புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஏப்., 2020

இப்போதுவரை கொரோனா இறப்புக்கள்

உலகம் 72638
இத்தாலி16523, ஸ்பெயின் 13169, அமெரிக்க 10254 , பிரித்தானியா5383 ,பிரான்ஸ்8093, நெதர்லாந்து1874, பெல்ஜியம்1632, ஜெர்மனி1612,  சீனா3335, ஈரான் 3739 , சுவிஸ்764 , கனடா 293, இந்தியா 111, இலங்கை 05,
ஒரே ஒரு முட்டாள்தனமான போதகரால் மட்டுமே யாழ்ப்பாணம் இப்படி அல்லோலகலப்படுகிறது சுவிஸ் போதகரால் எழுந்துள்ள நிலைமை : யாழில் தீவிரமடைந்தால் பெரும் சிக்கல்
சுவிஸ் ஜோனா நகரில் கொரோனாவால்  இறந்த  லோகநாதனை     -  டெலிசூறிச் தொலைக்காட்சி  நிகழ்ச்சியில் அம்பலம் நீரிழிவு நோயாளியான  லோகநாதன் இருமல்  கண்டபோதே குடும்பவைத்தி யரை நாடி இ ருக்கிறா ர்  ஆனால்  வைத்தியர் கவலையீனமாக  சாதாரண இருமலுக்கான மருந்து  தருவேன்  என்று  கூறி அனுப்பி இருக்கிறியார் . தறபோதைய நடைமுறைகளின் படி  கொரோனா அறிகுறி உள்ள ஒருவரை வேறு ஒரு வருத்தம் இருக்கும் பட்ஷத்தில்  உடனே  மருத்துவமனைக்கு  அனுப்பி இருக்க வேண்டும் என் இப்படி  அக்கறையின்றி  நடந்துகொண்டார்  என  கேள்வி எழுப்படுள்ளது வைத்தியர்கள் சங்கம்  இது தொடர்பாக  நடவடிக்கை எடுக்க உள்ளது 

ஏரிஎம் கருவி வாகனங்கள் மூலம் வாடிக்கையாளருக்கு சேவை

தமது வாடிக்கையாளர்கள் பணம் பெற வசதியாக சில வணிக வங்கிகள் ஏரிஎம் கருவிகள் பொருத்திய வாகனங்களை தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தி வருகின்றன.

ஆவா வினோதன் பிறந்தநாளில் சுற்றி வளைப்பு; மூவர் கைது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பல்வேறு வன்முறைகளுடன் தொடர்புடைய வன்முறைக் கும்பலில் ஆவா வினோதன் என்று பொலிஸாரால் விழிக்கப்படும் நபரின் பிறந்தநாளைக் கொண்டாடிய மூவர் இராணுவத்தினரால்
சீனாவில் இருந்து  சுவிஸுக்கு கொரோனா பாதுகாப்பு உபகரணங்களை   வந்துள்ளன நேற்று சூரிச்சுக்கு ம் இன்று  ஜெனீவாவுக்கும்  விமானங்கள் இந்த பொதிகளை சுமந்து வந்துள்ளன 
ஜெர்மனி ஐரோப்பிய யூனியன் நாடுகளான  இத்தாலி(44) பிரான்ஸ்(130) நெதர்லாந்து 824)ஆகிய நாடுகளில் இருந்து 198 நோயாளிகளை  எடுத்து வந்து பராமரிக்கிறது 
சுவிஸ் பீல்  நகர சாரணர் கழக முகாமை  25  வீடற்றவர்களுக்காக இந்த  அவசரகால நிலையில் கொடுத்து உதவி உள்ளார்கள் 
சுவிஸ் பேர்ண்   நகரை அண்டியுள்ள  கெல்லன்ப்ரரோக் காம் என்றழைக்கப்படும் பழமை வாய்ந்த ஹெர்ன்ஸ்வாண்டன் (Herrnschwanden )  அகதிகளி ன் முகாமில் ஒரு  கணவன் மனைவிக்கு  தொ ற்று இருந்தமையால்   அந்த  முகாம்  த னிமைப்படுத்தப்பட் டுள்ளது  55  பேர்  அங்கு  வாழ்ந்து வருகின்றனர் 
சுவிஸ்  -தொற்றுக்கைளின் எண்ணிக்கை  குறைவது போல தெரிகிறது சனியன்று 783 நேற்று 574 இன்று 500  ஆகியுள்ளது பக்கத்து நாடான  ஆஸ்திரியாவில் அவசரகால நிலையை ஏப்ரல் மத்தியில்  தளர்த்த வுள்ளனர் தொடர்ந்து மே  ஆரம்பத்தில் முழுத்தடைகளையும் நீக்கப்படலாம்  மே  மத்தியில் வழமைக்கு கொண்டுவர  நினைக்கிறார்கள் சுவிசும்  அதை  போல்  நடைமுறைக்கு கொண்டுவர முடியுமா என ஆலோசிக்கிறது 
சுவிஸ் ஆர்க்காவு மாநிலம்
அவசரகால விதிகளின் தடைக்கு மக்கள் கட்டுப்படாததால் ஆர்கோ கன்டோனல் காவல்துறையினர் பல பணத்தண்டனை விதிக்க வேண்டியிருந்தது.
குறிப்பாக இளம் குழுக்கள் வழிமுறைகளைப் பின்பற்றவில்லை.
ஆர்காவ் காவல்துறையினர் கடைகளையும் வணிகங்களையும் பற்றி புகாரளிக்க வேண்டியிருந்தது.
சோலோதர்ன் மண்டலத்தில், வெளியில் ஏராளமானவர்களும் இருந்தனர், ஆனால் பெரும்பாலான மக்கள் வழிகாட்டுதல்களைக் கடைப்பிடித்தனர்-காவல்துறை
கொரோனா  
  உலகம்  .தொற்றுக்கள் 12 லட்சத்து 89 ஆயிரத்து  380 இ றப்புக்கள் 70 590 தொற்றுக்கள் / அமெரிக்கா  3 லட்சத்து 37 ஆயிரத்து 971  .இறப்புக்கள் 9654
 சுவிஸ்  போன்று பிரான்சில் நெருக்கடி நீடிக்கும் வரை நிதி உதவி! - நிதி அமைச்சர் உறுதி

பிரான்சில் தற்காலிக வேலையிழந்தோருக்கான இழப்பீடு 'நெருக்கடி நீடிக்கும்' காலம் வரை வழங்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
சுவிஸ்   சூரிச் மாநிலத்தில்மக்கள்  அவசரகால விதிகளை  கடைபிடிக்கவில்லை  இதனால்  உச்ச தொற்றுக்குள்ளான மாநிலங்களில்  சூரிச்சும் இடம்பிடித்துள்ளது 

யாழில் காவல்துறையிடம் வசமாக சிக்கிய 10 பெண்கள் உட்பட்ட 37 பேர்

ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த நிலையில் யாழ்.நகருக்குள் காரணமில்லாமல் நடமாடிய 10 பெண்கள் உள்ள டங்கலாக 37 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாகனங்கள் பறிக்கப்பட்டுள்ளது

கனடாவில் அடித்து கொலை செய்யப்பட்ட யாழ். தமிழர்

கடனாவின் Scarboroughவில் நந்தா உணவகத்திற்கு முன்பாக (Finch & Bridletowne) ஞாயிற்றுக்கிழமை மாலை ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் மரணமடைந்தவர் தமிழர் என நண்பர்கள் மூலம் உறுதியாகின்றது.

யாழ்.பொன்னாலை சமுர்த்தி அலுவலகத்தில் தவம்கிடந்த மக்கள்

யாழ்ப்பாணம் - பொன்னாலை கிராமத்தில், 170 சமுர்த்தி அலுவலகத்தில் இன்று (06) காலை 8.30 மணிதொடக்கம் சமுர்த்தி பயனாளிகள் சமுர்த்தி கொடுப்பனவுக்காக தவம் கிடந்தபோதும் சமுர்த்தி உத்தியோகத்தர் 11.00 மணிவரை வரவில்லை

கனடாவில் COVID-19 தாக்கத்தால் தமிழ் வைத்தியர் ஒருவர் பலி

திலகன் என அழைக்கப்படும் 74 வயதான அன்ரன் செபஸ்டியன் என்பவரே மரணமடைந்துள்ளார். Ontario மாகாணத்தின் Kingston வைத்தியசாலையின் ஆலோசகரான இவர் மரணமடைந்துள்ளார்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளான பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சீனாவில் கண்டறியப்பட்ட கொரொனா வைரஸ், உலகம் முழுவதும் சுமார் 208 நாடுகளில்

பிரித்தானியர்கள் சிலர் இன்னும் திருந்தவில்லை..! நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் வேதனை

பிரித்தானியாவில் சிலர் தேவையில்லாமல் வெளியே செல்வதன் மூலம் ஊரடங்கு சட்டங்களை மீறுகிறார்கள் என்பது நம்பமுடியாதது என்று நாட்டின் சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் கூறியுள்ளார்.
தாயக தமிழர்களே  சிந்தியுங்கள் .செயல்படுங்கள் .பலமான அத்திவாரமொன்றை இப்பொழுதே  இடுங்கள்
------------------------------------------------------------------------------------
கொரோனாவின் தாக்கம் இன்னும் 2-3 மாதங்களில் முடிவடையலாம் .இருந்தாலும்  அதனால்  உண்டாகப்போகும்  பொருளாதார வீழ்ச்சி  ,மீண்டும் கட்டியெழுப்பும் திறன்  கேள்விக்குறியாகவே  பலம் வாய்ந்த மேற்கத்தைய நாடுகளில் காணப்படுகின்றது . பழைய நிலைக்கு திரும்ப  குறைந்தது 10  வருடங்களாகும் .  அத்தோடு இதட்கான சீர்திருத்த திட்ட்ங்கள் பல புதிதாக முன்னெடுக்கும் பட்ஷத்தில் சடட நடைமுறைகள் மாற்றப்படலாம் .  ஓய்வொஓதியம்  வேலையற்றோருக்கான கொடுப்பனவு சமூக சேவை கொடுப்பனவு  என பலவற்றில்கை வைக்கும்  நிலை  உண்டாகும் .  வளர்ச்சியடைந்த  உலகின் முதலீடாது நாடுகளிலேயே இந்த நிலை என்றால் இலங்கை போன்ற நாடுகளின்  கதி  கஸ்டமானது
புலம்பெயர் தமிழர்களில்   தாயகம் விட்டு  வந்து குடியேறிய முதல் தலைமுறை  60 வயதுகளின்  ஆரம்பத்துக்கு வந்துவிடடார்கள் . அதாவது  ஒய்வு பெறு ம் காலத்துக்குள் பிரவேசிப்பதால் அவர்களின்  வருமானம் குறைவடையும்  . புலம்பெயர் தமிழரிடையேயும் வேலை  இழப்புக்கள் சம்பளக்குறைப்பு  ஒய்வு நிலை போன்ற காரணிகளால்  பொருளாதார  வளம்  குறையும்.ஆதலால்  புலம்பெயர் தமிழரின் பொருள்வளம் தாயகம் நோக்கி நகர்வது   பெரிதாக குறைவடையும் .
 கடந்த  30  வருடங்களுக்கு மேலாக  இலங்கை தமிழரின் பொருளாதார அத்திவாரம்  புலம்பெயர் தமிழரையே  நேரடியாகவோ மறைமுகமாகவோ  தாங்கி நிக்கிறது  இலங்கை பொருளாதாரம் கூட  அப்படி தான் பெரும்பாலும்
புலம்பெயர் தமிழரின் ஆதரவு  குறையுமிடத்து  தாயகத்தமிழரிடையே  வேலையின்மை பட்டினிச்சாவு வறுமை தாண்டவம்  தாராளமாக . தாயக உறவுகளே இப்போதிருந்தே அத்திவாரமிடுங்கள் .   சுயதொழில் ,விவசாயம் மீன்பிடி கால்நடைவளர்ப்பு  அரச தனியார் தொழில் வாய்ப்புக்கள் என  உங்களை  நாட்டிடம்  கொள்ள  வைத்து  முயட்சி எடுத்து  உங்கள் வாழ்வை  வளம்பெற அத்திவாரமிடுங்கள்
பொழுதுபோக்கு விஞ்ஞான வளர்ச்சிகள் தரும் சோம்பேறி வாழ்வை  உதறி உங்களை நீங்களே  மாற்றிக்கொளுந்தங்கள்   நல்ல கல்வி வாய்ப்பு உள்ள   இப்போதைய நிலையில்   தரமான உயர்கல்வியை  கற்றுக்கொள்ளுங்கள்  புலத்து தமிழறிவும் ஆதரவில்  வாழும் பழக்கத்தை அறவே   விட்டுத்தள்ளுங்கள் .
ஆடம்பரமான  வசதியான  செலவழித்து  வாழும் வாழ்வை விட்டு  புரட்சி செய்யுங்கள்
  சேமிக்க பழகி கொள்ளுங்கள் அன்றாடம் உழைப்பதை சேமிக்க பழகுங்கள்
அரசாங்கத்தின் வீட்டுவசதி  சமுர்த்தி வசதி வங்கிகளின் கடன் வசதி  என்பவற்றை  உண்மையான  முன்னேற்றத்துக்கு  பயணப்படுத்துங்கள் நுண்கடன் போன்ற சீரழிக்கும் திட்ட்ங்களுக்கு நுழைந்து விடா தீர்கள்

முக்கியமாக  மதுப்பழக்கம் போதைவஸ்து பாவனை கலாசார சீரழிவுகளை  அறவே  கைவிடுங்கள் .  திருமண பந்தத்தை எமது கலாசார, மத வழிகாட்டல்கள் அடிப்படையில்  நல்லறமாக  கொண்டு  நடத்துங்கள்
இந்த கட்டுரையை பதிந்து வைத்துக்கொள்ளுங்கள் அல்லது  நெஞ்சிலே நிறுத்தி வைத்து கொள்ளுங்கள் இன்னும் ஐந்து ஆண்டுகளில்  இதனை படித்ததில் பலனை அடைவதை உணர்வீர்கள் .

சுவிஸில் கொரோனா தோற்று வரைபு  இப்போது இறங்குவரிசைக்கு  செல்கிறதா ?  கொரோனா  தோற்று பரவ  ஆரம்பித்து  2-3 வாரங்களின் பின்னர்  ஒரு உச்சகட்த்தை அடைந்து  பின்னர்  குறைந்து செல்லும் என்ற கணிப்பில் சுவிஸின் வரைபு  அந்த வித  நம்பிக்கையை  உண்டாக்கியிருக்கிறதாக  விமர்சகர்கள் கருதுகிறார்கள் 

ஜேர்மனியில் ஒரேநாளில் 5,600பேருக்கு கொரோனா உறுதி! நாட்டைக் காக்க தாயகம் திரும்பிய இளம் மருத்துவர்கள்

ஜேர்மன் நாட்டில் கொரோனா தொற்று ஒரே நாளில் 5,600பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெர்மனி  மிகவும் சிறப்பாக செயல்படுகிறது தொற்றுக்குள்ளானோர் தொகை 98765  ஆனாலும் இறந்தோர் தொகை 1524 .அட்புதமாக கட்டுப்பாடில்  வைத்துள்ள நாடு ஜேர்மனி 
சுவிஸில் இன்று  தொற்றுக்கு  உள்ளாகியோர்  தொகை (541) குறைந்துள்ளது  மொத்தம் 21065இறப்புக்கள் 714

ad

ad