தனிமைப்படுத்தல் படையினர் புங்குடுதீவிலும் விடப்பட்டுள்ளனர்
விடுமுறைக்கு சென்று கடமைக்கு திரும்பிய கடற்படையினரை தனிமை படுத்தலுக்காக புங்குடுதீவு கழுதைப்பிட்டி வல்லன் கோட்டையாம்புரா முகாம் களில் கொண்டு வந்து வைத்துள்ளனர் . ஆனாலும் அந்த முகாம்களில் உள்ள படையினர் பொதுமக்களுடன் சாதாரணமாக முன்னர் போல் வெளியே பழகி வருவது மக்களுக்கு அச்சத்தை உண்டு பண்ணியுள்ளது . கொரோன விதிமுறைகளின் படி நடக்குமாறு மக்களை தூண்டும் படையினர் தமது விஷயத்தில் இவ்வாறு பாராமுகமாக நடப்பது கவலைதருகிறது அரசாங்கத்துக்கு முண்டு கொடுத்து வரும் அரசியல்வாதிகள் இந்த விடயத்தில் அரசை கேள்வி கேட்க திராணியற்று காணமுகமாக மௌனம் காத்து வருவது குறிப்பிடத்தக்கது