புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

28 பிப்., 2013



எம் தமிழ்இனத்தின் துளிர் என் ஊரவன் அவன்தான் நற்குணசிங்கம் றதிவதனி (மஞ்சுளா) தம்பதிகளின் புதல்வன் சுயன். சென்றவருடம் இவர் சுவிஸ் பாசெல் மாநிலத்தில் நீளம்பாய்தலில் முதலாவதாக வந்தார் . ஆனால் இந்த வருடம் அதையும் மீறி சுவிஸ் ரீதியாக 18 வயதிற்கான நீளம் பாய்தல் போட்டியில் (7m நீளத்தைப் பாய்ந்து) முதல் இடத்தைத் தனக்காக்கிக் கொண்டுள்ளான். இந்த சந்தோசமான விடையத்தை இத்தருணத்தில் எல்லோரிடமும் பகிர்ந்து கொள்வதில் எமக்கு எல்லாம் மிகப்பெருமையாகும்.இவரது அடுத்த குறிக்கோள் ஜரோப்பா அளவிலான போட்டியில் கலந்து வென்று உலகளவில் வெற்றி பெறுவதே. நாமும் அவரோடு நின்று வாழ்த்தி உரமூட்டுவோமா

பிரித்தானியாவில் அடைக்கலம் நிராகரிக்கப்பட்ட இலங்கை தமிழர்கள் சிலரின் நாடு கடத்தலை லண்டன் நீதிமன்றம் தடுத்துள்ளது.
இறுதிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்டநடவடிக்கைகளை அடுத்து இன்று திருப்பியனுப்பப்படவிருந்த தமிழர்களை திருப்பியனுப்ப வேண்டாம் என்று லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மீண்டும் ரத்தம் கசியும் இதயத்துடன் பேசுகிறோம் : திருச்சி சிவா
மாநிலங்களவையில் இலங்கைத்தமிழர் குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது திருச்சி சிவா எம்.பி.  பேசினார்.
அவர்,  ‘’இலங்கைத்தமிழர் நிலை குறித்து மீண்டும்

இலங்கை தூதரகம் மீது தாக்குதல்! பிரபாகரன் மகன் கொலையை கண்டித்து போராட்டம்!
 
பிரபாகரன் மகன் கொடூரமாக கொல்லப்பட்டதை கண்டித்து மலேசியா தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகம் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். 

                       புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் 
                                                   சுவிட்சர்லாந்து
                                           கண்ணீர் அஞ்சலி


                              செல்லத்துரை சத்தியமூர்த்தி
                                                                  (சனார்த்தன் )
                                       தோற்றம் :16.07.1948     மறைவு  24.02.2013

புங்குடுதீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த சுவிசில் வசித்து வந்த சத்தியமூர்த்தி இறைவனடி இறந்து விட்டார் என்பதனை ஆழ்ந்த வருத்தத்துடன் அறியத் தருகின்றோம் .அன்னார் ஊரதீவில் பிறந்து சுவிஸ் மண்ணில் சொலிகோவன் ,புரூக்டோர்ப் நகரங்களில் வசித்த காலப்பகுதியில் மக்களோடு அன்பாக பழகி அரிய  சேவைகளை செய்து  வாழ்ந்திருந்தார் .விருந்தோம்பலில் சிறப்புற்று விளங்கிய இவர் எல்லோரையும் அரவணைத்து நடப்பதில் இனிமையானவர் .ஊரதீவு பாணாவிடை சிவன் ஆலயம் ,மடத்துவெளி பாலசுப்பிரமணியர்  ஆலயம், கமலாம்பிகை மகா  வித்தியாலயம் போன்றவற்றின் பணிகளை செய்வதில் முன்னின்று உழைத்தவர் .சுவிசுக்கு வந்த புதிதில் எண்பதுகளில் தமிழ் மக்களின் தாயக விடுதலைக்கான சேவையில் முன்னின்று கடுமையாக உழைத்து எமது ஊர் மக்களின் பாரட்டுதலை பெற்றிருந்தார் . இவரது சொந்த உறவினர்களின் தொகையே அதிகமாக இருந்ததனால் இவரை ஒரு உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து வழிகாட்டியாகவே பார்த்து மகிழ்ந்திருந்தனர் மக்கள் .

அன்னாருக்கு எமது புங்குடுதீவு மக்கள் சார்பில் இதயபூர்வமான அஞ்சலியை தெரிவித்து கொள்கிறோம் .அனைவரையும் இவரது இறுதிக் கிரியைகளில் பங்கேற்றுச் சிறப்பிக்குமாறு கேட்டு கொள்கிறோம் .அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து கொள்கிறோம்

புங்குடுதீவு மக்கள்  விழிப்புணர்வு ஒன்றியம்.
சுவிட்சர்லாந்து
24.02.2013


உலக நாடுகளை ஏமாற்றும் இலங்கையை இந்தியா ஏன் நம்ப வேண்டும். ஜெர்மனியின் நாஜி முகாம்களில் நடக்காத கொடூரங்கள் இலங்கையில் நடைபெற்றது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா தெரிவித்தார்.

இலங்கை போர்குற்றம் குறித்து மாநிலங்களவையில் கருத்து தெரிவிக்கும் போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்து லுசேன் மாநிலத்தில் உள்ள மர ஆலை ஒன்றில் நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3பேர் கொல்லப்பட்டதுடன் 7பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  
மெஸ்னா என்ற இடத்தில் உள்ள மர தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை 9மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றது.

அதிரும் பிரித்தானியப் பாராளுமன்றம் 
பிரித்தானியாவில் இன்று காலை 10.00 மணிக்கு உலகத் தமிழர் பேரவையின்(GTF) 3வது கூட்டம் ஆரம்பமாகியுள்ளது. நடைபெறும் இக் கூட்டத்திற்கு பிரித்தானிய உதவிப் பிரதம மந்திரி கலந்துகொள்வது , பிரித்தானியத் தமிழர்களை பெருமிதமடையச் செய்துள்ளது. இலங்கை அரசாங்கமானது இக் கூட்டத்தை எப்படியாவது தடைசெய்யவேண்டும் எனக் கோரியதும் அறியப்பட்ட விடையம் ஆகும். குறிப்பாக பிரித்தானியாவில் நடைபெறும், மகாராணியின் கூட்டம்,
இந்திய ராஜ்ய சபையில் கம்யூனிஸ் கட்சி செயலாளர் ராஜா முழக்கம்  இலான்கையின் போர்குற்றம் பட்டிய பேச்சு ராஜ்யசபை கலங்கியது 


போர்க்குற்ற விசாரணை தேவை' : உலகத் தமிழர் பேரவை மாநாடு BBC

உலகத்தமிழர் பேரவையின் மூன்றாவது ஆண்டு விழாவைக் குறிக்கும் வண்ணம், பிரிட்டனின் நாடாளுமன்றக் கட்டிட வளாகத்தில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய பிரிட்டிஷ் அமைச்சர்கள் மற்று


         நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் டெல்லி அரசியல் வட்டாரத்தைப் பெரும் பரபரப்புக்குள் ளாக்கியிருக்கிறது, சபாநாயகர் மீராகுமாருக்கு எழுதப்பட்டிருக்கும் அந்தக் கடிதம். 

ad

ad