புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 நவ., 2013

மும்பை டெஸ்ட்: ரசிகர்கள் ஆரவாரத்துடன் களமிறங்கிய சச்சின்!
மும்பையில்  இன்று நடந்த மேற்கிந்திய தீவு அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி ஆட்ட நேர முடிவில் இரண்டு விக்கெட்டை இழந்து 157 ரன்கள் எடுத்தது. தனது கடைசி டெஸ்ட் போட்டியில் சச்சின் களம் இறங்கி 38 ரன்களுடன் ஆட்டம் இழக்கமால் உள்ளார். 
 20 ஆண்டுகளில் இந்தியாவில் கிரிக்கெட், ஒரே ஒருவரால்தான் அதிகம் நேசிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஒருவர்... சச்சின் ரமேஷ் டெண்டுல்கர். இவரின் கிரிக்கெட் சகாப்தம் இதோ முடிவுக்கு வருகிறது! 
தெற்காசிய இளைஞர் மெய்வல்லுநர் போட்டி:

பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம் இலங்கைக்கு இரண்டாம் இடம்

2015 இளைஞர் விளையாட்டு விழா இலங்கையில்
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான இளைஞர் மெய்வல்லுநர் போட்டியில் 52 பதக்கங்களைக் குவித்து இந்தியா முதலிடம் பிடித்தது

டெண்டுல்கரின் 200 வது டெஸ்ட்;  மும்பையில் இன்று தொடக்கம்

இந்தியா- மே.தீவு மோதும் 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. கொல்கத்தா மைதானத்தில் தனது 199 வது டெஸ்ட்டை

ஆட்டோ 300 மீற்றர் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து: 3 பேர் பலி இருவர் காயம்
 

பண்டாரவளை, கும்பல்வெல அஸபுவ சந்தியில் இடம்பெற்ற ஆட்டோ விபத்தில் மூவர் உயிரிழந்துள் ளதோடு, இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித் தனர்.

 
பொதுநலவாய உச்சிமாநாட்டிற்கு தயார் நிலையிலுள்ள கொழும்பு ‘மஹிந்த ராஜபக்ஷ தாமரைத் தடாகம்’ கலையரங்கின் தோற்றம். 
தமிழர்கள் மீது அக்கறை இருந்தால் ...

நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தமிழ்நாடு உதவ வேண்டும்

இலங்கைத் தமிழ் மக்கள் மீது தமிழ்நாட்டுக்கு உண்மையான அக்கறை இருப் பின் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துச் செல்லும் நேர்மையான நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு உதவ வேண்டும். அதைவிடுத்து இங்கு தனிநாடொன்றை உருவாக்க

செனல் 4 தயாரிப்பாளரை நாட்டுக்குள் அனுமதித்தது ஊடக சுதந்திரத்தின் உச்சகட்டம்

மனச்சாட்சிப்படி செயற்படின் உண்மைகளை உணர்வார்; விரோதமாக செயற்பட்டால் சவால்களை எதிர்கொள்ள நேரிடும்
மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசு மறைக்க முயற்சி ; சர்வதேச மன்னிப்பு சபை
பொது சமூகத்தில் காணப்படுகின்ற அச்சுறுத்தல்களை நீக்கி அதனை முடிவுக்கு கொண்டு வர பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்பு சபை கோரியுள்ளது.
மீளக்குடியமர்த்த கோரி மூன்றாம் நாளாக தொடர்கிறது போராட்டம்
தம்மை மீளக்குடியமர்த்தக் கோரி வலி.வடக்கு மக்கள்  ஆரம்பித்துள்ள தொடர் உணவு விடுப்பு போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் ஆரம்பமாகியுள்ளது
நடிகர் குள்ளமணி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்

சென்னை கே.கே.நகரில் உள்ள அண்ணாநகரில் வசித்து வருபவர் நடிகர் குள்ளமணி (வயது 61). இவர் பல முன்னணி நடிகர்களுடன் பல படங்களில் நடித்துள்ளார். இவரது இயற்பெயர் சுப்பிரமணி. நடிப்புத்துறையில்
 ரஜினியின் ‘கோச்சடையான்’ ஜனவரி 10ம் தேதி ரிலீஸ்
ரஜினியின் கோச்சடையான் படம் ஜனவரி 10 ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசாகும் என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்காடு இடைத்தேர்தல் : சேலம் மாவட்டத்தில் 63 லட்சம் பறிமுதல்
ஏற்காடு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 4ந்தேதி நடக்கிறது. தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் நடந்து வருகிறது. தேர்தல் பிரச்சாரம்
சென்னை அருகே புயல் சின்னம் தீவிரம்
தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரம் அடைந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி உள்ளது.
 பாஜகவுடன் பாமக கூட்டணி
 


வரும் நாடாளுமன்றத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்து போட்டியிடுவோம் என கடந்த இரண்டு ஆண்டுகளாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் கூறிவந்தனர்.
போலீசாரின் அடக்குமுறை : இலங்கைக்கு எதிராககுமரியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் சந்தித்த கொடுமைகள்! 
காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடத்தக்கூடாது. மீறி நடந்தால் காமன்வெல்த்கூட்டமைப்பில் இருந் து இந்தயா வெளியேற வேண்டும். இந்தியா வெளியேற மறுக்கும் பட்சத்தில் அனைத்து
இலங்கையின் மாநாட்டில் குறைந்த எண்ணிக்கை தலைவர்கள்!- கனடா மகிழ்ச்சி
இலங்கையின் பொதுநலவாய நாடுகள் அமர்வுக்கு ஆகக்குறைந்த தலைவர்களே பங்கேற்பது குறித்து கனடா மகிழ்ச்சி வெளியிட்டுள்ளது. 
சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக இன்று வவுனியாவிலும் ஆர்ப்பாட்டம் - கலும் மக்ரேவிற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு
இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஆவணப் படத்தினை வெளியிட்ட சனல் 4 ஊடகவியலாளருக்கு எதிராக வவுனியாவில் ஆரப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் இன்று மாலை 4.20 அளவில் சிறப்பு விமானம் மூலம் இலங்கை வந்தடைந்தார்.
இளவரசர் சார்ள்ஸ் அவரது மனைவி கமிலா பாக்கர் ஆகியோருடன் 56 அரச பிரதிநிதிகளும் இலங்கை வந்துள்ளனர் என எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
1973 ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சகல பொதுநலவாய நாடுகளின் மாநாடும் பிரித்தானிய மகா ராணி இரண்டாவது எலிச பெத் தலைமையிலேயே நடைபெற்றன. அவர் கலந்து கொள்ளாத முதல் மாநாடு கொழும்பில் நடைபெறும் மாநாடாகும்.
மூன்று நாள் அரச முறை பயணமாக இலங்கை வந்துள்ள இளவரசர் சார்ள்ஸ், பிரித்தானிய மகா ராணிக்கு பதிலாக பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதுடன் எதிர்வரும் 16 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார்.
இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் அவர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தங்கியிருக்கும் இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் கண்டி, நுவரெலியா ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்ய உள்ளனர்.
அத்துடன் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்ளும் சில தலைவர்களை சந்திக்க உள்ள இளவரசர் முக்கிய விடயங்கள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.
அதேவேளை கொழும்பில் உள்ள தேசிய அரும்பொருட் காட்சியகம், பிரிட்டிஷ் கவுன்சில் ஆகியவற்றும் இளவரசர் தம்பதி விஜயம் செய்ய உள்ளது.
நெடுந்தீவின் விவசாய, சூழற் பாதிப்புக்கள் குறித்து அமைச்சர் பொ.ஐங்கரநேசன் களஆய்வு
நெடுந்தீவின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, நீர்ப்பாசனம், சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகள் பற்றியும் இவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் அறிந்து கொள்ளும் நோக்குடன் மேற்படி துறைகளுக்குப் பொறுப்பான வடக்கு மாகாண அமைச்சர் பொ.ஜங்கரநேசன் இன்று நெடுந்தீவில் பல்வேறு தரப்பு மக்களையும் சந்தித்துக்
காமன்வெல்த் மாநாட்டுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பிபிசியின் வீடியொ செய்தியாளர் குழு, அங்கு படம்பிடிப்பதில் சிக்கல்களைச் சந்தித்துள்ளது.

மாநாட்டு வைபவத்தில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களை படம்பிடிக்க அவர்கள் அருகில் செல்ல முயல, இலங்கை அதிகாரிகள் எமது செய்தியாளர் குழுவை தடுத்துள்ளார்கள்.

எங்கள் ஊடக சுதந்திரத்தில் ஏன் தலையிடுகின்றீர்கள் என்று எமது செய்தியாளரான ஜேம்ஸ் றொபின்ஸ் திரும்பத் திரும்பக் கேட்டும் இலங்கை அதிகாரிகள் அவர்களை தடுத்துள்ளார்கள்.

இது குறித்த காணொளியை நேயர்கள் இங்கு காணலாம்.

இன்றைய மூன்றாம் நாள் போராட்டத்திலும் பல்வேறு அச்சுறுத்தல்களையும் தாண்டி நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கஜதீபன், சித்தார்த்தன், ஆகியோரும் , பிரதேச சபை தவிசாளர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , செ.கஜேந்திரன் எனப்பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அதிமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி கொல்ல முயற்சி; அதிர வைக்கும் காட்சிகள் (வீடியோ இணைப்பு)
மதுரை மேலூரைச் சேர்ந்த அ.தி.மு க பிரமுகர் பாஸ்கரன். இவர் அதிமுகவில் அம்மா பேரவை என்ற அணி தோன்றுவதற்கு முக்கியமானவர்களில் ஒருவர் இவர் மீது கட்சியில் பல்வேறு அதிருப்திகள் இருந்து வந்ததால் அக்கட்சியில் இருந்து ஓரம் கட்டப்பட்டவர்.
தெற்காசிய ஜூனியர் தடகளம்: பதக்கப்பட்டியலில் இந்தியா முதலிடம்
ஜார்க்கண்ட் மாநி லத்தில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான ஜூனியர் தடகளப் போட் டியில் 52 பதக்கங்களைக் குவித்து இந்தியா முத லிடம் பிடித்தது.

வைகோ, சீமான் மீது கைது நடவடிக்கை இல்லை!
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில் பழ.நெடுமாறன்  உட்பட 83 பேர்  கைது செய்யப்பட்டு, கீழ வாசலில் உள்ள மக்கள் மன்றத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
பழ.நெடுமாறன் மீது வழக்கு - நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்த நடவடிக்கை
தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் விவகாரத்தில் பழ.நெடுமாறன் மீது வழக்குப் பதிவு செய்யட்டுள்ளது.


தஞ்சையில் முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் புறம்போக்கு நிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது என்று கூறி இன்று சுவர் இடித்து தள்ளப்பட்டது.
பழ.நெடுமாறன் உள்ளிட்ட 83 பேர் திருச்சி சிறையிலடைப்பு

தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றம் இடிப்புக்கு எதிர்ப்பு காட்டிய விவகாரத்தில் உலக தமிழர் பேரவை அமைப்பினர் பழ.நெடுமாறன், அயனாவரம் முருகேசன், பொன்னிறைவன், பொன்.வைத்தியநாதன்
தொலைக்காட்சி விவாதத்தில் விபரீதம் உண்டாக்கிய நேயர் :
டிவி அதிபர் வீட்டில் போலீஸ் நுழைந்தது
சத்யம் தொலைக்காட்சியில் இன்று இரவு ‘’சத்யம் - அது சாத்தியம்’’நிகழ்ச்சி 8.10 மணியில் இருந்து 8.30 மணி வரை சென்றது.  முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் அகற்றியது சரியா? தவறா? என்ற விவாதம்
பிரிட்டன் பிரதமர் கமருனுக்கு இலங்கை ஊடக அமைச்சர் கண்டனம்! நாட்டின் எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்பட மாட்டாது!– அரசாங்கம் [ பி.பி.சி ]

இலங்கை ஜனாதிபதி இதைச் செய்யவேண்டும், அதைச்செய்ய வேண்டும் என்று கூற, கொமன்வெல்த் உச்சி மாநாட்டுக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமருன் அழைக்கப்படவில்லை என்று இலங்கை அரசு தெரிவித்திருக்கிறது.
இலங்கை அரசாங்கத்தின் சூழ்ச்சி வெற்றி: கொழும்பு திரும்பினார் கெலும் மக்ரே
சனல் 4 தொலைக்காட்சியின் ஊடகவியலாளர்களுக்கு எதிராக அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தினைத் தொடர்ந்து அவர்களின் வவுனியா பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ad

ad