மல்லாகம் நீதிமன்றத்துக்கு முன்பாக வைத்து இளைஞர் ஒருவரை வாளால் வெட்டிய சம்பவத்தில் குற்றவாளியாக இனங்காணப்பட்ட ஐந்து பேருக்கு தலா 4 வருடங்கள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் யாழ்
முஸ்லிம் மக்களுக்கு என்ன தேவை என்பதை வடமாகாண சபை கூற முடியாது. அதை அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாங்கள் பார்த்துக் கொள்வோம் என வர்த்தக கைத்தொழில் அமைச்சர் ரிசாட்
திருகோணமலை – மனையாவளி பிரதேசத்தில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு நேற்று காலை சுமார் 600 கிலோ கிராமிற்கும் அதிக எடை கொண்ட திருக்கை மீன் ஒன்று கிடைத்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்னர் இவ்வாறான மீன் ஒன்று கிடைத்துள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
10 ஆயிரம் தமிழ் நூல்களை வீதியில் வீசி, பெங்களுருவில் திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் தமிழர்கள் அதிகளவில் வசித்துவரும் அல்சூர் பகுதியில் உள்ள தாமோதர் முதலியார் தெருவில் அமைந்துள்ளது திருக்குறள் மன்றத்தின் தமிழ் நூலகம். இந்த நூலகத்தின் முகப்பில் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு யாரோ தார்பூசி அழித்தனர்.
இந்த நிலையில், தமிழ் நூலகம் செயல்படுவதை விரும்பாத சமூக விரோதிகள் சிலர் வியாழக்கிழமை நூலகத்தின் பூட்டை சட்ட விரோதமாக உடைத்து, உள்ளே நுழைந்து நூல்கள் அடுக்கப்பட்டிருந்த மரச் சட்டங்களை அடித்து நொறுக்கியதோடு, ஜன்னல்களை உடைத்தெறிந்து, அதன்மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வீதியில் வீசிச் சென்றனர்.
இதுகுறித்து தகலறிந்து நூலகத்துக்கு விரைந்த திருக்குறள் மன்ற நிறுவனரும், நூலகப் பொறுப்பாளருமான நல்லபெருமாள், 40 ஆண்டு காலமாக சேகரித்த நூல்கள் வீதியில் வீசப்பட்டிருப்பதைக் கண்டு கண்ணீர் விட்டு அழுதார். இந்த சம்பவம் குறித்து நல்லபெருமாளும், தமிழர் முழக்கம் இதழின் ஆசிரியர் வேதகுமாரும் அல்சூர் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை புகார் அளித்தனர்.
1976-ஆம் ஆண்டு முதல் இங்கு செயல்பட்டுவந்த நூலகத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழந்தமிழ் இலக்கிய நூல்கள், புதினங்கள், காவியங்கள், கவிதை நூல்கள், சஞ்சிகைகள், நாளிதழ்கள், குறிப்பேடுகள் உள்ளிட்டவை இருந்தன.
முல்லைத்தீவு ஒட்டு சுட்டான் சிவன் கோவிலில் இருந்து மகோற்சவம் நடைபெறும் அம்பகாமம் மம்மில் பிள்ளையார் கோவிலுக்கு காவடி எடுத்து புறப்பட்ட வயது வசந்தகுமார் கஜதீபன் என்ற இளைஞன் பலியானார் . பறவைக்காவடி பொருத்தி இருந்த உழவு இயந்திரம் சரிந்ததில் மேற்படி இளைஞன் பலியாகியது கவலையை கொடுத்துள்ளது . இன்னொருவரும் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவ மனையில் சேர்க்கபட்டுள்ளார்
உலகப் புகழ்பெற்ற ரெஸ்ட்லிங் என்ற மல்யுத்த வீராங்கனை சைனா, அமெரிக்காவில் மர்மமான முறையில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. சைனாவின் இந்த மர்ம மரணம் மல்யுத்த ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க தலைமையை கடும் கோபத்தில் ஆழ்த்தியிருக்கிறது