-
10 ஜன., 2024
கறுப்பு உடையுடன் சபைக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்! [Tuesday 2024-01-09 18:00]
மக்கள் மீது அதீத வரிச்சுமை சுமத்தப்படுவதாக குற்றம் சுமத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இன்று கறுப்பு ஆடை அணிந்து சபைக்கு வந்தனர். இது தொடர்பில் கருத்து தெரிவித்த கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னம்பெரும, மக்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் வரம்பற்ற வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தான் இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். |
மக்களின் சாபத்தினால் அச்சம் - எம்.பி பதவியில் இருந்து விலகினார் சமிந்த விஜேசிறி!
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, பதவி விலகுவதாக விலகுவதாக அறிவித்துள்ளார் |
நாளை இலங்கை வரும் பிரித்தானிய இளவரசி! - யாழ்ப்பாணமும் செல்கிறார்.
பிரித்தானிய இளவரசி ஹேன் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நாளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கைக்கும் பிரித்தானியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவின் 75 ஆண்டு கால நிறைவை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளில் பங்கேற்குமாறு இலங்கை அரசாங்கம் விடுத்த அழைப்புக்கு அமைய, அவரது விஜயம் அமையவுள்ளது. |
நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது! - தமிழ் எம்.பிக்கள் எதிர்ப்பு.
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் தொடர்பான சட்ட மூலம் 41 மேலதிக வாக்குகளினால் நாடாளுமன்றத்தில் இன்று நிறை வேற்றப்பட்டது. இந்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 48 வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன. |
வித்தியா கொலை வழக்கு - மேன்முறையீட்டு மனுக்கள் 22ஆம் திகதி விசாரணை!
2015 ஆம் ஆண்டு புங்குடுதீவு பகுதியில் சிவலோகநாதன் வித்தியா என்ற மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் திகதியிட்டுள்ளது. |