புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2019

மீண்டும் வலுப்பெறும் ராஜபக்ச குடும்ப ஆதிக்கம் – ஷிரந்தி மாற்று வேட்பாளரா?

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முதலாவது தேசிய மாநாட்டில், ராஜபக்ச குடும்பத்தினருக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டமை, குறித்து பலத்த விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலை விடவும் புதிய அரசியல் யாப்பே நாட்டுக்கு அவசியம் -ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் சம்பந்தன் தெரிவிப்பு

தற்போது நாட்டுக்கு முக்கிய தேவையாக உள்ளது ஒரு ஜனாதிபதி தேர்தல் அல்ல மாறாக ஒரு புதிய அரசியல் யாப்பே என ஐரோப்பிய ஒன்றிய குழுவினரிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கோயில் கும்பிட யாழ்.வரும் கோத்தா?

பொதுஜன பெரமுனக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இன்று அநுராதபுரத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
இன்று இரவு 7 மணிக்கு ருவன்வெலி மஹா விகாரையில் இடம்பெறும் ஆசிர்வாத பூஜையில், கோட்டாபய ராஜபக்ஷ,

வேலூரில் வெற்றி தோல்வியை தீர்மானித்தது சீமான்தான்:

ஆகஸ்ட் 5ஆம் தேதி நடந்த வேலூர் மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தைவிட சுமார் 8,000 வாக்குகளே அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த நிலையில் திமுக, அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளைத் தவிர இந்தத் தொகுதியில்

கோட்டாவிற்கு குடைபிடிக்கும் துணைக்குழுக்கள்?

கோட்டபாய ராஜபக்சவிற்கு விளக்கு பிடிக்க முன்னாள் துணை ஆயுதக்குழுக்கள் பலவும் மீண்டும் களமிறங்க தொடங்கியுள்ளன.கோட்டாவிற்கே வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பார்கள் என முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது முதலாவது பிரசங்கத்தை ஆரம்பித்துள்ளார்.

பிரான்சில் இருந்து வந்து ஆட்கடத்தல்- கப்பம் கோரிய நால்வர் கைது

வவுனியாவை சேர்ந்த குடும்பஸ்தர் ஒருவரை கடத்தி பணம் பெறும் முயற்சியில் ஈடுபட்ட பிரான்சில் வசிக்கும், ஒருவர் உள்ளிட்ட 4 பேரை முல்லைத்தீவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குற்றச்சாட்டுக்குரிய ஒருவர் எமது நாட்டின் ஜனாதிபதி வேட்பாளரா?

பிரஜா உரிமையே கேள்விக்குறியாகியுள்ள குற்றச்சாட்டுக்குரிய ஒருவர் எமது நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதையிட்டு நான் தனிப்பட்ட ரீதியில் வெட்கப்படுகிறேன் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

கொலைக்கார கும்பலுக்கு என் ஆதரவு கிடைக்காது-சந்திரிகா குமாரதுங்க

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய ராஜபக்ஷ நிறுத்தப்பட்டுள்ளது மிகவும் ஆபத்தான விடயம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
'கோத்தபாய ராஜபக்ச என்பவர் மிகவும் ஆபத்தானவர். கொலைக்கார கும்பலுக்கு நாட்டை கொடுக்க கூடாது.கடந்த மஹிந்த
தாத்தாவின் மண்கும்பான் காணியை விகாரை அமைக்க கொழுத்த விலைக்கு பிக்குவுக்கு விற்றாரா ஐ தே க பிரமுகர் பிரபு நேற்றுமுந்தினம் மண்கும்பான் பிள்ளையார் ஆலயத்திற்கும் - முருகன் கோயிலுக்குமிடைப்பட்ட பகுதியில் விசய கலாவின் தீவக இணைப்பாளர் என்றும் ஐக்கிய தேசிய கட்சியின் தீவக அமைப்பாளர் ( இக்கட்சிக்கு தீவகத்தில் சிறு அலுவலகம் கூட

சடலத்தை அடையாளம் காணுமாறு கோரிக்கை!

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் கடந்த திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்ட சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சடலத்தை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களிடம் பொலிஸார்

தமிழர்களிடம் கேட்க கோத்தாவுக்கு வெட்கமில்லையா?


போர்க்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான கோத்தபாய ராஜபக்ச எந்த முகத்தோடு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பார்? இவருக்கு வெட்கமில்லையா என்று கேள்வி எழுப்பியுள்ளார் முன்னாள் இராணுவத் தளபதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா
"போர்க்குற்றச்சாட்டுக்களுக்குள்ளான கோத்தபாய ராஜபக்ச எந்த முகத்தோடு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்பார்?" என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கோத்தாவே வேட்பாளர் - அறிவித்தார் மஹிந்த

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ச அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு சுகததாச உள்ளரங்கில் இன்று மாலை நடைபெற்ற முதலாவது தேசிய மாநாட்டில், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச இதனை அறிவித்தார்.

ad

ad