புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2019

இரட்டைக்கொலை - தடயப் பொருட்களுடன் கொலையாளி கைது

கிளிநொச்சி- ஜெயந்திநகர் பகுதியில் நேற்று இடம்பெற்ற இரட்டைக் கொலைகளின் சூத்திரதாரி என்ற சந்தேகத்தின் பெயரில் அயல் வீட்டுக் காரர் கைது செய்யப்பட்டுள்ளார் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்து, தாமே கொலைகளை செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்

செப்ரெம்பர் முதல் பலாலி-சென்னை விமானசேவை

பலாலி விமான நிலையம் இந்திய துணைக்கண்டத்தின் பிராந்திய விமான நிலையமாக செப்டெம்பர் மாதம் முதல் செயற்படவிருப்பதாக சிவில் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் அசோக் அபேயசிங்க தெரிவித்துள்ளார்.
பலாலி விமான நிலையம் இந்திய

மொட்டு'டன் இணையும் ஐதேக முக்கியபுள்ளி

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல அரசியல்வாதி உள்ளிட்ட உறுப்பினர்கள் சிலர், எதிர்வரும் 11ஆம் திகதிக்கு பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வார்கள் என, நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்காவுக்கு நிரந்தரத் தடை

இஸ்லாமியப் பெண்கள் அணியும் புர்கா ஆடைகளை நிரந்தரமாக தடை செய்யக் கோரும் அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதியமைச்சர் தலதா அத்துக்கோரள இதற்கான பத்திரத்தைக் கையளித்துள்ள நிலையில், அடுத்த கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்படும்

30 ஜூலை, 2019

கப்பலோட்டிகளாக கடற்புலிகள்!! -நியமிக்க கோருகிறார் சிறிதரன் எம்.பி

யாழ்.மாவட்டத்தின் தீவகப் பகுதிகளுக்கான சேவையில் ஈடுபடும் கப்பல்களின் சாரதிகளுக்கான வெற்றிடத்திற்கு கடற்புலிகளின் இருந்தவர்களை பயன்படுத்துமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அமெரிக்க தடை தாண்டி ஹுவாய் திறன்பேசியின் வருவாய் 23.2% அதிகரிப்பு

சீனாவின் தயாரிப்பான ஹுவாய் திறன்பேசியின் வருவாய் 23.2% அதிகரித்துள்ளது.
நேற்று செவ்வாய்கிழமை ஹுவாய் திறன்பேசியின் முதல் அரையாண்டு வருவாய் குறித்து என்றும் மே மாதத்தில் வருவாய் மிக வேகமாக வளர்ந்தது" என்றும் ஹவாய் தலைவர் லியாங் ஹுவா செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

நவீன் திசாநாயக்கவுடன் வாக்குவாதம்; வெளியேறினார் திகாம்பரம்!

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 50 ரூபா வேதன அதிகரிப்பு தொடர்பான அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் நவீன் திசாநாயக்க தனது அமைச்சிலிருந்து நிதி வழங்க முடியாது என்றும் அமைச்சர் பழனி திகாம்பரம் தன்னுடைய நிதியிலிருந்து வழங்குமாறு கூறியதையடுத்து,

தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வாக யாழில் அமைகிறது நீர் தேக்கம்... யாருக்கு?- நேரு குணரட்ணம்

தண்ணீர் பற்றாக்குறையால் அதிகம் அவதிப்படுபவர்கள் இலங்கைத்தீவில் தமிழர்கள் என்றால் அது மிகையில்லை. அது அன்றாட தேவைகளைக் கடந்து விவசாயம், கால்நடை வளர்ப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு எனப் பல துறைகள் சார்ந்தும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது,

நீட்டி முழங்கிய வைகோ; கேரள எம்பிக்கள் ஆதரவ

மேற்குத் தொடர்ச்சி மலையை உடைத்து நொறுக்கும்நி யூட்ரினோ திட்டத்தை நிறுத்துங்கள் என மதிமுக பொதுச்செயலாளர் நீட்டி முழங்கியுள்ளார், வைகோவின் கருத்தை ஆமோதிப்பதாக கேரள எம்பிக்களும் கூறியுள்ளனர்
அப்பா  ஸ்தானத்தில் மதிப்பு கொடுக்கும்  தர்சனுக்கும்  லூசியாவுக்கும் சேரன்  வைத்த  முதல்  ஆப்பு 
பிக் போஸ் நிகழ்ச்சியில்  முதல்  வார வெளியேற்றும் படலத்தில்  வேட்ப்பாளராக்க தர்சனை யும்  லூசியாவையும்  நீக்க  வாக்கு   கொடுத்தவர் தான் சேரன் . அதன் பின்  தர்சனை  யாரும்  இதுவரை   வெளியேற்ற  வாக்களிக்கவில்லை  லூசியாவை கூட இந்த வாரம் தான்  ஒரு வாக்கு  பெற்றுள்ளார் இருந்தாலும் பட்டியலில் இடம்பெறவில்லை  சேரன்  இவர்களை  நீக்க  விருப்பம்  டெஹ்ரிவித்தது கூட  டர்ஹெறியாமல் இன்னும்  சேரனை  அப்பா  ஸ்தானத்தில்  வைத்து  மதிப்பு கொடுத்து  வருகிறார்கள்  அவர்களுக்கே  தெரியாத  நிலை  தானே  சேரனின் செயகை   வெளியே  வந்து  திரும்ப  அந்த நிகழ்ச்சியை பார்த்தால் மட்டுமே  தெரியவரும்

ஊடகங்களில் உலாவும் கோத்தாவின் போலி ஆவணம்

அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்து விட்டார் என தெரிவிக்கும் விதத்தில் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஆவணம் போலியானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்ச உரிய ஆவணம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்து

பிள்ளையாரை ஆக்கிரமித்த பிக்குவுக்கு மனநோய்

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை அடாத்தாக சுவீகரித்து அங்கு பாரிய புத்தர் சிலையொன்றை நிறுவி - பௌத்த விகாரையை அமைத்து குடிகொண்டிருக்கும் கொலம்ப மேதாலங்க தேரர் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் - அதிபர், ஆசிரியர்கள் விடுதலை

மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்தை மூடி மறைத்தனர் என்று குற்றஞ்சாட்டப்பட்ட யாழ்ப்பாணத்தை அண்மித்த பகுதியின் பாடசாலை ஒன்றின் அதிபர் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் மூன்று ஆண்டுகளின் பின்னர் குற்றமற்றவர்கள் என யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் இன்று விடுவிக்கப்பட்டனர்.

சம்பந்தனுக்கு ரணில் உறுதி

கல்முனை வடக்குப் பிரதேச சபை தரமுயர்த்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் நேற்று விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இரட்டைக் கொலை- கிளிநொச்சியில் பரபரப்பு


கிளிநொச்சி- ஜெயந்திநகர் பகுதியில் தாயும் மகனும் இரத்தக் காயங்களுடன் வீட்டினுள் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாமென சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்தில் 70 வயது மதிக்கதக்க விஷ்னுகாந்தி வள்ளியம்மை

29 ஜூலை, 2019

விவசாயி முதல்–அமைச்சராக இருப்பதை மு.க.ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை தேர்தல் பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி தாக்கு

ஒரு விவசாயி முதல்–அமைச்சராக இருப்பதை மு.க.ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை என தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகத்தை

கர்நாடக சட்டப்பேரவை: நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி

கர்நாடக சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெற்றது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், கர்நாடகாவில் சட்டப்பேரவை கூடியது. எடியூரப்பா அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது.

டெல்லியில் பேரறிவாளன் தாயாருடன் தொல்.திருமாவளவன் அமித்ஷாவை சந்தித்தார்

டெல்லியில் பேரறிவாளன் தாயாருடன் தொல்.திருமாவளவன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள 7 பேரின் விடுதலை விவகாரம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின்

இலங்கை காய்கறிகளிலேயே கூடுதல் நச்சு

உலகில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளில், ஆக கூடுதலான நச்சுத் தன்மை கொண்ட காய்கறிகள் இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்படுவதாக விவசாய நீர்பாசன கிராமிய பொருளாதாரம் மற்றும் கடற்தொழில் மற்லும் நீரியல்வள அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.

48 அத்தியாவசிய மருந்து வகைகள் விலை குறைப்பு!!!

4முதல் கட்டத்தின் கீழ் 48 அத்தியாவசிய மருந்து வகைகளுக்கு விலை ஒழுங்குறுத்தலை மேற்கொண்டதன் மூலம் 3,600 ரூபாவாக இருந்த மருந்தூசியின் விலை 400 ஆல் குறைவடைந்துள்ளது.

பொலித்தீன் பாவனையை தடை செய்ய தீர்மானம்-யாழ்.பல்கலைகழகம்

யாழ்.பல்கலை கழகத்தில் பொலித்தீன் பாவனையை தடை செய்ய தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக கல்வி சமூகம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலை கல்வி சமூகத்தினால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்:-
உக்க கூடிய பொருட்களை பயன்படுத்துவதன்

பொன்னாலை பகுதியில் ஒரு தொகை மிதிவெடிகள் கண்டுபிடிப்பு

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் வைத்து ஒரு தொகை மிதிவெடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.நேற்று மாலை 5.15 மணியளவில் பொலிஸ் விஷேட அதிரடிப்படையின் யாழ்ப்பாண முகாம் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த

யாழ் நாகவிகாரைக்கு விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ஷ

யாழ்ப்பாணத்திற்கு இன்று(திங்கட்கிழமை) விஜயம் செய்துள்ள நாமல் ராஜபக்ஷ குழுவினர் காலை 10 மணியளவில் நாகவிகாரை விகாராதிபதி வண மீகஹ யதுரே ஸ்ரீவிமல தேரரை சந்தித்து கலந்துரையாடியதுடன் ஆசிர்வாதத்தையும் பெற்று கொண்டனர்.

லொறி - பேருந்து விபத்து ; 3 பேர் பலி - 5 பேர் காயம்

மதவாச்சி - அநுராதபுரம் வீதியின் வஹமலுகெல்லேவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியானதுடன் மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
சுவிட்சர்லாந்து  தமிழீழ  விளையாட்டு துறையினரால்  தமிழீழ  தத்துவார்த்த அடிப்படையில்  மிகவும்  நுண்ணிய பார்வையில்  அதிசிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள  தமிழீழக்கிண்ணம்   வடிவம் - அமைப்பு  -விளக்கம் 

கூட்டமைப்பு உறுப்பினர்கள் அரசின் அடிவருடிகள் அல்லர்! சபையில்செல்வம் அடைக்கலநாதன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அரசுக்கு ஆதரவு வழங்குகின்றார்கள் என்பதற்காக அவர்களை அரசின் அடிவருடிகள் என எவரும் எடைபோடக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

சம்பந்தனின் முக்கிய நகர்வே! நல்லது நடக்குமா??

இது சரியான நேரத்தில் பேசிய பேச்சு என நினைக்கிறேன். வரப் போவது ஜனாதிபதி தேர்தல். ரணில் – மகிந்த – மைத்ரி தரப்பின் மும்முனை போட்டி நடக்கவிருக்கிறது.
மூன்று தரப்புக்கும் சிறுபான்மையினரது வாக்குகள் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். முக்கியமாக தமிழர் வாக்குகள்.

ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு அமெரிக்காவால் அனுப்பப்பட்ட அவசர கடிதம்; காரணம் இதுதான்

மிலேனியம் சவால் நிதிய உடன்பாட்டுக்கு ஒப்புதலை அளிக்கும் விடயத்தில் தலையிடுமாறு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, அமெரிக்க தூதுவர் அலய்னா ரெப்லிட்ஸ் அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சோதிட ஆலோசனைப்படி கர்நாடக ஆலயங்களில் ரணில் சிறப்பு வழிபாடு

சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்றுமுன்தினமும், நேற்றும் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளிலும், யாகங்களை நடத்துவதிலும் ஈடுபட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கதிர்காமர் கொலை – ஜேர்மனி வழக்கினால் குழப்பத்தில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள்

சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பாக, ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பாக சிறிலங்கா புலனாய்வுப் பிரிவுகள் குழப்பமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகதிகள் நெருக்கடியை தீர்க்க பிரான்ஸ் புது முயற்சி

த்தியதரைக் கடல் ஊடாக ஐரோப்பாவினுள் நுழைகின்ற குடியேற்றவாசிகளை பகிர்ந்து கொள்ள எட்டு ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.மேலும், பரிஸில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளுக்கு அமைவாக பிரான்கோ- ஜேர்மன் திட்டத்தின் அடிப்படையில்

28 ஜூலை, 2019

ரொரன்டோவில் தமிழ் மாணவி சாதனை

இலங்கை தமிழ் மாணவி ஒருவர், கனடாவில் ரொரன்டோ கல்விச் சபையில் 2019ஆம் ஆண்டிற்கான பரீட்சைகள் அனைத்திலும் சிறந்த பெறுபேறுகளை பெற்ற நான்கு மாணவர்களில் ஒருவராக சாதனை படைத்துள்ளார்.

முதலில் மாகாணசபை தேர்தல்-வெளியாகும் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக மாகாணசபை தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் இதற்கான அதி விசேட வர்த்தமானியை ஜனாதிபதி இன்று அல்லது நாளை வெளியிடவுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக

எழுத்து மூலமான உத்தரவாதத்தை தரும் தரப்புக்கே ஆதரவு தமிழ் மக்கள் கூட்டணி

மக்களுக்கான தீர்வு திட்டம் தொடர்பாக எழுத்து மூலமான உத்தரவாதத்தை தரும் தரப்புக்கே ஆதரவு வழங்கப்படும் என்று தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.
மேலும், இந்த உறுதிமொழியானது இந்தியாவின் மத்தியஸ்த்துடன் நடைபெறவேண்டும் என்றும் அந்தக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சஜித்தா ரணிலா! மோதல் உக்கிரம்?

கட்சியின் உறுப்பினர்களிடையே தனது கருத்தை வெளியிட்டமைக்காக தன்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு எமது கட்சியின் தலைவர் உத்தரவிட்டிருக்க மாட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளரும் சிரேஸ்ட உறுப்பினருமான அமைச்சர் கபீர் ஹாசிம்

சுவிஸ் சொலதூர்னில் நீரில் மூழ்கி யாழ் இளைஞன் பலி

$

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுவிஸ் நாட்டில் சொலதூர் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில்  வசித்துவரும் தமிழ் இளைஞர் ஒருவர்   நீரில் மூழ்கி  பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக அறியமுடிகிறது.

27 ஜூலை, 2019

படகு கவிழ்ந்தது! 150 அகதிகள் பலி!

மத்தியதரைக் கடற்பரப்பில் பயணித்துக் கொண்டிருந்து அகதிகள் படகுகள் கவிழ்ந்ததில் 150 பேருக்கு மேல் பலியாகியுள்ளனர்.
நேற்று வியாழக்கிழமை வட ஆபிரிக்கா நாடான லிபியாவின் அல் கோம்ஸ் நகரிலிருந்து இரு படகுகள் மூலம் ஐரோப்பா

பருத்தித்துறையில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்.பருத்துறை- தம்பசிட்டி பகுதியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கிணற்றிலிருந்து பெண் ஒருவா் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா்.

மாநாட்டை கூட்ட சம்பந்தனுக்கு அழைப்பு

புதிய அரசமைப்பு தொடர்பாக அனைத்து தமிழ், முஸ்லிம் சிறுபான்மை கட்சிகளின் மாநாடு ஒன்றை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், உடனடியாக கூட்ட வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குழப்பியது கூட்டமைப்பா?- மகிந்தவுக்கு பதிலடி

13ஆவது திருத்தத்திற்கு மேலாக 13 பிளஸ் என்ற நிலைப்பாட்டில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷ தற்போது அந்த விடயத்தில் 180 பாகை முரணாக மாறிவிட்டார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் அரசியல் யாப்பு ஒத்திவைப்பு வேளை விவாதத்தில்வெறிச்சோடிய நாடாளுமன்றம்:


தமிழ் தேசியக்கூட்டமைப்பினால் முன்னெடுக்கப்படும் அரசியல் யாப்பு ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் இன்றும் 25 இற்கும் குறைவான நாடாளுமன்ற உறுப்பினர்களே பங்கெடுத்திருந்தனர்.

26 ஜூலை, 2019

10 சிறுகட்சிகளுடன் 'மொட்டு' கூட்டணி

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணிக்கும் அதனுடன் கூட்டணி அமைக்கும் 10 கட்சிகளுக்கும் இடையில் இன்ற புரிந்துணர்வு ஒப்பந்தம், கையெழுத்திடப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. நாடாளுமன்றில்

சுமந்திரனே பொறுப்புக்கூற வேண்டும்! -மகிந்த ராஜபக்ச

வடக்கு கிழக்கு பிரச்சினைக்குத் தீர்வாக முன்வைக்கப்பட்ட மாகாண சபையை இறுதியில் இன்று இல்லாதொழித்திருப்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே. இதற்கு சுமந்திரன் பொறுப்புக்கூற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று

தமிழர்கள் கோத்தாவை ஆதரித்தால் என்ன?

ஜனாதிபதித் தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவிற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏன் ஆதரவு வழங்க முடியாது என முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கேள்வியெழுப்பியுள்ளார்
கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில்

பேருந்தின் கதவுகள் மூடப்பட்ட பயணிகள் மீது சோதனைக் கெடுபிடி

வவுனியாவில் புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறையினர் பயணிகள் மீது சோதனைக் கெடுபிடிகளை மேற்கொண்டுள்ளனர்.இன்று வாரிக்குட்டியார் பகுதியிலிருந்து பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து தனியார் பேருந்து ஒன்று பயணிகளை இறங்கும் முயற்சியில் ஈடுபட்டபோது

யாழிலிருந்து மோடிக்கு கடிதம் ?

இலங்கையில் இந்துக்கள் பெரும் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். அவர்களின் வாழ்விடங்களும், வழிபாட்டிடங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன. உடனடியாக தலையிட்டு இலங்கை இந்துக்களை காப்பாற்றுங்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு யாழிலுள்ள இந்து அமைப்புக்கள்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல்

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையில் கறுப்பு யூலை நினைவேந்தல் நேற்றுவியாழக்கிமை காலை அனுஷ்டிக்கப்பட்டது.வலிகாமம் கிழக்கு பிரதேச சபை வளாகத்தில் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் சபையின் உறுப்பினர்கள், செயலாளர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் ஒன்று கூடினர்.

புலிகள் மீதே முதலில் சந்தேகம்

வவுணதீவில் இரண்டு பொலிஸார் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்களையே முதலில் சந்தேகப்பட்டோம் என குற்றப் புலனாய்வு பிரிவு மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

உயர்நீதிமன்றம் செல்கிறது சுதந்திரக் கட்சி

ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் மாகாண சபையை கலைப்பதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதால் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாக மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து உயர்நீதிமன்றத்தின் கருத்தைக் கோர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முடிவுசெய்துள்ளது.

அதிரடி முடிவு - மகிந்தவுக்கு எச்சரிக்கை

பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டு, ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தனித்து தீர்மானங்களை எடுத்தால், சுதந்திர கட்சியும் அதிரடியான தீர்மானங்களை மேற்கொள்ள நேரிடும் என கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர

மகளின் செயலால் தனது வாழ்க்கையையே இழந்த சேரன்!

பிக்பாஸ் போட்டியாளர்களின் குடும்பங்களை பற்றிய தகவல்கள் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகின்றன. அந்த வகையில் இயக்குனர் சேரனின் குடும்பத்தை பற்றி பார்த்தால், சேரனின் மனைவியின் பெயர் செல்வராணி. மூத்த மகளின் பெயர் நிவேதா ப்ரியதர்ஷினி. இளைய மகளின் பெயர்

சுயநிர்ணய உரிமையை கோரும் தகுதி உள்ளது-இரா.சம்பந்தன்

சர்வதேச நாடுகளுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் சர்வதேச சமூகம் அரசியல், இராஜதந்திர, பொருளாதார ரீதியாக இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்

மாற்று வேட்பாளராக பீரிஸ், தினேஷ்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரான கோத்தபாய ராஜபக்ச, கவர்ச்சிகரமான தலைவராக மாறி வரும் நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட தயாராகுமாறு கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரான தினேஷ் குணவர்தனவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்

25 ஜூலை, 2019

வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் நளினி வெளியே வந்தார்வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் நளினி வெளியே வந்தார்


வேலூர் சிறையிலிருந்து ஒரு மாத பரோலில் நளினி வெளியே வந்தார்

அமைச்சரவை பத்திரம் என்றால் என்னவென அறியாமல் இங்கே தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா கருத்து கூறியிருப்பது கவலைக்குரியதாகும்.சட்ட்துறை புலிக்கே பாடம் புகட்டும் மனோ கணேசன்அமைச்சரவை பத்திரம் என்றால் என்னவென அறியாமல் இங்கே தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே. வி. தவராசா கருத்து கூறியிருப்பது கவலைக்குரியதாகும்.

9 வீடுகளில் தொடர்கொள்ளை - கைதானார் திருடி


கிளிநொச்சி- பளை பகுதியில் 9 வீடுகளில் தொடா்ச்சியாக கொள்ளையில் ஈடுபட்டவந்த பிரபல திருடியை இன்று பொலிஸாா் கைது செய்துள்ளனா்.

ராஜினாமா கடிதத்தை பிரிட்டன் அரசியிடம் அளி த்தார் தெரசா மேபிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் அரசி இரண்டாம் எலிசபத்திடம் இன்று ஒப்படைத்தார்.

தகவல் கொடுத்த சாரதிக்கு 50 இலட்சம்

சாய்ந்தமருது பகுதியில் சஹ்ரான் குழுவினரால் பதுக்கி வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்கள் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய வாகனச் சாரதிக்கு 50 இலட்சம் ரூபாய் பணப்பாிசை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கினார். ஜனாதிபதி செயலகத்தில் அவருக்கான

4 மணி நேரம் இரகசிய சாட்சியம்!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக, அரச புலனாய்வுத் துறையின் தலைவர், சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் நிலந்த ஜெயவர்தன நேற்று இரவு 4 மணி நேரம், நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்கியுள்ளார். அவரது சாட்சியம் இரகசியமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

11 கோடி மோசடி வழக்கில் தலையிடும் பெண் குற்றவாளி சந்தேகநபருக்காக வாதாடும் இவர்கள் கேசவன் சயந்தன், வீரகத்திப்பிள்ளை கௌதமன், ந.ஸ்ரீறிகாந்தா

யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிதி நிறுவனம் ஒன்றினால், தனிநபர் ஒருவருக்கு சுமார் 11 கோடி ரூபா முற்பணம் வழங்கி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அந்த நிறுவனத்தின் உத்தியோகத்தரான பெண் விசாரணைகளில் தலையீடு செய்கின்றனர். பிணையில்

பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி வாழ்த்து

பிரிட்டனின் புதிய பிரதமராக தெரிவு செய்யப்பட்டுள்ள கொன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பொரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நாளை காலை பரோலில் வெளியே வருகிறார் நளினி

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ஒரு மாத கால பரோலில் நாளை காலை வெளியே வருகிறார்.முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர்

ராஜினாமா கடிதத்தை பிரிட்டன் அரசியிடம் அளி த்தார் தெரசா மே!

பிரிட்டன் பிரதமர் தெரசா மே தனது ராஜினாமா கடிதத்தை அந்நாட்டின் அரசி இரண்டாம் எலிசபத்திடம் இன்று ஒப்படைத்தார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கான ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்துக்கு எம்.பி.க்களின் ஆதரவை

23 ஜூலை, 2019

இன்று  கறுப்பு  ஜூலை நாள்  .என்  ஆருயிர்  நண்பர் சுரேஷ்குமார் வெலிக்கடையில் கொல்லப்படட தினம் இன்று
வேலணை மத்திய கல்லூரியில்  என் வகுப்பு தோழனாக  இருந்த  திறமை மிக்க  நண்பன்  காசிப்பிள்ளை (ஆசிரியர் சைவப்பிரகாச வித்தியாசாலை )  சுரேஷ்குமார் (அன்பன் ) வெலிக்கடை  சிறையில் அநியாயமாக  கொல்லப்படட நாள் .என்  வாழ்வில் மறக்க முடியாத  ஆருயிர் நண்பனை  இழந்த கறுப்பு  நாள் ,அன்பன்  என்றும் உன்  நினைவோடு  பிரார்த்திக்கிறேன் 

22 ஜூலை, 2019

கன்னியா விவகாரம்!! -பௌத்ததிற்கு எதிராக மேல் நீதிமன்றம் அதிரடி உத்தரவு-

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையார் ஆலயத்தை உடைத்து பௌத்த விகாரை கட்டப்படுவதை எதிர்த்து மாவட்ட மேல் நீதிமன்றில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வழக்கு தொடர்ந்த நிலையில் முக்கிக கட்டளை வழங்கப்பட்டது.

ஒரு வாரத்துக்குள் தீர்வு - மீண்டும் வாக்குறுதி

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தின் நிதி மற்றும் எல்லை நிர்ணயப் பிரச்சினைகளுக்கு ஒரு வாரத்துக்குள் தீர்வு காண்பதாக, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்

21 ஜூலை, 2019

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல்: ஆர்.கே. செல்வமணி அமோக வெற்றி

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கம் தேர்தலில் ஆர். கே. செல்வமணி 1386 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார்.
தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு விக்ரமன் தலைவராக இருந்தார். அவரது பதவிக் காலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த

ஐ.நா மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழு கேப்பாப்புலவுக்கு விஜயம்


ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது

முதுகெலும்பில் பட்ட தோட்டா: திரும்பி இதயத்தை தாக்கியது!! -மருத்துவ அறிக்கையில் தகவல்

யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனின் முதுகுப் பக்கமாகப் பாய்ந்த துப்பாக்கி ரவை முதுகெலும்பில் பட்டுத் திரும்பமடைந்து இதயத்தைத் தாக்கிதாலேயே அவரின் உடலில் இருந்து உயிர் பிரிந்தது என்று சட்ட மருத்துவ

சிறீதரனை கோமாளியாக்க நோயாளர் காசு?

ரணில் வெறுமனே வந்துசென்ற நிகழ்ச்சியான கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் இரண்டாம் கட்ட அபிவிருத்தி பணிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வுக்கு நோயாளர்களது மருத்துவ தேவைக்கென ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த நிதி செலவிடப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது.

இலங்கையில் கடும் காற்று, மழை - உயிரிழப்பு 8ஆக அதிகரிப்பு

இலங்கையில் கடும் காற்று, மழை - உயிரிழப்பு 8ஆக அதிகரிப்புபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
இலங்கையில் நிலவும் மழை மற்றும் கடும் காற்றுடனான வானிலையினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது.

மனோகணேசன்-பிள்ளையான் கூட்டு?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை சூத்திரதாயான பிள்ளையானை மனோகணேசன் சந்தித்துள்ளமை கடுமையான விவாதங்களிற்குள்ளாகியுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்ட யாழ் இளைஞனை பார்வையிட வந்த நால்வர் கைது

சிறிலங்கா காவல் துறை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தைப் பார்வையிட யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு வருகை தந்த 4 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு அடுத்தமாதம் நியமனம்!

அடுத்த மாதம் 15 ஆயிரம் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதற்கு அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

சம்பந்தனை அழைக்கவில்லை! - மனோ

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் தாம் ஒழுங்கு செய்திருந்த கூட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சூட்டில் உயிரிழந்தவர் கொடிகாமம் இளைஞன்

மானிப்பாய் – இணுவில் வீதியில் நேற்றிரவு பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த இளைஞன், கொடிகாமத்தைச் சேர்ந்தவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள சடலத்தை, இன்று அதிகாலை 3 மணியளவில்,.

ஆவா குழு மீது துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி

யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தச் சென்ற ஆவா குழு உறுப்பினர்கள் மீது- நேற்றிரவு 8.40 மணியளவில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் உயிரிழந்தார், மற்றொருவர் படுகாயமடைந்தார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்.
சுவிசில் பிரபல வீடியோ நிறுவன தமிழருக்கு எதிராக கொலை வழக்கு ஆரம்பம்


சுவிட்சர்லாந்தின் சோலோதுர்ன் ரயில் நிலையத்தில் 2016ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பான நீதிமன்ற விசாரணை ஆரம்பமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக கொலை, கொலை முயற்சி, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில்

20 ஜூலை, 2019

சிங்களவர்கள் இல்லாத இடத்தில் பௌத்த மதம் திணிக்கப்படுகிறது – சிறிதரன்

சிங்களவர்கள் இல்லாத வடக்கு, கிழக்கில் பௌத்த மதம் திணிக்கப்படுவதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்காது – செல்வம்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்காது என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே

பிரபாவின் நிழலைக்கூட காணாதவர்கள் இப்போ அதிகம் பேசுகிறார்கள்! – மாவை

தம்பி பிரபாகரனின் நிழலைக்கூடத் தரிசிக்காதவர்களெல்லாம் இப்போது அதிகமாகப் பேசுகிறார்கள் என்று தெரிவித்த இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, என்னால் வரலாற்றை எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார்.

உலகக் கிண்ண தகுதிகாண் இரண்டாம் சுற்று: எச் குழுவில் இலங்கை அணி

2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஏஎப்சி சம்பியன்ஷிப் தொடர்களுக்கான தகுதிகாண் சுற்றின் இரண்டாம் கட்டமாக 40 அணிகள் இடம்பெறவுள்ள மோதலில் எச் குழுவில் விளையாடுவதற்கான வாய்ப்பை

இ.தொ.கா. கூட்டணியில் த.மு.கூ இ​ணையாது

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அமைத்துள்ள கூட்டணியில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ் முற்போக்குக் கூட்டணியோ அல்லது தொழிலாளர் தேசிய சங்கமோ இணையாது. அதற்கான தேவை எதுவும் எமக்கு கிடையாது என்று பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்தார்.

அனந்தி முன்னணியுடன் இணையவில்லை

தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும் வடமாகாண முன்னாள் முதலமைச்சா் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அரசியல் கூட்டு ஒன்றை உருவாக்கும்  முயற்சிகள் நடைபெற்றுவரும் நிலையில்  கூட்டுக்கான  சாத்தியப்பாடுகள் மிகக்

பண்டத்தரிப்பில் ரவுடிகளைக் கட்டிவைத்துத் தாக்குதல்

யாழ்.பண்டத்தாிப்பு பகுதியில் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடாத்த முயற்சித்த ரவுடிகளை பொதுமக்கள் மடக்கி பிடித்து அடித்து நொருக்கிய நிலையில் படுகாயமடைந்த ரவுடிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
யாழ்  வந்த தொண்டைமானின் வலையில்  விக்கி   வீழ்த்தாரா மொட்டு கட்சியுடன்  சேரவா  அல்லது கூட்டு  வைக்கவா  மொட்டுகட்சியினில் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனை இணைத்துக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட முயற்சியினை அவர் இழுத்தடித்துள்ளார் 
விக்கியார் பத்தரமுல்ல நெலும்மாவத்தையில் மொட்டு அலுவலகத்திற்கு வந்து சென்றதாக  தகவல் கசிகின்றது 
(VAR )சுவிஸ் சூப்பர்  லீக்  சுற்றிலும்  சந்தேகநிலைகளில் வீடியோ மூலம்  தீர்ப்பு  வழங்கும்  நடைமுறை  அறிமுகம் 
சுவிஸ்  சூப்பர் லீக் சுற்றுப்போட்டிகளில்  நேற்று  முதல்    நடைபெறும் போட்டிகளில்  நடுவர்களை சநதேகம்  உண்டாகும் வேளைகளில்  (VAR ) வீடியோ அசிஸ்டன்ஸ் ரெவெரி -Video Assistence Referee எனப்படும் காணொளியை  பார்த்து  தீர்ப்பு  வழங்கும்   முறை  அறிமுகப்படுத்தப்பட் டு உள்ளது  

ரயில் மோதி இரு இளைஞர்கள் பலி!

கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில் நேற்று இரவு 8.50 மணியளவில் ரயில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழந்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தபால் ரயில் மோதியே இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கிளிநொச்சி அறிவியல்நகர் பகுதியில்

பசிலுடன் பேசினாரா விக்கி?

பசில் ராஜபக்சவிற்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று, வடமாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

19 ஜூலை, 2019

சலித்துப்போனார் அமைச்சர் மனோகணேசன்?

அபிவிருத்தி, வாழ்வாதாரம், எனது அமைச்சின் அமைச்சரவை பத்திரங்கள் தவிர வடக்கு, கிழக்கின் உரிமை பிரச்சினைகளில் இனி தலையிட மாட்டேன். உரிமை கோரிக்கைகள் தொடர்பில் எனது தலையீட்டை வடக்கு, கிழக்கின் மக்கள் பிரதிநிதிகள் எழுத்து மூலமாக கோருவார்களாயின்

கருணா குழு புதைத்த சடலத்தை கண்டுபிடிக்க முயற்சி!

மட்டக்களப்பில், ஆயுதக்குழு ஓன்றினால் 2008 ஆம் ஆண்டு கடத்தி செல்லப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலத்தை பரிசோதனைக்காக தோண்டி எடுக்கும் பணிகள் நேற்று இரண்டாவது தடவையாகவும் முன்னெடுக்கப்பட்டது.

வாக்குறுதியை நிறைவேற்றினால் பேசலாம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்துவது தொடர்பாக, வழங்கிய வாக்குறுதி நிறைவேற்றப்படாமையால், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் வஜிர அபேவர்தன ஆகியோருடனான சந்திப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்துள்ளனர்.

பேச்சுக்கு சம்பந்தனை அழைக்கவில்லை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்புக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரிடமிருந்தும் அழைப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாகவே ஜனாதிபதிக்கும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும்

கீத் நொயார் வழக்கில்லலித் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

த நேஷன் பத்திரிகையின் முன்னாள் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு சட்ட விரோதமாக தடுத்து வைக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டமை, ஆயுதத்தால் தாக்கப்பட்டமை, கொலை செய்ய முயற்சிக்கப்பட்டமை தொடர்பில் ஒன்பதாவது சந்தேக நபரான இராணுவ புலனாய்வுப் பிரிவின்

மைத்திரிக்கு எதிராக குற்றப் பிரேரணை

இலங்கை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு எதிராக குற்றவியல் பிரேரணை ஒன்று ஐக்கிய தேசிய கட்சியின் பின்னாசன உறுப்பினர்களால் கொண்டுவரப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவித்துள்ளார்.

அக்கரபத்தன பகுதியில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட இருதமிழ் மாணவிகள் பலி

பாடசாலை மாணவிகளில் ஒருவா் உயிாிழந்த நிலையில் காணாமல்போன மற்றய மாணவியை தேடும் பணிகள் கொட்டும் மழைக்கும் மத்தியில் தொடா்ந்தும் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக கூறப்படுகின்றது.

முன்னணியுடன் இணைந்தார் அனந்தி ?

வடமாகாண முன்னாள் மகளீா் விவகாரங்களுக்கான அமைச்சா் அனந்தி சசிதரனுக்கும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி முக்கியஸ்த்தா்களுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.
தமிழ்தேசிய மக்கள் முன்னணிக்கும்

பலாலியில் இருந்து இந்தியாவின் நான்கு நகரங்களுக்கு விமான சேவை

யாழ்.பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவின் 4 நகரங்களுக்கு விமான சேவையை மிக விரைவில் நடாத்துவதற்கு இலங்கை அரசாங்கம் திட்டமிட்டிருக்கின்றது.

18 ஜூலை, 2019

5ஜி தொடர்பாக எந்த உடன்பாடும் இல்லை-யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட்

5ஜி அலைவரிசை தொடர்பாக எந்தவொரு ஒப்பந்தத்தையும் மேற்கொள்ளவில்லையென யாழ். மாநகர மேயர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார். யாழ். மாநகரசபை முதல்வரால் வெளிப்படைத்தன்மையற்ற விதமாக நடைமுறைப்படுத்தப்படும்

ஜனாதிபதி சந்திப்பை புறக்கணித்த கூட்டமைப்பு

கன்னியா பிள்ளையார் கோவில் விவகாரம் குறித்து ஜனாதிபதியுடன் இன்று பேச்சு நடத்த தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. அடுத்த வாரம் ஜனாதிபதியை தனிப்பட்ட

ஆயுள் தண்டனைக் கைதி சரவண பவன் உரிமையாளர் மரணம்

சைவ உணவு விடுதிகளில் புகழ்பெற்ற சரவண பவன் உணவகத்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கிளைகள் உள்ளது.
இதன் உரிமையாளர் ராஜகோபால். இவரது நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணிபுரிந்தவரின் மகள் ஜீவஜோதியைத்

வைகோவின் தண்டனை நிறுத்தி வைப்பு! சுப்பரமணியம்சுவாமி கொந்தளிப்பு.

தேசத்துரோக வழக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிற்கு சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஓர் ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உச்ச நீதிமன்றம் திறுத்திவைத்துள்ளது.

ரணிலின் காலத்தைக் கடத்தும் கதை- மாவைஇரண்டு ஆண்டுகளில் அரசியல் தீர்வை பெற்றுத்தருவோம் என்பது காலத்தை கடத்தும் கதையாகவே தெரிகின்றது. வாக்குறுதிக்கு அமைய இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசா

நந்திக்கொடிகளை அறுத்து அடாவடித்தனம்!

$முல்லைத்தீவு - பழைய செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலயத்தில், அடாத்தாக விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்கு, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்த நந்திக்கொடிகளை அறுத்து எறிந்துள்ளார் என குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

மரணதண்டனையை ஒழிக்கும் வர்த்தமானி

மரண தண்டனையை ஒழிக்கும் தனிநபர் பிரேரணை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.குறித்த அறிவிப்பு இன்று அரசாங்க அச்சுத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

17 ஜூலை, 2019

கோத்தபயா தப்பிக்க விடக் கூடாது என்ற கோரிக்கை மனுவில் வைகோவின் முதல் கையெழுத்து!

சிறீலங்கா புலனாய்வு படையினரால் படுகொலை செய்யப்பட்ட உடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள்

சர்வேதேச அளவில் சாதனை படைத்த ஈழத்துப் பெண்


வட தமிழீழத்தை  தர்ஜினி சிவலிங்கம் இம்முறை உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத்தில் அதிக

ad

ad