விளம்பரம்

ad

24 டிச., 2012


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பொறுப்பாளர் பொட்டுஅம்மான், கடற்புலிகளின் தளபதி சூசை போன்றோர், சிறிலங்கா இராணுவ முற்றுகையை உடைத்துக் கொண்டு தப்பிச் சென்றிருக்கலாம் என்று சிறிலங்கா இராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கருதினர் என்று கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

போரின் இறுதிக்கட்டத்தில் சவேந்திர சில்வாவை பதவியில் இருந்து

தற்போது வாகரைப் பிரதேசத்தில் ஒவ்வொரு கிராமத்திலும் இடைத்தங்கல் முகாம்களில் மக்கள் அமர்த்தப்பட்டுள்ளனர். இதனை கேள்வியுற்ற மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவருமான சீ.யோகேஸ்வரன் ஞாயிற்றுக்கிழமை மரக்கறி உட்பட்ட உணவுப் பொருட்கள் மருந்துப் பொருட்கள் படுக்கை விரிப்பு அத்தியாவசிய பொருட்களுடன் படகு மூலம் வெள்ளத்தின் பின் இரண்டாவது தடவையாக வாகரை பிரதேசத்துக்கு விஜயம் செய்துள்ளார். அங்கு சென்று சகல கிராமங்களையும் இடைத்தங்கல் முகாம்களையும் பார்வையிட்டதுடன் மக்களுக்கு தேவையான

பொய் வழக்கில் ஈழத் தமிழ் இளைஞர்கள் கைது: சிங்கள அரசின் ஏவலுக்குப் பணிவதா?
தமிழக, இந்திய அரசின் போக்குகளுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கண்டனம்!
- தொல்.திருமாவளவன்.

சென்னை, பல்லாவரம் அருகே தங்கிவரும் ஈழத் தமிழ் இளைஞர்கள் 10 பேரை அண்மையில் தமிழக க்யூ பிரிவு உளவுத் துறையினர் திடீரெனக் கைது செய்து அவர்களில் நால்வரை மட்டும் பொய் வழக்கில் சிறைப்படுத்தியுள்ளனர். மிச்சமுள்ள 6 பேர் என்ன

சோமாலியக் கடற்கொள்ளையர்கள் மீது திடீர் தாக்குதல்: இந்தியர்கள் உள்பட 22 பிணைக்கைதிகள் மீட்பு


பாரிசில் இடம்பெற்ற பரிதி அவர்களின் 45 ஆம் நாள் நினைவு அமைதிப் பேரணி!

இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்: இன்று எம்.ஜி.ஆர்., நினைவு தினம்
மக்கள் திலகம்' என புகழப்பட்ட, மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 1917 ஜன., 17 ல் பிறந்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என, பன்முகம் கொண்டவர். மக்களின் மனங்களை கொள்ளை கொண்டவர்.

பாஜகவின் மதவாதம் தெளிவாகத் தெரிந்த காரணத்தினால்தான் அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்ற உறுதியுடன் திமுக செயல்படுவதாக கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:

சில்லறை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது.

கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் தமிழ்ப் பெண் ஒருவரின் சடலம் நேற்றுக் காலை மீட்கப்பட்டுள்ளது.மஹரகம பிலியந்தல லும்பினி ஒழுங்கையிலுள்ள வீட்டிலிருந்து 30 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை பொலிஸார் மீட்டனர்.
கொலை செய்யப்பட்ட பெண் தாயுடன் வசித்து வந்ததார். அவரது கணவர் சில காலங்களுக்கு முன்னர் வீட்டைவிட்டு வெளியேறி நேற்றுமுன்தினமே மீண்டும் வீட்டிற்கு வந்திருந்தார். பெண்ணின் தாயாருடன் அவர் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை அயலவர்கள் அவதானித்துள்ளனர்

கடத்தப்பட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் ஐநா உள்ளிட்ட சர்வதேச அமைப்புகளிடமோ அல்லது வேறு வெளிநாட்டு நிறுவனங்களிடமோ முறைப்பாடு செய்யக்கூடாது என்றும் இராணுவத்தினர் எச்சரித்துவிட்டுச் சென்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தமக்கு முறைப்பாடு செய்துள்ளதாக வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் போரினால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக குரல்கொடுக்கின்ற அமைப்பொன்றின் தலைவி தெரிவித்தார்.
இலங்கையின் கிழக்கே, திருகோணமலை மாவட்டத்தில் தம்பலகாமம் கிராமத்தில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அது தொடர்பாக மனித உரிமைகள் அமைப்புக்களிடம் முறையிடக்கூடாது என மக்கள் பாதுகாப்புத் தரப்பினரால் எச்சரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்னார் மாவட்டம் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் கிராமத்திற்கு செல்லும் பிரதான பாதைகள் அனைத்தும் வெள்ளநீரில் மூழ்கியுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி. றியாஸ் தெரிவித்தார்.இது குறித்து அவர் தெரிவிக்கையில்,
குஞ்சுக்குளத்திற்கான தரை வழிப்பாதை முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதுடன் குஞ்சுக்குளம் தொங்கு பாலத்திலும் நீர் மட்டம் அதிகரித்துள்ளது. குஞ்சுக்குளம் பிரதான துருசின் நீர்மட்ட அளவு 14.2 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது.இதேவேளை, குறித்த பாதைகளில் வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதினால் வீதிகளில் பாரிய குழிகள் காணப்படுகின்றன. இதனால் குறித்த கிராம மக்கள் வெளியேற முடியாத நிலையில் உள்ளனரென அவர் மேலும் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளதுடன் 21 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 9 பேர் காணாமல் போயுள்ள நிலையில், 60 ஆயிரத்து 784 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 22 ஆயிரத்து 699 பேர் பாதிக்கப்பட்டுள்ள அதேவேளை, 5 ஆயிரத்து 25 குடும்பங்களைச் சேர்ந்த 17 ஆயிரத்து 168 பேர் 100 தற்காலிக நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், 3 ஆயிரத்து 136 வீடுகள் முற்றாகவும் 7 ஆயிரத்து 694 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

அடுத்துவரும் சில நாட்களுக்கு கனத்த மழை பெய்யும்!- வளிமண்டலவியல் திணைக்களம்
அடுத்து வரும் சில தினங்களுக்கு மழை வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலையாளர் பபோதினி கருணாபால நேற்று தெரிவித்தார்.

Latest News
வவுனியாவில் அடை மழை! குளங்கள் உடைப்பெடுத்து பல கிராமங்கள் நீரில் மூழ்கின! யாழ். போக்குவரத்தும் பாதிப்பு
DECEMBER 23, 2012 

வவுனியாவில் பெய்து வரும் அடை மழை காரணமாக குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்து உடைப்பெடுத்துள்ளன. இதன் காரணமாக பல  கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.

தாண்டிக்குளம், திருநாவற்குளம், சமணங்குளம், கோமரசங்குளம், கந்தசாமி நகர், குடியிருப்பு, புதுக்குளம், பூந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் வீடுகளுக்குள்ளும் புகுந்துள்ளதுடன் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி  மக்களும் வெளியேறி வருகின்றனர்.

அதன்படி பாவற்குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் அதன் 6 அவசர வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதால் பூவரசங்குளம் ஊடன செட்டிகுளம் வீதியே இனம்காண முடியாமல் வெள்ளம் நிரம்பி  வழிந்தோடுகின்றது.

குறித்த வீதிக்கு அருகே உள்ள கந்தசாமி நகர், வீடியா நகர் ஆகிய கிராமங்கள் முழுமையாக வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதால் வெளியிடத் தொடர்புகள் அற்ற நிலையில் காணப்படுகின்றது. அதனால் அங்குள்ள 39 குடும்பங்களையும் மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும் நொச்சிமோட்டைப் பாலம் மேவிப் பாய்வதனால் ஏ9 வீதியின் போக்குவரத்தும் தடைப்பட்டுள்ளது.

அதன்படி வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.

இருப்பினும் பெரியளவிலான வாகனங்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஹயெஸ் போன்ற சிறியரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபட பொலிஸார் அனுமதிக்கவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியாவில் அடை மழை! குளங்கள் உடைப்பெடுத்து பல கிராமங்கள் நீரில் மூழ்கின! யாழ். போக்குவரத்தும் பாதிப்பு

வவுனியாவில் பெய்து வரும் அடை மழை காரணமாக குளங்களின் நீர் மட்டம் சடுதியாக அதிகரித்து உடைப்பெடுத்துள்ளன. இதன் காரணமாக பல கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன.