புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜன., 2013


விஸ்வரூபத்துக்கு நஷ்டம் ஏற்படுத்திய தமிழக அரசு ரூ.100 கோடி கோர்ட் டிப்பாசிட் செய்ய கோரிக்கைவிஸ்வரூபம் தீர்ப்பு தள்ளிப் போகிறது..இரவு 10 மணிக்கு அறிவிக்கிறார் நீதிபதி

தற்போது நடைபெறும் விஸ்வரூபம் விசாரணையில், கமல் தரப்பு வக்கீல், “விஸ்வரூபம் படத்தை தடைசெய்த காரணத்தால், திருட்டு வீடியோ வெளியாகி வசூல் பாதிக்கப்பட போகிறது. இதனால், படத்தை தடைசெய்த தமிழக அரசு இழப்பீடா

விஸ்வரூபம்’ படத்துக்கான தடையை நீக்கக் கோரும் வழக்கில் இரவு 8 மணிக்கு தீர்ப்பு
விஸ்வரூபம்’ படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை நீக்கக் கோரி கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இன்று இரவு 8 மணிக்குத் தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற
 ஐகோர்ட், மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது.
சென்னையில் ஏழை முதல் பணக்காரர்கள் வரை பொழுதுபோக்கிற்கான முக்கிய இடமாக மெரினா கடற்கரை உள்ளது. விடுமுறை நாட்களில் அங்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் மெரினாவில்

விஸ்வரூபம் சான்றிதழில் முறைகேடு! ஐகோர்ட்டில் தமிழக அரசு வக்கீல் வாதம்!

 கமலஹாசன் நடித்துள்ள விஸ்வரூபம் பட தடையை நீக்கக் கோரும் வழக்கு விசாரணை சென்னை ஐகோர்ட்டில் துவங்கியது. ஐகோர்ட் நீதிபதி வெங்கட்ராமன் வழக்கறிஞர்களிடம்விசாரணை மேற்கொண்டார்.

காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிட முடியாது: சுப்ரீம் கோர்ட்
காவிரியில் தண்ணீர் திறந்து விட, கர்நாடகாவுக்கு உத்தரவிட முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்து விட்டது.

அமெரிக்காவின் பிரேரணையை எதிர்கொள்ள தயார்: இலங்கை அதிரடி அறிவிப்பு

இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டுவர இருக்கும் பிரேரணையை எதிர்கொள்ளத் தயார் என இலங்கை அறிவித்துள்ளது. 

முத்துக்குமார் உள்ளிட்ட ஈழத் தமிழர்களுக்காக உயிர் நீத்த  22 ஈகியர்கள் நினைவாக 22 அடி தூண் அமைத்து  ஈகி முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது (படங்கள்)
ஈழத் தமிழர்களின் உயிர் காக்க தன் இன்னுயிர் ஈந்த முத்துக் குமாருக்கு , தமிழர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி தங்கள் வீரவணக்கத்தை செலுத்தினர்.

எனக்கு பிரதி அமைச்சு பதவி வழங்கி ஜனாதிபதி முஸ்லிம் சமூகத்தை கௌரவித்துவிட்டார்!

புதிதாக அமைச்சரவையில் ஏற்பட்ட மாற்றத்திற்கமைய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சினை முஸ்லிம் பிரதிநிதி ஒருவருக்கும் வழங்கியமையானது இந்நாட்டின் ஜனாதிபதி சிறுபான்மை சமூகத்திற்கு பெற்றுத்தந்த

இலங்கை தூதரகத்தை சுற்றிவளைத்து நாளை சென்னையில் முற்றுகை போராட்டம்

இலங்கையில் தொடர்ந்து நடைபெற்று வரும் போர்க்குற்றங்கள்-இனப்படுகொலையை கண்டித்து, போர்க்குற்றங்கள்-இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர் அமைப்பு சார்பில் நாளை 30-ந் திகதி சென்னையில்

அகதிகள் படகு நடுக்கடலில் விபத்து: இருவர் பலி ஒருவர் மாயம்

சட்டவிரோதமாக ஆஸி. சென்ற இலங்கை அகதிகள் படகு, இந்தோனேசியாவின் ஜாவா கடற்பகுதியில் கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்

 சுமார் 2ஆயிரம் இலங்கையர்கள் சுவிட்சர்லாந்தில் உள்ளனர். இவர்களில் சிலர் சூரிச் விமான நிலையத்தில் உள்ள தடுப்பு முகாமில் ( சிறையில்) உள்ளனர். கடந்த ஆண்டு சுமார் 1800இலங்கையர்கள் முகவர்கள் மூலம் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்ச விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். கடந்த ஆண்டு சுமார் 1800இலங்கையர்கள் முகவர்கள் மூலம் சுவிட்சர்லாந்திற்கு வந்து அகதி தஞ்ச விண்ணப்பத்தை சமர்ப்பித்திருந்தனர். வாரத்திற்கு இரண்டு மூன்று பேர் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் விசா வழங்கி அனுப்பி வைக்கிறது.
இலங்கையில் முக்கியமாக யாழ்ப்பாண தமிழர்களின் பொருளாதாரம் ஒரு காலத்தில் மணிஓடர் பொருளாதாரம் என சொல்வார்கள். கொழும்பிலும் வெளிமாவட்டங்களிலும் அரச உத்தியோகத்தர்களாக இருக்கும் தமது குடும்ப தலைவர்கள் மற்றும் பிள்ளைகள் அனுப்பும் மணிஓடரை நம்பி வாழும் நிலை காணப்பட்டது.

பிரேசில் இரவு விடுதி தீ விபத்து: பலி 245ஆக அதிகரிப்பு

பிரேசில் நாட்டில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 245 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 159 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் 2 அரசு பொறியியல், 10 பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள்: ஜெயலலிதா உத்தரவு


மாலி நாட்டு ஏர் போட் தீவிரவாதிகள் கைகளில் !மாலி நாட்டில் தரையிறங்கி உள்ள பிரான்ஸ் ராணுவம், தீவிரவாத அமைப்பினரின் கட்டுப்பாட்டில் இருந்த விமான நிலையம் ஒன்றை கைப்பற்றியுள்ளது.
 காவோ நகருக்கு அருகேயிருந்த இந்த விமான நிலையத்தை முன்பு கைப்பற்றியிருந்த, அல்-காய்தா ஆதரவு தீவிரவாத அமைப்பினர், அதை தமது ராணுவ முகாமாக பயன்படுத்தி வந்தனர்.

மாலி நாட்டின் வட பகுதியில் உள்ள காவோ, கிடல், திம்புக்து ஆகிய மூன்று நகரங்களுமே, தீவிரவாத அமைப்பினரின் பலம்வாய்ந்த பகுதிகளாக உள்ளன. தற்போது கைப்பற்றப்பட்டுள்ள விமான நிலையம், காவோ நகருக்கு மிக அருகில் உள்ளது. எனவே, அடுத்த கட்டமாக பிரான்ஸ் ராணுவம், காலோ நகருக்குள் நுழைய முயற்சிக்கும் என எதிர்பார்க்கலாம்.

தற்போது, இந்த விமான நிலையத்தில் இருந்து, காவோ நகரை நோக்கிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது, பிரான்ஸ் ராணுவம். பிரான்ஸ் ராணுவத்தின் 600 வீரர்கள் அடங்கிய மற்றொரு படைப்பிரிவு, திம்புக்து நகரை நோக்கி செல்கிறது என்றும் தெரியவருகிறது. அந்த நகரில் உள்ள அனைத்து வெளித் தொடர்புகளும் வெட்டப்பட்டுள்ளன. வீதிகளும் அடைக்கப்பட்டுள்ளன. செல்போன் டவர்கள், செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன.

ராஜீவ் காந்தி கொலையில் சந்தேக நபராக் சுப்ரமணிய சுவாமி !
தூக்குக் கயிற்றில் நிஜம் என்னும் புத்தம் தற்போது லண்டனில் வெளியாகியுள்ளது. மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான திரு. திருச்சி வேலுசாமி அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். ராஜீவ் கொலையில் அவர் தெரிந்துவைத்திருந்த பல விடையங்களை மனம் திறந்து எழுதியுள்ளார். இதில் 1991ம் ஆண்டு மே மாதம் 21ம் திகதி , இரவு 10.15 க்கு குண்டு வெடித்ததாகவும், அதில்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இலங்கை அணி 3 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது.

சுவிட்சர்லாந்து வாழ் புங்குடுதீவு ஏழாம் ,எட்டாம் வட்டார மக்களின் 

                                         விருந்துபசார வைபவம்


காலம்;- 03.02.2013 ஞாயிறு மாலை 3 மணி
இடம்  :- .Mädergutstr, 3018 Bern .kleefeld Zentrum (நிமலன் வீட்டுக்கு அருகில்)


எமது மடத்துவெளி ஊரதீவு மக்களை ஒருங்கிணைத்து உறவாடி நட்பார்ந்த நல்வழியில் நமக்குள்ளே அன்பால் உறவால் ஊர்ப்பற்றால் கட்டுண்டு கிடக்க வழி சமைப்போம் . ஏழாம் , எட்டாம் வட்டார  மடத்துவெளி ஊரதீவு மக்கள் யாராகிலும் இந்த வைபவத்தில் குடும்பமாக கலந்து சிறப்பிக்கலாம் .  முடிந்தவரை நாம்  தொலைபேசி ஊடாகவும் அழைப்பை உண்டுபண்ணுவோம்,தொடர்பு கிடைக்காதவர்களும் ஊர் மீதான பற்றை மனதில்  எண்ணி நீங்களாகவே  இந்த அழைப்பை ஏற்று  கலந்து சிறப்பிக்குமாறு  கேட்டுக் கொள்கிறோம் . எமக்குள்ளே எமது கிராமங்களின் பண்பை உறவை பற்றை வளர்த்தெடுப்பதற்கான ஒரு பாரிய முயற்சியே இது.
உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும்  பங்கு கொள்ளுமாறு அன்போடு அழைக்கின்றோம் . தேநீர் ,சிற்றுண்டிகள், மாலை உணவு, குளிர்பானங்கள் வழங்கப்படும்


முக்கிய குறிப்பு ;- இந்த வைபவத்தில் எவ்விதமான நிதி சேகரிப்போ அன்றி அன்பளிப்பு சம்பந்தமான அறிவிப்புக்களோ இருக்க மாட்டாது.

                                                                             தங்கள் வரவை நாடும் அமைப்பாளர்கள்

தொடர்புகள்

                           இ.ரவீந்திரன்                         079 218 70 75
                           சு.சண்முகநாதன்                044  451 80 22
                           நா.ஜெயக்குமார் (பாபு )     031 862 18 03 

ad

ad