புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

22 நவ., 2015

அரசியல் கைதிகள் விடயம் . சக்தி மின்னல் நிகழ்ச்சியில் கே வி தவராசா


யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் யாழ். உதயன் பத்திரிகைக்குச் சென்று அங்கு உதயன் குழுமத்தின் தலைவரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஈ.சரவணபவனை சந்தித்தார். குறித்த சந்திப்பின் போது கடந்த காலத்தில் உதயன் பத்திரிகைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட தாக்குதல், மற்றும் ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பில் கேட்டறிந்து கொண்டதுடன் தாக்குதல் இடம்பெற்ற பகுதிகளையும் பார்வையிட்டார் சமந்தா பவர். அதன்பின்னர் உதயன் குழுமத் தலைவர் ஈ.சரவணபவனை சந்தித்துக் கலந்துரையாடினார். குறித்த கலந்துரையாடலின் போது சமந்தா பவர் கருத்து தெரிவிக்கையில், நானும் ஒரு ஊடகவியலாளர் தான். அரச வலுப்படுத்துவதில் பத்திரிகையில் உள்ள ஒவ்வொருவரும் முக்கிய பங்காற்றுகின்றீர்கள். கடந்த காலங்களில் நீங்கள் எதிர்கொண்ட பிரச்சினைகளை நான் அறிவேன். உங்களுடைய தைரியத்தை கண்டு வியப்படைகிறேன். கடந்த காலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் பொறுப்புக் கூறுவதை உறுதி செய்ய வேண்டும். நான் ஒரு அரசை விமர்சிப்பதோ, அல்லது அரசு பக்கம் இருந்து கொண்டு விமர்சனங்களை எதிர்கொள்வதோ இரண்டுமே முக்கியம். அரச அதிகாரிகளுக்கு தெரியாத விடயங்கள் கூட நீங்கள் அறிந்து வைத்திருப்பீர்கள். நீங்கள் குமிழ்களை உடைப்பவராகவும் மக்களின் உரிமைக்காக போராடுபவர்களாகவும் இருக்கிறீர்கள். அதுமட்டுமல்ல எங்களுடைய நாட்டில் பத்திரிகைத்துறை மிகவும் கடினம் ஆனால் அங்கு பாதுகாப்பு உண்டு. ஆனால் இங்கு பாதுகாப்பு பிரச்சினை இருந்தும் தொடர்ந்தும் மக்களுக்காக குரல் கொடுக்கிறீர்கள்.நீங்கள் செய்த தியாகம் அளப்பெரியது. இதனை நினைத்து நான் இன்னமும் வியப்படைகிறேன் என்றார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கருத்துக்களுக்குத் தலையாட்டும் பொம்மை எதிர்க்கட்சித் தலைவர் எமக்கு தேவையில்லை. அதன் காரணமாகவே நாங்கள் தனி

கடந்த காலங்களில் ஏற்பட்ட சம்பவங்களுக்கு அரசு பொறுப்புக் கூற வேண்டும் : உதயனில் சமந்தா பவர்

யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தரப் பிரதிநிதி சமந்தா பவர் யாழ். உதயன் பத்திரிகைக்குச் சென்று அங்கு உதயன்

நாகதீபவின் பெயரை மாற்றுவதை நானும் எதிர்க்கிறேன்! சம்பந்தன் வலியுறுத்தல்


நாகதீப என்ற பெயரை நயினாதீவு என்று மாற்றம் செய்வதை தானும் எதிர்ப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சி பொறியியல் பீட புதிய கட்டடத் தொகுதி திறப்பு


யாழ். பல்கலைக்கழகத்தின் 110 மில்லியன் ருபா செலவில் 230 மாணவர்கள் தங்கக் கூடிய விடுதிக் கட்டிடமும், கிளிநொச்சி அறிவியல்

வட மாகாண இராணுவ பிரசன்னம் குறைக்கப்பட வேண்டும்!- சமந்தாவிடம் விக்னேஸ்வரன் கோரிக்கை


வட மாகாணத்திலுள்ள இராணுவ பிரசனத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிட பிரதிநிதி சமந்தா பவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணம், கச்சேரிக்கு அருகில் உள்ள ரயில் பாதுகாப்பற்றகடவையில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.


கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கடுகதி ரயில், குறித்த ரயில் கடவைக்கு அருகில் வைத்து காரொன்றுடன்மோதியுள்ளது.
தமிழ் ஈழம் அமைக்கப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்! மலேசிய பன்னாட்டுக் கருத்தரங்கில் வைகோ முழக்கம்
[ சனிக்கிழமை, 21 நவம்பர் 2015, 05:54.50 AM GMT ]
மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் தலைநகரில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் இன்று (21.11.2015) காலை 9.00 மணிக்குத் தொடங்கியது.
(International Forum on Human Rights violations in Sri Lanka) பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங் கருத்து அரங்கைத் தொடங்கி வைத்துப் பேசுகையில், திரு வைகோ அவர்கள் மலேசியா வருவதற்கு விசா கொடுக்காமல் தடுக்க
முயன்றார்கள்.
அடுத்த முறை அவர் மலேசியாவுக்கு வரும் போது இப்படி ஒரு பிரச்சினை எழுமானால், வைகோ பினாங்கு அரசு விருந்தினராக அழைக்கப்படுவார். அப்பொழுது கட்டாயம் விசா கொடுத்தே ஆக வேண்டும். யாராலும் அவரது வருகையைத் தடுத்து நிறுத்த முடியாது என்று குறிப்பிட்டார்.
அடுத்து உரையாற்றிய, தொடர்ச்சியாக 25 ஆண்டுகள் மலேசிய நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவரும், தற்போது மலேசிய ஜனநாயக செயல் கட்சியின் தலைவருமான லிம் கிட் சியாங்க் அவர்கள் பேசுகையில், பல தடைகளைக் கடந்து திரு வைகோ அவர்களை இந்தக் கருத்து அரங்கில் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அடுத்து வைகோ ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு:
தமிழ் ஈழம் அமைக்கப் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் பினாங்கில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில் வைகோ
மலேசிய நாட்டின் பினாங்கு மாநிலத் தலைநகர் ஜோர்ஜ் டவுணில், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் என்ற பொருளில் நடைபெற்ற பன்னாட்டுக் கருத்தரங்கில், மறுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் ஆற்றிய சிறப்புரையின் மையக் கருத்துகள்:
இந்தப் பன்னாட்டுக் கருத்தரங்கை வெகு சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி இருக்கின்ற, பினாங்கு மாநிலத் துணை முதல்வர் பேராசிரியர் இராமசாமி அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
கடந்த 2014 நவம்பர் மாதம் இங்கே அனைத்துலகத் தமிழர் மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய அவருக்கு உலகத் தமிழர்கள் அனைவரும் தங்களது நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றார்கள்.
தமிழ் ஈழத்தில் மட்டும் அல்ல, உலகில் எந்தெந்த நாடுகளில் எல்லாம் தமிழர்கள் வசிக்கின்றார்களோ, அவர்களுடைய குரல்களையும் ஒடுக்குகின்ற முயற்சிகளில் இலங்கை அரசு மிகத் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றது. அதன் ஒரு கட்டமாகத்தான், இந்தக் கருத்தரங்கில் நான் கலந்து கொள்ளக் கூடாது என்பதற்காக, என் வருகையைத் தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டார்கள்.
மலேசிய அரசுக்கு எதிர்ப்புக் கடிதம் எழுதியதுடன், எனக்கு மலேசிய நுழைவு உரிமை மறுக்கக் கூடிய சூழ்நிலையை உருவாக்கி விட்டார்கள்.
ஆனால் அதன்பிறகு, அவர்களுடைய முயற்சிகளை முறியடிக்கின்ற வகையில், பேராசிரியர் இராமசாமி அவர்கள் நமது சதீஷ் முனியாண்டி, டேவிட் மார்சல் இருவரையும் கோலாலம்பூருக்கு அனுப்பி, துணைப் பிரதமர் மற்றும் அமைச்சர்களைச் சந்தித்து, நிலைமையை எடுத்துக் கூறச் செய்தார்.
மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் நமது அன்பிற்குரிய திரு குலசேகரன் அவர்கள் பெருந்துணை புரிந்தார்கள். அதனி விளைவாகத்தான் இங்கே உங்கள் முன்னால் நான் நின்று கொண்டு இருக்கின்றேன்.
ஹோமர் எழுதிய உலிஸ்ஸஸ் காவியத்தில் ஒரு பொன்மொழியை இங்கே மேற்கோள் காட்ட விழைகிறேன்.
To Stirke, to strive, to Preserve, not to yield, come what may.
எத்தனைத் தடைகள் வந்தாலும் எதிர்கொண்டு முன்னேறு, வளைந்து கொடுக்காதே; தொடர்ந்து போராடு.
இன்றைக்கு எப்படி இலங்கை அரசின் முயற்சிகள் தோற்றுப் போனதோ, அதேபோல ஈழத்தமிழர் படுகொலைகளை மூடி மறைக்க அவர்கள் மேற்கொள்கின்ற அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போகும்;
ஐ.நா. முன்றிலில் தமிழ் ஈழத்தின் கொடி பட்டொளி வீசிப் பறக்கும் என்பதை நான் உறுதியாகக் கூற விரும்புகிறேன்.
மக்கள் ஆட்சி, மனித உரிமைகள் என்றெல்லாம் மூச்சுக்கு மூச்சு முழங்கிக் கொண்டு இருக்கின்ற சில நாடுகள், இரத்த வெறி பிடித்த இலங்கை அரசோடு கை கோர்த்துக் கொண்டு, ஈழத்தமிழர்களின் உரிமைகளைப் பறிக்கின்ற, மனித உரிமைகளை முடக்குகின்ற முயற்சிகளில் ஈடுபட்டுக் கொண்டு இருப்பதைக் கண்டு, உலகத் தமிழர்கள் வேதனை அடைந்து இருக்கின்றார்கள்.
1948ம் ஆண்டு டிசம்பர் 10ம் நாள் பிரகடனம் செய்யப்பட்ட மனித உரிமைகள் ஆவணம், உலக மாந்தர்கள் அனைவருக்கும் நம்பிக்கையைத் தருகிறது.
இந்த உலகத்திற்கே நாகரிகத்தைக் கற்றுத் தந்த தொல்குடிகள் தமிழர்கள். அத்தகைய பெருமை வாய்ந்த தமிழ் இனத்திற்கு, ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்துள்ள கொடுமைகளைப் பற்றிப் பேசி, நமது கவலையைப் பகிர்ந்து கொள்வதற்காக நாம் இங்கே கூடி இருக்கின்றோம்.
ஈழத்தமிழர்கள்தாம் இலங்கை மண்ணின் பூர்வ குடி மக்கள். அவர்கள் தங்கள் தாயகத்தின் உரிமைக்காக, தமிழ் ஈழத்திற்காக, தன்னாட்சிக்காகப் போராடிக் கொண்டு இருக்கின்றார்கள். ஐ.நா.மனித உரிமைகள் ஆவணம் வரையறுத்து இருக்கின்ற கோட்பாடுகளின்படிதான் அவர்கள் இந்தப் போராட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கின்றார்கள்.
அதன் 15 வது பிரிவு என்ன சொல்லுகிறது?
ஒவ்வொரு இனமும் தங்களுக்கான தனித்தேசிய அடையாளங்களைக் கொண்டு இருப்பதற்கான உரிமை உண்டு; அவர்களது தன்னாட்சி உரிமையை எந்தவிதத்திலும், எந்தச் சட்டங்களாலும் மறுக்க முடியாது என்று வரையறுத்துக் கூறுகிறது.
இந்தக் கருத்தை அப்படியே உள்வாங்கிக் கொண்டு ஐ.நா.மன்றம் பொதுப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கின்றது. 1960ம் ஆண்டு, ஐ.நா.மன்றத்தில் 15 கூட்டத்தொடரில், 947வது அமர்வின் போது நிறைவேற்றப்பட்ட 1514ம் எண் தீர்மானம் அதைக் குறிப்பிடுகிறது. அனைத்து இனங்களுக்கும் தன்னாட்சி உரிமை உண்டு என்பதை உறுதிப்படுத்துகிறது.
மனித உரிமைகளை ஆயிரம் அடி ஆழத்தில் குழிதோண்டிப் புதைக்கின்ற வகையில் இலங்கை அரசு மேற்கொண்டு வந்த அடக்குமுறைகள், படுகொலைகளின் விளைவாகத்தான், தமிழ் ஈழத்தின் இளைய தலைமுறை, குறிப்பாக மாபெரும் தலைவன் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகள் ஆயுதப் போராட்டத்தைக் கையில் எடுத்தனர்.
அத்தகைய ஆயுதப் போராட்டத்தை ஐ.நா. மன்றம் பிரகடனம் செய்த மனித உரிமைகள் சாசனமே ஆதரிக்கின்றது. அந்தப் பகுதியை மட்டும் நான் இங்கே சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
Whereas it is essential, if man is not to be compelled to have recourse, as a last resort, to rebellion against tyranny and oppression, that human rights should be protected by the rule of law.
இன்றைக்கு மனித உரிமைகள் ஆணையம் எப்படியெல்லாம் நம்மை ஏமாற்றிக் கொண்டு இருக்கிறது என்பதைப் பட்டியல் இட்டுக் காட்ட விரும்புகிறேன்.
2009 ம் ஆண்டு மே மாதம் ஈழத்தில் நடைபெற்ற இறுதிக் கட்டப் போரின் போது, இரண்டு நாட்களில் ஒன்றரை இலட்சம் பேர்களைக் கொன்று குவித்தது சிங்கள இராணுவம். ஆனால், அடுத்த சில நாட்களில், அதாவது மே 27ம் தேதி நடைபெற்ற மனித உரிமைகள் ஆணையத்தின் 11வது சிறப்புக் கூட்டத்தில் இலங்கை அரசைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள். அந்தத் தீர்மானத்தை எழுதிக் கொடுத்ததே இலங்கைதான். அப்போது அந்த அவையில் இலங்கை ஒரு உறுப்பு நாடு அல்ல.
இந்தத் தீர்மானத்தை, இந்தியா உட்பட 29 நாடுகள் ஆதரித்தன,  12 நாடுகள் எதிர்த்தன, 6 நாடுகள் வாக்கு அளிக்கவில்லை.
ஆனால் பின்னர் தங்களுடைய தவறுகளை உணர்ந்து கொண்ட ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கி-மூன், இலங்கைப் படுகொலைகள் குறித்து விசாரிப்பதற்காக மார்சுகி தாருஸ்மன், ஸ்டீவன் ராட்னர், யாஸ்மின் சூகா ஆகிய மூன்று உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்றை நியமித்தார்.
அந்தக் குழு நடத்திய ஆய்வுகளின் அடிப்படையில் அளித்த அறிக்கையை இலங்கை அரசு ஏற்றுக் கொள்ள மறுத்தது.
எந்த ஒரு பன்னாட்டு விசாரணைக் குழுவையும் இலங்கைக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று மகிந்த ராஜபக்சே ஆணவத்தோடும், திமிரோடும் சொன்னான்.
மனித உரிமைகள் ஆணையம் நிறைவேற்றுகின்ற எல்லாத் தீர்மானங்களிலும், இலங்கையின் இறையாண்மையை, ஒருமைப்பாட்டை, தன்னாட்சி உரிமையைக் காப்பாற்ற வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்கள்.
சரி. இறையாண்மை என்றால் என்ன?
ஒவ்வொரு தேசிய இனமும், தங்களுக்கான தன்னாட்சி அரசை அமைத்துக் கொள்ளவும், தங்கள் நாட்டு எல்லைகளை வகுத்துக் கொள்ளவும் அதைப் பாதுகாப்பதற்குமான உரிமை உண்டு. அதுதான் இறையாண்மை.
ஆனால், தமிழர்களை அடிமைப்படுத்தி வைத்து இருப்பதுதான் சிங்களவர்களின் இறையாண்மையா? ஐரோப்பியர்கள் அந்த மண்ணில் கால் வைப்பதற்கு முன்பு, இலங்கை ஒரே நாடாக இருந்ததா?
வரலாற்றுக் காலந்தொட்டு அங்கே தமிழர்கள் தனி அரசு அமைத்து ஆண்டு வந்தார்கள். அது அவர்களது தனி நாடு, தமிழ் மக்களுக்கான அரசு. தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம். தங்கள் தேசிய இனத்தின் இறையாண்மையைக் காப்பாற்றிக் கொள்ளு

ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர சென்ற தமிழ் இளைஞர்கள் சிக்கினர்


ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் சேர துருக்கிச் சென்ற 2 தமிழக இளைஞர்கள் அங்கிருந்து இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்ட தகவல்கள் பரபரப்பை

உலக தமிழர் பேரவை உட்பட சில அமைப்புகளின் தடை நீக்கம்


விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஆதரவான சில அமைப்புகள் மற்றும் அந்த அமைப்புகளுடன் சம்பந்தப்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும்

மஹிந்த தரப்பின் ஒரு தொகுதியினர் மைத்திரியுடன் இணையத் தீர்மானம்


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு ஆதரவளித்து வந்த ஒரு தொகுதியினர், ஜனாதிபதி மைத்திரியுடன் இணைந்து கொள்ளத்

ad

ad