புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 ஜூலை, 2022

பிரித்தானிய பிரதமர் போட்டியில் இருந்து விலகிய சஜித் ஜாவித்!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யும் போட்டியில் இருந்து சஜித் ஜாவித் விலகியுள்ளார். பிரித்தானிய பிரதமராக செயல்பட்டு வந்த போரிஸ் ஜோன்சன் தமது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், புதிய தலைவரை தெரிவு செய்யும் முயற்சியில் கன்சர்வேடிவ் கட்சி ஈடுபட்டு வருகிறது. தற்போது வரையில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முன்னிலை பெற்று வருகிறார். இந்த நிலையில் சஜித் ஜாவித் தலைவருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யும் போட்டியில் இருந்து சஜித் ஜாவித் விலகியுள்ளார். பிரித்தானிய பிரதமராக செயல்பட்டு வந்த போரிஸ் ஜோன்சன் தமது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், புதிய தலைவரை தெரிவு செய்யும் முயற்சியில் கன்சர்வேடிவ் கட்சி ஈடுபட்டு வருகிறது. தற்போது வரையில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முன்னிலை பெற்று வருகிறார். இந்த நிலையில் சஜித் ஜாவித் தலைவருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்

அதிமுக 'மாஜி'க்களின் ரகசியங்கள்: பொன்னையன் ஆடியோவால் 'லீக்'

www.pungudutivuswiss.com
அ.தி.மு.க.,வில் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான பல்வேறு ரகசியங்களையும், கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் புட்டுபுட்டு வைக்கும் 'ஆடியோ' வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை நெருக்கடி: பசில் ராஜபக்ஷ துபாய் செல்ல எதிர்ப்பு - விமான நிலையத்தில் நள்ளிரவுப் போராட்டம்

www.pungudutivuswiss.comபரணி தரன்
  • பிபிசி தமிழ்

SLAF-AN Antonov-32: என்ற குறியீடு அடங்கிய ராணுவ விமானத்தில் தப்பி ஓடினார் கோட்டா: மாலை தீவில் தரையிறங்கியது

www.pungudutivuswiss.com
இன்று(புதன் கிழமை) அதிகாலை இலங்கை நேரப்படி சுமார் 1 மணி அளவில், இலங்கை வான் படை விமானமான அன்டனோவ் 32 என்ற விமானத்தில் ஏறி கோட்டபாய மாலை தீவு நோக்கிச் சென்றுள்ளார்

கோத்தாவை வெளியே கலைக்குக:மாலைதீவினுள் அழுத்தம்

www.pungudutivuswiss.com
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மாலைத்தீவில் இருநது வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பங்கீட்டு அட்டைக்கே இனி எரிபொருள்!

www.pungudutivuswiss.com


இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் எனும் பங்கீட்டு முறைமை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட இருப்பதனால் உடனடியாக எரிபொருள் விநியோக அட்டையினை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் எனும் பங்கீட்டு முறைமை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட இருப்பதனால் உடனடியாக எரிபொருள் விநியோக அட்டையினை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

3 வீடுகளில் கொள்ளை - 10 பேர் கைது

www.pungudutivuswiss.com


கோப்பாய் பொலிஸ் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட முதன்மை சந்தேக நபர் மற்றும் நகை கடை உரிமையாளர், உடந்தையாக இருந்தவர்கள் என 10 பேர் யாழ்பபாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட முதன்மை சந்தேக நபர் மற்றும் நகை கடை உரிமையாளர், உடந்தையாக இருந்தவர்கள் என 10 பேர் யாழ்பபாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

போராட்டக் குழுவினரின் நிபந்தனைகள்!

www.pungudutivuswiss.com


கோட்டா – ரணில் பதவி விலகியதை தொடர்ந்து ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தின் பதவி காலம் நிறைவடைவதற்குள் புதிய அரசியலமைப்பு மக்கள் வாக்கெடுப்புடன் உருவாக்கப்பட வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள போராட்டகாரர்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அரசியல் பழிவாங்கல், கொலை, காணாமலாக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து காலி முகத்திடல் போராட்டகாரர்கள் அரசியல் கட்சி தலைவர்கள், உறுப்பினர்களிடம் தமது யோசனைகளை முன்வைத்தனர்.

கோட்டா – ரணில் பதவி விலகியதை தொடர்ந்து ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தின் பதவி காலம் நிறைவடைவதற்குள் புதிய அரசியலமைப்பு மக்கள் வாக்கெடுப்புடன் உருவாக்கப்பட வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள போராட்டகாரர்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அரசியல் பழிவாங்கல், கொலை, காணாமலாக்கப்பட்ட விவகாரம்

ஆட்டம் முடிந்தது - ஓட்டம் பிடித்தார் கோட்டா!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ விமானமொன்றில் மாலைதீவிற்கு தப்பியோடியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ விமானமொன்றில் மாலைதீவிற்கு தப்பியோடியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

ad

ad