கோதுமை மாவின் விலை இன்று முதல் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வெதுப்பக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதேவேளை, ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை ஒரு ரூபாவால் அதிகரித்துள்ள போதிலும் பாணின் விலையில் எவ்வித மாற்றங்களும் ஏற்படாதென அச் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது
அச்சுவேலி முக்கொலை செய்த தனஞ்சயனுக்கு விளக்கமறியல் நீடிப்பு
யாழ்.அச்சுவேலி முக்கொலையுடன் தொடர்புடையவர் என சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டிருக்கும் நபரை எதிர்வரும் யூன் மாதம் 13ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 4ம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்திருந்தனர்.
முன்னாள் ஐ .நா.செயலாளர் கோபி அனானுக்கு வீசா வழங்குவதில் அரச உயர்மட்டத்தில் சிக்கல்
ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயலாளர் நாயகம் கொபி அனானுக்கு இலங்கைக்கு வர வீசா அனுமதி வழங்குவது தொடர்பில் அரசாங்கத்திற்குள் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
சென்னையை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பஞ்சாப் மும்பையில் நடைபெற்று வரும் இரண்டாவது தகுதி வெளியேற்ற சுற்றில் சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முன்னதாக நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 226 ஓட்டங்களை குவித்தது.