புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 ஏப்., 2021

நாட்டின் பல பகுதிகள் எந்த நேரமும் முடங்கும் – இராணுவத் தளபதி!

www.pungudutivuswiss.com
எதிர்வரும் நாட்களில் நாட்டில் அதிக கொரோனா வைரஸ் தொற்று பதிவாகும் பிரதேசங்கள் எந்த நேரத்திலும் தனிமைப்படுத்தப்படலாம்.

ரொறன்ரோ தமிழ் இருக்கை-குறிக்கோள் தொகை எட்டப்பட்டதுஉதவிய தமிழ்நாட்டு அரசின் ஆதரவுக்கும் நன்றி

www.pungudutivuswiss.com
ரொறன்ரோ தமிழ் இருக்கைச் செயற்றிட்டத்தைச் செயற்படுத்துவதற்கான $3,000,000 என்ற குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம்
மரண அறிவித்தல்
------------------------


நல்லதம்பி சொர்ணலிங்கம் (பாலன்)
முன்னாள் பிரபல தொழிலதிபர்
புங்குடுதீவு 7ம் வட்டாரம்/முல்லைத்தீவு

பிறப்பு
26 FEB 1944

இறப்பு
26 APR 2021

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரம் வரதீவினைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு சுதந்திரபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி சொர்ணலிங்கம் அவர்கள் 26-04-2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற பாலாம்பிகை, பாரதியம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,
கோடீஸ்வரன்(சிவா- சுகாதார திணைக்களம்), புவனேஸ்வரன்(ஈசன்- அவுஸ்திரேலியா), கோகுலேஸ்வரன்(குட்டி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சந்திரகலா(ஆசிரியை), ஜெயகெளரி(அவுஸ்திரேலியா), கிருஷ்ணவேணி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகரெத்தினம், சற்குணபூபதி, கண்ணம்மா ஆகியோரின் அன்புச் சகோதரரும், பூபாவதி, காலஞ்சென்ற மயில்வாகனம், துரைராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான ஐயாத்துரை, பொன்னையா, நடராசா மற்றும் காலஞ்சென்ற வேலுப்பிள்ளை(கணக்கர்), தங்கம்மா ஆகியோரின் பாசமிகு மருமகனும், கவிசாளினி, அபிமன்யூ, கனிகா, ரிஷாறினி, அகில், ரக் ஷயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 28-04-2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 10:00 மணிக்கு பூதவுடல் சுதந்திரபுரம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறுகேட்டுக் கொள்கின்றோம்.தகவல்: து.மோகனராசன்(மருமகன்)
தொடர்புகளுக்கு
சுவேந்திரன்Mobile : +41797805316 கோகுலேஸ்வரன்(குட்டி)Mobile : +94773421084

ad

ad