புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 ஜூலை, 2013


நடிகை கனகா தவறிவிட்டதாக வதந்தி :
கனகாவே நேரில் பரபரப்பு பேட்டி
 

பழம்பெரும் நடிகை தேவிகா கடந்த  2000ம் ஆண்டில் மறைந்தபிறகு  அவரது மகளும், பிரபல நடிகையுமான கனகா தனித்து விடப்பட்டார்.  படவாய்ப்புகளும் இல்லாத நிலையில் அவரைப்பற்றிய செய்தியே இல்லாமல் இருந்தது.  


மனிதர்களை வெறுக்கிறேன்;
35 பூனைகள், நாய், கோழிகளுடன் வாழ்கிறேன் :
நடிகை கனகா உருக்கமான பேட்டி
 


பிரபல நடிகை கனகா புற்றுயோயால் அவதிப்படுவதாகவும் கேரளாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச் சை பெற்றுவருவதாகவும் முதலில் செய்திகள் வந்தன.  இன்று அவர் சிகிச்சைபலனின்றி மரணம் அடைந்து விட்டதாக செய்திகள் வெளிவந்தன.  இந்நிலையுல் நடிகை கனகாவே தான் நலமுடன் இருப்பதாக செய்தி யாளர்களுக்கு
பிரபல நடிகை கனகா இன்று காலமானார்?: நான் உயிருடன் இருக்கிறேன்- கனகாகனடா மரணமடையவில்லை- அவரது சித்தப்பா தகவல்
பிரபல தமிழ் நடிகை கனகா(40) இன்று செவ்வாய்க்கிழமை காலமானார் என அனைத்து இந்திய ஊடகங்களிலும் செய்தி வெளிவந்தபோதிலும், கனகா உயிருடன் இருக்கின்றார் என அவரது சித்தப்பா தகவல் வெளியிட்டுள்ளார்.
மும்பையில் விபசாரம் செய்த இந்தி நடிகைகள் கைது

மும்பையில் விபசாரம் செய்த இந்தி மற்றும் போஜ்பூரி நடிகைகள் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவை சேர்ந்த தர்சனாந்த் பரமலிங்கம் வேட்பாளர் பாடியலில் இருந்து கடைசி நேரத்தில் சில உள்வீட்டு வஞ்சகர்களின் சதியால் நீக்கபட்டார் -

தியாகம்,அறிவு,கல்வி,மக்களின் அபிமானம்,சேவை மனப்பான்மை.தூய்மை என் அத்தனை தகுதிகள் இருந்தும் தர்சனாந்த் ஏன் நீக்கப் பட்டார்
இது பற்றிய முழுமையான விபரங்களை சேகரித்து பகிரங்கப் படுத்த உள்ளோம் .செய்திகள் தகவலகள் உள்ளவர்கள் எம்மோடு  தொடர்பு கொள்ளுங்கள் அல்லது அனுப்பி வையுங்கள் .தாயக மற்றும் புலம் பெயர் தீவுப்பகுதி மக்களே,புங்குடுதீவு தீவுப்பகுதி அமைப்புக்களே  கொஞ்சம் சிந்திப்போம் வாருங்கள் .இனி வரும் காலங்களிலும் இது போன்ற அல்லது இதற்கு முன்னரும் போன்று தவறுகள் நடக்கா விஒடாமல் தட்டி கேட்போம் உரிமையோடு pungudutivu1@gmail.com

29 ஜூலை, 2013

வடக்கில் முஸ்லிம் கூட்டணி த.தே.கூட்டமைப்புடன் இணைந்து போட்டி
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தலைமையிலான முஸ்லிம் கூட்டணி மன்னார் மாவட்டத்தில் போட்டியிடுகிறது.
புங்குடுதீவு இளைஞன் கனடாவில் விபத்தில் மரணம் 
 புங்குடுதீவு 11 ஆம் வட்டாரத்தை சேர்ந்த கனகலிங்கம் கபில்தேவ் என்ற 28 வயதான இளைஞன் கடந்த வெள்ளியன்று கனடா ஸ்கார்பரோ வீதியொன்றில் பார ஊர்தியினால் மோதுண்டு பலியாகி உள்ளார் 
கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் வேட்புமனு த.தே. கூட்டமைப்பு தாக்கல்
வடமாகாண சபைக்கான கிளிநொச்சி மாவட்டத்திற்கான தேர்தல் வேட்பு மனுவினை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சற்று முன்னர் தாக்கல் செய்துள்ளனர்.
யாழில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்புமனுத் தாக்கல்: வேட்பாளர் பட்டியல் விபரம் இணைப்பு
வட மாகாணசபைத் தேர்தலுக்காக யாழ் மாவட்டத்தில் தேசியக் கூட்டமைப்பு இன்று பகல் 12.30 மணியளவில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள்  யாழ். கச்சேரிக்கு சென்று  வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளது.
கூட்டமைப்பு இன்று வேட்புமனுத் தாக்கல்: வேட்பாளர் பட்டியல் விபரம் இணைப்பு
வடமாகாண சபைத் தேர்தலில் ஐந்து மாவட்டங்களிலும் போட்டியிடும் வேட்பாளர் விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
78 பேரின் உயிரை காவு வாங்கிய பேஸ்புக்? ஓட்டுனரின் கவனக்குறைவே காரணம் (வீடியோ இணைப்பு)
ஸ்பெயினில் 78 பேரின் உயிரை காவு வாங்கிய ரயில் விபத்திற்கு டிரைவர் பேஸ்புக்கில் அப்டேட் செய்தபடி ரயிலை ஓட்டியதே காரணம் என தெரியவந்துள்ளது.
நெல்லையில் சிக்கிய 6 பேர் ஆடிட்டர் ரமேஷ் கொலையில் தொடர்புடையவர்களா?
பாரதீய ஜனதா கட்சி மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கடந்த 19-ந் தேதி சேலத்தில் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். குற்றவாளிகளை பிடிக்க
40ஆயிரம் பாஜகவினர் பங்கேற்ற ஜூலை போராட்டம் - குமரி பரபரப்பு
நாடு முழுவதும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை கேட்டு குமரி மாவட்ட பாஜக இளைஞர் அணி சார்பில் இன்று மாலை 5 மணிக்கு
நளினி நாளை வேலூர் கோர்ட்டில் ஆஜராகிறார்
 ராஜீவ்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆயுள் தண்டனை கைதி நளினி நாளை வேலூர் சிறையில் போலீசாரால் ஆஜர் படுத்த உள்ளார். 
கூட்டமைப்பின் சார்பில் வடக்கு தேர்தல் களத்தில் பெண் வேட்பாளர்கள் மூவர்!
எதிர்வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள்
கூட்டமைப்பின் சார்பில் எழிலனின் மனைவி உள்ளிட்ட பெண் வேட்பாளர்கள் மூவர்
நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இம்மூவரில் இருவர் இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பின்

28 ஜூலை, 2013

புளொட் சார்பில் கூட்டமைப்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்- 
தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) சார்பில் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விபரம் வருமாறு, யாழ்ப்பாண மாவட்டம் புளொட் தலைவர் திரு.தர்மலிங்கம் சித்தார்த்தன்,

இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டுச் சென்ற படகு விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் இந்தோனேசியாவைச் சேர்ந்த நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையர் உட்பட சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட்டு சென்ற படகு இம்மாதம் 23 ஆம் திகதியன்று ஜாவாத் தீவு

மத்திய மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிடவுள்ளதாக கொழும்பு மாநாகர சபையின் முன்னாள் பிரதி மேயர் அசாத் சாலி தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற அதிகாரத்தைப் பகிர்ந்து நாட்டைக் கட்டியெழுப்பும் அமைப்பின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வட மாகாண சபை தேர்தலுக்கான வேட்புமனுக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாளை திங்கட்கிழமை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய ஐந்து மாவட்டங்களினதும் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்படும்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர் பட்டியலில், விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல்துறை ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் இடம்பெறவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் யாழ். மாவட்டத்தில் போட்டியிடவுள்ள 7 பேரின் விபரங்களை கட்சியின் யாழ். செயலகம் நேற்று வெளியிட்டது.
ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு :
 குற்றவாளிகளை நெருங்கியது சிறப்பு புலனாய்வுக்குழு 
பாரதீய ஜனதா பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகிறார்கள்.  சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. நரேந்திர பால்சிங், கூடுதல்
ரசிகர்கள் அதிர்ச்சி :அனாதைகள் ஆஸ்பத்திரியில்
 சிகிச்சை பெறுகிறார் நடிகை கனகா!
 

 நடிகை தேவிகாவின் மகள் நடிகை கனகா.  1989–ம் ஆண்டு நடிகர் ராமராஜனுடன் இவர் நடித்த ‘கரகாட்ட க்காரன்’ படம் த கனகாவை திரையுலகின் உச்சானி கொம்புக்கு கொண்டு

27 ஜூலை, 2013

அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் நீக்கம்! பின்னணி என்ன?
அரியலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமானகே.கே.சின்னப்பன், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ.,
2வது ஒருநாள் போட்டி: இந்திய அணி வெற்றி
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஹராரேவில் நடைபெற்ற போட்டியில் 58 ரன்கள் வித்தியாசத்தில்
வடமாகாண சபைத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சேர்க்கப்பட வேண்டிய விடயங்கள்!- இலங்கைத் தமிழரசுக் கட்சி
நடைபெற இருக்கும்  வட மாகாணசபைத் தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனத்தில் கீழ் வரும் சிபார்சுகளை முக்கியத்துவம் கொடுத்துச் சேர்க்குமாறு கிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சிக் கிளை
பிரித்தானிய நாடாளுமன்ற குழுவுடனான சந்திப்பை ரத்துச்செய்த கோட்டாபா

பிரித்தானிய நாடாளுமன்றக்குழுவுடன் இடம்பெறவிருந்த சந்திப்பை இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ரத்து செய்துள்ளார்.
நவநீதம்பிள்ளையின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி, கிழக்கு கடற்படை தளபதியுடன் சந்திப்பு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் சிரேஸ்ட பாதுகாப்பு அதிகாரி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்டு பேச்சுக்களை நடத்தியுள்ளார் 
கொழும்பில் தமிழ்ப் பெண்களின் நடையை நாடாளுமன்றில் வர்ணித்த அஸ்வர் எம்.பி
கொழும்பில் அழகான தமிழ்ப் பெண்கள் ஒய்யார நடை போட்டுச் செல்வது கண்கொள்ளாக் காட்சியாகும் என்று ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்துள்ளார்.
இரா.சம்பந்தன், விக்னேஸ்வரன் ஆகியோர் நாளை யாழ். விஜயம்! திங்கள் வேட்புமனு தாக்கல் செய்வர்
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சமபந்தன், வடமாகாண சபையின் முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் நாளை சனிக்கிழமை யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளனர்.

இலங்கைக்கான புதிய இந்தியத் தூதுவர் வை.கே.சின்ஹா, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த சந்திப்பு இன்று வெள்ளிக்கிழமை நண்பகல் கொழும்பு இந்திய தூதரகத்தில் நடைபெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஆசிரியர் ஒருவரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தில் கடந்த 22 ஆம் திகதி பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் கந்தர் மடத்தில் வசிக்கும் 36 வயதுடைய ஆசிரியரே பொலிசாரால் கைதுசெய்யப்பட்டவராவார்.

26 ஜூலை, 2013

நாட்டுமக்களையும் அரசியல்வாதிகளையும் ஏமாற்றி தந்திரமான அரசியலில் ஈடுபட்டுவரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வலையில் தற்போது தயாசிறி விழுந்துவிட்டார் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க தெரிவித்தார்.

ராஜகிரியவில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வவுனியா, கூமாங்குளத்தைச் சேர்ந்த மாணவியொருவர் நேற்று தனது வீட்டு கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர் தெரிவிக்கையில்,

வவுனியா நகரில் உள்ள பிரபல வர்த்தக நிலையமொன்றில் சுவர்களை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் என்பவற்றை கொள்ளையடித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக, வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருக்கின்றது.
செவ்வாய்க்கிழமை இரவு பத்து மணியளவில் சுவரை உடைத்துக் கொண்டு சென்ற கொள்ளையர்கள் அதிகாலை 3 மணிவரையில் உள்ளே இருந்ததாக பொலிசாரின் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்தச்

சிறுபான்மை தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிப்பது, நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பான இந்தியாவின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை என இந்திய பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு அனுப்பியுள்ள பதில் கடிதத்திலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

25 ஜூலை, 2013

புங்குடுதீவை சேர்ந்த யாழ் பல்கலை கழக ஒன்றிய செயலாளரான கடந்த வருட இறுதியில் இராணுவத்தினால்கைதுச் செய்யப்பட்டு  விடுதலையான  மாணவன் பரமலிங்கம் தர்சனானந்  வட மாகான சபை தேர்தலில் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவுள்ளார்  .முதற்கண் இவரை  வாழ்த்தி வரவேற்போம் இவரது வெற்றிக்காக உழைப்போம் நண்பர்களே              ""ஹலோ தலைவரே... முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வில் 1 லட்சத்து 59 ஆயிரம் பேர் பங்கேற்று எழுதியிருக்காங்க.''…


          காவியக் கவிஞன் வாலியின் திடீர் மரணம், இலக்கிய உலகிற்கும் திரை இசை உலகிற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பையும் வலியையும் தந்திருக்கிறது. அதேசமயம், தமிழறி ஞர்கள்,
இலங்கை தமிழர் விவகாரம் : ஜெயலலிதாவுக்கு மன்மோகன்சிங் பதில் கடிதம்
இலங்கை தமிழர் விவகாரத்தில் தமிழர்களின் நலனைக் காக்க மத்திய அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பிரதமர் எழுதியுள்ள பதில்
ஸ்பெயினில் ரயில் விபத்து : பலி எண்ணிக்கை 77 ஆக உயர்வு
வடக்கு ஸ்பெயினில் உள்ள கலிசியாவில் ரெயி

23 ஜூலை, 2013

தமிழீழ உணர்வாளர் 'ஈழத்துணை திரு.அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு
தாய்த்தமிழகமாம் திண்டுக்கல் மாவட்டத்தில் M.R.F நகரில் வசிக்கும் தமிழீழ உணர்வாளர் 'ஈழத்துணை திரு.அழகிரிசாமி அவர்களின் இறுதி நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது. அவரது உடலுக்கு உலகதமிழர் பேரமைப்பின் கொடி அணிவித்து பொதுமக்களின் இறுதி வணக்கத்திற்காக வைக்கப்பட்டிருந்தது.
யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் நிசாந்தன் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை
தரித்து நின்ற வாகனத்தை அடித்து சேதப்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவக இளைஞர் அணித் தலைவரும் மாநாகர சபையின் முன்னாள் உறுப்பினருமான நிசாந்தன் சற்றுமுன் யாழ். நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
யாழில் பேரூந்துக்காக காத்து நின்ற இளம் பெண்ணை முத்தமிட்ட முதியவர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு
யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இளம் பெண்ணிடம் அங்க சேட்டையில் ஈடுபட்டதுடன் அப்பெண்ணை முத்தமிட்ட முதியவரை இங்கு கூடியிருந்தவர்கள் அடி உதை கொடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள், ஆசனப் பங்கீடுகள் விபரம்!
வட மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர்கள் மற்றும் ஆசனப் பங்கீடுகள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளுக்கு இடையே இணக்கம் காணப்பட்டுள்ளது.
கொழும்பில் மினி சூறாவளி: பல வீடுகள், வாகனங்கள் சேதம் - ஒருவர் பலி
இலங்கையின் தலைநகர் கொழும்பில் இன்று காலை வீசிய கடும் காற்றினால் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
டி சேரம், தேசிய வைத்தியசாலை, கிருலப்பனை மற்றும் தெமடகொட ஆகிய பிரதேசங்களிலேயே இந்த சேதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மின்சார தடையும் ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

நடிகை மஞ்சுளாவுக்கு திரையுலகம் அஞ்சலி
 


நடிகை மஞ்சுளா(வயது 60)  சிகிச்சை பலனின்றி சென்னையில் இன்று(23.7.2013) மரணம் அடைந்தார்.
வடக்குத் தேர்தல் வர­லாற்று திருப்­பு­முனை வெற்­றி­யாக அமைய வேண்டும் : சம்பந்தன் எம்.பி. 
news
 சர்வதேசத்தின் நிலைப்பாட்டை அறிந்தே தமிழ்த் தேசியக் கூட்ட­மைப்பின் வட­மா­காண சபை முத­ல­மைச்சர் வேட்­பாளர் தெரிவு இடம்­பெற்­றது. தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்கே சர்­வ­தே­சத்தின் ஆத­ரவும் மக்­களின் அங்­கீ­கா­ரமும் கிடைத்துள்­ளன. எனவே, எந்த விலை கொடுத்­தா­வது கூட்­ட­மைப்பை பாது­காக்க வேண்­டி­யது எமது கட­மை­யாகும். வட மாகாண சபைத் தேர்தல் வர­லாற்று திருப்­பு­முனை வெற்­றி­யாக அமைய வேண்டும்.

உலக வில்வித்தைப் போட்டி : வெண்கலம் வென்றது இந்தியா

உலக கோப்பை வில்வித்தை போட்டி (நிலை 3) கொலம்பியாவில் உள்ள மெடெலின் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்கள் அணிக்கான காம்பவுண்ட் பிரிவில் நடந்த வெண்கலப்பதக்கத்திற்கான

ஒன்ரோறியோ மாகாண அரசியலில் முக்கிய இடத்தினைப் பிடிக்கப் போகும் கென் கிருபா

எதிர் வரும் ஆகஸ்ட் 1 ஆம் திகதி நடைபெறவுள்ள ஒன்ரோறியோ மாகாண இடைதேர்தலில் வெற்றி யாருக்கு என்ற கருத்துக் கணிப்புக்களும் ,
பிரான்சில் முஸ்லிம்கள் போராட்டம்: 20 கார்கள் எரிந்து சாம்பலானது

பிரான்ஸில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை கண்டித்து தலைநகர் பாரிசில் முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடக்கு தேர்தலில் ஈபிடிபியின் சார்பில் 9 பேர் போட்டி
எதிர்வரும் வடக்கு மாகாண சபைத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தோழமைக் கட்சியான ஈபிடிபிக்கு 10 வேட்பாளர்களை போட்டியில் நிறுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வடமாகாண சபைத் தேர்தல்: யாழில் அரசுக்கு ஆதரவு தேடும் இராணுவத்தினர்
வடமாகாண சபைத் தேர்தல் களம் தற்போது யாழ்.குடநாட்டில் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
வடமாகாண முஸ்லிம் மக்கள் தொடர்பாக த.தே.கூட்டமைபின் நிலைப்பாடு என்ன?: நல்லாட்சிக்கான மக்கள் அமைப்புவடமாகாண முஸ்லிம் மக்களின் நிலைப்பாடு தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெளிவாக அறிவிக்க வேண்டுமென நல்லாட்சிக்கான மக்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்க பிரதிநிதிகள் குழுவொன்று இன்று, இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுபினருமான மாவை சேனாதிராஜாவை யாழ்ப்பானத்தில் சந்தித்துள்ளது.
யாழில் பாடசாலை மாணவிக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய ஆசிரியர்! பொலிஸ் விசாரணையில் சிக்கினார்
யாழ்.மாவட்டத்தில் பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில் உயர்தரத்தில் கல்வி கற்பிற்கும் ஆசிரியர் ஒருவர், மாணவிக்கு கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி
ஜீப் மீது பஸ் மோதல்: 16 பேர் பலி
கர்நாடக மாநிலத்தில் குல்பர்கா-பிஜப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் ஜிந்தகி என்ற இடத்தில், ஜீப் மீது தனியார் பஸ் பயங்கரமாக மோதியது. இந்த சம்பவத்தில்

விழுப்புரத்தில் செந்தமிழன் சீமானைக் கைது செய்த பொலிஸ்! (Photos)

1002554_10200273641063367_818007673_n
விழுப்புரம் அடுத்த வானூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள திங்கள்கிழமை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வந்தார்.
இப்பகுதியில் ஏற்கனவே 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இதனை மீறி ஊருக்குள் நுழைந்ததாக சீமான் உள்ளிட்ட 19 பேரை போலீசார் கைது செய்தனர்.
மறைந்த இயக்குநர் மணிவண்ணன் படத்திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்துகொள்ள வந்தபோது சீமான் கைது செய்யப்பட்டுள்ளார்.
45452_10200154475565100_1880357539_n
969931_10200154471324994_263392437_n
1075736_10200154488405421_230109818_n

22 ஜூலை, 2013

சென்னையில் இல.கணேசன் உட்பட ஆயிரக்கணக்காணோர் கைது
சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாஜக சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது.
மாற்று அரசியல் தகுதி மதிமுகவுக்குத்தான் உண்டு :வைகோ
ஈரோட்டில் இன்று இரவு நடைபெற்ற மதிமுக தேர்தல் நிதி அளிக்கும் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் சார்பில் அளிக்கப்பட்ட ரூ.36 லட்சம் தேர்தல் நிதியை 
ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக அதிகமாக போராடியது மதிமுக தான் :வைகோ
ஈரோட்டில் இன்று இரவு நடைபெற்ற மதிமுக தேர்தல் நிதி அளிக்கும் நிகழ்ச்சியில் ஈரோடு மாவட்டம் சார்பில் அளிக்கப்பட்ட ரூ.36 லட்சம் தேர்தல் நிதியை  மதிமுக
'வட-இலங்கை முதலமைச்சரை தீர்மானிப்பது நான் தான்': டக்ளஸ் - தயா மாஸ்டரும் ஆளும் அரச கூட்டணியில் போட்டியிடுகிறார்
இலங்கையில் வட மாகாணசபைத் தேர்தலில் அரசாங்கக் கட்சிகளின் கூட்டணி வெற்றிபெற்றால் முதலமைச்சராக வர வேண்டியவரை தீர்மானிக்கும் அதிகாரமும் தார்மீகப் பொறுப்பும் தனக்கே
கடிகார ஏற்றுமதியில் முன்னேற்றம் கண்டுள்ள சுவிஸ்

சுவிஸ் நாட்டில் கடிகார ஏற்றுமதியானது இந்த ஆண்டு ஒரு சிறிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது என சுங்கவரி துறை(Federal Customs Office) தெரிவித்துள்ளது.

21 ஜூலை, 2013

பெண் உட்பட மூன்று இலங்கையர்கள் பிரான்ஸில் கைது
மகனை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த இலங்கையைச் சேர்ந்த இளம் பெண், அவரது கணவர் உட்பட மூன்று பேரை கைது செய்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் நேற்று தெரிவித்துள்ளன.

மத்திய மாகாண சபை தேர்தல். தொ.கா. வேட்பாளர் தெரிவு பூர்த்தி அதிகளவு புதுமுகங்கள்; பெண்கள் எவரும் இல்லை

மத்திய மாகாண சபைத் தேர்தலில் இ. தொ. கா. சார்பில் தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்களில் 90 வீதமானவர்கள் புது முகங்கள் என கட்சியின் தலைவரும்
கொழும்பு சம்மாங்கோடு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயத்தின் ஆடிவேல் விழா நேற்று ஆரம்பமாகி தேர் பவனி வந்தது. அலரிமாளிகையின் முன்றலில் தேர் நிற்பதையும் ஜனாதிபதியின் பாரியாரான முதல் பெண்மணி ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு ஆலய அறங்காவலரின் பாரியார் திருமதி சாரதா மாணிக்கவாசகம் மாலை அணிவிப்பதையும் படங்களில் காணலாம். (படம் : லலித்வெலிவெட்டிகொட)X
இளம் தமிழ்பெண் கனடாவில் மாயம்

கனடா ரொறோன்ரோவில் 16 வயதாகும் தாமர துரைரத்னம் என்ற இளம்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்த விடயத்தில் பொதுமக்களின் உதவியையும் வேண்டியுள்ளனர். இந்தப் பெண் கடந்த புதன்கிழமை காணாமல் போயுள்ளார்.
பிஞ்ச் அவென்யூவிலிருந்து கடந்த புதன்கிழமை காலை 11 மணிக்கு
வெள்ளவத்தையில் விபச்சார விடுதி முற்றுகை: இரு பெண்கள் உட்பட ஐவர் கைது
கொழும்பு, வெள்ளவத்தை பகுதியில் கட்டிடத்தொகுதி ஒன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று வெள்ளைவத்தை பொலிஸாரினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
வடமேல் மாகாண சபைத் தேர்தலில் சந்திரிக்கா? பரபரப்புத் தகவல்
எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை களம் இறக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக சிங்கள இணையத்தளம்

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஐந்து கட்சிகளுக்கு மத்தியிலான வேட்பாளர் பங்கீடு நாளை திங்கட்கிழமை முடிவு செய்யப்படுமெனவும் வேட்பாளர்களின் பெயர்பட்டியல் 25ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படுமெனவும் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி  தெரிவித்தார்.
கட்சிகளுக்கிடையிலான வேட்பாளர் பங்கீடு யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியா மற்றும் மன்னார் மாவட்ட வேட்பாளர் பங்கீட்டில் கட்சிகள் மத்தியில் இழுபறி நிலை காணப்படுகிறது. இருந்தும்

வடமேல் மாகாண சபைத் தேர்தலில் சந்திரிக்கா? பரபரப்புத் தகவல்
எதிர்வரும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை களம் இறக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுவதாக சிங்கள
வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்கும் புதிய சட்டம்
வெளிநாடுகளில் குடியுரிமை பெற்று வாழும் இலங்கையர்களுக்கு இரட்டை குடிரியுமை வழங்குவது சம்பந்தமான புதிய சட்டம் வரையப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக சட்டவரைவு திணைக்களத்தின்
வெளிநாட்டில் தங்கியிருந்தநபர் இலங்கை திரும்பிய போது புலனாய்வு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வந்த தமிழ் இளைஞனொருவர்  இரண்டாவது மாடியில் இருந்து குதித்து காயமடைந்த நிலையில்,
முன்னாள் தளபதி எழிலனின் மனைவி தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளராக களமிறக்கம்
வடமாகாண தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் திருகோணமலை அரசியற்துறை பொறுப்பாளரான எழிலனின் மனைவி ஆனந்தி தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளராக களமிறக்கப்பட உள்ளதாக தெரியவருகின்றது.
வாலைச்சுருட்டிக் கொள்ளத் தயாராகும் அரசாங்கம்! மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரம்
மாகாண சபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரத்தை வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரகசிய கலந்தாலோசனை ஒன்றை நடத்தியுள்ளதாக அலரி மாளிகைத்தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இளவரசன் கொலையில் சந்தேகம்! தவறான தகவல்களை பரப்புகிறது காவல்துறை! பெற்றோர் குற்றச்சாட்டு! 
தருமபுரி இளவரசன் கொலையில் சந்தேகம் இருப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று அவரது பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். காவல்துறையினர் தவறான


ஆடிட்டர் ரமேஷ் கொலை :நேரில் பார்த்த காவலாளி வாக்குமூலம் - 3 வாலிபர்களைத்தேடும் போலீசார்!

சேலத்தை சேர்ந்தவரும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளருமான ஆடிட்டர் ரமேஷ் (வயது 55) நேற்று முன்தினம் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

19 ஜூலை, 2013

வட.மாகாண தேர்தலை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும்! - ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்
இலங்கையின் வட. மாகாண சபைத் தேர்தலை வெளிப்படையாகவும், நேர்மையாகவும் நடத்தவேண்டும் என ஐரோப்பிய யூனியன் இலங்கை அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவில் அகதிகளாக குடியேற படகில் வருபவர்களுக்கு அனுமதியில்லை: அவுஸ்.பிரதமர் - இலங்கை அரசு வரவேற்பு
அவுஸ்திரேலியாவுக்கு படகுகளில் சென்று அரசியல் தஞ்சம் கோருவார் நீண்டகாலம் அங்கு தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என பிரதமர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார்.
யாழ். கத்தோலிக்க சபைக்குச் சொந்தமான 55 காணிகள் இராணுவத்தினரால் சுவீகரிப்படவுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ். மறைமாவட்ட ஆயர் 
தோமஸ் சவுந்தரநாயகத்தினால் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு வெள்ளிக்கிழமை கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. - See more at: http://www.thinakkural.lk/article.php?local/aghlycsrst7202f862d1345415160ecmpbfd267baa5fedfffb200567j1kuk#sthash.Bmk3bIfe.dpuf

கள் வல்லுறவு தந்தை கைது

பதினொரு வயது நிரம்பிய சிறுமியான தனது மகளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியமை தொடர்பாக தந்தையை அப்புத்தளை

இராஜதந்திர ரீதியிலான வடமாகாண தேர்தலை நாம் வென்றெடுப்போம் - அரியநேத்திரன் எம். பி.

வட மாகாண சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் போட்டியிடவில்லை. இவற்றுக்கும்

ஊவா மாகாண அமைச்சர் ஒருவரின் அச்சுறுத்தலால் பதுளை மஹியங்கனை மஸ்ஜிதுல் அரபா பள்ளிவாசல் இன்று மூடப்பட்டுள்ளது. இதனால் இன்று இடம்பெறவிருந்த ஜும்ஆ தொழுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை அவ்விடத்திற்கு வருகை தந்த ஊவா மாகாண அமைச்சர் ஒருவர் குறித்த மஹியங்கனை பள்ளிவாசலில் ஜும்ஆ தொழுகையையோ அல்லது ஐந்து வேளை தொழுகைகளோ

4 மாணவர்கள் கடலில் மூழ்கி பலியான விவகாரம் :
மதுரை பள்ளி முதல்வர் கைது
கடலில் மூழ்கி மாணவர்கள் 4 பேர் உயிரிழந்த வழக்கில் பள்ளி முதல்வர் உட்பட 3 பேர்  கைது செய்யப் பட்டனர்.   
சீமான் தலைமறைவு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, கடந்த 2008ம் ஆண்டு ராமேஸ்வரத்தில் இறையாண்மைக்கு எதிராக பேசிய வழக்கில் வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது ராமநாதபுரம் நீதிமன்றம்.
சீமானுக்கு கைது வாரண்ட்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டது ராமநாதபுரம் நீதிமன்றம்.
கவிஞர் வாலியின் இறுதி ஊர்வலம்: மழையில் நனைந்தப்படியே மயானம் வரை சென்ற வைரமுத்து உள்ளிட்ட திரையுலகினர் 
 


15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி திரைப்பட உலகில் சாதனை படைத்த கவிஞர் வாலி 18.07.2013ல் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்ச-க்காக சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கற்பகம் அவென்யூ முதல்
கனேடிய தமிழ் வேட்பாளர் கென் கிருபாவின் தேர்த ல்நிதி சேர்ப்பு கூட்டம் இன்று 
நண்பர்களே, இன்று மாலை இடம்பெறும் எனது தேர்தல் பிரச்சாரத்துக்கான நிதி சேகரிப்பி நிகழ்வில் கலந்து கொண்டு, உங்களால் இயன்ற நிதி உதவிகளை வழங்கி சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றேன்.

இடம்: Baba Banquet Hall , 3300 McNicoll Ave , Scarborough

காலம்: வெள்ளிக்கிழமை இன்று மாலை 7 - 9
தகாத உறவை வைத்திருந்ததாக குற்றம் சுமத்தி, கல்கமுவ பிரதேசத்தில் முஸ்லிம் பெண்ணொருவரின் தலைமுடியை கிராம மக்கள் வெட்டியுள்ளதாக தெரியவருகிறது.
குருநாகல் மாவட்டத்தில் கல்கமுவ மொன்னக்குளம் அல்- அஸ்னா ஜூம்மா பள்ளிவாசலில் வைத்து இந்த பெண்ணின் தலைமுடி வெட்டப்பட்டுள்ளது. இதன் போது தலையில் காயமடைந்த நிலையில் அந்த பெண்
சுவிஸில் இடம்பெற்ற மாவீரர்களின் நினைவுகள் சுமந்த மாபெரும் உதைப்பந்தாட்டப் போட்டி
சுவிட்சர்லாந்து சூரிச் வின்ரத்தூர் நகரில், இளம்றோயல் விளையாட்டுக் கழகம் நடாத்திய மூத்த தாக்குதல் தளபதி லெப். சீலன், வீரவேங்கை ஆனந்த், மூத்த உறுப்பினர் லெப். செல்லக்கிளி அம்மான்
<iframe width="560" height="315" src="//www.youtube.com/embed/y8pehYOWiis" frameborder="0" allowfullscreen></iframe>
மதுரை ஐகோர்ட் கிளையில் தமிழில் வாதாடலாம்! நீதிபதி அனுமதி!
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் பகத்சிங் என்பவர், கடந்த வாரம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தான் தாக்கல்
கவிஞர் வாலி மறைவு தமிழ் இனத்திற்கே ஒரு மாபெரும் இழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல
 

15 ஆயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி திரைப்பட உலகில் சாதனை படைத்த கவிஞர் வாலி 18.07.2013ல் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக
மறைந்த அதிமுக எம்.எல்.ஏ., குடும்பத்தினருக்கு தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஆறுதல்
சேலம் மாவட்டம், ஏற்காடு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செ.பெருமாள் வியாழன் அன்று மாரடைப்பால் காலமானார். அவருடைய உடலுக்கு


வாலி தன் வரிகளையே தனக்கு இரங்கல் பாடலாக்கி இறந்து விட்டார்! கவிஞர் வைரமுத்து இரங்கல்!
கவிஞர் வாலியின் மறைவுக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- 
நிரப்ப முடியாத வெற்றிடம்
தமிழகத்தின் முதுபெரும் பாடலாசிரியர் காவியக் கவிஞர் வாலியின் மறைவு பாட்டுலகில் இட்டு நிரப்பமுடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது. அழைத்த போதெல்லாம் அன்பாக பேசிமகிழ்ந்த ஒரு மூத்த நண்பரை நான் இழந்து விட்டேன்.
வாலி பெற்ற சில பெருமைகள் எந்தப் பாடலாசிரியருக்கும் எளிதில் வாய்க்காதவை. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் பாடல் எழுதிய பாடலாசிரியர் வாலியாகத்தான் இருக்க
பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டால், தமிழ்த் தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சிக்கப்படும்!: பசில்
வட மாகாணத்திற்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் தமிழ்த் தேசிய இராணுவமொன்றை அமைக்க முயற்சிக்கப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகங்கள் புலிகளின் கட்டுப்பாட்டில்: பீரிஸ்
சர்வதேச ஊடகங்கள் பல தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபைத் தேர்தல்: த.தே.கூட்டமைப்பின் வேட்பாளர் பங்கீட்டு விபரம்
 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவிருக்கின்ற தனது வேட்பாளர் பங்கீட்டு விபரத்தை வெளியிட்டுள்ளது.
வடமாகாணத்தில் யாழ்ப்பாணத்தை தவிர கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களின் வேட்பாளர் பங்கீட்டு விபரம் பின்வருமாறு,
<iframe width="560" height="315" src="//www.youtube.com/embed/_L3lpj80ItU" frameborder="0" allowfullscreen></iframe>
மக்கள் திலகம் மறைந்தபோது கவிஞர் வாலி அவர்கள் "ஆனந்த விகடன்" (3/1/1988) இதழில் எழுதிய அஞ்சலிக் கவிதை

நான் யாரைப் பாடுவேன்?
பொன்மனச் செம்மலே! என் பொழுது புலரக் கூவிய சேவலே!
உனக்கென்று நான் எழுதிய முதல் வரியில் தான் - உலகுக்கு என் முகவரி தெரிய வந்தது!
என் கவிதா விலாசம் உன்னால்தான் விலாசமுள்ள கவிதை ஆயிற்று!
இந்த நாட்டுக்குச் சோறிடு முன்னமே என் பாட்டுக்குச் சோறிட்டவன் நீ!
என்னை வறுமைக் கடல்மீட்டு.., வாழ்க்கைக்கரை சேர்த்த படகோட்டியே!
கருக்கிருட்டில் என் கண்களில் தென்பட்ட கலங்கரை விளக்கமே!
நான் பாடிய பாடல்களை நீ பாடிய பிறகுதான் நாடு பாடியது - ஏழை எளியவர்களின் வீடு பாடியது!
இல்லையென்று இரப்போர்க்கு இல்லையென்று சொல்லாதவன் - இன்று
இல்லையென்று போனான் - இனி நான் யாரைப் பாடுவேன்?
புரட்சித் தலைவனே! நீ இருந்தபோது - உன் அடக்கத்தைப் பார்த்து நாடு தொழுதது..,
இன்று இறந்த பின்பு உன் அடக்கத்தைப் பார்த்து - நாடு அழுதது!
வைகை யாறும் பொன்னி யாறும் வற்றிப் போகலாம்;


PART3

PART 1


lAST RESPECT TO VAALI PART 2
இளையராசாவை குளிர்விக்கும் எண்ணத்தில் அவரது அன்பு தாயின் பெயரான சின்னதாய் அவள் என்று எழுதித் குவித்தார். உண்மையில் தளபதி படத்தில் இப்படி பெயரில் ஒரு கதாபாத்திரம் இல்லை .இதே போல பட்டணத்தில் பூதம் படத்தில் கண்ணதாசன் எழுதும் பாடல் வரும் அந்த சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி என்று .மீண்டும் காங்கிரசில் சேருவதற்கு காமராசரிடம் மறைமுகமாக கேட்பதாக அமையும் ,காமராசரின் அம்மா பெயர் சிவகாமி. படத்தில் சிவகாமி என்று பாத்திரமே இல்லை 
தமிழில் உயிரை ஓட்டும் என் இதயம் தொட்டு சென்ற கவிஞர் வாலியின் மறைவின் நினைவில் மீளாமல் துயரில் துவளும் பொழுதில் எழுதும் மழைத் துளியை பொறுத்தருள்வீர் அல்லது அள்ளி பரூகுவீர் என நம்புகிறேன் நண்பர்களே 
இசையமைப்பாளர் என்கிற முறையில் இளையராஜாவோடு எனக்குக் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதுண்டு. ஓர் இறையருள் மிக்க இசைக்கலைஞர் என்னும் வகையில், மாற்றுக்கருத்தே என்னுள் என் இதயத்தில் முளைவிட்டதில்லை. அவர் ஒரு மகாபுருஷர் என்கின்ற மதிப்பை இப்பிறவி முழுதும் நான் என் மனத்துள் பொன்னே போல் வைத்துக் காப்பேன்” - கவிஞர் வாலி “நானும் இந்த நூற்றாண்டும் (1995)
வாய்ப்புகள் சரிவர அமையாததால் பெட்டியை கட்டி பலசரக்கு கடைக்கே திரும்பி விடலாம் என்ற எண்ணத்துடன் போய்க்கொண்டிருக்கும் பொழுது,மயக்கமா கலக்கமா என்ற பாடல்வரிகளைக் கேட்டு புத்துணர்ச்சியுடன் தன் மனதை மாற்றிக்கொண்டு முயன்று.. இன்று வரை பல தலைமுறை கடந்து வென்று வரும் வாலியின் பங்களிப்பு மிக முக்கியமானது..
முதல்வர் கருணாநிதி பற்றி வாலி எழுதிய பாடலுக்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
உன் மயக்கம் தீர்க்க வந்த

பெண் மயிலைப் புரியாதா?

தன் மயக்கம் தீராமல்

தவிக்கின்றாள் தெரியாதா?

என் உடலில் ஆசை யென்றால்

என்னை நீ மறந்துவிடு!

என் உயிரை மதித்திருந்தால்

வந்தவளை வாழவிடு!
திரையுலகம் நான்கு தலைமுறை-களைப் பேசுகிறது. பேசும் படங்கள் தோன்றிய 1931 முதல் 1948 வரையில் அமைந்த காலம், திரையுல-கின் முதல் தலைமுறை. 1949 முதல் 1970 வரை இரண்டாம் தலைமுறை, 1970 முதல்1990 வரை மூன்றாம் தலைமுறை. 1991 முதல் இன்றுவரை நான்காம் தலைமுறை என்று சொல்லலாம்.

வாலிபக் கவிஞர் வாலி - நினைவலைகள்


உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த வாலி, சிகிச்சை பலனளிக்காமல் இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 82 (18-07-2013).

நிலவும் தாரையும் நீயம்மா (அழகர் மலை கள்வன்)
    (கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல். ஒரு விழாவில் வாலி இப்படி குறிப்பிட்டார். "என்னுடைய முதல் பாடலை பாடியது பி.சுசீலா அவர்கள். தவிர, எனக்கு வாழ்வளித்த  எம்.ஜி.ஆர் படத்துக்கு  நான் எழுதிய பாடலை பாடியவர் பி.சுசீலா அவர்கள், அவர்கள் பாடிய ராசி இன்று வரை நான் திரை உலகில் இருக்கிறேன்"......  1988-இல் திரை உலகில் தன் முப்பதாவது வருடத்தை நிறைவு செய்தார் வாலி. அன்று அவர் இளையராஜாவிடம்,  "இன்று என் பாடலை பி.சுசீலா அவர்கள் பாட வேண்டும்" என விரும்பி கேட்டுக்கொண்டார். இளையராஜாவும் பி.சுசீலாவை அழைத்து "தென்றல் சுடும்" படத்துக்காக "தூரி தூரி தும்மக்க தூரி" என்ற பாடலை பாட வைத்தார். 
இளையராஜாவுக்காக வாலி எழுதிய முதல் பாடலை பாடியவரும் பி.சுசீலா தான். (கண்ணன் ஒரு கைக்குழந்தை))

கவிஞர் வாலி - வாழ்க்கை குறிப்பு


இயற்பெயர்: டி. எஸ். ரங்கராஜன், பிறப்பு: 29-.10-1931) தமிழ்க் கவிஞரும் தமிழ்த் திரைப்பட பாடலாசிரியரும் ஆவார் என்பது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை,

முட்டையிடும் பெட்டைக்கோழி

ஒரு முறை பாண்டிச்சேரி கவியரங்கத்தில் கம்பன் சைவமா? வைணவமா? என்ற தலைப்பில் கவிபாட, அரங்கம் முடிந்தவுடன் ஒரு முதுபெரும் தமிழ்ப்புதல்வர் வாலியிடம் “இவ்ளோ நல்லா கவிபாடும் நீங்க, சினிமா பாடல்களில் மட்டும் ஏன் வர்த்தக நோக்கோடு செயல்படறீங்க”ன்னு கேட்டார். அதற்கு வாலி சொன்ன பதில்:
இங்கே நான்
வண்ணமொழிப் பிள்ளைக்குக்
தாலாட்டும் தாய்;
அங்கே நான்
விட்டெறியும் எலும்புக்கு
வாலாட்டும் நாய்!
மேலும்…
எந்தப்பா சினிமாவில்
எடுபடுமோ? விலைபெறுமோ?
அந்தப்பா எழுதுகிறேன்;
என்தப்பா? நீர் சொல்லும்!
மோனை முகம் பார்த்து
முழங்கிட நான் முயற்சித்தால்
பானை முகம் பார்த்தென்
பத்தினியாள் பசித்திருப்பாள்
கட்டுக்குள் அகப்படாமல்
கற்பனைச் சிறகடிக்கும்
சிட்டுக்கள் நீங்கள்;
சிறியேன் அப்படியா?
மெட்டுக்குள் கருத்தரித்து
மெல்லவே இடுப்புநோகத்
துட்டுக்குத் தகுந்தவாறு
முட்டையிடும் பெட்டைக்கோழி!
என்று தன் மனதில் பட்டதை கவிதை நயத்தோடு படிக்கும் எல்லோருக்கும் எளிதாக புரியும் வகையில் உண்மையை பல கவியரங்குகளில் புலவர்களுக்கு சொல்லியதாக அவரின் “நானும் இந்த நூற்றாண்டும்” நூலில் குறிப்பிடுகிறார்

உலகம் சுற்றா “வாலி”பன்

DElhi
பத்தாயிரம் திரைப்பட பாடல்களும், ராமாயண பாரத காவியங்களை புதுக்கவிதையிலும் இன்ன பிற கவிதை நூல்களும் எழுதியிருக்கும் கவிஞர் வாலி அவர்கள், எனக்கு கிடைத்த உலகம் போதும், வெளிநாடுகளென்ன, இங்கிருக்கிற டில்லியே நான் பார்த்ததில்லை என்று ஒரு பேட்டியில் சொன்னார்.
தகவல் : ஸ்ரீகாந்த்.
தொடர்புடைய சுட்டி “
தமிழ் சினிமாவும் பாடல்களும்

கண்ணதாசனே !

Kannadasan 2
கண்ணதாசனே ! – என்
அன்பு நேசனே !
நீ
தாடியில்லாத தாகூர் !
மீசையில்லாத பாரதி !
சிறுகூடற் பட்டியில்
சிற்றோடையாய் ஊற்றெடுத்து
சிக்காகோ நகரில்
சங்கமித்த ஜீவ நதியே !
உனக்கு
மூன்று தாரமிருப்பினும் – உன்
மூலா தாரம் முத்தமிழே !
திரைப் பாடல்கள்
உன்னால் -
திவ்வியப் பிரபந்தங்களாயின !
படக் கொட்டகைகள்
உன்னால்
பாடல் பெற்ற ஸ்தலங்களாயின !
நீ
ஆண் வேடத்தில்
அவதரித்த சரஸ்வதி !
கண்ணனின் கைநழுவி 
மண்ணில் விழுந்த
புல்லாங்குழல் !
 
அயல் நாட்டில்
உயிர் நீத்த
தமிழ்நாட்டுக் குயிலே !
பதினெட்டுச்
சித்தர்களுக்கும் 
நீ
ஒருவனே
உடம்பாக இருந்தாய் !
நீ
பட்டணத்தில் வாழ்ந்த
பட்டினத்தார் !
கோடம்பாக்கத்தில்
கோலோச்சிக் கொண்டிருந்த
குணங்குடி மஸ்தானே !
நீ
தந்தையாக இருந்தும் 
தாய் போல்
தாலாட்டுக்களைப் பாடியவன் !
 
இசைத் தட்டுகளில் மட்டுமல்ல -
எங்கள் நாக்குகளிலும்
உன்
படப் பாடல்கள்
பதிவாகி யிருக்கின்றன !
உன்
மரணத்தால்
ஓர் உண்மை புலனாகிறது..
எழுதப் படிக்கத் தெரியாத
எத்துணையோ பேர்களில் -
எமனும் ஒருவன்.
அழகிய கவிதைப் புத்தகத்தைக்
கிழித்துப் போட்டுவிட்டான் !
- கவிஞர் வாலி
(கண்ணதாசன் மறைந்தபோது எழுதிய இரங்கல் கவிதை}

ஒபாமா உனக்கு ஒப்பாகுமா?

Kalingar
தமிழ் வணக்கம்,
தமிழினத் தலைவர் வணக்கம்.
எதற்கு தனித்தனியாய் இரு வணக்கம்?
வைப்பேன் என் தலைவனுக்கு
மட்டும் ஒரு வணக்கம்.
எவரேனும் எண்ணுவரோ
தலைவன் வேறாக
தமிழ் வேறாக ?
தலைவரல்லவா இருக்கிறார்
தமிழுக்கு வேராக.
கலைஞர் பெருமானே !
உன் வருகை
கண்டதும் தூக்குவேன்
என் இருகை.
உயரிய தலைவா
உனக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு
வாயை திறந்தால் தான்
என் வாய்க்கும்
கவிதை வாய்க்கும்.
என் பாட்டுக்கு
நீதான் பிள்ளையார் சுழி !
உன்னை முன் வைக்காமல்
என்ன எழுதினாலும்
என் பாட்டு வாங்கும் பெரிய சுழி !
அருமை தலைவா !
ஆண்டு 2007-ல்
எமனிடம் இருந்து நீ
என்னை மீட்டாய் !
அதற்கு முன்
ஆண்டு 2006-ல் – ஓர்
‘உமனிடம்’ இருந்து
தமிழ் மண்ணை மீட்டாய் !
 
தேர்தலுக்கு தேர்தல்
5 விரல்களை அகலக்காட்டி,
அஞ்சு அஞ்சு என்று
அயலாரை ஓட்டி,
5 முறை அரியணை ஏறிய
அஞ்சுக செல்வா !
தேர்தல் வரலாற்றில் – உன்னை
வெகுவாக விமர்சனம் செய்ய
டில்லியில் ஒரு கோபால்சாமி
திருமங்கலத்தில் ஒரு கோபால்சாமி.
நீயோ
இந்த 2 கோபால்சாமிகளையும்
புறம் தள்ளிய
கோபாலபுரத்து சாமி !
எனவேதான்
கும்மாளமிட்டு – உன்னை
கொண்டாடுகிறது
இந்த பூமி !
அய்யா !
50 ஆண்டு காலம் – உன்
சேவடிபட்ட சபை
சென்னை சட்டசபை !
 
நாவில் தமிழ் ஏந்தி – நீ
நற்றமிழ் இட்ட சபை !
முதல் முதல்
தேர்தல் குளத்தில்
குளிக்க நீ தொடங்கிய ஊர்தான்
குளித்தலை !
குளித்தலைக்கு பிறகு
இதுவரை .. ..
குனியா தலை
உன் தலை !
இனியும் குனியாது
வெற்றியை குவிக்கும்
என்பதும் உன் தலை.
சாதாரணமாய் இருந்து
சரித்திரம் படைத்தாய்.
அய்யா !
அந்த வகையில் நீ ஒரு ஒபாமா !
சரித்திரம் படைத்த பின்பும்
சாதாரணமாக இருக்கிறாய்
அந்த வகையில் உனக்கு
ஒபாமா ஒப்பாகுமா?
உன்னை விட்டு
வலது போனால் என்ன ?
இடது போனால் என்ன ?
மேலே விழுந்த நரி
பிடுங்காமல் போனால் சரி.
நீ எப்போதும் போல் சிரி.
உன்னிடம் உள்ளது
நடு நிலைமை
நடுநிலைமை தான்
நல்ல தலைமை !
கலைஞர்கோனே !
கருப்பு கண்ணாடி அணிந்த
கவி வெண்பாவே !
நீயே உனக்கு நிகர்.
நீ நகர்ந்தால்
உன் பின்னே
நகர்கிறது நகர் !
நிஜம் சொன்னால்
ரஜினியை விட
நீயொரு வசீகரமான ‘பிகர்’ !
 
நாவினிக்க நாவினிக்க
உன்னை பாடியே
என் உடம்பில்
ஏறிப்போனது சுகர் !
நீ எங்கள் கிழக்கு !
உனக்கு என்றும் இல்லை மேற்கு.
நீ வடக்கு வழிபடும் தெற்கு !
நம்மொழி செம்மொழி
அதனை அங்கீகரிக்காது
நாள் கடத்தியது நடுவண் அரசு.
நீ குட்டினாய்
உடனே குனிந்தது
அதன் சிரசு !
 
அதுபோல்
தமிழனின் அடையாளங்களை
வட்டியும் முதலும் சேர்த்து
வள்ளலே நீதான் மீட்டாய் !
தரை மீனை திரும்ப
தண்ணீரில் போட்டாய் !
அதனால் தான் அய்யா – உன்னை
அவருக்கு நிகர் அவர் – தமிழனை
துன்பம் தீண்டாது மீட்கும்
தடுப்புச் சுவர் !
மையம் ஏற்கும் வண்ணம்
உன்னிடம் உள்ளது பவர் !
அத்தகு பவர் – உன்போல்
படைத்தவர் எவர் ?
அமைச்சர் பெருந்தகை
ஆற்காட்டாரிடம் உள்ள பவரால்
வீட்டு விளக்கு எரியும்
நடுரோட்டு விளக்கு எரியும்.
உயரிய தலைவா
உன்னிடம் உள்ள பவரால் தான்
நாட்டு விளக்கு எரியும் – நற்றமிழ்
பாட்டு விளக்கு எரியும்.
குப்பன், சுப்பன் வாழும் குப்பங்கள்
ஓயாமல் உன்னால் தான் ஒளிர்கிறது !
அடுப்பு விளக்கு
அன்பு விளக்கு
அமைதி விளக்கு
அறிவு விளக்கு என
பல்விளக்கை இன்று
உன்னை பணித்து வாழ்த்தி
சொல்வேன் போய் நீ பல் விலக்கு என்று.
தமிழா என் நண்பா
உனக்கு தருவேன்
கேள் ஒரு வெண்பா !
- கவிஞர் வாலி
(வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற தமிழர் பெருவிழா நிகழ்ச்சியில்)

சினிமாவில் எது வேண்டுமானாலும் நடக்கும். அதை தீர்மானிப்பவன் இறைவன்தான். ‘உனக்கு பாட்டு எழுத வராது; ஊரில் நிலம் இருந்தா போயி விவசாயம் பண்ணு’ என்று என்னை விரட்டியவர் எம்.எஸ்.விசுவநாதன். பிறகு அவர் இசையில் 3 ஆயிரம் பாடல்களை எழுதினேன்.
‘சந்திரலேகா’ படத்தில் ராஜாவின் செருப்பை எடுத்து வைக்கும் வேலையாள் வேடம் கூட மறுக்கப்பட்ட சிவாஜி கணேசன் பிற்காலத்தில் நடிகர் திலகமாக வளர்ந்தார். இப்படி சினிமாவில் ஜெயிக்க காலம் நேரம் கூடி வரவேண்டும்.
சில இயக்குனர்கள் நான் நினைத்தது வரவில்லை என்பார்கள். ஒரு இயக்குனர் ‘கன்னம்’ என்ற சொல்லுக்கு எளிமையான வார்த்தையாகப் போடுங்கள் என்றார். ‘கன்னம்’ என்பதே எளிமையானது தான் என்று சொல்லிப்பார்த்தேன். அவர் கேட்கவில்லை. கவிஞர் அப்துல்ரகுமானிடம் இதை கூறினேன். ‘கேட்டவன் கன்னத்தில் ஒன்று போட வேண்டியதுதானே’ என்றார்.
- விழாவொன்றில் கவிஞர் வாலி

ad

ad