தி லயன்ஸ்' என்று செல்லப்பெயர் கொண்ட இங்கிலாந்து அணியை பிடரியில் அடித்து வீழ்த்திய வங்கதேசம் உலகக் கோப்பை போட்டியின் காலிறுதி சுற்றுக்குள் கம்பீரமாக நுழைந்தது.
இந்த ஆட்டம் இங்கிலாந்துக்கு வாழ்வா சாவா? ஆட்டமாக இருந்தது. இந்த போட்டியில் இங்கிலாந்து தோல்வியடைந்தால் வங்கதேச அணி காலிறுதிக்கு முன்னேறி விடும் என்ற நிலையும் இருந்தது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்துள்ளது.
வங்க தேச அணியின் தொடக்க வீரர்களாக தமிம் இக்பாலும் இம்ருல் கயாசும் களமிறங்கினர். வங்க தேச அணி 3 ரன்கள் எட்டிய போது இம்ருல் கயாஸ் அவுட் ஆனார். 2 ரன்களே எடுத்த நிலையில் ஆண்டர்சன் பந்தில் ஜோர்டானிடம் அவர் பிடி கொடுத்தார்.