-
7 அக்., 2013
கிழக்கில் முஸ்லிம் மக்களின் காணி பிரச்சினை தொடர்பில் அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் மு.காங்கிரஸ்
கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி சபைகளுக்குட்பட்ட பிரதேசங்களில் உள்ள முஸ்லிம் மக்களின் காணி தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று எடுக்கப்பட உள்ளது.
இணையத்தளங்கள் வெளியிடும் செய்தியில் உண்மையில்லை!
இணையத்தளங்கள் சில “அனந்தி, முதலமைச்சர் விக்னேஸ்வரன்அவர்கள் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய மாட்டேன் என கூறியதாகவும் அனந்தி 12ஆம் திகதி சமாதான நீதவான் அல்லது சத்தியபிரமாண ஆணையாளர் முன்னிலையில் பதவி பிரமாணம் செய்ய இருப்பதாகவும் மாகாணசபையில் கலந்து கொள்ளும் முதலாவது கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்க இருப்பதாகவும்” என விசமத்தனமான பொய்யான செய்திகளை வெளியிட்டுள்ளன. ஆகவே இந்த செய்தியில் உன்மை இல்லை என்பதனை எமது மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கின்றோம்..
தினக்குரல் பத்திரிகையின் ஊடகவியலாளர் அமரர் ரவிவர்மாவுக்கு புளொட் அமைப்பு தனது அஞ்சலி தெரிவித்துள்ளது.
அவ் அமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
தினக்குரல் பத்திரிகையின் பிரபல ஊடகவியலாளர் ரவிவர்மன் என்கின்ற பரமகுட்டி மகேந்திரராஜா மரணமடைந்த செய்தி எம்மையெல்லாம் பெருந்துயரில் ஆழ்த்தியுள்ளது.
விக்கினேஸ்வரனின் பதவிப் பிரமாண நிகழ்வில் குர்சித் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்வார்
முன்னாள் நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் நாளைய தினம் வடமாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்கவுள்ளார். இதன் போது விசேட விருந்தினராக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்சித் கலந்துக் கொள்வார் என்று தமிழ் தேசியகூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்களை மத்திய அரசு வழங்க இருக்கிறது.
இந்தியாவில் 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் தேதியை தேர்தல் கமிஷன் அறிவித்திருக்கும் இந்த நிலையில் மத்திய அரசு நாடு முழுவதும் 2½ கோடி பேருக்கு இலவச செல்போன்களை வழங்க முடிவு செய்திருக்கிறது.மின்னணு மயமாவதில் உள்ள இடைவெளியை பூர்த்தி செய்யும் வகையில் குறைந்த விலையில்,
தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: விஜயநகரத்தில் ஊரடங்கு; கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு
தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் விஜயநகரம் பகுதியில் கலவரமாக வெடித்தது. இதனால் அந்த பகுதியில் நேற்று 2–வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அந்த பகுதியில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் இனப்பிரச்சினை இன்னும் தீரவில்லை: திஸ்ஸ விதாரண
இடதுசாரி அரசியல்வாதியான பீட்டர் கொனமனின் 96வது ஜனன தினத்தை முன்னிட்டு மருதானையில் உள்ள அவரது சிலைக்கு மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)