புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

10 மே, 2014

சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம்


புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம் -சிவ-சந்திரபாலன் 
_______________________________________________________
பிரதி எடுத்தல் தடை செய்யப்படுள்ளது
யாழ்ப்பாணம் சைவ வித்திய அபிவிருத்தி சங்கம் வடபகுதியின் பாடசாலைகளை நிர்வகித்து கல்விப் பணிக்கு பெரிதும் தொண்டாற்றிய காலம் அது. 1926  இல் பெருங்காட்டு பகுதியில் சைவம் வளர்த்து வந்த அமைப்பான சைவ கலா மன்றம் செய்த சிபார்சின்  அடிப்படையில் சைவ வித்திய அபிவிருத்தி சங்கத்தினால் இந்த பாடசாலை அப்போதைய யாழ் இந்து கல்லூரி அதிபராக விளங்கிய டிரூப் அவர்களினால் திறந்து வைக்கபட்டு தலைமை  ஆசிரியராக நமசிவாயம்  பணி     புரிய தொடங்கினர் .இவரைத் தொடர்ந்து எ.து.சின்னையா அவர்களும் பின்னர் பேராசிரியர் சி.இ.சதாசிவம்பிள்ளை(  1929 ) அவர்களும் சிறப்பான முறையில் அதிபர்களாக கடமை புரிந்து பாடசாலையை கட்டி எழுப்பினர்.தமிழையும் ஆங்கிலத்தையும் போதிக்கக கூடிய வகையில் இந்த பாடசாலை இல் துவிபாஷா பாடசாலையாக மற்றம் கண்டது.அனாலும் சில வருடத்தில் பசுபதிபிள்ளை அவர்களின்     முகாமைத்துவத்தின் கீழ் இயங்க வைக்கப் பட்டது.பின்னர் அதிபராக பணியேற்ற கு.வி.செல்லத்துரை அவர்கள் பாடசாலைக் கட்டித்தை சிறந்த முறையில் திருத்தி அமைத்ததோடு புங்குடுதீவில்  உள்ள ஒரே ஒரு மகளிர் வித்தியாலயமாக மாற்றி வைத்தார்.
அந்த காலத்தில் ஆசிரியராக பணி புரிந்த எ.கனகரத்தினம் அவர்கள் புலமைப் பரிசில் பரீட்சக்கென மாணவர்களை விசேசமாக தயார் செய்து வெற்றியும் கண்டார். 1966இல் இப்பாடசாலை எஸ் எஸ் சி வரையான வகுப்புகளை கொண்ட மகா வித்தியாலயமாக உயர்த்தப் பட்டது . 1980இல் புங்குடுதீவு சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம் என பெயர் சூட்டப் பட்டது.ஒரு மகளிர் இத்தியாலயமாக இருந்தாலும் ஐந்தாம் வகுப்பு வரை இரு பாலார் வகுப்புகளாகவும் அதற்கு மேலே தனி மகளிர் வகுப்புகளாகவும் இயங்கின 
1973முதல் 1985வரை யோ.ச.செல்வராசா அவர்க சிறப்பான ஒரு அதிபராக கடமை ஆற்றி எல்லோர் மனதையும் கொள்ளை கொண்டார்.இவரது ஆங்கில புலமை இந்த பாடசாலை மாணவர்களை ஆங்கிலக் கல்வியில் சிறந்து விளங்க உதவி புரிந்தது .இவரை தொடர்ந்து 1985முதல் 1988 வரை திருமதி மனோன்மணி தனபாலசிங்கம் அவர்களும்1988 இலிருந்து 1997வரை செல்வி.ம.சுப்பிரமணியம் அவர்களும் 1997முதல் நாகநாதி பஞ்சலிங்கம் அவர்களும் அதிபர்களாக இருந்து கல்வி வளர்ச்சிக்கு பாடுபட்டனர். 
மக்கள் இடம்பெயர்வின் பின்னர் இப்பாடசாலை 1992முதல்1995 ஐப்பசி வரை யாழ் இந்து மகளிர் கல்லூரியின் விடுதி மண்டபத்தில் இயங்கியது.பின்னர் சிறிது  காலம  வேலணை ´கிழக்கு மகா வித்தியாலயத்தில் இயங்கியமை குறிப்பிடத் தக்கது . புங்குட்தீவின் மீள் குடியமர்வை தொடர்ந்து மீண்டும் நிரந்தரமான இடத்தில் 1997   தை பதினைந்த திகதி முதல்  இயங்க தொடக்கி தனது கல்விப் பணியை ஆற்றுகிறது இந்த கல்வி சாலை .தொண்டன்,க . திருநாவுக்கரசு


தொண்டன்,க . திருநாவுக்கரசு    -   (சிவ-சந்திரபாலன் )

​​​​​​​​​​​​​​​ 
இந்த கட்டுரை சரியான ஒழுங்குபடுத்தல்களின் பின்னர் சீரமைக்கப்பட்டு முழுமையாக்கப்படும் அதுவரை  உங்கள் நுகர்வுக்காக திறந்துள்ளேன் -நன்றி
சிரியாவில் போர்  முடிவுக்கு வருகிறதா ?போராளிகள் சரண் 
சிரியாவின் உள்நாட்டு போரினை அங்குள்ள போராளிகள் தற்போது முடிவிற்கு கொண்டு

தமிழ்நாட்டுக்கு போனால் சென்னை சரவணாசுக்கு போகாமல் வர மாட்டீர்கள் தானே  இதோ ஒரு  கவலையான செய்தி 
சில நாட்களுக்கு முன்பு சரவணா ஸ்டோர்ஸ் சென்றிருந்தேன். இரவு 9 மணி. அதிகக் கூட்டம் இல்லை. நாள் முழுக்க உழைத்த களைப்புடன், வலுக்கட்டாயமாக ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் துணிகளை எடுத்துக் காட்டிக்
2014-05-10

சீனாவில் அதிசயம் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி 17 ஆண்டுக்கு பிறகு உயிருடன் மீட்பு


EPP Group Urges Governments to Use ...
MORE VIDEOS
பீஜிங்: சீனாவில் 17 ஆண்டுகளுக்கு முன்பு நிலநடுக்கத்தின் போது ஏற்பட்ட சுரங்க விபத்தில் பூமிக்கடியில் சிக்கிய தொழிலாளி ஒருவர் கடந்த மாதம் உயிருடன் மீட்கப்பட்டுள்ள அதிசய சம்பவம் உலகம் முழுவதும்

சிவலைபிட்டி சன சமூக நிலையம்


வரலாறு 
சிவலைபிட்டி சன சமூக நிலையம் ஆக்கம் சிவ-சந்திரபாலன் 
____________________________________

புங்குடுதீவு மண்ணுக்கு சேவையாற்றும் மிகச் சிறந்த பொதுநல தொண்டு அமைப்புகளில் சிவலைப்பிட்டி சனசமூக

சித்திவிநாயகர் மகா வித்தியாலயம்புங்குடுதீவு சித்திவிநாயகர் மகா வித்தியாலயம் -சிவ -சந்திரபாலன் 
_____________________________________________________

புங்குடுதீவில் அமைந்துள்ள உயர்தரப் பாடசாலைகளில் இதுவும்  ஒன்று .புங்குடுதீவின்  மேட்குபகுதியான இறுபிட்டியில் இந்த கல்விச்சாலை அமைந்துள்ளது .புங்குடுதீவின் கல்வித் தந்தை பசுபதிபிள்ளை
மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி மன்னாரில்
வடமாகாண விளையாட்டுத் திணைக்களம் நடத்தும் மாவட்டங்களுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டி எதிர்வரும் 10 ஆம், 11 ஆம் திகதிகளில் மன்னார் மாவட்டத்தில் இடம்பெறவுள்ளது.

தொண்டன்,க . திருநாவுக்கரசு


தொண்டன்,க . திருநாவுக்கரசு    -   (சிவ-சந்திரபாலன் )

​​​​​​​​​​​​​​​ 
இந்த கட்டுரை சரியான ஒழுங்குபடுத்தல்களின் பின்னர் சீரமைக்கப்பட்டு முழுமையாக்கப்படும் அதுவரை  உங்கள் நுகர்வுக்காக திறந்துள்ளேன் -நன்றி

புங்குடுதீவு நாலாம் வட்டாரம் இறுபிட்டியில்  பிறந்த இந்த தொண்டுப் பெருமகன் புங்குடுதீவு மண்ணுக்காக எல்லாத் துறைகளிலும் சேவை செய்த சேவகன்.
யாழில். 800 தமிழ் இளையோரை இராணுவத்தில் இணைக்க திட்டம் .வறுமையில் வாடும் இளைஞர்களுக்கு ஆசை வார்த்தை 
தொண்டர்கள் என்ற போர்வையில் 800 இராணுவ வெற்றிடங்களை நிரப்புவதற்கு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர் யுவதிகளை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்கான அறிவித்தலை யாழ்.மாவட்ட இராணுவத்தின்முக்கிய அமைச்சர் ஒருவர் எதிர்கட்சிக்கு தாவி பொது வேட்பாளராக திரை மறைவு பேச்சு வார்த்தை 
அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியின் சார்பில் போட்டியிட 6 பொது வேட்பாளர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவருகிறது.

கணேச மகா வித்தியாலயம்


ஸ்ரீ கணேச மகா வித்தியாலயம் இலங்கை யாழ்ப்பாண மாவட்டம்புங்குடுதீவில்அமைந்துள்ள ஓர் அரசுப் பாடசாலை. இது 1910 சித்திரை மூன்றாம் திகதி வ. பசுபதிப்பிள்ளை விதானையாரினால் சிறிய கட்டிடத்தில்

கே.பி.யை கொலை செய்ய புலிகள் முயற்சி-புலனாய்வுப் பிரவினர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சட்டவிரோத ஆயுதக் கொடுக்கல் வாங்கல்களுக்கு பொறுப்பாளராகவிருந்த கேபி எனப்படும் குமரன் பத்மநாதனை கொலை செய்ய புலிகள் முயற்சித்து வருவதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பெரும்பான்மையினர் ஒருவரையே பொதுவேட்பாளராக நியமிக்க வேண்டும்!- பிரதான எதிர்க்கட்சிகள்
வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைப் பொது வேட்பாளராக நியமிப்பதற்கென தேவை ஏதும் இல்லை. தேவை ஏற்படும் பட்சத்தில் அவருடன்
தென்னாபிரிக்க தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸூக்கு அமோக வெற்றி
தென்னாபிரிக்காவின் பொதுத்தேர்தலில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை70 வருடங்களாக  தமிழனை அழித்த  சிங்களம் இப்போது  முஸ்லிம் தமிழரையா ?அழுத்கமவில் முஸ்லிம் வர்த்தகரின் கடைக்கு தீவைத்த பிக்குகள்
அளுத்கம நகரில் உள்ள முஸ்லிம் வர்த்தகரின் வணிக நிலையம் ஒன்று பௌத்த பிக்குகள் தலைமையிலான 250 இற்கும் மேற்பட்ட சிங்கள பௌத்த குண்டர்களால் தீவைத்து
சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு ரெயில்: கடலுக்கடியில் 125 மைல் ரெயில் பாதை

உலகில் பெரிய 8000 மைல் ரயில் பாதை சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு சீனா திட்டம்  சீனாவிலிருந்து அமெரிக்காவுக்கு புல்லட் ரெயில் விட சீனா முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 8000 மைல்

க.ஐயாத்துரை ஆசிரியர்-


உயர்திரு க.ஐயாத்துரை ஆசிரியர்-  பிரதி பண்ணல்  தடை செய்யப்பட்டுள்ளது  
_ஆக்கம்சிவ -சந்திரபாலன் ___________________________________

புங்குடுதீவு கிழக்குப் பகுதியின் சமூக சேவை பொதுநலம் தொண்டு என்பன பற்றி பேசப் புறப்பட்டால் அமரர் க.ஐயாத்துரை அவர்களின் நினைவு தான் மனக்கண் முன்னே வந்து நிற்கும் . 

ல்வித்தந்தை வ.பசுபதிப்பிள்ளை


.புங்குடுதீவின் கல்வித்தந்தை வ.பசுபதிப்பிள்ளை ஆக்கம் சிவா-சந்திரபாலன் 
__________________________________________________
புங்குடுதீவின் அதிவேகமான கல்வித்துறை முன்னேற்றத்தை பற்றி பேச வேண்டுமானால் எமது கல்வித்தந்தை வ.பசுபதிபிள்ளை விதானையாரை ஒருகணம் தலை தாழ்ந்து வணங்கி தான் ஆரம்பிக்க வேண்டும் .சைவ ம்,தமிழ்,கல்வி ஆகிய மூன்று துறைகளையும் தொட்டு புங்குடுதீவு மண்ணுக்கு அளப்பரிய பணி ஆற்றிய பெருமகன் இவர்.

சூடு பிடிக்கிறது ஒன்றாரியோவில் தேர்தல் பிரச்சாரம்

1297389105385_ORIGINAL
ஒன்றாரியோ மாகாணத்தில் உத்தியோகபூர்வமாகத் தேர்தல் பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் கத்லீனால் தேர்தலுக்கான திகதி குறிப்பிடப்பட்டவுடன் தேர்தலுக்கான பரப்புரைகள் ஆங்காங்கே ஆரம்பமாகத் தொடங்கிவிட்டன. யூன் மாதம் 12ம் திகதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார். ஆனால் தற்சமயம் உத்தியோகபூர்வமாக

எஸ்.கே.மகேந்திரன்
எஸ்.கே.மகேந்திரன்எழுச்சி வேந்தன் எஸ்.கே.மகேந்திரன்-ஆக்க சிவ-சந்திரபாலன் 
--------------------------------------------
இலங்கையின் எழுச்சிமிகு பேச்சாளர்களில் முன்னணி வகிக்கும் ஓரு இளம் அரசியல்வாதியும் சமூக சேவையாளருமான எஸ்.கே என்று செல்லமாக அழைக்கப்படும் எஸ்.கே .மகேந்திரன் புங்குடுதீவு மண்ணுக்கு பெருமை சேர்த்த ஓரு பெருந்தகை என்றால் மிகை ஆகாது.

மு.தளையசிங்கம்
மு.தளையசிங்கம்


மு.தளையசிங்கம்

மு.தளையசிங்கம் : இந்த யுகத்தின் சத்திய காவலர்
“தற்காலம் ஒரு புது யுகத்தை நோக்கி மாறிக்கொண்டிருக்கிறது. நாம் இரு உலகங்களுக்கிடையே கிடந்து போராடிக் கொண்டிருக்கிறோம். ஒன்று செத்துக் கொண்டிருக்கிறது மற்றது பிறக்க முயன்றுகொண்டிருக்கிறது”

46வயதுடைய ஊர்வசி கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் பாக்யராஜின் முந்தானை முடிச்சு படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஊர்வசி. இதுவரை அவர் மலையாளம், தமிழ் என 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். ஊர்வசிக்கும் மலையாள நடிகர் மனோஜ்


தொழில்நுட்ப காரணங்களால் "கோச்சடையான்' படம் வரும் 23-ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ள படம் "கோச்சடையான்'.
ஹாலிவுட்டில் மட்டுமே பயன்படுத்தப்பட்ட

கவிஞர் சு.வில்வரத்தினம்


கவிஞர் சு.வில்வரத்தினம்


சு. வில்வரத்தினம் (1950-2006) யாழ்ப்பாணம் புங்குடுதீவினைப் பிறப்பிடமாகக் கொண்டவர். 1970 களிலே எழுத ஆரம்பித்து 1980 களில் முக்கியமான எழுத்தாளராகப் பரிணமித்தவர். 2 பிள்ளைகளின் தந்தை. 1991 ஆம் ஆண்டில் இடம் பெயர்ந்து, திருகோணமலையில் வாழ்ந்து வந்தார். இறக்கும் வரை திருகோணமலையிலே தொழிலாற்றினார்.

சு.வில்வரத்தினம் எழுதி வெளிவந்த கவிதைகளின் தொகுப்புக்கள்:
(1)அகங்களும் முகங்களும் (கவிதைத் தொகுதி, 1985)
(2)காற்றுவழிக் கிராமம் (கவிதைத் தொகுதி, 1995)
(3)காலத்துயர் (கவிதைத் தொகுதி)
(4)நெற்றிமண் (கவிதைத் தொகுதி, 2000)
(5) உயிர்த்தெழும் காலத்துக்காக - இவரது மொத்தக் கவிதைகளும் ஒரே தொகுப்பாக(கவிதைத் தொகுதி, 2001)

மரணத்துள் வாழ்வோம்(சில கவிதைகள்) தொகுதியிலேயும் இவரது கவிதைகள் இடம்பெற்றுள்ளன. கவிதைகளையும் பாடல்களையும் சிறப்பாகப் பாடும் வல்லமை பொருந்தியவரும் கூட. ‘Lutesong and Lament: Tamil Writing from Sri Lanka’ தொகுதியிலே இவரது கவிதை ஒன்று ஆங்கில வடிவிலே வெளி வந்துள்ளது.

சு . வில்வரத்தினம்


தேசியக் கவி வில்வரை உரசும் வாகரைக் காற்று

vilvarajan-kavithaikal2
காற்று வெளிக் கிராமத்தில் கால்நடையாகச் சென்ற கவிஞன் இறந்து விட்டான்.
இருப்பினும், வில்வரத்தினம் என்கிற படைப்பாளியின் மரணம், காலவெளியில் விதைக்கப்பட்ட இலக்கியப் பதிவுகளுடன் முற்றுப் பெறாது.  அவன் மரணத்தின் பின்னாலும், அவனது படைப்பிலக்கியம் வாழும் செழுமை கொண்டது.
vilvarajan-kavithaikal
பின் நவீனத்துவ இலக்கியப் பரப்பில்
படைப்பாளிகள் மரணிக்கலாம்.
வில்வரின் மண் சுமக்கும் மானுடக் கவிகள்,
விடுதலை உணர்வு விரவிய மனவெளிகளில்,
வாழும் தத்துவம் கொண்டது.
மொழிக் களத்தில் பாமரப் புரிதலைப் புகுத்திய புதுக்கவிஞன்.  அவனது அனுபவத்திரட்சியில் பல்வேறு முகங்கள்,
பன்முக அர்த்தங்களுடன் இறுக்கப்பட்டிருந்தது.
இவனது விடுதலை வேட்கையும், தேசிய உணர்வும், சத்தியத்தின் சாட்சிகளாகின்றன.
துரத்தியடிக்கப்பட்ட மனிதர்கள் வாழ்ந்த வெட்ட வெளிதனில், தனியனாக நடக்கும் போது சுயத்தின் அர்த்தம் புரியும்.
அவ்வெளியில், வாழ்வின் அர்த்தங்களும், பண்பாட்டு விழுமியங்களும், உயிர் நிலைத் தத்துவங்களும், சூனியமாகிப் போகும்.
மூது}ர் கிழக்கிலிருந்து ஈச்சிலம்பற்றையை நோக்கி நகரும் மக்கள், எறிகணைகளாய் துரத்தப்பட்டு, வாகரையை நோக்கி ஓடும்போது கவிஞனின் கவிவரிகள் மறுபடியும் உயிர்ப்பிக்கும்.
பின்தொடரும் எறிகணை வீச்சுக்களால்
இடம் மாறி வாழும் மனிதர்களின்
மனச் சிதைவுகளைப் பதிவு செய்ய
வில்வன் இன்று இல்லை.
குண்டு வீச்சினால் அழிந்த,
மரக்கிளைகளைத் தேடி காற்று அலைகிறது.
கவிஞனின் கவிதையுள் கரைந்திருந்த காற்று,
வாகரையில் வீழ்த்தப்பட்ட
மனிதர்களின் உடலங்கள் மீது
சோகத்துடன் தலைகுனிந்து உரசிச் செல்கிறது.
படைப்பாளி இறந்தாலும்,
படைப்புக்கள் வாகரையில் வாழ்கிறது.
தலைகுனிந்து மண்பதித்த கால்களைத்
தரிசிக்கும் பொழுதே
தன்னிலை துலங்கும்.
நீள நடக்கின்றேன்…. என்கிற வில்வனின் கவிதையில் குறியீடாகத் தெரிவதும் இதுவே.
துயிலும் இல்ல விளக்கொளியின் முன்னால்,
தலைகுனியும் தத்துவமும் அதுவே.
இத்தலைகுனிவு வீர வணக்கம் மட்டுமல்ல.
புற உலகப் பார்வைதனை ஒரு கணம் நிறுத்தி,
சுயதரிசனம் கொள்வதே அதன் உள்ளார்ந்த வெளிப்பாடு.
குனிந்த பார்வையில் தென்பட்ட மண்ணில்தான்
தலைசிதறிய பிஞ்சுகளின்
உடலங்கள் வீழ்த்தப்பட்டுள்ளன.
கொலைக் களமாகிய வாகரையில்
மரண ஓலங்கள் காற்றோடு கலக்கின்றன.
பூக்களை உரசும் காற்றின் சுகந்தங்கள்,
காலத்தோடு கரைந்து விட்டது.
நிகழ்கால வாழ்வில் வீசும் காற்றும்
ஒட்டாத உறவுதான்.
மறுபடியும் உயிர்த்தெழும் மகரந்தங்கள்
பூக்காமல் கருகுகின்றன.
கவிஞருக்கென்ன…. பழையதை மீட்டி,
உதிரத்தை சிலிக்க வைத்துப் போய் விட்டான்.
சிதைவுகளுள் ஒளிந்து கொண்ட
வாழ்வினைத் தேடி
மனிதர்கள் வீறு கொண்டெழத் தொடங்கி விட்டனர்.
ஒரு கையில் துப்பாக்கி ஏந்தியபடி,
உச்சத்தின் கட்டளைக்காய் காத்திருந்து,
உறவுகள் கொன்றொழிவதை
பல்லை நறுமியபடி பார்த்துக் கொண்டிருக்கிறான்
ஒரு இளைஞன்.
தற்போது…..
இடமாறுதல்களும், ஓட்டப் பந்தயமும் அந்நியனால்
வரையப்பட்ட எல்லைக்குள்தான்.
தற்காலிக எல்லைக்குள் கட்டுண்டு இருக்கும்
காற்றின் அழுத்தம் விரிவடைந்து,
கனம் பெருகி, இன எல்லை வரை நீளும்.
சுதந்திரக் காற்றினை
எல்லை வரை அழைத்துச் செல்ல
போராட்டச் சக்திகளுடன் மக்களும் தயாராவெனக்
கவிஞன் எழுப்பும் கனதியான செய்தி காதில் விழுகின்றது.
விழி மூடும் போதும் கண்ணால் காற்றுக்குத் து}து விட்டான்.
காற்றானது,
அந்த மகரந்த மணிச் செய்தியினை
தேசியத்தின் ஆன்மாவிடம் சேர்த்து விட்டது.
இனி என்ன….
பூக்கும், காய்க்கும், பழுக்கும், விதை விழும்.
மண்ணில் புதுத் தளிர் துளிர் விடும்.
காற்று வரையும் காட்சிப் படிமங்கள்,
அழகுணர்வைப் புள்ளியாக்கும்.
அதுவரை….
தொலைத்த வாழ்வினை இவன் கவிதைக்குள் தேடுங்கள்.
உயிர்த்தெழும் காலம் வரும்.
விழிப்பென்பது
இரு விழிகளையும்
சேரத் திறந்து வைத்திருத்தல் அல்ல.
எதிரியைக் குறித்த கவனக் குவிப்பு
மட்டும் அல்ல்
தன்னுள் மையமிட்டெழும் உயிர்ப்பு…
வில்வரின் இக்கவிதையே, அவன்
வாழ்ந்ததற்கான சான்று.
சி. இதயச்சந்திரன்


சென்னையில் நடைபெற இருந்த 4 ஐ.பி.எல். போட்டிகள் ஜார்க்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று பி.சி.சி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில்  18ம் மற்றும் 22ம் தேதி சென்னை அணி விளையாடும் போட்டி நடைபெற இருந்தது. இந்த போட்டிகள்

இலங்கை, இந்திய மீனவர் பேச்சுவார்த்தை இந்திய பிரதிநிதிகள் நாளை கொழும்பு வருகை

* திங்களன்று முக்கிய விடயங்கள் ஆராய்வு,
* இலங்கை தரப்பில் 20 பிரதிநிதிகள்; 10 அதிகாரிகள்
போராட்டங்களை சமாதானமாக செய்யுங்கள்; பொலிஸார் தெரிவிப்பு 
news
சமாதானமாக செய்யப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு நாம் தடை விதிக்க மாட்டோம் என யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுகத் எக்கநாயக்க தெரிவித்துள்ளார்.