புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 நவ., 2013

பல்லாயிரம் மக்கள் புடை சூழ முள்ளிவாய்க்கால் முற்றத்தின் நிகழ்வுகள் எழுச்சியுடன் ஆரம்பம்!
தமிழக அரசின் மாணவர் கைது உள்ளிட்ட பல்வேறு அடக்கு முறைக்கு மத்தியில் தமிழக மாணவர்கள் தங்கள் முள்ளிவாய்க்கால் பரப்புரை சுடரினை முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு கொண்டு சென்றுள்ளார்கள்.
நடிகை அஞ்சலி கைதாவாரா?:
 பிடிவாரண்ட் நகல் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது
 தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வந்த  நடிகை அஞ்சலி, வளசரவாக்கத்தில் சித்தி பாரதிதேவியுடன் தங்கியிருந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றார். 
ஆ.ராசா கோரிக்கை : டெல்லி சி.பி.ஐ. கோர்ட் நிராகரிப்பு
சி.பி.ஐ. என்னும் மத்திய புலனாய்வு அமைப்பின் உருவாக்கமே செல்லாது என்று கூறி, அது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்து கவுகாத்தி ஐகோர்ட் பரபரப்பு தீர்ப்பு அளித்தது. இதனால் சி.பி.ஐ.யின் நிலை கேள்விக்குறியாகி உள்ளதாக கூறப்படுகிறது.
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்ச்சி :
நெடுமாறன்–வைகோ பங்கேற்றனர்

தஞ்சையில் நடந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு விழாவில் பழ.நெடுமாறன், வைகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தின் ஊடகவியலாளர்கள் பட்டியலின் கீழ் கெலும் மக்ரே இலங்கை வருகிறார்
பிரித்தானிய பிரதமரின் அலுவலகத்தினால் சமர்பிக்கப்பட்ட 30 ஊடகவியலாளர்களின் பெயர் பட்டியலில் சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர் கெலும் மக்ரே பெயர் இருந்ததன் காரணமாவே இலங்கை அரசாங்கம் அவருக்கு வீசா அனுமதியை வழங்க நேர்ந்ததாக தெரியவருகிறது.
யாழ்.இணுவிலில் கிணற்றிலிருந்து பெண்ணொருவரின் சடலம் மீட்பு
இன்று அதிகாலை நித்திரையில் இருந்து எழுந்து சென்ற இளம் குடும்பப் பெண், காலையில் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலை ஜனாதிபதியால் திறந்து வைப்பு
அம்பாந்தோட்டை சூரிய வெவ என்ற இடத்தில் புதிதாக அமைக்கப்பட்ட இலங்கையின் முதலாவது கணனி உற்பத்தி தொழிற்சாலையை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று காலை திறந்து வைத்தார்.
ஆசியாவின் தெழில்நுட்ப மத்திய நிலையமாக இலங்கையை மாற்றும் தேசிய திட்டத்தின்கீழ் ”ஈ விஸ்” என்ற பெயரில் இந்த கணனி

சிட்டி பாபு (நடிகர்)


சிட்டி பாபு
பிறப்புஷாஜாத் அதீப்
1964
இறப்பு8 நவம்பர் 2013 (age 49)[1]
சென்னை,தமிழ்நாடு
பணிநடிகர், நகைச்சுவையாளர்
செயல்பட்ட ஆண்டுகள்2003-2013
சிட்டி பாபு (தமிழ்சிட்டி பாபு; இயற்பெயர் ஷாஜாத் அதீப், 1964 - 8 நவம்பர் 2013[2])[3] என்பவர் இந்திய சினிமா நகைச்சுவை நடிகரும், தொலைக்காட்சி அறிவிப்பாளருமாவார். இவர் தமிழகத் திரைப்படத்துறையின் குறிக்கத்தகு பணியாற்றியுள்ளார். சன் தொலைக்காட்சியின் அசத்தப் போவது யாரு?என்னும் நகைச்சுவை நிகழ்சியில் நடுவராகவும் இவர் பணியாற்றினார்.
நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு காலமானார்
தமிழ் திரையுலகின் நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு இன்று காலமானார். அவர் இறக்கும் போது 49 வயதாகும்.
நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் இன்று மருத்துவமனையில் காலமானார்.
ஏற்கனவே சிட்டி பாபுவுக்கு இருதய சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
நகைச்சுவை நடிகர் சிட்டி பாபு, ஒற்றன், தூள், சிவகாசி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ad

ad