உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளை
ஒன்றிணைக்கும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை
சேனாதிராஜாவின் முயற்சி கட்சிக்குள் உள்முரண்பாடுகளை
வெளிநாட்டு மற்றும் உள்ளூர் பயணிகள் ஜனவரி 1, 2023 முதல் வருகை மற்றும் புறப்பாடு அட்டைகளை ஒன்லைன் ஊடாக பூர்த்தி செய்வதற்கான வசதிகளை குடிவரவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. |
அரசியலமைப்பு பேரவைக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நியமிப்பதில் தொடர்ந்தும் இழுபறிநிலை நிலவுவதாக, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். |
உள்ளூராட்சித் தேர்தல் அடுத்த வருடம் மார்ச் 10 ஆம் திகதிக்கு முன்னர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு, தெரிவித்தது |
இலங்கைக்கு வந்துள்ள அமெரிக்காவின் கேலியன் நிறுவன நிறுவுனர் ராஜ் ராஜரட்ணம் நேற்றைய தினம் யாழ் போதனா வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலைகள் சேவைகள் பற்றி கலந்துரையாடினர் |
அமெரிக்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான பனிப்புயலால், நயாகரா அருவி முற்றிலும் உறைந்து போயுள்ளது. கிறிஸ்துமஸ் வார இறுதியில் நியூயார்க் நகரில் வீசிய அசுர புயல், 50 ஆண்டுகளில் மிக மோசமான புயலாக மாறியது. இதுவரை இந்த புயலின் தாக்குதலுக்கு 50 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துரதிர்ஷ்டவசமாக இந்த பலி எண்ணிக்கை மேலும் உயரும் என காவல்துறையினர் எதிர்பார்ப்பதாக Buffalo நகர மேயர் பைரன் பிரவுன் கூறியுள்ளார். |
சட்டவிரோதமாக கடல் மார்க்கமாக கனடாவுக்கு செல்ல முயற்சித்தபோது கப்பல் பழுதடைந்து வியட்நாம் கடல் எல்லையில் மீட்கப்பட்ட 303 இலங்கையர்களில் 152 பேர் நேற்றிரவு நாட்டுக்கு அழைத்துவரப்பட்டனர் |
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பங்குபற்றுதலோடு தேசிய ரீதியிலான 75 வது சுதந்திரதின கொண்டாட்டம் யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற உள்ளதாக ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இலட்சுமணன் இளங்கோவன் தெரிவித்தார் |
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார் |
யாழ்ப்பாணம் நாகவிகாரைக்கு அண்மையில் அமைந்துள்ள ஆரியகுளத்தின் வளாகத்தில் இன்று காலை முதல் இனந்தெரியாத நபர்களால் காட்சிப்படுத்தப்பட்ட பதாகையொன்றினால் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது |
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகளை
ஒன்றிணைக்கும் தமிழரசுக்கட்சி தலைவர் மாவை
சேனாதிராஜாவின் முயற்சி கட்சிக்குள் உள்முரண்பாடுகளை
கனடாவுக்கு படகில் சட்டவிரோதமாக சென்று கடலில் காப்பாற்றப்பட்டு வியட்நாம் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையை சேர்ந்தவர்களில் 151 பேர் இன்று வியட்நாம் நாட்டு நேரப்படி பிற்பகல் 5 மணிக்கு விமானம் மூலம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். |
யாழ்ப்பாணம் -பருத்தித்துறை நகரசபையின் புதிய தவிசாளர் தெரிவு கோரம் இன்மையால் ஒத்திவைக்கப்பட்டது |
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் இன்று அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும் அது முற்றிலும் பொய்யானது என சிங்கள
இனப் பிரச்சினைத் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கு சாதகமான சூழல் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார் |
2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 7,900 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை ஏன் செலவு செய்ய முடியாது. தேர்தலை பிற்போட அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக ரணில் - ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். |
2023 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களில் கிளிநொச்சி மாவட்டத்தின், கரைச்சிப் பிரதேச சபை, பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபை, பூநகரிப் பிரதேசசபை ஆகிய மூன்று உள்ளூராட்சி மன்றங்களின் ஆளுகையின் கீழுள்ள வட்டாரங்களில், வேட்பாளர்களாகப் போட்டியிடுவதற்கு ஆர்வமுடைய ஆண், பெண் இருபாலாரிடமிருந்தும் வின்னப்பங்கள் கோரப்படுகின்றன. |
2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தில் அரச செலவுகளுக்காக 7,900 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபாவை ஏன் செலவு செய்ய முடியாது. தேர்தலை பிற்போட அரசாங்கம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் மன்றாடுகிறது உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஊடாக ரணில் - ராஜபக்ஷர்களின் முடிவு ஆரம்பமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார். |
இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பது குறித்து ஆராய தமிழ்க் கட்சிகள் அடுத்த மாதம் கொழும்பில் கூடவுள்ளன. எதிர்வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கொழும்பில் இந்த சந்திப்பு நடைபெறும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார் |
கூட்டமைப்பினர் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் பிரதிநிதிகள் அல்ல என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார் |
இந்த வருட இறுதியில் சுமார் 30,000 அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவித்துள்ளார் |
எதிர்வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 31ம் திகதிக்கு முன்னதாக
பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்படும் என நீதி, சிறைச்சாலைகள்
லுவல்கள்
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இன்று அதிகாலை அமெரிக்கா நோக்கி பயணமாகியுள்ளார். அவரது மனைவி, மகன், மருமகள் மற்றும் பேரப்பிள்ளை ஆகியோரும் அவருடன் புறப்பட்டுச் சென்றுள்ளனர் என்று விமானநிலைய செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார் |
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் யாப்பின் பிரகாரம் செயற்படாத பட்சத்தில் சர்வதேச கால்பந்தாட்ட போட்டிகளில் இலங்கைக்கு தடை விதிக்கப்படும் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது |
ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றிடமாகும் தேசிய பட்டியல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே வழங்கப்பட வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார். |
கண்டி மற்றும் மஹியாவ ஆகிய ரயில் நிலையங்களுக்கிடையிலான ரயில் வீதியில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளமையால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. அத்துடன், கெலிஓயா, கண்டி ஆகிய ரயில் நிலைய வளாகங்கள் வௌ்ளத்தில் மூழ்கியுள்ளதென ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. |
தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக பயணித்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் என்ற வகையில் தனித்தனியாக செல்ல முடியாது என்று இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா தெரிவித்துள்ளார் |
விமானப் பணிப்பெண் ஆட்சேர்ப்பு நிறுவனம் என்ற போர்வையில், இணைய வழியூடாக நேர்முகப் பரீட்சை நடாத்தி, அழகான பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களை பெற்றுக்கொண்டு பாலியல் இலஞ்சம் பெற முயன்ற ஒருவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார் |
எதிர்வரும் ஐந்தாம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் நடத்தப்படும் திகதி குறித்து அறிவிக்கப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது. டிசம்பர் மாத இறுதியில் தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது |
மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், சிறிகாந்தா, சுரேஸ் பிரேமசந்திரன், மற்றும் சிவாஜிலிங்கம் ஆகிய எல்லோரும் சேர்ந்து சில பொதுவான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம் என வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார் |
தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் சமகால நிலைமை தொடர்பாக யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி பேச்சு நடத்தியுள்ளனர். நல்லூரிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் க.வி.விக்னேஸ்வரனின் இல்லத்தில் நேற்று மாலை இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. தமிழ் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு மணிநேரம் வரை இந்தச் சந்திப்பில் ஈடுபட்டனர் |
கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயன்ற நிலையில் , படகு பழுதடைந்து வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் இலங்கைக்கு மீண்டும் வர விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது. நாட்டுக்கு வர விருப்பம் தெரிவித்த 152 பேரும் நாடு திரும்புவதற்கு தேவையான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார் |
யாழ். நகர் பகுதிகளில் துவிச்சக்கர வண்டிகளுக்கு அறவிடப்பட்டு வந்த கட்டணங்கள் நேற்றைய தினம் முதல் நீக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர
முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் அறிவித்துள்ளார்.
உலக்கக்கிண்ண இறுதிப்போட்டியை மீள நடத்துமாறு 200,000 பேரின் கையெழுத்துடன் முறைப்பாடொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகி வந்த சூழலில், கடும் குளிர் அதற்கு எதிராக திரும்பியுள்ளது. அமெரிக்காவில் திடீரென உருவான வெடிகுண்டு சூறாவளி எனப்படும் குளிர்கால புயலால் நேற்று 15 லட்சம் பேருக்குமின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கி கிடந்தனர். கடற்கரை பகுதிகளில் வெள்ளம் ஏற்படுத்துவதுடன், சூறாவளி காற்றையும் வீச செய்யும் |
கிளிநொச்சி – பளைப் பகுதியில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற பஸ் விபத்தில் படுகாயமடைந்த சிறுவன் ஒருவனின் கை துண்டிக்கப்பட்டுள்ளது. |
கிளிநொச்சி மாவட்டத்தில் நிலவும் தொடர் பனிமூட்டம் காரணமாக வாகன போக்குவரத்தில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கடும் குளிர் காணப்படுவதுடன், இடையிடையே மழை பெய்தும் வருகிறது. இதனால் போக்குவரத்து செய்வதில் சிரமங்கள் காணப்படுவதுடன், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. |
இலங்கையின் உச்சி என அழைக்கப்படும் ”பனை முனை கல்வெட்டு திறப்பு விழா” பருத்தித்துறை பனைமுனை பகுதியில் இன்று மதியம் 2 மணியளவில் திறந்துவைக்கப்பட்டது |
இலங்கையை சேர்ந்த 44 பேருடன் படகொன்று ரீயூனியன் தீவை சென்றடைந்துள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன. 44 பேரில் மூன்று பெண்கள் இரண்டு குழந்தைகளும் உள்ளனர் அவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை கண்டறிவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த தாழமுக்கம் நேற்று (23ஆம் திகதி) காலை திருகோணமலைக்கு வடகிழக்காக 370 கிலோ மீட்டர் தூரத்தில் மையம் கொண்டுள்ளது. அது தொடர்ந்து வரும் 48 மணித்தியாலங்களில் இலங்கையைக் கடக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது |
பயங்கரவாத தடைச் சட்டத்தை முழுமையாக இரத்து செய்து தேசிய பாதுகாப்பு சட்ட மூலத்தை எதிர்வரும் ஜனவரி மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்த்துள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார் |
பாரதூரமான மற்றும் உணர்வுபூர்வமான குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படும் விடுதலை புலிகள் அமைப்பின் ஒரு சில போராளிகள் சிறைச்சாலையில் உள்ளார்கள். 16 தமிழ் அரசியல் சிறை கைதிகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரணைக்கு எடுத்து அவற்றை விரைவாக நிறைவு செய்யுமாறு நீதிச்சேவை ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியுள்ளேன் என நீதி,சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார். |
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும், உலக நாடுகளின் மேற்பார்வையிலும் இடம்பெற வேண்டும் என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார் |
கனடாவிற்கு சட்டவிரோதமாக படகு மூலம் செல்ல முயற்சித்த போது, படகு பழுதடைந்த நிலையில் வியட்நாமில் தங்கவைக்கப்பட்டுள்ள 302 இலங்கையர்களில் 152 பேர் மீண்டும் இலங்கைக்கு வர விருப்பம் தெரிவித்துள்ளனர் |
வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். |
கனடியத் தமிழர்கள் பத்து மில்லியன் ரூபா பெறுமதியான உயிர் காக்கும் மருந்துகளைத் தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். கனடியத் தமிழர் பேரவை, ஆண்டு தோறும் நடாத்தும் நிதிசேர் நடை பவனி ஊடாகப் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றது |
இராணுவத்திடம் எழிலன் (சசிதரன்) சரணடைந்திருந்தால் அல்லது எழிலனை அவரது குடும்பத்தினர் இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தால் அல்லது அவரை இராணுவத்தினர் கைது செய்திருந்தால் அவருக்கு என்ன நடந்தது என்பதை இராணுவத்தினர் தெரிவிக்க வேண்டும். அது அவர்களின் கடமை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார். |
தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலையில் மண் அள்ளிக் கொட்டியிருக்கின்றது. இதற்காக வருகின்ற காலத்தில் புரிந்து கொள்ளுவார்கள் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார் |
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த பஸ் ஒன்று, கிளிநொச்சி. பளை பகுதியில் இன்று (21) இரவு விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 17 பேர் காயமடைந்துள்ளனர்.
ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை நாட்டு மக்கள் நிச்சயம் தோற்றுவிப்பார்கள். பொதுஜன பெரமுனவின் அரசியல் பிரசார கூட்டத்தை அநுதாரபுரத்தில் இருந்து ஆரம்பிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்தா |
வெற்றிலைக்கேணியை அண்மித்த கடற்கரப்பில் வைத்து கடற்படையால் அழைத்து வரப்பட்ட மியான்மார் நாட்டு அகதிகள் யாழ். சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது |
அரசியல் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக இலங்கையில் 2022 இல் மனிதாபிமான தேவைகள் தொடர்ந்தும் அதிகரிக்கின்றன என ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் திங்கட்கிழமை தெரிவித்துள்ளது |
தம்வசமிருந்த ஜனாதிபதி பதவியையும் , பிரதமர் பதவியையும் பறிகொடுத்து , அமைச்சுப் பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பின்னால் சென்று கொண்டிருக்கிறது. தற்போது பொதுஜன பெரமுனவின் ஆயுட் காலம் நிறைவடைந்து விட்டது. எனவே சுதந்திர கட்சியை மீளக்கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார் |
சர்வதேச காலநிலை தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் எரிக் சொல்ஹெய்ம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரை நேற்று சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது தமிழர் அரசியல் பிரச்சினை உள்ளிட்ட நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது |