புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 7 குற்றவாளிகளும் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை அடுத்த வருடம் மே மாதம் 19 ஆம் திகதி வரை ஒத்திவைத்து உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
வித்தியாவை படுகொலை செய்த பிரதான குற்றவாளிகளான மகாலிங்கம் சசிகுமார் எனும் சுவிஸ் குமார் உள்ளிட்ட மரண தண்டனை கைதிகள் ஏழு பேர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களை விசாரணைக்கு எடுக்கு