புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 அக்., 2015

ஜனாதிபதியுடன் பேசி தீர்வைப் பெற்றுத் தாருங்கள்: அனுராதபுரம் சிறைச்சாலையில் கூட்டமைப்பினரிடம் கைதிகள் கோரிக்கை


கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் பேசி எமக்கு உடனடியாக தீர்வைப் பெற்றுத் தாருங்கள் என அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில்

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல்: புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான கட்சிக்கு கூடுதல் வெற்றி வாய்ப்பு?

சுவிட்சர்லாந்து நாட்டில் எதிர்வரும் 18ம் திகதி நடைபெற உள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் புலம்பயர்ந்தவர்களுக்கு எதிரான கொள்கைகளை கொண்ட கட்சிக்கு வெற்றி பெறும் வாய்ப்பு அதிகளவில் உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.










ஈழத்தமிழச்சியின் எழுச்சிக்குரல் சுவிஸ் பார் ஆளும் மன்றத்தில் ஓங்கி ஒலிக்கச் செய்வோம் (என் அன்புள்ளங்களே .வாசகர்களே இந்த தகவலை பகிர்ந்து எடுத்துச் சென்று பரப்பி உதவுங்கள் )

எதிர்வரும் 18  ஆம் திகதி சுவிற்சர்லாந்தின் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது  என்பதை   நாம் அறிவோம்.இருந்தாலும் சுமார் மூன்று தசாப்தங்களான எமது சுவிஸ் புலம்பெயர் வாழ்வில்  முதன்முதலாக ஒரு ஈழத்து மங்கை  போட்டியிடுகிறார் என்பதே புதிய தகவல்,மகிழ்ச்சி, எதிர்பார்ப்பு ,பரபரப்பு .இந்த தேர்தலில் பேர்ண் மாநிலத்தில் இருந்து சோஷலிச கட்சி வேட்பாளாராக களமிறங்கி இருக்கும் தர்சிகா கிருஷ்ணானந்தம்  வடிவேலு ஏற்கனவே நமக்கு மிகவும் நன்கு அறிமுகமானவர் தான் . எமது இனத்துக்கான விடுதலை பயணத்தின் தற்போதைய இடைவெளிக்கு  உலக அரங்கில் எம்மை அரசியல் மயப்படுத்த தவறி விட்டமை அல்லது போதாமை என்பதும் ஒரு முக்கிய காரணமாகும் . இனிவரும் காலங்களிலாவது இந்த குறையை நிவர்த்தி செய்ய வேண்டுமெனில் உலக நாடுகளின் அரசியலில் எம்மினத்தவரின் ஆளுமை இருந்தாக வேண்டும் . நாம் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் ஜனநாயக ஆட்சி வட்டத்துக்குள் நாமும் உள்வாங்கபடவேண்டும் .பல நாடுகளில் செறிந்து வாழும் ஈழத்து தமிழருக்கு இந்த உள்வாங்கல் இன்னும் பதிவாகவில்லை என்பதே உண்மை .இந்த ஒரு நோக்கத்துக்காக எதிரகாலதிலாவது நாம் இந்த நாடுகளின் பாராளுமன்ற உள்ளூராட்சி மன்ற கதவுகளை திறக்க வேண்டும் . ஆம் எங்களால் முடியும் .திருமதி தர்சிகா அவர்கள் ஈழத்தில் பிறந்து சுவிசில் வேரூன்றி இரண்டு தலைமுறைகளுக்கு இணைப்பு பாலமாக வாழ்ந்துவருபவர் .சிறுவயது முதலே இவரது குடும்பம் தமிழின விடுதலைப்பணி  ,சமூக சேவை மற்றும் ஆன்மீக தேடல்கள் என ஈடுபாடு  கொண்டு  வாழ்ந்து வரும் குடும்பப பின்னணி இவருக்கு பெரிய தகமையாகும் ஐவரும் அவ்வலை யோற்றியே தனது வாழ்க்கை பயணத்தை தொடர எண்ணி காலடி எடுத்து வைத்துள்ளார் . சமூகத்தின் பால் கொண்ட ஈடுபாடு காரணமாக மனிதஉரிமை செயல்பாடுகளில் கணிசமான பங்கினை ஆற்றி வரும் இவர் அண்மையில் கூட ஜெனீவா ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை சங்க நிகழ்வுகளில்  கலந்து எம்மினத்துக்காக  குரலெழுப்பி இருந்தமை நீங்கள் அறிந்ததே . இவரது இந்த சுவிஸ் நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதி என்ற முத்திரை கொண்டு இவரது குரல் உலக அரங்கின் செவிப்பறையை சேர வேண்டுமெனில் , செயல்பாடுகள் மேலும் வலிமை கொள்ள வேண்டுமெனில் இவர் வாழும் சுவிஸ் நாட்டின் பாராளுமன்ற பிரதிநிதி என்ற முத்திரை தான் இன்னும் இலகுவாக்கும் . ஆகவே தான் சுவிஸ் வாழ் ஈழத்து தமிழன் ஒவ்வொருவனும் இவரது வெற்றியை உறுதிப்படுத்த சபதமெடுப்போம் . வாக்குரிமை உள்ளவர்கள்  நேரகாலத்தோடு உங்களுடைய இரண்டு வாக்குகளையும்   இவருக்கே அளியுங்கள் .மற்றவர்கள் கூட உங்கள் உறவுகள் நண்பர்களை ஊக்குவித்து இவருக்கு வாக்களிக்குமாறு கேட்டு உதவலாம் .வேறு நாடுகளில் வாழும் நெஞ்சங்கள் கூட சுவிசில் வாழ்கின்ற உங்கள் உறவுகள் நண்பர்களை உணர்வூட்டி உதவலாம் . அன்பார்ந்த உள்ளங்களே. இந்த வரலாற்றுக் கடமையை தாமதம் செய்யாமல் இப்போதே ஞாபகத்தோடு ஆற்ற முன்வருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம் . தபால் மூலம் வாக்களிப்பது உங்களுக்கு இலகுவான செயலாக இருக்கும் என நம்புகிறேன் .இல்லையேல் உங்கள் பகுதி உள்ளூராட்சி அலுவலகத்தில்(Gemeinde ,Stadt )நேரிலும் வாக்களிக்கலாம்  ஈழத்தமிழச்சியின் எழுச்சிக்குரல் ஆளும் மன்றத்தில் ஓங்கி ஒலிக்கட்டும் .இந்த மாண்புறு செய்தி ஞாலத்தில் நாளை  வெளிவரட்டும் . நன்றி 

முன்னாள் போராளிகளுக்கான கலந்துரையாடல் இன்று

கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்குவதற்காக தெரிவு செய்யப்பட்டவர் களுக்கான கலந்துரையாடல் இன்று வியாழக்கிழமை கரைச்சி பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

போரால் பாதிக்கப்பட்ட பெண் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருள் கண்காட்சி யாழில்

வாழ்வாதார தேடலுக்கான களம் எனும் தொனிப் பொருளில் போரினால் பாதிக்கப்பட்ட மற்றும்

இரட்டை வேடத்தை நிறுத்து :தமிழ் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு

தமிழ் அரசியல் கைதிகள் மேற்கொண்டு  வரும் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக்கட்சி

கிண்ணம் வென்றது சென்.மேரிஸ் அணி

அராலி ஏ.எல். விளையாட்டுக்கழகமும், அராலி ஏ.எல். இளைஞர் கழகமும் இணைந்து யாழ்., வலிகாமம், வடமராட்சி, பருத்தித்துறை

சேயாவின் அம்மாவை வன்புணர்வுக்கு உட்படுத்தும் நோக்கிலேயே அவர்களின் வீட்டுக்குள் பிரவேசித்ததாகவும்கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக சமன் ஜயலத்


துஷ்பிரயோகம் செய்யும்போது தனது முகத்தைக் கடித்த காரணத்தாலேயே கொட்டதெனிய சிறுமி சேயாவின் கழுத்தை நெரித்துக் கொலைசெய்ததாக

தந்தையார் இறந்ததினால் மன விரக்திக்கு உள்ளாகியிருந்த குடும்பப் பெண் தற்கொலை


 செய்து கொண்ட சம்பவம் உடுவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் சம்பந்தன் எப்படி வந்தார்? படையினரை குடைந்தெடுக்கும் மேலதிகாரிகள்

இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் உயர்பாதுகாப்பு வலயத்திற்குள் எப்படி வந்தார், துப்பாக்கிகளை எதற்காக வைத்திருக்கறீர்கள் என எதிர்க்கட்சி

017க்கு முன்னர் இலத்திரனியல் முறையில் தயாரிக்கப்படவுள்ள புதிய அடையாள அட்டைகள்


2017ம் ஆண்டு முடிவடைவதற்கு முன்னர் நாட்டின் உள்ள அனைவருக்கும் புதிய தேசிய அடையாள அட்டைகளை விநியோகம் செய்யப்படவுள்ளன.

' நன்றாக படம் எடுங்கள்... எடுத்துக் கொண்டு போய் ரீ.என்.ஏ.விடம் காட்டுங்கள்.. அவர்கள் மிக்க சந்தோஷப்படுவர்..'- பிள்ளையான்

கூட்டமைப்பினரிடம் காட்டுங்கள்! அவர்கள் சந்தோஷப்படுவார்கள்! - பிள்ளையான்


என்னை நன்றாக படம் எடுங்கள். எடுத்துக்கொண்டு சென்று ரீ.என்.ஏ.யிடம் (தமிழ் தேசிய கூட்டமைப்பு) அதனைக் காட்டுங்கள். அவர்கள் சந்தோஷப்படுவர்

ஆயுதக் கொள்வனவு மோசடி வழக்கிலிருந்து பொன்சேகாவின் மருமகன் தனுன விடுதலை


இராணுவத்தில் ஆயுதக் கொள்வனவு செய்த போது நிதி மோசடி வழக்கிலிருந்து தனுன திலகரத்ன விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கண்டிப்பா வருவேன்! அடம்பிடிக்கும் சிம்பு!



சிம்புவுக்கு இது போறாத காலமாக இருக்கிறது. வாலுவுக்கு பிறகு சிம்பு மிகவும் நம்பியிருக்கும் திரைப்படம்

திமுத் கருணாரத்னவின் சதத்தின் உதவியுடன் இலங்கை திடமான நிலையை நோக்கி

மேற்கிந்திய அணிக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதலாவது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுகளை மாத்திரம்

சுவிஸ் ஜெனீவா மாநில வாகன ஓட்டுனர்களுக்கு ஓர் அதிர்ச்சி செய்தி: அதிரடி அறிவிப்பு வெளியிட்ட அரசு


சுவிட்சர்லாந்து நாட்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டுனர்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையினை 6 மடங்கு அதிகரித்து

ad

ad