புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 பிப்., 2014

மட்டக்களப்பை சேர்ந்த ஒருவரை கூட்டமைப்பின் தலைவராக நியமித்தால் அரசியலில் இருந்து ஒதுங்குவேன்-!- கருணா
தமிழ் தேசிய கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தினை சேர்ந்த ஒருவரை தலைவராக நியமித்தால் அரசியல் நடவடிக்கைகளில் இருந்து தான் ஒதுங்குவதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சவால் விடுத்துள்ளார்.
ஹூலுகல்லவின் மனைவியின் நிலை கண்டு கவலையடைந்த ஜனாதிபதி
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹூலுகல்லவின் குடும்பத்தினரின் நிலை கண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கவலையடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
ஆஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
இறுதிநாள் சாட்சியப்பதிவுகள் ஆரம்பம் 
ஜனாதிபதி ஆணைக்குழுவினால் காணாமல் போனோர் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் சாட்சியப்பதிவுகள் இன்றையதினம் யாழ்.மாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி
ஜனாதிபதி மஹிந்த பாசிக்குடா கடற்கரைக்கு விஜயம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று மட்டக்களப்பு பாசிக்குடா கடற்கரைக்கு விஜயம் செய்தார்.பாசிக்குடா கடற்கரைக்கு சென்றிருந்த ஜனாதிபதி அங்கு வந்திருந்த மக்களுடன் கலந்துரையாடினார்.ஜனாதிபதியுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜீன்வாஸ் குணவர்தன, லொஹான் ரத்வத்தை, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் அருண் தம்பிமுத்து ஆகியோரும் பாசிக்குடா சென்றிருந்தனர்.
புலிகளுக்கு புனர்வாழ்வளித்திருக்காவிட்டால் 12 ஆயிரம் தோட்டக்களே செலவாகியிருக்கும்!- மகிந்த அமரவீர
யுத்தம் முடிவடைந்த பின்னர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களுக்கு புனர்வாழ்வு பயிற்சிகள் வழங்காது போயிருந்தால் வெறும் 12 ஆயிரம் தோட்டக்கள் மட்டுமே செலவாகியிருக்கும் என இடர் முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார்.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரியாணி விருந்து வைத்த அழகிரி
திமுகவின் 10வது மாநில மாநாடு திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.  திமுகவிலிருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் மு.க.அழகிரி இந்த மாநாட்டில் பங்கேற்கவில்லை.  இரண்டு நாட்களும் அவர் மதுரையி

விஜயகாந்தின் கூட்டணி பேரம் :நெல்லை சமக மாநாட்டில்
சரத்குமார் கடும் தாக்கு - படங்கள்
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் மாநில மாநாடு நெல்லை பொருட்காட்சி திடலில் நேற்று நடைபெற்றது. மாநில அவை தலைவர் வி.செல்வராஜ் தலைமை தாங்கினார்.
பகுத்தறிவு சிந்தனையை தூண்டிய கல்லூரி வாசகம் :
 நடிகர் சத்யராஜ் பேச்சு
கோவை அரசு கலைக் கல்லூரியின் வரலாற்று துறை சார்பில் சரித்திரா–2014 என்ற விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சத்யராஜ் கலந்து கொண்டு பேசினார்.
துரைமுருகன் 5 நாள் சஸ்பெண்டு ஏன்?
சட்டசபையில் அரசு சிற்றுந்து இயக்குவது தொடர்பாக கடந்த 25–10–2013 அன்று துரை முருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்கள் சபாநாயகரின் அனுமதி இன்றி ஒரு பிரச்சினையை எழுப்ப முயன்றனர்.
துரைமுருகன் இடைநீக்கம்
திமுக சட்டப்பேரவை உறுப்பினர் துரைமுருகன் இன்று முதல்  5 நாட்களுக்கு இடைநீக்கம் செய்யப் படுகிறார் என்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.  துரைமுருகனுக்கு எதிராக அமைச்சர் பன்னீர்செல்வம் உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவந்ததை அடுத்து நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
ஒலிம்பிக் பட்டியல் G S B T 

1.ஜேர்மனி 7 3 2 12
2.ஹோலந்து 5 5 7 17
3.நோர்வே 5 3 6 16
4.சுவிட்சர்லாந்து 5 1 1 7
5.ரஷ்யா 4 7 5 16
6.கனடா 4 6 4 14
7.ஐக்கிய அமேரிக்கா 4 4 8 16
8.போலந்து 4 0 0 4
9.சீனா 3 2 0 5
10..பைலோ ரஷ்யா 3 0 1 4



கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் அழைக்கப்பட்ட கழகங்களுக்கு இடையே நடத்தும் அமரர்களான விக்ரம், இராஜன்,கங்கு ஞாபகார்த்த வெற்றிக் கிண்ணத்துக்கான  30 பந்துப்பரிமாற்றங்களுக்கு மட்டுப்படுத்திய கிரிக்கெட்  ஆட்டம் ஒன்றில்  கே.சி.சி.சி. விளையாட்டுக்கழகம் 35 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
 
கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் யாழ்ப்பாணம் காமாட்சியம்பாள் விளையாட்டுக்கழகமும் கொக்குவில் கே.சி.சி.சி விளையாட்டுக்கழகமும் மோதிக்கொண்டன.
54பேர் இன்று சாட்சியமளிப்பு 
யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பகுதிகளில் இருந்து 54 பேர் இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்துள்ளனர்.

எம் வி சன் சீ கப்பலில் வந்து சிறைப்பிடிக்கப்பட்ட தர்மரத்தினம் அருமைத்துரை நிலைமை என்ன – உண்மைக் கதை .

பிரிட்டிஷ் கொலம்பியா மேப்பிள் ரிட்ஜ் பகுதியில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மனித கடத்தல் என்று குற்றச்சாட்டப்பட்ட  எம்.வி. சன் சீ கப்பலில் வந்தோரை கனடிய குடிவரவு அதிகாரிகள்
happy-family-day2
குடும்ப தினம் ஒரு தேசிய சட்ட விடுமுறை தினம் அல்ல. ஆனால் டொரோண்டோ பகுதிகளில் பல தொழில்கள் இந்த தினத்தைக் கொண்டாடுவதற்காக மூடப்படும். திங்கட்கிழமை  பிப்ரவரி 17 ஆம் தேதி மூடப்படும் தகவல்கள் இதோ.
மூடப்பட்டிருப்பவை:
  •     தொடக்க மற்றும் உயர்நிலை பள்ளிகள்
  •     சிட்டி ஹால் உட்பட மாநகர கட்டிடங்கள்
  •     பொது நூலகங்கள்
  •     வங்கிகள்

கனடாவிலிருந்து சொந்த ஊரைப் பார்க்க சென்ற 33 வயது இளைஞர் மரணம்

கனடாவிலிருந்து சொந்த ஊரான ஏழாலைக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் ஒருவர் அடையாளப்படுத்த முடியாத காய்ச்சலால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • வாடிவாசல் வழியாக சீறிவரும் காளை.
    வாடிவாசல் வழியாக சீறிவரும் காளை.

அய்யம்பட்டியில் ஜல்லிக்கட்டு: 52 பேர் காயம்

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே அய்யம்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள் 36 பேர், பார்வையாளர்கள் 16 பேர் உள்பட 52 பேர்

    "ஈழத் தமிழர் பிரச்னைக்கு கருணாநிதிதான் தீர்வு காணமுடியும்'கே.எஸ்.ராதாகிருஷ்ணன்:

     ஈழத்தமிழர் பிரச்னைக்கு கருணாநிதியால் மட்டுமே தீர்வு காணமுடியும். சிரியா போன்ற நாடுகளில் உள்நாட்டுப் பிரச்னை ஏற்படும்போது அதற்குத் தீர்வு காண வேண்டும் என உலக நாடுகள்

ஒரு வலுவான கூட்டணியை அமைக்க தே.மு.தி.க.வும் எங்களோடு வரவேண்டும் என்று விரும்புகிறோம்.  வருவார்கள் இல.கணேசன்
பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் இன்று தனது 69–வது பிறந்த நாளை கொண்டாடினார். ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் ஆகியோர் போனில் வாழ்த்து தெரிவித்தார்.

நரேந்திர மோடியும், ராகுலும் அம்பானியின் முகவர்களாக செயல் படுகின்றனர்: அரவிந்த் கேஜிரிவால்

பாரதிய ஜனதா கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தொழிலதிபர்களுக்கு சாதகமாக செயல்படுவதாக கேஜிரிவால் புகார் கூறியுள்ளார்.

சிரேஷ்ட உள்ளக லீக் உதைபந்தாட்டம்; புத்தளம் லீக் வெற்றி

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய சிரேஷ்ட உள்ளக லீக் உதைபந்தாட்ட சுற்றுப் போட்டியொன்றில் புத்தளம் உதைபந்தாட்ட லீக் வெற்றிபெற்றுள்ளது.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது நிய+ஸிலாந்து

இந்தியாவுடனான இரண்டாவதும் கடைசியுமான டெஸ்ட் போட்டியில் அணித் தலைவர் பிரின்டன் மெக்கலமின் சதத்தினால் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்துக் கொண்டது.
வெல்லிங்டனில் நடைபெற்று வரும் போட்டியில் நியூஸிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 246 ஓட்டங்களை பெற வேண்டி ஏற்பட்டது. இதன்படி ஆட்டத்தின் மூன்றாவது நாளான நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த நியூஸிலாந்து அணியின் கெளரவத்தை அணித் தலைவர் மெக்கலம் காத்தார்.
நியூஸிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 94 ஓட்டங்களை பெறுவதற்குள் முதல் நான்கு விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தடுமாறியது.

புலனாய்வு இன்ஸ்பெக்டர் சடலமாக மீட்பு

தனிப்பட்ட குடும்ப தகராறினால் தற்கொலை
நேற்று முன்தினம் மாலை 5.50மணியளவில் தனது உத்தியோகபூர்வ பிஸ்டலை கடமை நிமித்தம் பெற்றுக் கொள்வதாக கூறி எடுத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் தெஹிவளை பொலிஸ் நிலைய பதிவுப் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளமை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
* அத்துருகிரிய வயல்வெளியில் சடலம்;
* கைத்துப்பாக்கி, மனைவி எழுதிய கடிதமும் கண்டெடுப்பு

வடக்கில் வாழும் தமிழ், முஸ்லிம்கள் பிரிந்து நிற்பதனால் எந்தத் தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியாது

வடக்கில் வாழும் தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் பிரிந்து நிற்பதனால் எதுவிதமான தீர்வுகளையும் பெற்றுக் கொள்ள முடியாது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசியத் தலைவரும், கைத்தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சருமான ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வமற்ற தேர்தல் அலுவலகங்களை, அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையர் உத்தரவு

அலுவலகங்கள் அமைக்க தெரிவத்தாட்சி அதிகாரி, oic யின் அனுமதி அவசியம்
மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் உத்தியோகபூர்வமற்ற தேர்தல் அலுவலகங்களை அகற்றுமாறு தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய பொலிஸ் திணைக்களத் திற்கு நேற்று உத்தியோ கபூர்வ அறிவிப்பினை விடுத்துள்ளார்.

இலங்கையில் புற்றுநோயினால் 14,000 பேர் உயிரிழப்பு

வாய்ப்புற்றுநோய்க்கு 2,500பேர் பலி
* 25,842 பேர் சிகிச்சைக்குப் பதிவு
* வெற்றிலைக் கூறு உண்ணும்போது புற்றுநோய்க்கு துணைபுரியும் 32 வகை இரசாயனம் வாயினுள் விடுவிப்பு
* இலங்கையில் 6 வகை புற்றுநோய் பதிவு

பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியின் 40ம் கட்டை பகுதியில் சனியன்று அதிகாலை வாகனமொன்று விபத்துக்குள்ளாகி கிடப்பதைப் படத்தில் காணலாம்.
இலங்கை மீது சர்வதேச போர்க்குற்ற விசாரணை கேட்டு நவநீதம்பிள்ளை-இவர் இலங்கை அரசுக்கு எழுதிய அறிக்கை வெளியான மர்மம்  என்ன ?

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையில், சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து அனைத்துலக விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு உதவத் தமது பணியகம் தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில், கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைய, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை, வரும் மார்ச் மாத அமர்வில் சிறிலங்கா குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளார்.
குற்ற புலனாய்வு அதிகாரி ஒருவர் இன்று சடலமாக மீட்பு-தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்ற சந்தேகம் 
மேல் மாகாணத்தில் குற்றபுலனாய்வு பிரிவு உயர் அதிகாரியான எம்.சமரகோன் என்பவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
போர்க்குற்ற விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் மறுப்பது ஏன்?

அண்மையில் சென்னையில் நடந்த நிகழ்வொன்றில் பேசிய இந்திய இராணுவத்தின் முன்னாள் அதிகாரியும் இந்திய அமைதிப்படையின் புலனாய்வுத் துறைக்குப் பொறுப்பாக இருந்தவருமான கேர்ணல் ஹரிகரன் இலங்கையில் இப்போது எல்லாமே இராணுவ மயமாகி விட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
கேர்ணல் ஹரிகரன் இந்திய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர், பிராந்திய பாதுகாப்பு விவகாரங்களில் கூடுதல் அக்கறை செலுத்தி வருகின்ற ஒருவர். அவர் இதற்கு முன்னர் இவ்வாறு கூறியதாக கேள்விப்படவில்லை.
மாளிகாவத்தை பதூர் என்ற பாதாள உலகத் தலைவர் கைது
பொலிஸாரின துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த பிரபல பாதாள உலகத் தலைவர் மாமா அஸ்மியின் மிக நெருங்கிய சகாக்களில் ஒருவரான மாளிகாவத்தை பதூர் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காணாமல் போனோர் பற்றி சர்வதேச விசாரணைக்கு கோரினேன்: ஜெனிவா சென்று திரும்பிய அனந்தி-பி.பி.சி 
இலங்கையில் காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் சுதந்திரமாக சாட்சியமளிக்கத்தக்க வகையிலான சர்வதேச விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வடமாகாண சபையின் பிரதிநிதியாக ஜெனீவாவுக்குச் சென்று திரும்பியுள்ள அந்த சபையின் உறுப்பினர் அனந்தி சசிதரன் கூறினார்.
சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் பலவற்றையும் ஜெனிவாவில் உள்ள சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து போரினால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் சிறுவர்களின் நிலைமைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பாக கண்துடைப்பு நடவடிக்கை என்று சொல்லத்தக்க வகையிலான உள்ளுர் விசாரணைகள் என்பன தொடர்பாக விபரமாக எடுத்துக் கூறியிருப்பதாக அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

வடக்கில் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய வகையில் ஆறு ஆயுதக் குழுக்கள் இயங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புலனாய்வுப் பிரிவினர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர்.உடற்பயிற்சி நிலையம் என்ற பெயரில் பாரிய வீடுகளை வாடகைக்கு அமர்த்தி இந்தக் குழுக்கள் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகின்றன.
ஜெனீவா தீர்மானம் குறித்து அமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்க உள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டின் போது இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் ஏற்படக் கூடிய பாதிப்புக்கள் குறித்து இந்த அறிக்கையில் குறிப்பிடப்படவுள்ளது.
நள்ளிரவு அல்லது அதிகாலையில் வெளிச்சங்களை பாய்ச்சியவாறு வீடுகளுக்குள் நுழைந்தவர்கள் எங்கள் பிள்ளைகளை விசாரணைக்கென கூறி அழைத்துச் சென்றார்கள்நெஞ்சை உருக்கும் கண்ணீர் கதைகள்
யாழ்.குடாநாடு படையினரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட நிலையில் படையினர் சீருடையுடன் ஆயுதங்கள் தாங்கியவாறு எங்கள் வீடுகளுக்குள் நுழைந்து எங்களை தாக்கிவிட்டு பிள்ளைகளை கொண்டு சென்றனர்.
அவ்வாறு கொண்டு செல்லப்பட்டவர்கள் எங்கே? எங்கள் பிள்ளைகளை மீட்டுத்தாருங்கள் என காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக நேற்றும் உறவினர்கள் கண்ணீர்மல்க சாட்சியமளித்துள்ளனர்.
ஆணைக்குழுவின் 2ம் அமர்வு நேற்றய தினம் சாவகச்சேரி பிரதேச செயலர் அலுவலகத்தில் நடைபெற்றிருந்தபோதே மக்கள் மேற்படி சாட்சியத்தினை கண்ணீர்மல்க வழங்கியிருக்கின்றனர்.
சாட்சியத்தில் மக்கள் கூறுகையில்,

முள்ளிவாய்க்காலில் கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய பொறுப்பாளர்களில் ஒருவரான யோகரத்தினம் யோகி இராணுவத்தினரிடம் சரணடைந்ததாக அவரது மனைவியினால் இன்று ஆணைக்குழுவிடம் சாட்சியமளிக்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க மதகுரு பிரான்ஸிஸ் ஜோசப் முன்னிலையில் இராணுவத்தினரிடம் தனது கணவன் உட்பட பல போராளிகள் சரணடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சீனி சர்க்கரை சித்தப்பா, ஏட்டில் எழுதி நக்கப்பா! ஜெ. அரசை விளாசி தள்ளிய மு.க.ஸ்டாலின்!

திமுகவின் 10வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இரண்டாவது நாளானஞாயிற்றுக்கிழமை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
இரண்டு நாட்களுக்கு முன்பு கடந்த
கூட்டணி குறித்து விரைவில் முடிவு: விஜயகாந்த்

டெல்லியில் இருந்து திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர்,

நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். தமிழக மக்கள் மற்றும் மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியதாக கூறினார்.

தேமுதிக எம்எல்ஏக்கள் பிரதமரை சந்தித்ததற்கான காரணம் எனக்கு புரியவில்லை: இல.கணேசன்
பா.ஜனதா மூத்த தலைவர் இல.கணேசன் கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சட்டமன்றத்தில் பேச வாய்ப்பில்லை என்று சொன்னால் அதிமுகவோடு இருந்து என்ன பலன்: கிருஷ்ணசாமி பேச்சு
திமுகவின் 10வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இரண்டாவது நாளான ஞாயிற்றுக்கிழமை புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில்,

எந்த ஒரு செயலுக்கும் காலம் முக்கியம் என்று சொல்லுவார்கள். இந்த மாநாட்டை ஒரு மாதத்திற்கு முன்பு கூட்டியிருந்தாலும் சிறப்பு இருந்திருக்காது. ஒரு மாதம் கழித்து கூட்டியிருந்தாலும் முக்கியத்துவம் இருக்காது. இதுதான் சரியான தருணம். ஏனென்றால், இம்மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. 
கடந்த மூன்று வருடத்திற்கு முன்பு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்தோம். மூன்று வருடத்தில் ஒரு மாற்று முடிவு எடுக்கும் சூழல் ஏன் வந்தது. ஆளும்கட்சி கூட்டணியில் இருந்து யாரும் வெளியே வரமாட்டார்கள். வரக்கூடிய சூழ்நிலை உருவாகாது. நானும், மனித நேய மக்கள் கட்சியும் ஒரு முடிவு

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை கைது!
 
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி (53). ஆட்டோ ஓட்டுனரான இவரது மனைவி ஆரோக்யமேரி. இவர்களுக்கு 12 வயதில் சகாய மேரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது)
மதவாதத்தை எதிர்ப்பவர்கள் தி.மு.க, கூட்டணிக்கு வருவார்கள்: கலைஞர் பேச்சு
 திமுகவின் 10வது மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இரண்டாவது நாளானஞாயிற்றுக்கிழமை திமுக தலைவர் கலைஞர் பேசுகையில்,
முக்கியமான நேரத்தில் மாநாடு நடைபெற்றுள்ளது.
டெல்லி மாநில அரசு தான் எனது நோக்கம்; அரவிந்த் கெஜ்ரிவால் பேட்டி
ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,
காங்கிரசை நம்ப வேண்டாம் என்று மக்கள்

வெளிநாட்டு நிதிக்கான ஆதாரத்தை கேஜ்ரிவால் வெளியிடவில்லை: ஷிண்டே பேட்டி
ஆம் ஆத்மி கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து வந்த நன்கொடைகள் குறித்த தகவல்களை அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவிக்கவில்லை என்று மத்திய
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பெரும் ஊழல் புரிந்தது மன்மோகன் சிங் அரசுதான்: அத்வானி குற்றச்சாட்டு
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பிரதமர் மன்மோகன் சிங்கின் 10 ஆண்டு கால அரசு பெரும் ஊழல் புரிந்துள்ளது என்று பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி சாடியுள்ளார்.

ad

ad