குவைட்டில் பணியாற்றி வந்த இலங்கை பெண் ஒருவர் தம்மை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்த முற்பட்ட ஒருவரை தற்காப்புக்காக கொலை செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச மது மற்றும் புகைத்தல் எதிர்ப்பு தின விழிப்புணர்வுப் பேரணி இன்று காலை 9. 00 மணியளவில் சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு முன்பாக ஆரம்பமாகி சாவகச்சேரி நகர பேருந்து நிலையத்தை வந்தடைந்தது.
கண்ணீர் அஞ்சலி புங்குடுதீவு மடத்துவெளி சனசமூக நிலையம் ,பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்பவற்றின் முன்னாள் தலைவர்
சோமலிங்கம் சிவலிங்கம் (இளைப்பாறிய காவல்துறை அதிகாரி ) 8 ம் வட்டாரம் ,புங்குடுதீவு .
புங்குடுதீவு 8 ஆம் வட்டாரத்தை சேர்ந்த முன்னாள் காவல் துறை அதிகாரியான சோமலிங்கம் சிவலிங்கம் அவர்கள் கடந்த செவ்வாய் 03.06.2014 அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் தெரிவிக்கிறோம் . இறுதிக் கிரியைகள் புதனன்று சிறப்பாக நடைபெற்றது.
அமரர் சிவலிங்கம் அவர்கள் ஆசிரியர் இராஜசேகரம் ஆசிரியர் அவர்களின் தங்கையை மணந்து இறுதிக் காலம் வரை மடத்துவெளி மண்ணிலேயே வாழ்ந்து பெருமை சேர்த்த ஒரு சமூக சேவையாளர் .அறுபதுகளின் இறுதியில் இருந்து இந்த கிராமத்தின் சமூக சேவையில் புரட்சி படைத்த மடத்துவெளி சனசமூக நிலையத்தின் இளையதலைமுறையினர் நாட்டுச் சூழ்நிலை காரணமாக புலம்பெயர்ந்த போது அமரர் சிவலிங்கம் இந்த கிராமத்துக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாக வந்து சேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.அந்த இக்கட்டான காலத்தில் மடத்துவெளி சனசமூக நிலையம் ,ஸ்ரீ பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் என்பவற்றை பலத்த சிரமங்களுக்கு மத்தியிலும் நிர்வகித்து மீண்டும் இப்போதைய மீள் எழுச்சி நிலை வரை அத்தனை பொறுப்புக்களையும் தன் தோளில் சுமந்து நின்ற பெருந்தகை . அன்னாரது சேவைகளை இந்த மண்ணின் வரலாறு தன்னிலே எழுதி செல்வோம் .அமரரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறோம். துயருறும் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம் . சுவிட்சர்லாந்து வாழ் மடத்துவெளி ஊரதீவு மக்கள்
16வது மக்களவையின் புதிய சபாநாயகராக பொறுப்பேற்றார் சுமித்ரா மகாஜன்
16வது மக்களவையின் புதிய சபாநாயகராக வெள்ளிக்கிழமை முறைப்படி தேந்தெடுக்கப்பட்டார் சுமித்ரா மகாஜன். தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து சபாநாயகராக பொறுப்பேற்றார்.
கிழக்கில் கொல்லப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை.பிரபாகரனி உத்தரவுக்கு அமைய பொ ட்டு அம்மான் கொலை செய்தார் -கருணா
தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.