தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராவிட்டால் கூட்டணியில் திமுக நீடிக்காது: சோனியாவுக்கு கலைஞர் கடிதம்
ஐ.நா.வில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவராவிட்டால் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் திமுக நீடிக்காது. போர்க்குற்றம் குறித்து பன்னாட்டு ஆணையம் அமைத்து விசாரணை நடத்த வேண்டும். ஐ.நா. தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவர இந்தியா முயற்சி செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் கலைஞர் பிரதமர் மன்மோகன் சிங், சோனியாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.