புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஜூன், 2011


'தமிழ் ஈழத் தீர்மானம் போட்டால், அவர் உண்மையான புரட்சித் தலைவி!'' - ம.தி.மு.க. வழக்கறிஞர்கள் மாநாட்டில் 
[ புதன்கிழமை, 29 யூன் 2011, 06:07.11 AM GMT ]
தமிழ் ஈழம் வாங்கித் தருவேன் என்று நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சொன்னவர் ஜெயலலிதா. இப்போது அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவந்தால், அவரை உண்மையில் புரட்சித்தலைவி என்று ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்.
வழக்கறிஞர்கள் மாநாடு என்று கூடி வில்லங்​கமான பல விஷயங்களை பந்தி​வைத்துக் கலைந்து உள்ளது ம.தி.மு.க. நடத்திய திருச்சி மாநாடு! ஜுன் 25-ம் தேதி திருச்சி - ஹோட்டல் ஃபெமினா கலையரங்கத்தில் நடந்த மாநாட்டில், விவாதத்துக்கு உரிய பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நடந்தது.
விடுதலைப் புலிகளின் மீதான தடை’ என்ற தலைப்பில் பேசிய பாசறை பாபு,
எந்தக் கூட்டணியில் இருந்தாலும், நேற்றும் விடுதலைப் புலிகளை ஆதரித்தேன்! இன்றும் ஆதரிக்கிறேன்! நாளையும் ஆதரிப்பேன்! என்று சொல்லும் கொள்கை மாறாதவர் தலைவர் வைகோ. 92-ம் ஆண்டு முதல் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை இருக்கிறது. புலிகள் பயங்கரவாதிகள் இல்லை, விடுதலைப் போராட்ட வீரர்கள். அமெரிக்க வெளியுறவுத் துறைச் செயலாளர் ஹிலாரியே சொன்னது இது.
இந்திரா காந்தியைக் கொன்ற காலிஸ்தான் படை மீதான தடை விலக்கப்பட்டது. மகாத்மாவைக் கொன்ற கூட்டத்துக்குத் தடை இல்லை. 18 ஆண்டு காலம் விடுதலைப் புலிகள் எந்தக் குற்றச் செயலை, பயங்கரவாதச் செயலை செய்தது என்று கூற முடியும்? இன்று ஜெயலலிதா, 'இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்’ என்று தீர்மானம் கொண்டுவந்திருப்பதைப் பாராட்டுகிறார்கள். புலிகளின் மீதான தடையை நீக்கத் தீர்மானம் கொண்டுவர ஜெயலலிதா தயாரா? தமிழ் ஈழம் வாங்கித் தருவேன் என்று நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் சொன்னவர் ஜெயலலிதா. இப்போது அப்படி ஒரு தீர்மானம் கொண்டுவந்தால், அவரை உண்மையில் புரட்சித்தலைவி என்று ஏற்றுக்கொள்ள நாங்கள் தயார்.
உதகையிலே, சென்னையிலே நீதிமன்றங்களில் வைகோ வாதாடியதன் விளைவாக, புலிகளின் மீதான தடை நீக்குவது தொடர்பான மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டது.
புலிகள் மீதான தடை விரைவில் உடையும். ஈழத்தில் நல்வாழ்வு மலரும். யாழ்ப்பாணத்தில் புலிக் கொடி பறக்கும். அந்த வெற்றி விழாவுக்கு தமிழ்நாட்டின் முதல்வர் வைகோ தலைமை தாங்குவார்...'' என்றதும் பலத்த கரகோஷம்!
இந்திய ஐக்கிய நாடுகள்’ என்ற தலைப்பில் பேசிய கோ.மன்றவாணன், ''அமெரிக்க ஐக்கிய நாடுகள் என்பதுபோல், இந்திய ஐக்கிய நாடுகள் உருவாக வேண்டும். பல்வேறு கலாசாரங்கள்கொண்ட நிலப்பரப்பை ஒன்றிணைத்து, 'அதுதான் இந்தியா’ என்று ஒரே நாடாக உருவாக்கினர். இந்தியா விடுதலை அடைந்துவிட்டாலும், இங்கு உள்ள தேசிய இனங்கள் முழுமையான விடுதலை அடையவில்லை.

மத்தியில் அதிகாரங்கள் குவிந்து கிடக்கின்றன. மாநில அரசுக்கோ, உப்புச் சப்பில்லாத அதிகாரங்களே வழங்கப்பட்டு உள்ளன. இந்த முறை மாற வேண்டும் என்றால், இந்திய ஐக்கிய நாடுகள் உருவாக வேண்டும். அதில் நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவுத் துறை, நாணய அச்சடிப்பு மட்டும் மத்தியில் இருக்க, மற்ற அதிகாரங்கள் அனைத்தும் மாநிலத்துக்குக் கொடுக்கப்பட வேண்டும்! என்று ஆவேசப்பட்டார்.
அனைத்து உலக குற்றவியல் நீதிமன்றம்’ என்ற தலைப்பில் பேசிய இராம.சிவசங்கர், ''பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற மாநாட்டில், 'ராஜபக்ஷே இன அழிப்பு செய்தார். போர் குற்றம் செய்தார். இன அழிப்புக்கான அனைத்துக் குற்றங்களையும் செய்தார் என்று வைகோ பேசினார். அந்த சபையை அனைத்து உலக நீதிமன்றமாகக் கருதுகிறேன்.
ராஜபக்ஷேவைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தி, தூக்கு தண்டனை வழங்க வேண்டும். தமிழர்களை, தமிழச்சிகளை, குலக் கொழுந்துகளைக் கொன்று குவித்த ராஜபக்ஷேவின் கழுத்துக்குத் தூக்குக் கயிறை மாட்ட, வைகோ அனைத்து உலக குற்றவியல் நீதிமன்றத்தில் வாதாடும் நாள் விரைவில் வரும்!'' என்று சூளுரைத்தார்.
எது தேசத் துரோகம்?’ என்ற தலைப்பில் பேசிய சுப்புரத்தினம், ''இங்கிலாந்து நாட்டு விக்டோரியா கொண்டுவந்து, இத்தாலி நாட்டு சோனியா வரையில் பயன்படுத்தும் ஆள் தூக்கிச் சட்டம், வாய்ப் பூட்டு சட்டம்தான் தேசத் துரோக சட்டம்! சத்ரபதி சிவாஜி, லோக் மான்ய பாலகங்காதர திலக், மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி., சுப்ரமணிய சிவா போன்ற தேச தியாகிகள் மீது எல்லாம் இந்த சட்டம் பாய்ந்தது.
இன்றைக்கு, வைகோ மீதும் பாய்ந்திருக்கிறது. அந்தத் தலைவர்கள், பின்னர் 'தேசத் தந்தை, விடுதலைப் போராட்ட வீரர்கள்’ என்று அழைக்கப்பட்டதுபோல், தலைவரே... நீங்களும் வருங்காலத்தில் 'தமிழ் தேசத்தின் தந்தை’ என்று அழைக்கப்படுவீர்கள்'' என்று பொங்கினார்.
நிறைவு உரையில் பேசிய வைகோ, ''இந்தியாவின் ஒருமைப்பாட்டை நாங்கள் கேள்விக்குறியாக்க விரும்பவில்லை. ஆனால், கருத்தரங்கில் பேசிய தோழர்கள் சில கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். குஜராத் பூகம்பத்தில் குலுங்கிய​போது துடித்தோம். பீகார் வெள்ளத்துக்கு கவலைப்​ பட்டோம். நாட்டின் ஒருமைப்பாட்டை ஏற்றுக்​கொண்டவர்களாகச் செயல்பட்டோம்.
இலங்கையில் எங்கள் உடன்பிறப்புகள் துடிதுடித்து இறந்தபோது, எவ்வளவு பேர் கவலைப்பட்டார்கள்? இது வரை 543 தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இலங்கையில் தனி ஈழம் அமைக்க வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று உலகத் தலைவர்களிடம் பேசி வருகிறேன்.
ஒரு புறம், இலங்கையில் வாக்கெடுப்பு நடத்தி தனி ஈழம் அமைக்கப் போராட வேண்டும். இன்னொரு புறம், இனப் படுகொலை நடத்திய குற்றவாளியைக் கூண்டில் ஏற்ற வேண்டும். இதுதான் எங்கள் இலக்கு!'' என்று முடித்தார்.நன்றி - ஜூனியர் விகடன்

புலி ஆதரவாளர்கள் 400 மில்லியன் அமெ.டொலர் பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்துள்ளனர்!- திவயின
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்கள் சுமார் 400 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்துள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது.
உலகின் முக்கிய ஐந்து நாடுகளின் எட்டு முன்னணி வங்கிகளில் இந்தப் பணம் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
கனேடிய காவல்துறையினர் கனடாவில் இயங்கி வந்த நான்கு வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை அம்பலப்படுத்தியுள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களின் அதிகளவு பணம் சுவிட்சர்லாந்து வங்கிகளில் பேணப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
புலி ஆதரவு புலம்பெயர் தமிழ் அமைப்புக்களைச் சேர்ந்த 21 முக்கியஸ்தர்கள் பற்றிய தகவல்களை கனேடிய காவல்துறையினர் கண்டு பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நெதர்லாந்தில் புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளின் போதும் வங்கிக் கணக்குகள் பற்றிய விபரங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதுtamilwin

அமைச்சர்களுடன் சோனியா சந்திப்பு: ப. சிதம்பரம் இலாகா மாறுகிறது?

புதுதில்லி, ஜூன் 28- மத்திய அமைச்சரவை ஒரிரு நாட்களில் மாற்றி அமைக்கப்படவுள்ள நிலையில், காங்கிரஸ் தலைவர் சோனியா மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இன்று முதல், மத்திய அமைச்சர்களை அவர் தனித்தனியே அழைத்து நேரடியாக பேசி வருகிறார்.

இந்த முறை மத்திய அமைச்சரவையில் பெரும் மாற்றங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. சில அமைச்சர்களை கட்சிப் பணிக்கு அனுப்ப சோனியா முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமரின் விருப்பத்தின் பேரில், முக்கிய இலாகாக்கள் அனைத்தும் மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

உள்துறை அமைச்சராக உள்ள ப. சிதம்பரம் பாதுகாப்புத்துறை அமைச்சராக நியமிக்கப்படலாம் என்றும், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் இலாகா மாற்றப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

ஜோதிராதிய சிந்தியா கேபினட் அமைச்சராக பதவி உயர்த்தப்படுகிறார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான ராஜ் பாப்பர் உள்ளிட்ட சிலர் அமைச்சராக சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

எம்.எஸ். கில், முரளி தியோரா, கான்டி லால் புரியா, பி.கே. ஹண்டிக் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கிரிக்கெட்: 2015 உலகக் கோப்பையில் 14 நாடுகள்

புதுதில்லி, ஜூன்.28:  2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் 14 நாடுகள் இடம்பெற உள்ளன. 10 அணி வடிவத்தில் இருந்து 14 அணி வடிவமாக மாற்றப்பட்ட உள்ளது. உலகக் கோப்பையில் தாங்கள் பங்குபெற முடியவில்லையே என்று உறுப்பு நாடுகள் எண்ணுவதற்கு இடமில்லாத வகையில் இந்த மாற்றம் செய்யப்பட உள்ளது.

ஹாங்காங்கில் நடைபெற்ற ஐசிசியின் ஆண்டுக் கூட்டத்தின் 3-வது நாளான இன்று இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ad

ad