக்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. மாலையில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. 

கொழும்பில் வாழும், யாழ் மாட்டத்தைப் பூர்வீகமாகக் கொண்ட மக்களுடனான கலந்துரையாடல் ஒன்றில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் பங்கேற்றார்.
Anna  (12)கொழும்பு வாழ் தமிழர் நலன் விரும்பிகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்தக் கலந்துரையாடல் கொழும்பு தமிழ் சங்க கேட்போர் கூடத்தில், செப்ரெம்பர் 5ஆம் திகதி மாலை நடைபெற்றது.
கல்விமான்கள், பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் முனைவோர்கள், மூத்த பிரஜைகள், ஊடகத் துறையினர் என நூற்றுக்குக்கும் அதிகமானோர் கலந்து கொண்டு திரு. சித்தார்த்தன் அவர்களது கருத்துக்கனைச் செவிமடுத்ததுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்பான தமது ஐயங்களை அவரிடம் கேள்விகளாக வெளிப்படுத்தியதுடன், தமிழ் கூட்டமைப்பிடம் எத்தகைய செயற்பாடுகளைத் தாம் எதிர்பார்க்கின்றோம் என்பவை தொடர்பான கருத்துக்களையும் வழங்கினர்.விநாயக சதுர்த்தி

எதிர்வரும் ஞாயிறு( 08.09.2013) மாலை 17.30 மணியளவில் சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் விநாயக சதுர்த்தி பூசை நடைபெற உள்ளது.அடியார்கள்  அனைவரும்  அன்புடன் அழைக்கப்படுகின்றீர்கள் 

நடிகை ரோஜா உண்ணாவிரதம்
ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கான அமைக்க மத்திய அரசும், காங்கிரஸ் காரிய கமிட்டியும் முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டனர். 
திருத்தணியை அடுத்த நகரியில் நடந்த போராட்டத்தில் நடிகை ரோஜா கலந்து கொண்டார். நகரியில் உள்ள ஓம் சக்தி கோவில் அருகில் இருந்து மணிக் கூண்டு வரை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் நடிகை ரோஜா பேரணியாக வந்தார்.
வடமாகாண தடகளப் போட்டி இன்று ஆரம்பம்
வடமாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான தடகளப்போட்டி ஆரம்ப நிகழ்வு இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண கல்வி, கலாசார பண்பாட்டலுவல்கள்
பளையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்களை தாக்க முற்பட்ட ஈபிடிபி
பளையில் நாளை சனி கிளிநொச்சி வேட்பாளர்களை ஆதரித்து நாடாத்தவிருந்த பரப்புரைக் கூட்டத்திற்கு முன்னாயத்தப் பரப்புரைப் பணிகளில் ஈடுபட்டிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களை ஈபிடிபியினர் தாக்க முற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளன.

ad

ad