தப்பிப் பிளைத்தது நியூசிலாந்து : போராடித் தோற்றது ஸ்கொட்லாந்து
நியூசிலாந்து டன்டின் மைதானத்தில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஆரம்பமாகிய உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஸ்கொட்லாந்து அணியும்,நியூசிலாந்து அணியும் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து 36.2 ஓவர்களில் 142 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தவித்தது.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து 24.5 ஓவர்களில் 146 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து ஸ்கொட்லாந்திடம் தப்பிப் பிளைத்தது.
இறுதிவரை போராடிய ஸ்கொட்லாந்து துரதிஸ்டவசமாக நியூசிலாந்திடம் தோற்றது