சிபாரிசு கடிதத்துக்கு லஞ்சம் கேட்ட புகார்! ஜெ. பட்டியலில் இரு எம்.பி க்களுக்கு வாய்ப்பு மறுப்பு!
அதிமுக பொதுச்செயலாளரான முதலமைச்சர் ஜெயலலிதா தனது பிறந்த நாளை முன்னிட்டு அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார். இதில் தற்போது நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள பலருக்கும் மீண்டும் போட்டியிடும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
தென் சென்னையில் போட்டியிட்ட சிட்லப்பாக்கம் சி. ராஜேந்திரன், விழுப்புரத்தில் போட்டியிட்ட எம். ஆனந்தன், சேலத்தில் போட்டியிட்ட செ. செம்மலை, திருப்பூரில் போட்டியிட்ட சி. சிவசாமி, பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட கே. சுகுமார், மயிலாடுதுறையில் ஓ.எஸ்.மணியன் ஆகிய ஆறு பேருக்கும் மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.