புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 டிச., 2012


இலங்கை தமிழர் அழிவுக்கு கருணாநிதி காரணம்! அ.தி.மு.க.செயற்குழுவில் கண்டன தீர்மானம்

சென்னை வானகரத்தில் இன்று காலை கட்சியின் பொதுசெயலர் ஜெ., தலைமையில் அ.தி.மு.க., செயற்குழு , பொதுக்குழு கூடியது.இலங்கை தமிழர் அழிவிற்கு காரணமாக இருந்து கபட நாடகம் ஆடியதாக தி,மு.க., தலைவர் கருணாநிதிக்கு

இந்தியாவில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்டதாக யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் ஒப்புதல்
இந்தியாவின் தமிழகத்தில் ஆயுத பயிற்சி பெற்றுக் கொண்டதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள் விசாரணைகளின் போது ஒப்புக் கொண்டுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


திமுகவில் கோஷ்டி பூசல் :
ஸ்டாலினுக்கு வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் எதிர்ப்பு
 மறைந்த வீரபாண்டி ஆறுமுகம் உருவப்படத் திறப்பு விழாவுக்கு வந்த, ஸ்டாலினை வரவேற்று, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் கோஷ்டியினர் வைத்த பேனரை, அகற்றுமாறு, வீரபாண்டி ராஜா ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.


கமலை வாழவிடுங்கள்; அவரை சீண்டி பார்க்காதீர்கள் :  பாரதிராஜா

‘விஸ்வரூபம்’ படம் டி.டி.எச்.களில் ஒளிபரப்பப்படுவதை எதிர்க்கும் தியேட்டர் அதிபர்களுக்கு டைரக்டர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்தார். 
இது குறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.  


யாருடனும் கூட்டணி இல்லை : ஜெயலலிதா
அதிமுகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா, 2014ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக யாருடனும்

40 தொகுதிகளிலும் அதிமுக போட்டி :
 அதிமுக செயற்குழு கூட்டத்தின் தீர்மானம்


அ.தி.மு.க. செயற் குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு தொடங்கியது.  சென்னை அருகே உள்ள வானகரம் ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி திருமண மண்டபத்தில் இக்கூட்டம் நடக்கிறது.
 

சிவகாசி ஜெயலட்சுமி : 4 வழக்குகளிலும் விடுதலை
சிவகாசி ஜெயலட்சுமி நகை, பணம், மற்றும் போலீசார்களை ஏமாற்றிய நான்கு வழக்குகளில் இன்று விடுதலை ஆனார்.  மதுரை கோர்ட் அவரை விடுவித்தது.
இந்த நான்கு வழக்குகளிலும் அவர் ஏற்கனவே ஓராண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்ததால்,  2500 ரூபாய் அபராதம் மட்டும் செலுத்திவிட்டு விடுதலை ஆனார்.
"மூன்று நாடுகளைக் காத்த மொழிப்பற்று " நம்மிடம் பொய்த்து ஏன் ? நாம் பயணித்த வரலாற்றுத் தடங்களில் தடங்கல் என்ன ? என்ற சிந்தனையில் உருவாகிய காணொளி 
“உங்கள் தலைவர்களையெல்லாம் கொன்று விட்டோம், நீங்கள் இப்போது எமது அடிமைகள்”
சிறிலங்காவில் போரில் உயிர்தப்பியவர்களுடன் மேற்கொண்ட செவ்விகளின் அடிப்படையில் பிபிசியின் முன்னாள் ஊடகவியலாளர் பிரான்செஸ் ஹரிசன் எழுதியுள்ள ஒரு நூலில், இரத்தம் தோய்ந்த போரின் இறுதிக்கட்டத்தில் 40 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.            மாவீரர் தினம் கொண்டாடிய யாழ் பல்கலைக்கழக மாணவர்களை கைது செய்து சித்ரவதை செய்து கொண்டி ருக்கிறது இலங்கை ராணுவம்.            26-ந் தேதியின் பிற்பகல் பொழுது. 

நெல்லை 2-வது கூடுதல் மாவட்ட செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி நந்தகுமார், குற்றவாளிக் கூண்டில் நின்ற காட்டுராஜாவையும் வெட்டும்பெருமாளையும் ஒருமுறை பார்வையால் அளந்தார்.
 இந்தக் கொடுமை விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் நடந்தது.

மனநலமற்ற 22 வயது மகள் தேவகியை வீட்டில் வைத்துவிட்டு வயல் வேலைக் குப் போய்விட்டார் தாய் பஞ்சவர்ணம். இரவு 7 மணிக்கு வீடு திரும்பினார் தாய். வீடு திறந்து கிடந்தது. அறைக்குள் இருந்து மகளின் அழுகைக் குரல் வந்தது. ஓடிப்போய் பார்த்த தாயை, தள்ளிவிட்டு ஓடினான் எதிர்வீட்டு முனியம்மாவின் தம்பி குமரேசன். அறைக்குள் பாலியல் வல்லுறவால் அதிர்ச்சியடைந்து கதறிக்கொண்டி ருந்த தேவகியை உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பதுங்கியிருந்த குமரேசனை 27.12.12 மாலையில் கைது செய்தது போலீஸ்.


           ட்டுத் தடுமாறி, பஸ் ஸ்டாண்ட்டை நெருங்கிவிட்டார் அந்த இளம்பெண். ஆனால் அதற்குமேல் நடக்கவும் முடியவில்லை; நிற்கவும் முடியவில்லை. தரையில் சாய்ந்தார். 

சிறுமி புனிதா பாலியல் துன்பத்திற்குள்ளாகி கொல்லப்பட்டதைக் கண்டித்து தூத்துக்குடியில் கனிமொழி பங்கேற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் திரளான கூட்டம். 
ஆர்ப் பாட்ட இடத்தை காவல்துறையினர் இரண்டு முறை மாற்றியும் கூட ஆர்ப்பாட்டத்தின் எழுச்சி குறையவில்லை. அத்துடன், கொலையான புனிதாவின் தாயை சந்தித்து தி.முக.          ""ஹலோ தலைவரே... 2013ஆம் வருடத்தை தமிழக மக்கள் ரொம்ப நம்பிக்கையோடு எதிர்பார்த்துக்கிட்டி ருக்காங்க. ஏன்னா, 2012 ரொம்ப சோதனையா அமைஞ்சிடிச்சி.''

முழு எதிர்ப்பில் கமல்! ஜாம்பாவான்களின் ஆதரவு!


கமல்ஹாசனின் விஸ்வரூபம் ஜனவரி 11-ஆம் தேதி ரிலீசாக முழு வீச்சில் தயாராகிக்கொண்டு வருகிறது. விஸ்வரூபம் படத்தின் மீதான எதிர்பார்ப்புகளும், எதிர்ப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.  சமீபத்தில் தொலைக்காட்சி

நான் அரசியலுக்கு வந்தால்... கலைஞர் மேடையில் ரஜினி கொளுத்திய வெடி! 

        சமீபகாலமாகவே தான் அரசியலுக்கு வருவது பற்றியும், இதுவரைக்கும் அரசியலுக்கு வராதது பற்றியும் ரஜினி பொது விழாக்களில் பேசி பரபரப்பைக் கிளப்பி வருகிறார். தன் பிறந்தநாள் அன்று ரசிகர்களை நேரில் அவர் சந்தித்தது முதல் இந்த பரபரப்பு பற்றிக் கொண்டது. 
ஒருவேளை உணவுக்காக ஏங்கி நிற்போர் பிரான்சில் அதிகரிப்பு
பசிக்கு உணவளிக்கும் பிரெஞ்சு பொதுநல அமைப்பு ஒன்று பயனாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அரசும் பொதுமக்களும் தங்களுக்கு உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

30 டிச., 2012


தஞ்சாவூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற மதுரை ஆதினம் அருணகிரிநாதர், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் சமீப காலமாக ஆபாச உடை அணிகிறார்கள். அதனை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஒட்டுமொத்த பெண்களை மதுரை ஆதினம் கொச்சைப் படுத்தியுள்ளார் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (30.12.2012) மதுரை ஆதினத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அகில இந்திய மாதர் சங்க பொதுச் செயலாளர் சுகந்தி தலைமையில், 100 பெண்கள் முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இவர்களை அனைவரையும் போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்தனர். இந்த நிலையில் மதுரை ஆதினம் அருணகிரிநாதர் கூறியுள்ளதாவது,

நான் ஒன்றும் தமிழ்நாட்டு பெண்களுக்கு எதிராக பேசவில்லை. தமிழ்நாட்டில் நடக்கும் பாலியல் வன்முறைக்கு பெண்கள் அணியும் அறைகுறை உடையும் ஒரு காரணமாக உள்ளது. அதனை பெற்றோர்களும், பெண்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டு பெண்கள் மீதான அக்கறை மீதுதான் சொன்னேன். எத்தனை போராட்டங்கள் வேண்டுமானாலும் நடத்திவிட்டு போகட்டும். நான் மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.
ஒட்டுமொத்த பெண்களை மதுரை ஆதினம் கொச்சைப் படுத்தியுள்ளார் என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் இன்று (30.12.2012) மதுரை ஆதினத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆதினம் அருணகிரிநாதர், தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்கள் சமீப காலமாக ஆபாச உடை அணிகிறார்கள். அதனை தவிர்க்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடல் இன்று அதிகாலை டெல்லி கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்த மாணவியின் உடல், இன்று அதிகாலை 3.15 மணிக்கு டெல்லி கொண்டு வரப்பட்டது,

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்தில் மாணவியின் உடல் வந்து இறங்கியபோது அங்கு வந்த பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரச் தலைவர் சோனியா காந்தி ஆகியோர், மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

இதனையடுத்து அம்மாணவியின் உடல் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.அங்கு நடைபெற்ற மதச்சடங்குகளுக்கு பின்னர் மாணவியின் உடல், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் துவாராகா செக்டார் 24 ல் உள்ள மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

இறுதிச்சடங்கில் மத்திய உள்துறை இணையமைச்சர் கே.பி. என்.சிங்,மேற்கு டெல்லி எம்.பி. மஹாபால் மிஸ்ரா,டெல்லி பா.ஜனதா தலைவர் விஜேந்தர் குப்தா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.

இறுதிச்சடங்கு நடைபெற்ற பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரகள் அனுமதிக்கப்படவில்லை.

இதனிடயே மாணவியின் மறைவுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.டெல்லியில் மாணவ, மாணவிகளின் போராட்டம் மீண்டும் வெடிக்குமோ என்ற காரணத்தினால் நகர் முழுவதும் சிறப்பு அதிரடி போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.முக்கிய ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் உயிரிழந்த மாணவியின் உடல் இன்று அதிகாலை டெல்லி கொண்டு வரப்பட்டு, இறுதிச்சடங்குகளுக்கு பின்னர் தகனம் செய்யப்பட்டது.

பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி சிகிச்சை பலனளிக்காமல் சிங்கப்பூர் மருத்துவமனையில் நேற்று காலை உயிரிழந்த மாணவியின் உடல், இன்று அதிகாலை 3.15 மணிக்கு டெல்லி கொண்டு வரப்பட்டது,

  
India 227/6 (50 ov)
Pakistan 228/4 (48.1 ov)
Pakistan won by 6 wickets (with 11 balls remaining)

பாகிஸ்தானுடன் முதல் ஒருநாள் போட்டி: டோணி அபார சதம்! இந்தியா-227/ 6(வி)!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்கள் 4 பேர் 20 ரன்களுக்குள் அவுட் ஆகி அதிர்ச்சி கொடுத்த நிலையில் ரெய்னா, டோணி, அஸ்வின்

ஓடும் பஸ்சில் கல்லூரி மாணவியை கற்பழித்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளில் பலர் புதுடெல்லி ஆர்.கே.புரம் ரவிதாஸ் கேம்ப் பகுதியை சேர்ந்தவர்கள். இச்சம்பவத்தில் ஈடுபட்ட டிரைவர் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளனர்.
 
மாணவியின் உடல்நிலை மோசமடைந்தபோது, சிறையில் உள்ள குற்றவாளிகளை இதர கைதிகள் தாக்கியதால் அவர்களை தனியாக அடைத்து வைத்திருந்தனர்.
 
இந்நிலையில், மாணவி நேற்று உயிரிழந்த செய்தி சிறையில் பரவியது. மதிய உணவு வாங்க சென்ற குற்றவாளிகள் 6 பேரையும் இதர கைதிகள் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்றனர். சிறைக்காவலர்கள், அரண்போல் சுற்றி நின்று அவர்களை காப்பாற்றி அனுப்பி வைத்தார்.
 
 டெல்லி மாணவியின் மரணத்துக்கு காரணமான 6 பேரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தால் அவர்களை எங்கள் வீட்டுக்குள் சேர்க்கமாட்டோம் என்று அவர்களது குடும்பத்தினர் கூறி உள்ளனர். அவர்களை தூக்கி போட்டாலும், அவர்களின் பிணத்தைக் கூட இந்த பகுதிக்குள் அனுமதிக்கமாட்டோம் என்று அப்பகுதி மக்கள் ஆவேசமாக கூறினார்கள்.
இன்று காலை, மாணவியின் உடல் தகனம் செய்யப்பட்ட நிலையில் டெல்லி மாணவியின் மரணத்துக்கு காரணமான 6 பேரும் ஜாமீனில் விடுதலையாகி வெளியே வந்தால் அவர்களை எங்கள் வீட்டுக்குள் சேர்க்கமாட்டோம்

இந்தியா- பாகிஸ்தான் ஒருநாள் போட்டியை காண சர்தாரி இந்தியா வருகை
இந்தியா- பாகிஸ்தான் நாடுகளுக்கிடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்று வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மானின் பிரமாண்ட இசை நிகழ்ச்சி: ரசிகர்கள் ஆரவாரம்

சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி கல்லூரி மைதானத்தில் இசை நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் ‘தாய் மண்ணே வணக்கம்’ என்ற பிரமாண்ட இசைநிகழ்ச்சி  நேற்று நடைபெற்றது. 

வேட்டி கட்டிய தமிழனா? சேலை கட்டிய தமிழரா? என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்! கலைஞர் பேச்சு!

நான் தியேட்டர் கட்டப்போகிறேன்: கமல் அதிரடி

92 கோடி செலவில் கமல் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் ‘விஸ்வரூபம்’ படம் ஜனவரி 10-ந் தேதி டி.டி.எச்.சில் வெளியிடப்படுகிறது. ஏர்டெல், டிஷ் டிவி, வீடியோகான், ரிலையன்ஸ், சன் டைரக்ட் ஆகிய டி.டி.எச்.களில் வெளியிடப்படுவதாக கமல் ஏற்கெனவே அறிவித்திருந்தார். 

பாசையூரில் இடம் பெற்ற குழு மோதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றுமொருவர் படுகாய மடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 9 மணியளவில் இடம்பெற்றது.
சம்பவத்தில் பாசையூரைச் சேர்ந்த அல்பேர்ட் பீரிஸ் கலிஸ் தயான் (வயது23) என்ற இளைஞர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். மற்றுமொருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அனுராதபுரத்தில் சுகாதார வைத்திய அதிகாரியாகக் கடமையாற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மருத்துவர் இ.சிவசங்கர் நேற்றுக் கைது செய்யப்பட்டு கொக்காவில் இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்த முடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் பற்றித் தெரியவருவதாவது:
இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்ட கிளிநொச்சி உருத்திரபுரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாதாரண தரப்பரீட்சை எழுதுவதற்காக வீடு வந்துள்ளார். பரீட்சை முடிந்ததும் அவரை

29 டிச., 2012

ஐ.சி.சி. 20 ஓவர் பேட்டிங் தரவரிசை: விராட் கோலி 5-வது இடத்திற்கு முன்னேற்றம்
இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் வாழ்நாளில் சிறந்த நிலையாக, 5-வது இடத்திற்கு முன்னேறியிருக்கிறார்.


ஈழத்தில் பரிதவிக்கும் விதவைகள்- அனாதை குழந்தைகளுக்கு தமிழக மக்கள் உதவ வேண்டும்: 'சங்கம் 4' விழாவில் ஜெகத் கஸ்பார் பேச்சு
`நாம்' அமைப்பும் தமிழ் மையம் அமைப்பும் இணைந்து சங்கம் 4 என்ற பெயரில் 21 நாள் மார்கழித் தமிழ் விழா ராயப்பேட்டையில் நடந்து வருகிறது. 7-ம் நாள் நிகழ்ச்சியில் "முள்ளி வாய்க்கால் முடிவா, தொடக்கமா?'' என்ற தலைப்பில்

பாராளுமன்ற தெரிவுக்குழுவிலிருந்து வெளியேறி

பிரதம நீதியரசர் ராணி பண்டாரநாயக்க தவறான முன்மாதிரியை காட்டியுள்ளார்

தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு*
* நீதிபதியில் நம்பிக்கை இல்லை என்று சாதாரண நபர் வெளியேற முடியுமா?
* தவறு செய்தவரை ஆர்ப்பாட்டம் நடத்தி பாதுகாக்க முடியாது

நான்கு வயதுச் சிறுமி ஒருவர் வன்புணர்வின் பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது சடலம் நேற்றுத் தோட்டக் கிணறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தக் கொடூரச் சம்பவம் மண்டைதீவு 2 ஆம் வட்டாரப் பகுதியில் இடம் பெற்றுள்ளது. இந்தச் சம் பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாயாத்து வழி பிரதான வீதியிலிருந்து விசேட படகுச் சேவை

மன்னார்-சங்குபிட்டி பிரதான வீதி நாயாத்து வழி பகுதியில் ஆற்று நீர் பெருக்கெடுத்துள்ளமையினால் குறித்த வீதியினூடான போக்குவரத்துக்கள் பாதிப்படைந்த நிலையில் அங்கு கடற்படையினர் விசேட படகுச் சேவை ஒன்றை இன்று ஆரம்பித்துள்ளனர்.


மறைந்த நடிகர் செல்வசேகரனுக்கு கலைஞர்கள் பலரும் அஞ்சலி

நேற்று காலமான நடிகர் உபாலி செல்வசேகரனுக்கு கலைஞர்கள் பலரும் தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர்.


முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் 313 பேர் மீண்டும் சமூகத்துடன்

 


புனர்வாழ்வளிக்கப்பட்ட 313 முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சமூகத்துடன் மீள இணைக்கப்பட உள்ளனர். அடுத்த மாதம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

மகேஸ்வரனின் சகோதரரான துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சுத் தாக்குதல்! குடும்ப பிரச்சினையே காரணமாம்
மறைந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரனின் சகோதரரான துவாரகேஸ்வரன் மீது அசிட் வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.

 
யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் விடுதலை தொடர்பில் துணைவேந்தர் பீடாதிபதிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகள் குறித்து மேற்கொண்டு வருகின்ற விசமத்தனமான பிரசாரங்களை நம்பி செய்திகளை வெளியிட வேண்டாம் எனவும் நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு உறுதிப்படுத்திய பின்னர் பிரசுரிக்குமாறும் வணிகபீட மாணவர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. 
இது சம்பந்தமாக அவர்கள் வெளியிட்டுள்ள உத்தியோக பூர்வ அறிக்கை வருமாறு:
ஊடகங்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்
கடந்த நவம்பர் மாதம் 27ம் திகதி பல்கலைக்கழக சூழலிலும், மாணவர் விடுதிகளிலும் இலங்கை இராணுவ மற்றும் காவல்துறையினர் மேற்கொண்ட அத்துமீறல்களைக் கண்டித்து மறுநாள் மாணவர்கள்

மாணவி மரணம்! அமைதியாக அஞ்சலி செலுத்தும் பொதுமக்கள்! 


டில்லியில் ஓடும் பஸ்சில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி, சிங்கப்பூரில் உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

www.thedipaar.com

ஆசியாவின் மிக நீண்ட நதியான யாங்ட்ஸியின் குறுக்கே 27 கி.மீ. தூர சுரங்க ரயில் பாதையை சீனா அமைத்துள்ளது. இப்பாதையில் ரயில் பயணம் சனிக்கிழமை தொடங்கியது.
குபெய் மாகாணத்தின் ஊகான் நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சுரங்கப்பாதை, ஊசாங் மற்றும் ஹன்கூ ரயில் நிலையங்களை இணைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இப்பாதையை 3 நிமிடங்களில் ரயில்கள் கடந்து விடும். நாள்தோறும்

டொரண்டோ மேயருக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்கு ஒன்றை ஒண்டோரியோ நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

டொரண்டோ மேயர் ராப் ஃபோர்டு மீது $6 மில்லியன் டாலர் தொகைக்கு அவதூறு வழக்கு ஒன்றை ஒரு ரெஸ்டாரண்ட் உரிமையாளர் George Foulidis ஒண்டோரியோ நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தொடர்ந்த வழக்கிற்கு போதுமான

    

சர்வதேச கடல் எல்லையில், விடுதலைப் புலிகளால் வடிவமைக்கப்பட்ட பாரிய நீர் மூழ்கி
!
விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆயுதங்கள் கப்பல் மூலம் வருவது வழக்கம். ஆசிய மற்றும் ஆபிரிக்க நாடுகளில் இருந்து இலங்கை நோக்கிவரும் ஆயுதக் கப்பல் இலங்கை கடற்பரப்பை அண்மிப்பது மிக மிகக் குறைவாகும்.

தமிழக அணி 27-15 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது. 
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்திஆதித்தனார் தங்கக் கோப்பைக்கான 39-வது தேசிய ஜூனியர் கபடி சாம்பியன்ஷிப் போட்டி மதுரையில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் தமிழக அணி 27-15 என்ற புள்ளி
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை -5-4 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்சென்றது. 
ஆக்கி போட்டி கத்தார் தலைநகர் டோகாவில் நடந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று முன்தினம் இரவு இறுதிப்போட்டியில் மோதின. தொடக்கத்தில் இருந்தே அனல் பறந்த
BREAKING NEWS

டெல்லியில் பலாத்காரம் செய்யப்பட்ட மாணவி சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
பலத்த காயமுற்று இருந்த மாணவி மேல்சிகிச்சைக்காக சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மாணவியின் உடல்நிலை நேற்று மிகவும் மோசமடைந்தது. 

பா.ஜ.க. மாநில தலைவராக பொன்.ராதாகிருஷ்ணன் 2வது முறையாக தேர்வு
பாரதீய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு தேர்தல் பூந்தமல்லியில் உள்ள தனியார் மண்டபத்தில் 28.12.2012 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு முன்னதாக காலையில் செயற்குழு கூட்டமும், பிற்பகலில் பொதுக்குழு கூட்டமும் நடைபெற்றது.


பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை சமாளிக்க
65 புதிய அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள்

பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை சமாளிக்கும் வகையில் மேற்கு வங்காளத்தில் 65 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் விரைவில் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

மன்னார் ஆயர் ராயப்பு யோசப் மீது சிஐடியினர் விசாரணை


அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சட்டவிரோதமாக செல்லும் புகலிடக் கோரிக்கையாளர்கள் நாடு கடத்தப்படுதல் தொடர்பில் ஆயரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவரிடமிருந்து பல கோணங்களில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதாக திணைக்களம்


பயங்கரவாத விசாரணைத் திணைக்களத்தினர் தம்மிடம் நடத்திய விசாரணைகளில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றிய கேள்விகள் எவையும் எழுப்பப்படவில்லை என்றும் அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய எந்தக் கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் யாழ்ப்பாணப் பல்லைக்கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் யாழ். பல்கலைக்கழக நிர்வாகத்தினர், விரிவுரையாளர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோரைப் பலாலி படைத் தலைமையகத்திற்கு அழைத்துப் பேசிய யாழ்
இந்தியா டெல்லியில் ஒரு கும்பலினால் பாலியல் பலாத்காரம் செய்து பாதிக்கப்பட்ட 
மாணவி சிங்கப்பூர் மருத்துவமனையில் மரண
ம். 

28 டிச., 2012

<iframe width="350" height="270" src="http://www.youtube.com/embed/-B9T2ODFpJQ" frameborder="0" allowfullscreen></iframe>

Australia won by an innings and 201 runs

India 192/5 (20/20 ov)
Pakistan 181/7 (20.0/20 ov)
India won by 11 runs

எஸ். செல்வசேகரன்

ஒரு காலத்தில் இலங்கை நாடக உலகில் முடிசூடா மன்னர்களாகத் திகழ்ந்த நகைச்சுவை மன்னர்களில் ஒருவரான 'உபாலி' எஸ்.செல்வசேகரன் அவர்கள் இன்று (28.12.2012) வெள்ளிக்கிழமை காலை கொழும்பில் மாரடைப்பால் காலமானார். 
அன்னாரது குடும்பத்தினருக்கு எது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கோள்கிறேன்.அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8விக்கெட் இழப்புக்கு 440 ஓட்டங்களைப்பெற்று 284 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.


கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களில்அனைத்துக் குளங்களும் நிரம்பி வழிகின்றன. ஆறுகள் பெருக்கெடுத்துப் பாய்கின்றன. 
இதனால் வீதிப்போக்குவரத்து பல இடங்களிலும் தடைப்பட்டுள்ளது. நேற்றிரவு தகவல்களின் படி சில குளங்களின் நீர்மட்டமும் அவற்றில் இருந்து வெளியேறும் நீர் மட்டமும் வருமாறு.. கிளிநொச்சி மாவட்டத்தில் அக்கராயன்குள நீர்மட்டம் 26 அடி 2 அடி வான் பாய்கிறது.

இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷவின் நேரடிக் கட்டுப்பாட்டில் செயற்படும் பயங்கரவாத விசாரணைப் பிரிவு (TID) தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை விசாரணை ஒன்றுக்கு ஆஜராகுமாறு அவசர அழைப்பாணை ஒன்றை அனுப்பிவைத்திருக்கின்றது.
கொழும்பிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் தலைமையகத்தில் நாளை சனிக்கிழமை ஆஜராகுமாறு இந்த அழைப்பாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறியவந்திருக்கின்றது. கொழும்பிலுள்ள கஜேந்திரகுமாரின் இல்லத்தில் இந்த அழைப்பாணை நேற்று வியாழக்கிழமை மாலை கையளிக்கப்பட்ட
இலங்கை சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பிரித்தானிய குடியுரிமை கொண்ட தமிழரை பிரித்தானிய சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில் நீதியமைச்சர் ரவூப் ஹக்கீமுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரனுக்கும் இடையில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இதன்போதே பிரித்தானிய குடியுரிமை கொண்ட தமிழரை பிரித்தானிய சிறைச்சாலைக்கு மாற்றுவது தொடர்பில்; பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. 

சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் தொடர்பில் சரியான தீர்வை முன்வைக்கத் தவறினால், மீண்டும் ஒருமுறை விடுதலைப் புலிகளின் அல்லது அவர்களைப் பின்பற்றுபவர்களின் ஆட்சேர்ப்பு முகவராக மாறும் நிலை ஏற்படும். இவ்வாறு எச்சரித்துள்ளார் பி.பி.சி. முன்னாள் செய்தியாளர் பிரான்ஸிஸ் ஹரிசன்.

“தி ஏசியன் ஏஜ்” ஊடகத்துக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பாலியல் தேடலில் இலங்கையர்களுக்கு முதலிடம்
கூகுல் இணைய தளத்தில் பாலியல் தொடர்பான தேடலில் அதிகம் ஈடுபடுவோர் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

"பிரபாகரன் படத்தை வைத்திருக்கவில்லை" ! ஹத்துருசிங்கவின் குற்றச்சாட்டை கைதாகியுள்ள மாணவர்கள் மறுப்பு
மாணவர்கள் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் படத்தை வைத்திருந்ததுடன், அந்த அமைப்பை மீண்டும் உருவாக்கும் வகையில் செயற்பட்டதாகவும் யாழ். இராணுவ தளபதி ஹத்துருசிங்க பீடாதிபதிகளிடம் கூறியிருந்த குற்றச்சாட்டை கைதாகியுள்ள மாணவர்கள் மறுத்துள்ளனர்.


‘கைய்ய கால உடைச்சுடுவேன்’
-ராமதாஸ் கூட்டத்தில் பத்திரிக்கையாளருக்கு மிரட்டல்

 

 சேலம் எல்.ஆர்.என் ஹோட்டல் அரங்கத்தில் ராமதாஸ் தலைமையில் 'அனைத்து சமுதாய பாதுகாப்பு பேரவை' ஆலோசனை கூட்டம் நடந்தது.  இதில் பல்வேறு அமைப்பினரும் பங்கேற்க செய்தி சேகரிக்கவும்,புகைப்படம் எடுக்கவும் பத்திரிக்கையாளர்கள் சென்றனர்.

மாணவி புனிதாவை கற்பழித்து கொன்ற ரவுடி சுப்பையா
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கிளாக்குளத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகள் புனிதா (வயது 13). பள்ளி மாணவியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த ரவுடி சுப்பையாவால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார்.


அழகிரி மகனிடம் 100 கேள்விகள் கேட்டுஅதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை 
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததில் முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

27 டிச., 2012


வைகோவின் தலைமையில் எழுச்சிமிகு போராட்டம்


தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தொடர் போராட்டங்களை அறிவித்திருந்தார். அதன்படி கடந்த 12.12.2012 அன்று தமிழகத்தின் கடலோர கிராமங்களில் ஒன்றான உவரியில் இருந்து மதுரையை

பொலிஸ் மீது முன் நாள் இராணுவச் சிப்பாய் துப்பாக்கிச் சூடு: தானும் தற்கொலை செய்தார் 
காவல்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய முன்னாள் இராணுவப் படை சிப்பாய் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என அறியப்படுகிறது. அரலகங்வில சிறிபுர பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. ரி56 துப்பாக்கியைப்

புனர்வாழ்வுபெற்ற 28 முன்னாள் போராளிகள் வடமராட்சியில் கடந்த வாரம் மீண்டும் கைது! – பதற்றத்தில் உறவினர்கள்
யாழ். வடமராட்சி பிரதேசத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முன்னாள் போராளிகள் 28 பேர் பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில்  கடல் கொந்தளிப்பாக இருக்கின்றது. அலையின் வேகமும் அதிகரித்துள்ளதால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். 
யாழ் கடலில் பரவலாக எல்லா இடங்களிலும் இத்தகையை கொந்தளிப்பு நிலை காணப்படுகின்றது கடந்த சில நாட்களாகவே யாழ் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகின்றது. கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்க்குமாறு காலநிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. அத்துடன் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 8 வருடங்கள் நிறைவடைந்துள்ளமையால் யாழ்ப்பாணத்தில் கரையோரங்களைச்சேர்ந்தவர்கள் கடலையே இன்றுக்காலை பார்த்துக்கொண்டிருந்தனர்.

அவுஸ்திரேலியா மெல்பர்ன் கிரிக்கட் மைதானத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக தமிழ் உணர்வார்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடாத்தியுள்ளனர். யுத்தக் குற்றச் செயல்களுக்கு எதிர்ப்பை வெளியிடும் நோக்கில் இந்த போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும், அரசாங்கத்திற்கும் எதிராக ஆர்ப்பாட்டத்தில் பங்குகொண்டோர் கோஷங்களை எழுப்பியுள்ளனர்.

சிறுமியொருவரை வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் மஹகெலேகம சுதர்சனாராம விகாரையைச் சேர்ந்த பிக்குவை அடுத்தமாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 15 வயதான சிறுமியை மருத்துவ பரிசோதனைக்குட்பட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதிக்கு முன்னர், விலகி கொள்ளுமாறு இலங்கை ஜனாதிபதியை வற்புறுத்துமாறு கனேடிய சட்டத்தரணிகள் சங்கம், அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் ஜோன் பேயார்ட்டிடன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
டிசம்பர் 21 ஆம் திகதி கனேடிய சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் அரச சட்டத்தரணி ரொபர்ட் சீ. பிரவுண் வெளிவிவகார அமைச்சருக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சலில் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 
இறந்த உறவுகளுக்காக தீபம் ஏற்றுவதை யாரும் தடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். பட்டதாரி பயிலுனர்களை பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் இணைத்துக் கொள்வதற்கான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களுக்கு என்று சொந்த தலைநகரங்களை வடக்கிலும், கிழக்கிலும் உருவாக்கி கொள்ள வேண்டும் என்று இவர்கள் சொல்கிறார்களா? தமிழர்கள் கைவிட்டு விட்ட, முஸ்லிம்கள் நினைத்து பார்த்திராத பிரிவினை பாதையை இவர்கள் இன்று தூண்டிவிடுகிறார்களா?
எந்த ஒரு நாட்டிலும் அந்நாட்டின் தலைநகரம், அந்நாட்டில் வாழும் அனைத்து இனத்தவர்களுக்கும் பொதுவானது. நாட்டின் தலைநகரில் தமிழ் பேசும் மக்கள் வாழ்வதை இனவாத கண்ணோட்டத்துடன் பார்க்கின்றவர்கள் சொல்ல வருவதுதான்  என்ன? தமிழர்களும், முஸ்லிம்களும் தங்களுக்கு என்று சொந்த தலைநகரங்களை

             து ஒரு விலை மதிக்க முடியாத கைதாகத்தான் இருக் கும் என்பது அரசாங்கத்தின் கணக்காக இருந்தது. கிரானைட் மோசடி வழக்கிற்குள்ளான துரை தயாநிதிதான் தேடப்பட்டவர். தி.மு.க.வின் தலைமைக் குடும் பத்தின் உறுப்பினர். மத்திய அமைச்சரின் மகன். மதுரையின் செல்வாக்கான புள்ளி. அதனால் இந்த வழக்கு, மீடியாக்களின் கவனத்திற்குரியதாக இருந்தது. போலீஸில் சிக்காமல் 127 நாட்கள் தலைமறைவாக இருந்து, நீண்ட சட்டப் போராட்டத் திற்குப் பிறகு முன்ஜாமீன் பெற்றி ருக்கிறார் துரை தயாநிதி.நன்றி  நக்கீரன்

ஏன் இந்த குற்ற உணர்ச்சி? ஏன் இந்த தலைமறைவு? எங்கே பதுங்கியிருந்தார்? எல்லாக் கேள்விகளுக்கும் நக்கீரனிடம் தான் முதன்முதலாக மனம் திறந்தார் துரை தயாநிதி.

நக்கீரன் : உங்கள் மீது வழக்குப் பாய்ந்ததும் என்ன மனநிலைக்கு ஆளானீர்கள், சொல்லுங்கள்?

துரை தயாநிதி : அதுதான் ஊர் உலகத்துக்கே தெரியுமே. என் மீது போடப்பட்டது பொய் வழக்கு. அந்த ஒலிம்பஸ் கம் பெனியிலிருந்து 2008-ஆம் ஆண்டே விலகிவிட்டேன். அது போக நான் அப்ப இருந்த சினிமா பிஸியில், இந்த கம் பெனியில் எனக்கு என்ன நடக் குது என்றுகூட          ""ஹலோ தலைவரே...…அது நடந்து ஒரு வருசம் ஓடிப்போச்சி. அதுக்கப்புறம் என்னென்னவோ நடந்து போயிடிச்சி.''

           நூலிழையில் "தல' தப்பிய அந்த படக் காட்சிகளைப் பார்த்தவர்கள் பதைபதைத்துப் போயிருக்கிறார்கள்.

"பைக் ரேஸ், கார் ரேஸ் விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்வது... உங்களின் துணிச்சலைக் காட்டலாம். ஆனால் உங்களை நம்பி கோடிக்கணக்கில் முதலீடு செய்திருக்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதனால் இப்படிப்பட்ட "ரிஸ்க்'கை இனிமேல் எடுக்காதீர்கள்' என தயாரிப்பாளர் கேயார் ஒருமுறை சொன்னபோது...
தயாநிதிக்காக தடை போடும் மத்திய  அரசு-அ  தி மு க மைத்ரேயன் பேட்டி
 சென்னையில் டிஜிட்டல் அட்ரஸ் சிஸ்டம் செட் ஆப் பாக்ஸ்களை தொலைக் காட்சி நேயர்களுக்கு யார் வழங்குவது என்பதில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவனத் திற்கும் சன் டி.வி. நெட்வொர்க்கின் சுமங்கலி கேபிள் நிறுவனத்திற்கும் இடையே நடக்கும் மோதல் இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித் திருக்கிறது. மக்களவையில் தம்பிதுரையும்,
 ""ஹலோ தலைவரே... பெரியார் நினைவு நாள், எம்.ஜி.ஆர் நினைவு நாள்னு இரண்டு நிகழ்வுகளை இந்த வாரம் கடந்து வந்திருக்கோம்.''Nakeeran
""ஆமாப்பா.. தன் 95 வயது வரைக்கும் இந்த மக்களோட இழிவுநிலை நீங்கி, சமூக விடுதலை கிடைக்கணும்னு பாடுபட்டவர் பெரியார். கடைசிக் காலத்தில் மூத்திர சட்டியை ஏந்திக்கிட்டு பிரச்சாரம் செய்தார். அவரை மறக்காமல் பல கட்சியினரும் நினைவுநாளில் அஞ்சலி செலுத்துறாங்க. ஆனா, அவர் எந்த சாதி ஏற்றத்தாழ்வை           ந்தியத் தலை நகர் டில்லியில், 16-12-12 இரவு 10 மணிக்கு, பேருந்தில், போதை இளைஞர்கள் 6 பேரால் சிதைத்து சின்னாபின்னமாக்கப்பட்டு, ஓடும் பேருந்தில் இருந்தே தூக்கியெறியப்பட்ட, அந்த 22 வயது மாணவி இந்த நிமிடம் வரை உயிருக்குப் போராடிக் கொண்டுதான் இருக்கிறார்.           திராவிட அரசியல் இயக்கங்களான தி.மு.க, அ.தி.முக. இடையிலான தேர்தல் களப் போட்டிகளே தமிழகத்தில் முதன்மையாக இருப்பதால், ஆட்சியைப் பிடிப்பது ஒன்றே இயக்கத்தின் வெற்றி என்ற எண்ணம் இரு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது. அந்த வெற்றிக்காக எதையும் செய்வது என்பதே அரசியல்           திரைப்படங்கள் மிக வலிமையான ஊடகங்கள். பல்வேறு கலைகளின் கலவையாகத் திரைப்படம் திகழ்வதால் அத்தனை கலைகளின் ஈர்ப்பாற்றலும் திரைப்படத்திற்குக் கிடைத்து விடுகிறது. தணிக்கை செய்யாமல் சில திரைப்படங்களை எடுத்து வெளியிட அனுமதித்தால், திராவிட நாடு என்ற இலட்சியத்தை அடைந்துவிடுவோம்


ஏ.ஆர்.ரஹ்மானுக்கு அடுத்த ஆஸ்கார் விருது!


உலக அளவில் திரைத்துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய விருது ‘ஆஸ்கார் விருது’. உலக அளவில் பல பிரிவுகளின் கீழ் படங்களும், திரைக்கலைஞர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டு, கடைசியில் ஒருவருக்கே அந்த விருது வழங்கப்படும். இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருந்துக்கு படங்களும், திரைக்கலைஞர்களும் தேர்ந்தெடுக்கப்படுவது அரிதிலும் அரிதான ஒன்று.

த்ரிஷாவின் ‘ரம்’! நடிகைகளின் கி(ளி)க்!


நடிகை த்ரிஷா அடுத்ததாக ‘ரம்’(RUM - Ranba Urvasi Menaka) என்ற படத்தில் நடிக்கவிருக்கிறார். ரம்பா, ஊர்வசி, மேனகாவாக மூன்று நடிகைகள் இப்படத்தில் நடிக்கிறார்கள். இதில் ரம்பா கேரக்டரில் த்ரிஷா நடிக்கிறார். மூன்று மொழிகளில் உருவாகும் இந்த கன்னடப் படத்தின் மூலம் கன்னட திரையுலகிற்கு த்ரிஷா அறிமுகமாகிறார். ஹீரோ இல்லாத இந்த படத்தின் கதை, நடிகைகளை மையப்படுத்தியே எழுதப்பட்டிருக்கிறதாம்.

      
கன்னடத்தில் ஒக்கடு, வர்ஷம் 
போன்ற ஹிட் படங்களை கொடுத்த எம்.எஸ்.ராஜு இந்த படத்தை இயக்கி தயாரிக்கிறார். ’ரம்’ படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் முதல் துவங்குகிறதாம். தமிழில் இளம் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கும் த்ரிஷாவிற்கு கன்னடத்திலும் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறதாம். 

தமிழ். தெலுங்கு என இரண்டு திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து புகழ்பெற்றுவிட்ட த்ரிஷா கன்னட உலகில் கால் பதித்திருப்பது, அங்குள்ள முன்னணி நடிகைகளுக்கிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாம்.

26 டிச., 2012


வவுனியாவில் பஸ் மீது மோதுண்டு சுக்குநூறாகி போன ராணுவ வாகனம் பலர் பலி அதிர்ச்சி படங்கள்

  • digg
  • 447
     
    Share
வவுனியா மாங்குளம் பகுதியில் இன்று காலை கண்மூடி தனமாக தமது ட்ரக் வண்டியை ஓடி வந்து பஸ் வண்டி மீது மோதி தாமும் பலியாகி மக்கள் உயிரையும் பலி கொண்ட முட்டாள் ராணுவம்
20121225-075129.jpg

25 டிச., 2012


க.பொ.த விஞ்ஞான பாட வினாத்தாள் வெளியாகியமை உண்மையே

19 வினாக்களுக்கும் புள்ளிகள்

* எழுத முடியாத மாணவருக்கு பெப்.9, 10இல் விசேட பரீட்சை
* சிலாபத்தில் பரீட்சைக்கு தோற்றாத மாணவர்கள் தொடர்பில் வெள்ளி முடிவு

இராணுவத்தில் இணைந்த தமிழ்ப் பெண்களின் பெற்றோர் தினக் கொண்டாட்டம்


இந் நிகழ்வின் பிரதம அதிதியாக கிளிநொச்சி பாதுகாப்புப் படைகளின் கட்டளைத் தளபதி கலந்து கொண்டதுடன், இராணுவத்தின் உயரதிகாரிகளும் பங்குபற்றியிருந்தனர்.
இராணுவத்தின் பெண்கள் படையணியில் கடந்த நவம்பர் மாதம் 17ம் திகதி இணைந்து கொண்ட தமிழ்ப் பெண்களின் பெற்றோர் தினக் கொண்டாட்டம் கிளிநொச்சி பாதுகாப்புப்
ஹத்துருசிங்கவின் முன் மண்டியிட்டு தாய்மார்கள் அழும் போது படையினரின் பலகாரத்தை ருசித்துக் கொண்டிருந்த வசந்தி அரசரட்ணம் !!!


கைதான நான்கு மாணவர்களையும் விடுவித்தால்தான் பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்போம் என்பீர்களானால் அது நடக்காது. கைதான மாணவர்கள் இன்றும் பிரபாகரன் இருக்கிறார் என்று வாதிடுகின்றனர்.

அவர்களை அவரே காப்பாற்றுவார்” யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துருசிங்க பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவப் பிரதிநிதிகள், கைதான மாணவர்களது பெற்றோர்கள் மத்தியில் இறுமாப்புடன் பேசிய விடயம் இது.

கடந்த நவம்பர் மாதம் 27 ஆம், 28ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழகம் இராணுவ மயமாகி இருந்தது. 27ஆம் திகதி கார்த்திகை தீபத் திருநாள் என்பதாலும் அன்றே மாவீரர் தினமும் கொண்டாடப்பட்டது என்பதாலும் பல்கலை வளாகத்தை இராணுவம் முற்றுகையிட்டிருந்தது.

பல்கலைக்கழக மாணவர்கள் மாவீரர் தினத்தைக் கொண்டாடி விடக்கூடாது என்பதற்காக அவர்கள் முழு முயற்சி எடுத்திருந்தனர். இராணுவப் புலனாய்வாளர்களின் வெளிப்படையான அச்சுறுத்தல்கள் மத்தியிலும் மாணவர்கள் போரில் இறந்து போன தமது உறவுகளுக்காக அஞ்சலிக்க வேண்டிய தமது கடமையை நிறுத்திவிடவில்லை.

உணர்வுகளை எப்படித்தான் கட்டுப்படுத்துவது? அவர்கள் அமைதியான முறையில் தமது கடமைகளை நிறைவேற்றி விட்டனர். ஆனாலும் 27ஆம் திகதி இரவு இராணுவத்தினர் சீருடையுடன் பெண்கள் விடுதிக்குள் புகுந்து விரும்பத்தகாத நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இந்த அத்துமீறிய செயற்பாட்டைக் கண்டித்து 28ஆம் திகதி காலை பல்கலை மாணவர்கள் எதிர்ப்புப் போராட்டம் ஒன்றை நடத்தினர். அவர்களது போராட்டம் அமைதியான முறையில் நடைபெற்றது.

பல்கலைக்கழகப் பிரதான வாயிலில் இருந்து விஞ்ஞான பீட வாயில் வரை பேரணியாகச் செல்வது என அவர்கள் திட்டமிட்டிருந்தனர். பேரணியாக மாணவர்கள் நகரத் தொடங்கியபோது வளாகத்துக்கு வெளியே குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரும் புலனாய்வாளர்களும் திடீரென மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

காரணமற்ற கைது

ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட அன்று நான்கு மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு ஓரிரு மணித்தியாலயங்களில் விடுதலை செய்யப்பட்டனர். அதன் பிற்பாடு ஸ்ரீரெலோ அலுவலகம் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்பட்டு கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் ஜனமேஜெயந், மருத்துவ பீட மாணவன் சுதர்சன், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றிய உறுப்பினர் சொலமன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அன்று நள்ளிரவே பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் தர்சானந் அவரது வீட்டில் வைத்துக் கைது செய்யப்பட்டார். இரண்டு நாள்களின் பின்னர் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் பவானந்தன் விசாரணைக்காக அழைக்கப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டார்.

மருத்துவ பீட மாணவன் சுதர்சன் மூன்று நாள்களில் விடுவிக்கப்பட ஏனைய நால்வரும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வெலிக்கந்த, கந்தக்கடுவ புனர்வாழ்வு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

கைதானவர்களுக்கும் ஸ்ரீரெலோ காரியாலயத்துக்கு பெற்றோல் குண்டு வீசியவர்களுக்கும் முடிச்சுப்போட நினைத்தவர்கள் வெளிப்படையாகவே விடுதலைப்புலிகளின் மாவீரர் நாளைக் கொண்டாடியமைக்காகவே கைதானார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இராணுவத் தளபதியின் கண்டுபிடிப்பு

புனர்வாழ்வு பெற்றுவரும் நான்கு மாணவர்களும், தலைவர் இருக்கிறார் என வாதிடுகிறார்களாம். வெளிநாட்டில் இருக்கும் புலி ஆதரவாளர்களே இவர்களுக்கு உரமூட்டுகிறார்களாம்.

பிரபாகரன் தலைமையில் மீண்டும் ஒரு போராட்டம் உருவாகும், அதன்மூலம் நாங்கள் தமிழீழம் பெறுவோம் என்று அடாப்பிடியாய் நிற்கிறார்களாம். இதனால் அவர்களை இப்போதைக்கு விடுதலை செய்யமுடியாது என்று அடித்துக் கூறியிருக்கிறார் இராணுவத் தளபதி.

தாயின் புலம்பல்

நடைபெற்ற சந்திப்பில் கைதான மாணவர்களின் பெற்றோர்களும் உடனிருந்தனர். இராணுவத் தளபதியின் கருத்துக்களைக் கேட்டதும் அந்தத் தாய்மார் எழுந்து “ஐயா, எங்கள் பிள்ளைகள் அப்படிச் சொல்லியிருக்க மாட்டார்கள், அவர்கள் அப்படியானவர்கள் அல்லர். அவர்களை விடுதலை செய்துவிடுங்கள்” என்று இரந்துள்ளனர்.

தாய்மாரின் கண்ணீரை நிராகரித்த இராணுவத் தளபதி உங்கள் பிள்ளைகள் இப்படித்தான் பேசுகிறார்கள். நேற்றும் கூட அவர்கள் அதனைத்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். விரும்பினால் உங்கள் பிள்ளைகளை நீங்கள் சந்திக்கச் செல்லும்போது முடிந்தால் “பிரபாகரன் பற்றியோ விடுதலைப் போராட்டம் பற்றியோ பேசாதிருக்கச் சொல்லுங்கள்” என்றார்.

யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி ஹத்துருசிங்கவின் முன்பு தாய்மார்கள் கதறுவதையும், அவர்களை ஒரு புழுவைப் போல் இளக்காரமாக யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி பார்ப்பதையும் அருகில் எதுவும் அறியாத அப்பாவிபோல் இருந்து பலகாரத்தை ருசிக்கும் யாழ் பல்கலைத் துணைவேந்தர் வசந்தி அரசரட்னத்தையும் படத்தில் பார்க்கின்றீர்கள்..
ஹத்துருசிங்கவின் முன் மண்டியிட்டு தாய்மார்கள் அழும் போது படையினரின் பலகாரத்தை ருசித்துக் கொண்டிருந்த வசந்தி அரசரட்ணம் !!!

கைதான நான்கு மாணவர்களையும் விடுவித்தால்தான் பல்கலைக்கழகத்தை மீள ஆரம்பிப்போம் என்பீர்களானால் அது நடக்காது. கைதான மாணவர்கள் இன்றும் பிரபாகரன் இருக்கிறார் என்று வாதிடுகின்றனர்.

India 133/9 (20/20 ov)
Pakistan 134/5 (19.4/20 ov)
Pakistan won by 5 wickets (with 2 balls remaining)

ad

ad