மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28 ஆசனங்களை பெற்றுக் கொண்டதுடன் 2 போனஸ் ஆசனங்களையும் பெற்றுக் கொண்டது. இந் நிலையில் ஒரு போனஸ் ஆசனம் இன நல்லறவை ஏற்படுத்தும் நோக்கில் மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்த முஸ்லிம் பிரதிநிதி அஸ்மினுக்கு வழங்குவதாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.
மற்றைய போனஸ் ஆசனத்தை ஜந்து கட்சிகளுக்கும் ஒரு வருடம் வீதம் ஜந்து பேருக்கு வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் போனஸ் ஆசனத்திற்காக மேரி கமலா குணசீலன் (முல்லைத்தீவு- தமிழர் விடுதலைக் கூட்டனி), எம்.பி.நடராஜா (வவுனியா- ஈபிஆர்எல்எவ்), கு.ரவி (வவுனியா- ரெலோ), எஸ்.சிவகரன் (மன்னார்- தமிழரசுக் கட்சி), எஸ்.சிவநேசன் (முல்லைத்தீவு- புளொட்) ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.