புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 செப்., 2021

நள்ளிரவில் அமெரிக்காவுக்கு தாரை வார்க்கப்பட்ட மின் நிலையம்!

www.pungudutivuswiss.com


முறையான விலைமனுகோரல் இல்லாமல் கெரவலபிடிய மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும்,  மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்  அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

முறையான விலைமனுகோரல் இல்லாமல் கெரவலபிடிய மின்னுற்பத்தி நிலையத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தம் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு கைச்சாத்திடப்பட்டுள்ளதாகவும், இதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும், மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இன்று வாக்களிப்பு - பிந்திய நிலவரம் என்ன?

www.pungudutivuswiss.com


கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. நேர மாற்றங்களுக்கு அமைய இன்று காலை 7 மணிக்கும், 9.30 மணிக்கும் இடையில் ஆரம்பமாகும் தேர்தல்வாக்களிப்பு, இரவு 7 மணி தொடக்கம்  இரவு 9.30 மணி அளவில் நிறைவடையும். வாக்களிப்பு  12 மணித்தியாலங்களுக்கு இடம்பெறும்.

கனேடிய நாடாளுமன்றத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. நேர மாற்றங்களுக்கு அமைய இன்று காலை 7 மணிக்கும், 9.30 மணிக்கும் இடையில் ஆரம்பமாகும் தேர்தல்வாக்களிப்பு, இரவு 7 மணி தொடக்கம் இரவு 9.30 மணி அளவில் நிறைவடையும். வாக்களிப்பு 12 மணித்தியாலங்களுக்கு இடம்பெறும்.

பூம்புகார் கொலையில் திருப்பம் - மனைவியுடன் சேர்ந்து கணவனை தீர்த்துக் கட்டியவர் சிக்கினார்!

www.pungudutivuswiss.com$


யாழ்ப்பாணம், அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில்  மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணம், அரியாலை பூம்புகார் பகுதியில் நேற்றுமுன்தினமிரவு இடம்பெற்ற குடும்பத்தலைவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் பொறிமுறையை ஏற்க முடியாது!

www.pungudutivuswiss.com



 மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறையை  இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை உள்ளக பொறிமுறைகள் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும். இந்த  நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

மனித உரிமைகளுக்கான ஆணையாளர் அலுவலகம் நிறுவ முயற்சிக்கின்ற தற்காலிகமான பொறிமுறையை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். நல்லிணக்கம் தொடர்பில் இலங்கை உள்ளக பொறிமுறைகள் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. இது ஒரு தொடர்ச்சியான செயன்முறையாகும். இந்த நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் பணிகளை வெளிப்புற அமைப்புக்களால் மாற்றவோ அல்லது கையகப்படுத்தவோ முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்

கிங் மேக்கராகும் சிங்! - பரபரப்பான இறுதி நேர கருத்துக்கணிப்பு.





கனடாவில் நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சிக்கு 150 ஆசனங்களே கிடைக்கும் என்று சிபிசி  கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சியமைப்பதற்கு தேவையான 170 ஆசனங்களை விட, 20 ஆசனங்கள் குறைவாகும்.  கடந்த தேர்தலை விட 7 ஆசனங்கள் குறைவாக, இம்முறை லிபரல் கட்சிக்கு கிடைக்கும் என்றும் சிபிசி  கருத்துக் கணிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.


கனடாவில் நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில், ஆளும் லிபரல் கட்சிக்கு 150 ஆசனங்களே கிடைக்கும் என்று சிபிசி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆட்சியமைப்பதற்கு தேவையான 170 ஆசனங்களை விட, 20 ஆசனங்கள் குறைவாகும். கடந்த தேர்தலை விட 7 ஆசனங்கள் குறைவாக, இம்முறை லிபரல் கட்சிக்கு கிடைக்கும் என்றும் சிபிசி கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மருத்துவபீட மாணவன் மரணமடைவதற்கு முன்னரே தகவல் வெளியானது எப்படி?

www.pungudutivuswiss.com


2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் உயிரிழந்தமை தொடர்பில், முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது.

2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழக மருத்துவபீட மாணவன் உயிரிழந்தமை தொடர்பில், முன்கூட்டியே தகவல் வெளியாகியமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு, பொலிஸ் மா அதிபருக்கு பிரதமர் அலுவலகம் பணிப்புரை விடுத்துள்ளது

ad

ad