புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 செப்., 2013

 ஜனாதிபதி மஹிந்தவும் என்றோ ஒருநாள் போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுவார்; ஏழாலையில் கூட்டமைப்பு எம்.பி சரவணபவன் 
மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் எவரும் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை. இதன் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ­வும் என்றோ ஒருநாள் சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் முன் நிற்க வேண்டிவரலாம்.

நரேந்திர மோடியைவிட ஜெயலலிதாவே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்தது. அதில் பேசும்போது, ''இந்தியாவில் தற்போது பரபரப்பாக பேசிப்படும் ஒரு விஷயம் நரேந்திர மோடி தான். பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகத்தான் மோடி அறிவிக்கப்பட்டுள்ளாரே தவிர பிரதமர் ஆகவில்லை.

தமிழக பிஜேபியின் தலைவராகிறார் ரஜினி. மோடியை முன்னிறுத்தி ஜெயலலிதாவுடன் கூட்டணி. சோ மெகா திட்டம்

கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தார். அப்போது அவர்களின் சந்திப்பு எதனால் நடந்தது என்பது குறித்த தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.
சுயநிர்ணய அடிப்படையில் எமக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச பிரசாரக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் முழக்கம் !!!

த.தே.கூட்டமைப்பு வன்முறை பாதையை ஒருபோதும் விரும்பவில்லை. வன்முறைகளினால் தமிழர்களே அதிகம் பாதிக்கப்படுபவர்கள். சுயமரியாதையுடன் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் நியாயமான
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முழுமையான வெற்றிக்கு, உலக தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் !!!

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி ஒன்றை பதிவு செய்வது மிகவும் முக்கியமாகும். இந்த நிலையில் புலம்பெயர்ந்த நிலையில் உள்ள இலங்கை தமிழர்கள் தங்களின் உறவினர்கள் நண்பர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வலியுறுத்த வேண்டும். இந்த தேர்தலில் யாரும் வாக்களிக்காதிருக்க கூடாது.

சுரேன் சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
உலக தமிழர் பேரவை
இலங்கையின் அநேகமான தெற்கு ஊடகங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயுத போராட்டத்தை கோருவதாக குறிப்பிடப்படுகின்றது. அநேகமான சிங்கள நாளிதழ்களில் இவ்வாறான ஓர் நிலைப்பாட்டை சித்தரிக்கக் கூடிய வகையில் செய்திகள் பிரசுரமாகின்றன.
அரசாங்கத்திற்கு சொந்தமான பத்திரிகைகள் மட்டுமன்றி தனியார் ஊடகங்களும் இதேவிதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.

இதேவேளை, வடக்கிற்கு அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் ஆயுதம் ஏந்தி போராட நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வர


            ந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வினை மிக பிரமாண்டமாக சென்னையில் நடத்து கிறது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (ஃப்லிம் சேம்பர்). ஜனாதிபதி உட்பட தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய  4 மாநில முதல்வர்களும் கலந்து கொள்வதால் விழாவின் பிரமாண்டம் குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் இவ்விழா குறித்த சர்ச்சைகளும் ரெக்கைக் கட்டிப் பறக்கின்றன.



             ழப்பிரச்சினைகளில் ஆழமான அறிவும் விரிவான பார்வையும் கொண்டவர் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் சுதர்சனநாச்சியப்பன். சமீபத்தில்,சென்னை விமானநிலையத்தில் பத்திரிகை யாளர்களை சந்தித்த அவர், ""இலங்கை என்பது தமிழர் களின் பூமி.தமிழீழ கனவு அனைவரின் விருப்பம்'' என்று பகிர்ந்திருக்கிறார். சோனியா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவரான நாச்சியப்பனிடமிருந்தே தமிழீழம் குறித்த கருத்து வெளிப்பட்டிருப்பது தமிழ்த்தேசியவாதிகள் மற்றும் ஈழ ஆதரவாளர்களை உற்று கவனிக்க வைத்திருக்கிறது. அதேசமயம்,நாச்சியப்பனின் கருத்தை அறிந்து டெல்லி யும் அதிர்ந்துள்ளது. இந்த நிலையில், சுதர்ச்சன நாச்சியப்பனை தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.
ஐ.நா அறைகளுக்குள் பதறி ஓடும் இலங்கையின் முன்னாள் தூதுவர் தமரா குணநாயகம்: ச.வி.கிருபாகரன்
ஐ.நாவின் முன்னாள் தூதுவர் தற்போது ஒரு தூதுவர் என்ற மன நிலையில் அங்கும் இங்கும் அலைந்து உலக நாடுகளை ஏமாற்ற முயற்சிக்கிறார் என பிரான்ஸ் மனித உரிமைகள் நடுவகத்தின் இயக்குனர் ச.வி.கிருபாகரன் வழங்கிய செவ்வியில் குறிப்பிட்டார்.
கொலைகாரர்களை அழிப்பதற்கு மாகாண சபையை ஆயுதமாக்குங்கள்! ஈழத்தமிழரிடம் ஐ.நா முன்றலில் அறைகூவல்
தமிழர் தாயகத்தில் ஒட்டுக் குழுக்களையும் கொலைகாரர்களையும் அழிப்பதற்கு வடமாகாண சபையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றியடையச் செய்வது காலத்தின் கட்டாயம் என இன அழிப்பு கண்காட்சியை நடாத்திவரும் மருதையா லோகநாதன் (கஜன்) ஜெனிவாவின் ஐ.நா முன்றலில்


            ""ஹலோ தலைவரே... நாங்க பி.எம். வேட்பாளரை அறிவிக்க ரெடி, காங்கிரஸ் ரெடியான்னு சவால்விட்ட பா.ஜ.க முகாமி லேயே நெருக்கடி உண்டாயிடிச்சே?''

பிறேசில் - ஈழத்தவர் உதைபந்தாட்ட தெரிவு அணிகள் பிரான்சில் களமாட்டம்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உறுதுணை!!

பிரான்ஸ் வாழ் ஈழத்தவர் விளையாட்டு களத்தில் பிரான்சில் உள்ள பிறேசில் நாட்டு தெரிவு அணிக்கும் , ஈழத்தவர் தெரிவு அணிக்கும் இடையிலான உதைபந்தாட்ட ஆட்டமொன்று இடம்பெறவுள்ளது.
முல்லைத்தீவில் - வள்ளிபுணத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சி குண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு ஒருவர் பலி
முல்லைத்தீவில் - வள்ளிபுணத்தில் ஜக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு கட்சி குண்டர்கள் நடத்திய தாக்குதலுக்கு இலக்காகிய குடும்பஸ்தர் உயிரிளந்துள்ளார்.
கூட்டமைப்புக்கு எதிராக எந்த முறைப்பாடும் இல்லை – தேர்தல் ஆணையாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்று, சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் தேர்தல் மேடைகளில் பரப்புரை செய்து வருகின்ற போதிலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் எந்த முறைப்பாட்டையும்

வம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் கலந்துகொள்ளவுள்ளார்.
இதற்கு வருகை தரவுள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மட்டக்களப்பிற்கும் விஜயம் செய்யவுள்ளார்.

தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக் கோரி வக்கீல்கள் சாகும்வரை உண்ணாவிரதம்
சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்கக்கோரி முருகன், கயல்விழி, பகத்சிங் ஆகிய 3 வக்கீல்கள் திங்கள்கிழமை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர்.
தேர்தலுக்கு பின் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தை பயன்படுத்த கூடாது!- அரசு எச்சரிக்கை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தை ஆய்வு செய்த போது நாட்டை இரண்டாக பிளவுப்படுத்தும் பயணத்தை அந்த கட்சி மேற்கொண்டு வருவது தெரிவதாக அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
தமிழ் மக்கள் அனைவரும் தமிழ் தேசியத்திற்காய் போராடுபவர்களுக்கு வாக்களியுங்கள்! யாழ்.பல்கலை.மாணவர் ஒன்றிய
தமிழ் மக்களின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள அனைவரும் தமிழ் தேசியத்திற்காய் போராடுபவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் எனக் கோரி யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
கூட்டமைப்பின் வெற்றிக்கு தாயக உறவுகளை தூண்டுங்கள்: புலம்பெயர் மக்களுக்கு மாவை அறைகூவல்
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு தாயக மக்களை உந்துவதற்கு புலம்பெயர் தேசங்களில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இன்று உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என தெரிவித்தே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர  மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஐ.நா முன்றலில் பெருந்திரளான மக்களுடன் மாபெரும் கவனயீர்ப்பு
ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக்குரல் எழுப்பவேண்டும் என்னும் தலைவர் பிரபாகரன் அவர்களின் வார்த்தைக்கு இணங்க பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஐ.நா முன்றலில் இன்று ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துகின்றனர்.
கடும் மழையினையும் பொருட்படுத்தாது சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஐரோப்பிய நாடுகளிலிருந்து பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஐ.நா. முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு

ad

ad