புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

31 ஜூலை, 2022

அரசியல் கைதிகளுக்கு முதலிடம் - இல்லாவிட்டால் ஒத்துழைக்க முடியாது

www.pungudutivuswiss.com


காலிமுக போராட்டக்காரர்கள் என்ற முறையில் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்டம், பயங்கரவாத தடை சட்டம், அரசியல் கைதிகள் விடுதலை, மனித உரிமை பேணல், மக்களுக்கு நிவாரணம் ஆகியவற்றை நாம் ஏற்கிறோம். இவை எங்களதும் நீண்டகால கோரிக்கைகள்தான். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிப்பதில் 10, 15, 20 வருடங்களாக சிறையில் இருந்து, தம் வாழ்வையே இழந்து நிற்கும் தமிழ் அரசியல் கைதிகள் முதலிடம் பெறவேண்டும் என்பதை உறுதி செய்யுங்கள். இல்லாவிட்டால் எமது கட்சி உங்களுடன் ஒத்துழைக்க முடியாது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

காலிமுக போராட்டக்காரர்கள் என்ற முறையில் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளீர்கள். ஆட்கடத்தல், முறைதவறிய கைது, அவசரகால சட்டம், பயங்கரவாத தடை சட்டம், அரசியல் கைதிகள் விடுதலை, மனித உரிமை பேணல், மக்களுக்கு நிவாரணம் ஆகியவற்றை நாம் ஏற்கிறோம். இவை எங்களதும் நீண்டகால கோரிக்கைகள்தான். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி அரசியல் கைதிகளை விடுவிப்பதில் 10, 15, 20 வருடங்களாக சிறையில் இருந்து, தம் வா

பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட சர்வ கட்சி ஆட்சி தான் ஒரே வழி!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு சர்வ கட்சி ஆட்சியை அமைக்க விரும்புவதாக வந்தால் அதனை நாம் வரவேற்போம். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட அது தான் ஒரே வழி. ஆனால் அது உண்மை தன்மையான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஒரு சர்வ கட்சி ஆட்சியை அமைக்க விரும்புவதாக வந்தால் அதனை நாம் வரவேற்போம். பொருளாதார சிக்கலில் இருந்து விடுபட அது தான் ஒரே வழி. ஆனால் அது உண்மை தன்மையான சர்வகட்சி ஆட்சியாக இருக்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

28 ஜூலை, 2022

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியில் பிளவு

www.pungudutivuswiss.com
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான வாக்கெடுப்பில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியில் பெரிய

சீனாவுடன் பேசுமாறு கை காட்டியது ஐ.எம்.எவ்!

www.pungudutivuswiss.com



இலங்கை அதன் பாரிய கடன் வழங்குநரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கை அதன் பாரிய கடன் வழங்குநரான சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகள் குறித்து தீவிரமாக கலந்துரையாடலில் ஈடுபட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது

புலம்பெயர் தமிழர்கள் இரகசியப் பேச்சுக்கு அழைத்தனர் !

www.pungudutivuswiss.com


தமிழர்கள் மத்தியில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும், எதிர்கால தலைமுறையினருக்கு இப்பிரச்சினைகளை மீதப்படுத்த கூடாது என்பதை தமிழ் அரசியல் தரப்பினர் விளங்கிக்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தலைவர்களுடன் வெளிப்படை தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார் என நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்  விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தினார்.

தமிழர்கள் மத்தியில் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். பேச்சுவார்த்தைகளின் ஊடாக தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது அவசியமாகும், எதிர்கால தலைமுறையினருக்கு இப்பிரச்சினைகளை மீதப்படுத்த கூடாது என்பதை தமிழ் அரசியல் தரப்பினர் விளங்கிக்கொள்ள வேண்டும். புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தலைவர்களுடன் வெளிப்படை தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட தயார் என நீதி,சிறைச்சாலைகள் விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ சபையில் வலியுறுத்தினார்

27 ஜூலை, 2022

மஹிந்த, பசில் வெளிநாடு செல்ல தடை நீடிப்பு!

www.pungudutivuswiss.com


முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்​தடை, ஓகஸ்ட் 2ஆம் திகதிவரையிலும் உயர்நீதிமன்றத்தால் இன்று நீடிக்கப்பட்டது.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த பயணத்​தடை, ஓகஸ்ட் 2ஆம் திகதிவரையிலும் உயர்நீதிமன்றத்தால் இன்று நீடிக்கப்பட்டது.

ஜனாதிபதி ரணிலுடன் அமெரிக்க தூதுவர் சந்திப்பு!

www.pungudutivuswiss.com


அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி  ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் சந்தித்தார். ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்.

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று முற்பகல் சந்தித்தார். ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்த தூதுவர், அவருடன் சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டார்

எங்கே கொன்று புதைத்தீர்கள்?

www.pungudutivuswiss.com

  அன்று தமிழ் மக்களை, தமிழ் இளைஞர்களை கைது செய்து அடைப்பதற்காக அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்டது,அவசர கால சட்டத்தை மீண்டும் திணிப்பதற்கு இன்று விவாதம் நடைபெறுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

அன்று தமிழ் மக்களை, தமிழ் இளைஞர்களை கைது செய்து அடைப்பதற்காக அவசரகாலச் சட்டம் கொண்டு வரப்பட்டது,அவசர கால சட்டத்தை மீண்டும் திணிப்பதற்கு இன்று விவாதம் நடைபெறுகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்

அவசர காலச்சட்டத்துக்கு அங்கீகாரம்!

www.pungudutivuswiss.com


அவசரகாலச் சட்டம் 57 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் கிடைத்தன.

அவசரகாலச் சட்டம் 57 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக 120 வாக்குகளும் எதிராக 63 வாக்குகளும் கிடைத்தன.

மேலும் 14 நாட்கள் சிங்கப்பூரில் தங்க கோட்டாவுக்கு அனுமதி

www.pungudutivuswiss.com

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூரில் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சிங்கப்பூரில் தங்குவதற்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக அனுமதி மேலும் 14 நாட்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

26 ஜூலை, 2022

செப்டெம்பர் கூட்டத்தொடரில் நெருக்கடி!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இருந்த போராட்டக்காரர்கள் மீதான அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் கூட்டத்தொடரில்  கவனம் செலுத்தப்படும். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து மேலும் நெருக்கடி நிலையொன்று உருவாகும் என  மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்  கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக இருந்த போராட்டக்காரர்கள் மீதான அரசாங்கத்தின் மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் கூட்டத்தொடரில் கவனம் செலுத்தப்படும். இலங்கையின் மனித உரிமை மீறல்கள் குறித்து மேலும் நெருக்கடி நிலையொன்று உருவாகும் என மாற்றுக்கொள்கைகளுக்கான நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார்

கோத்தபாயவைக் கைது செய்ய ஒப்பமிடுவோம்! உருத்திரகுமாரன் அழைப்பு

www.pungudutivuswiss.com

சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்‌சவைவினை, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூரில் தற்போது நிலைகொண்டுள்ள சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயா ராஜபக்‌சவைவினை, உலகளாவிய நியாயாதிக்கத்தின் கீழ் கைது செய்து நீதியின் முன் நிறுத்தும்படி சிங்கப்பூர் சட்டமா அதிபருக்கான கையெழுத்து போராட்டத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தொடங்கியுள்ளது

ஐஎம்எவ் உடன்பாடு பின்தள்ளிப் போனது!

www.pungudutivuswiss.com


எதிர்வரும் ஆகஸ்டில் இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்தது.
எனினும் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடுவது பின்தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆகஸ்டில் இலங்கை அரசாங்கத்துக்கும் சர்வதேச நாணய நிதியத்துக்கும் இடையில் பணியாளர் மட்ட உடன்படிக்கை கைச்சாத்திடப்படவிருந்தது. எனினும் குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடுவது பின்தள்ளப்பட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது

24 ஜூலை, 2022

WelcomeWelcome கோட்டா, மஹிந்தவை பொறுப்புக்கூறலுக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

www.pungudutivuswiss.com


இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடிய அரசு தடைகளை விதிக்க வேண்டும் என்று லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளான கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக கனடிய அரசு தடைகளை விதிக்க வேண்டும் என்று லிபரல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி கோரிக்கை விடுத்துள்ளார்

ஜனாதிபதி ரணிலுடன் பிரித்தானிய அமைச்சர் தொலைபேசியில் பேச்சு!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பிரித்தானிய பாராளுமன்றத்தில் பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது

22 ஜூலை, 2022

முப்படையினருக்கும் அதிகாரம்!- வர்த்தமானியை வெளியிட்டார் ரணில்.

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு முழுவதும் பொது அமைதியை பேணுமாறு முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளார்

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் - மன்னிப்புச் சபை கண்டனம்!

www.pungudutivuswiss.com



காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டித்துள் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு இது ஏற்றுக்கொள்ள முடியாதது அதிகாரிகள் உடனடியாக பதவி விலகவேண்டும்என வேண்டுகோள் விடுத்துள்ளது.

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டித்துள் சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய பிரிவு இது ஏற்றுக்கொள்ள முடியாதது அதிகாரிகள் உடனடியாக பதவி விலகவேண்டும்என வேண்டுகோள் விடுத்துள்ளது

கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்!

www.pungudutivuswiss.com



ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பலர் இன்றிரவு கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது

பொறுத்திருந்து பார்ப்போம்!

www.pungudutivuswiss.com

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் செயற்பாடுகளைக் கொஞ்சம் பொறுத்துப் பார்த்து அதன் அடிப்படையில் முடிவுகளை எடுத்து எங்களால் இயன்றதைச் செய்வோம்." - இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

காலிமுகத்திடலில் தாக்கப்பட்ட பிபிசி ஊடகவியலாளர்கள்!- நடந்தது என்ன?

www.pungudutivuswiss.com



“நாங்கள் அந்த பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவேளை படையினருடன் காணப்பட்ட நபர் ஒருவர் – சிவில் உடையில்,எனது சகாவை பார்த்து சத்தமிட்டு அவரின் கையடக்க தொலைபேசியிலிருந்த வீடியோக்களை அழிக்கவேண்டும் என தெரிவித்தார்.ஒரிரு செகன்ட்களில் அவர் எனது நண்பரை தாக்கி அவரின் கையடக்க தொலைபேசியை பறித்தார்.

“நாங்கள் அந்த பகுதியிலிருந்து திரும்பிக் கொண்டிருந்தவேளை படையினருடன் காணப்பட்ட நபர் ஒருவர் – சிவில் உடையில்,எனது சகாவை பார்த்து சத்தமிட்டு அவரின் கையடக்க தொலைபேசியிலிருந்த வீடியோக்களை அழிக்கவேண்டும் என தெரிவித்தார்.ஒரிரு செகன்ட்களில் அவர் எனது நண்பரை தாக்கி அவரின் கையடக்க தொலைபேசியை பறித்தார்.

காலிமுகத்திடல் போராட்டக்களத்தில் படையினர் மூர்க்கத்தனமான தாக்குதல்! Top News

www.pungudutivuswiss.com


கொழும்பு காலிமுகத்திடலில் இன்று அதிகாலை 1மணி தொடக்கம் நூற்றுக்கணக்கான ஆயுதம் தரித்த இராணுவத்தினரும் பொலிசாரும் களமிறக்கப்பட்டு போராட்டக்காரர்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகின்றது என்று  தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொழும்பு காலிமுகத்திடலில் இன்று அதிகாலை 1மணி தொடக்கம் நூற்றுக்கணக்கான ஆயுதம் தரித்த இராணுவத்தினரும் பொலிசாரும் களமிறக்கப்பட்டு போராட்டக்காரர்களை அகற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவுகின்றது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன

பாராளுமன்ற அரசியலில் பகிஷ்கரிப்பு  சரியா உணர்ச்சி அரசியலுக்கு இதனை பயன்படுத்தலாமா 
தேர்தலில்  நின்று  மக்களின்  வாக்குகளை பித்ரு  நாடாளுமன்றம்  செல்ல  இலங்கை சடடத்தை ஏற்றுக்கொண்டு  சத்தியப்பிரமாணம்  செய்து சம்பளம்  ஓய்வொஓதியம்  எடுப்பவர்கள்  வெளியிலே  மக்களுக்கு  உணர்ச்சி அரசியல்  பூச்சாண்டி கட்டிட  பகிஸ்கரிக்கிறோம்  என்று  பந்தா காட்டுவது  சரியா .இவர்களின் உணர்ச்சி அரசியல் பேச்சை கேட்டு  சிலர்  அவைக்கு பாராட்டுக்கள்  வேறு  கொடுக்கிறார்கள் . முதலில் பாராளுமன்ற மரபு நடைமுறை  அங்கெ  சென்று என்ன  செய்ய வேண்டும்  என்பதனை  அறியவேண்டும் .பாராளுமன்ற அரசியலில்  விருப்பம் இல்லை பிரயோசனம் இல்லை என்றால்  தேர்தலுக்கு  போகக்கூடாது .மக்களின் வாக்குகளை துஸ்பிரயோகம் செய்யக்கூடாது. அந்த ஆசனககளின் எண்ணிக்கையை வீணடிக்கக்கூடாது . சாம்பல்  வாங்கினால்  வேலை செய்ய வேண்டும் . ஓய்வொஓதியம் ஒரு  பாராளுமன்ற  காலம் முடிய  எடுக்க போகிறீர்கள்  மறக்க கூடாது இது பற்றி உங்கள் கருத்துக்களை முன்வையுங்கள் 

21 ஜூலை, 2022

இந்திய நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரானார் திரவுபதி முர்மு.: பிரதமர் உள்பட தலைவர்கள் வாழ்த்து

www.pungudutivuswiss.com
டெல்லி: இந்திய 15-வது குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு பெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர்

நாளை புதிய அமைச்சரவை! - தினேசுக்கு பிரதமர் பதவி

www.pungudutivuswiss.com


புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் நாளை காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பதவியேற்பு காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சரவையின் பதவிப்பிரமாணம் நாளை காலை பிரதமர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை பதவியேற்பு காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி ரணிலின் கீழ் அடுத்த பிரதமர் யார் - நால்வரின் பெயர் பரிந்துரை

www.pungudutivuswiss.com
இலங்கையின் 8வது நிறைவேற்று ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நாளை காலை பதவிப் பிரமாணம் செய்ய உள்ளார்.

ரணில் பதவி விலகவேண்டும்:போராட்டகாரர்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டும் என காலி முகத்திடல் போராட்டக்காரர்கள் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ். மாநகர காவல்படை வழக்கு வாபஸ்!

www.pungudutivuswiss.com


யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட

யாழ்.மாநகர சபையினால் உருவாக்கப்பட்ட "காவல் படை" தொடர்பிலான வழக்கில் இருந்து , யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், காவல் படையின் சீருடைகளையும் மீள கையளிக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது

கூட்டமைப்பில் கறுப்பாடுகளா? - சுமந்திரனின் முகநூல் பதிவினால் சந்தேகம்.

www.pungudutivuswiss.com



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதவிட்டுள்ள கருத்து  பேசுபொருளாக மாறியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதவிட்டுள்ள கருத்து பேசுபொருளாக மாறியுள்ளது

கூட்டமைப்பு விவகாரத்தில் இந்தியா தலையிட்டதா? [Wednesday 2022-07-20 17:00]

www.pungudutivuswiss.com



தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கும் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் டலஸை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு இடையில் தர்க்கங்கள் ஏற்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கும் கூட்டத்தின் போது ஜனாதிபதி வேட்பாளர் டலஸை ஏன் ஆதரிக்க வேண்டும் என்ற அடிப்படையில் உறுப்பினர்களுக்கு இடையில் தர்க்கங்கள் ஏற்பட்டுள்ளன

20 ஜூலை, 2022

www.pungudutivuswiss.com  
ரணிலின்  டைரக்சனில்  இலங்கை புதிய அரசு படம் வெற்றிகரமாக  ஓடுகிறது 
கோத்தபாய  விலகும்போது மக்கள் ஆதரவு பெறாத  தேர்தலில் வெற்றி பெறாத ஒரு ஆசனத்தையேனும்  வெல்லாத  ரணிலை அழைத்து  அவரது இயக்கத்தில் படம் எடுக்க  கொடுத்தார் . சர்வகட்சி அரசு மொட்டு இல்லாத அரசு  ராஜபக்ச குடும்பம் இல்லாத அரசு என்றெல்லாம்  சொல்லிக்கொண்டு அவர்களது பினாமியாக ரணிலை  வைத்து படம் எடுத்தார்கள் .கோத்த பத்திரமாக  வெளியேற வேண்டும் .மீண்டும் நாட்டுக்குள்  வரவேண்டும் . அதட்கான பாதுகாப்பு உறுதி ரணிலிடம் உண்டு வரும் காலங்களில் ஊழல் கொள்ளை முறைகேடு விசாரணைகளில் தப்பவேண்டும் அனைத்துக்கும்  பாதுகாப்பாக ரணில் பினாமி ஆக்கப்படடார் .மொட்டு கட்சி இரண்டாக பிரிந்தது போல நாடகம் ஆடி  சஜித் தரப்பு  உக்கிரமடையாமலும் போராடடக்காரர்   உச்சகடட போராட்த்தை செய்யாமலும் இருக்க  பீரிஸை கொண்டு ஒரு நாடகம் ஆடி  வெற்றி  பெற்றுள்ளார்கள் சஜித் ஏமாந்தார் ,, சஜித் வேட்பளாக  நின்றாலு  வெல்ல முடியாது  ஆக இப்படியாவது பிரதமர் பதவியாவது கிடைக்கட்டும் என்று அவர்  நினைத்தார் .ஆர்க் இனி ஆறு மாதங்களில் தேர்தல் வந்தால் தான்  சஜித் எதாவது செய்ய முடியும் 
www.pungudutivuswiss.comஇன்று ரணில் வென்றால் 
இலங்கையின் புகழ்மிக்க மாபெரும் கட்சியான ஐ தே  க  ஐ  பிளவு படுத்த காரணமானவர்  அந்த கட்சியை  வரலாற்றில் இல்லாதவாறு  ஒரு  உறுப்பினரை  கூட வென்றிட வைக்க முடியாத  தான் கூட  வெல்ல  முடியாத ஒரு தலைவர் .மைத்திரியோடு சேர்ந்து மற்றுமொரு  பெரிய கட்சியான   ஸ்ரீ ல சு கட்சியை பிளவு படுத்தி பதிவு சுகம் கண்டவர் .அதே மைத்திரியால் மீண்டும் பதவியில் இருந்து தூக்கி எறியப்படடவர் . பொதுசன பெறமுனைவாள்  பிரதமர்  பதவி பறிக்கப்பட்டவர் இப்போது  அதே  கட்சியால்  வேட்பாளர் .இப்போது பொதுசன பெரமுனாவும் இவரால் பிளவு படுகிறது  நல்ல ராசிக்காரர் ..ராஜபக்ச குடும்பத்தை போராடடக்கறார்  வெளியேற  போராடும் பொது அதே குடும்பத்துக்காக   பினாமியாக  வந்து  அந்த குடும்பத்தின்  வழிகாடடலில்  ஜனாதிபதி பதவிக்கு குறிவைத்துள்ளவர்  .இவரை விட  தானே    வென்ற பிள்ளையான் வியாழேந்திரன் டக்லஸ் விக்கி கஜேந்திரகுமார்  கூட ஜனாதிபதி,ஹியாகலாம் 

19 ஜூலை, 2022

கூட்டமைப்பு டலஸுக்கு ஆதரவு!

www.pungudutivuswiss.com

ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனுக்கு உதவ நேட்டோ அமைப்பு விடுத்த கோரிக்கை: சுவிட்சர்லாந்து மறுப்பு.

www.pungudutivuswiss.com
போரில் காயமடைந்த உக்ரைன் வீரர்களுக்கு சுவிஸ் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கவேண்டும் என்ற நேட்டோ அமைப்பின் கோரிக்கைக்கு சுவிட்சர்லாந்து மறுப்பு தெரிவித்துவிட்டது.

கூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் குழப்பம் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! பெரும்பான்மை வாக்குகள் டலஸூக்கு

www.pungudutivuswiss.comகூட்டமைப்பின் தீர்மானம் தொடர்பில் குழப்பம் சூடுபிடிக்கும் ஜனாதிபதி தேர்தல் களம்! பெரும்பான்மை வாக்குகள் டலஸூக்கு

நேடோவுடன் சேர்ந்து வாலாட்டும் ஜெர்மனிக்கு செக் வைத்த ரஸ்யா

 .ஜெர்மனி தவிக்கும் எரிவாயு இன்மை www.pungudutivuswiss.com

ஜேர்மனிக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை பராமரிப்பு பணியென ரஷ்யா மூடியுள்ள நிலையில், ஜேர்மனி மொத்தமாக இருளில் மூழ்கும் இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், உணவு உள்ளிட்ட பொருட்களை சார்ந்து இருக்கும் ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் மீதான போரால் பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

ஜேர்மனிக்குச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் லைனை பராமரிப்பு பணியென ரஷ்யா மூடியுள்ள நிலையில், ஜேர்மனி மொத்தமாக இருளில் மூழ்கும் இக்கட்டான

தென்னிலங்கையில் அரசியல் குழப்பம் - தலைவிதியை தீர்மானிக்க ஒன்றுபடுமா தமிழர் தரப்பு..மணிவண்ணன்

www.pungudutivuswiss.com
யாரிடமும் பேரம் பேசாமல் நடுநிலை வகிப்பதென்பது யாரையோ வெல்ல வைப்பதற்கான நிகழ்ச்சி நிரலாகும். அவ்வாறு செயற்படும் தமிழ் தரப்புகளை இனம் கண்டு தமிழ் அரசியல் தரப்பில் இருந்த

Breaking NEWS ----------------- சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித்: டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவு: சற்றுமுன்னர் அதிரடி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
அதிபர் தேர்தலில் இருந்து விலகினார் சஜித்
சிறிலங்காவின் அதிபர் தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்களின் நடுநிலை  கொள்கை சரியா 
நடுநிலை  வகிப்பது என்பது  ஒரு  தரப்பை  வெல்ல வைப்பது என்பதே  உண்மை . மக்கள்   வாக்குகள் மூலம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை   தெரி வு செய்து அனுப்பினால் அவர்களுக்கு  கிடைக்கும் வாக்களிப்பு உரிமையை  கடடாயம் பயன்படுத்த வேண்டும் 5  வருடத்துக்கும்  நாங்கள் நடுநிலை என்று  சொல்லிக்கொண்டு இருப்பது  துஸ்பிரயோககம் செய்வது தானே . ஒவ்வொரு பா  உ இனதும் இந்த வாக்கு வீணடிக்கப்படுகிறது . முக்கியமாக தமிழர்  தங்கள் வாக்கு பலத்தை   இப்போது போன்ற இக்கடடான   கட்டங்களில் தமிழரின் முக்கிய அவசர  பிரச்சினைகளுக்கு தீர்வு காண  கேட்டு  கோரிக்கையை வைத்து  நிபந்தனை மூலம் வாக்கு செலுத்துவதே சிறந்தது .அதனை விட்டுவிட்டு எமக்கென்ன  யார்  வென்றாலும் தோற்றாலும் நாங்கள் தேசியவாதிகள் என்றிருப்பது  உங்கள் வாக்குப்பலத்தை  வேணடிப்பதே .அப்படியென்றால் பாராளுமன்ற அரசியலுக்கு  போயிருக்கக்கூடாது .தேசியம் தனிநாடு தமிழீழம் என்ற கொளகை உள்ளவர்கள்  என்று  பேசி திரிவது என்றால்  சத்தியப்பிரமாணம் செய்து பாராளுமன்றம்  நுழையக்கூடாது . நுழைந்தால் அதனை தமிழருக்கு தேவையான  ஆயிரம் பிரச்சினைகள்  இருக்கும் அவற்றில்  சிலதையாவது   தீர்க்க பயன்படுத்தவேண்டும் . ஒரு பொதுவான கொளகை அடிப்படையில் பேசி  சில விஷயங்களுக்கு தமிழ் அரசியல் கடசிகள் ஒன்று சேர்ந்து இயங்கவேண்டும் அதனை விடுத்து நாம் சேரமட்டொம் என்று விதண்டாவாத பிடிவாதம் பிடிப்பதால் மக்களுக்கு எதுவும் கிடைக்காது நடுநிலை என்பதை   வீணான முடிவு என்பதே சரி . ஒரு தீர்மானத்தில் ஒருவருக்கு  111 வாக்குகள் கிடைத்தால் வெறும் 2  வாக்குகளே தீர்மானிக்கலாம் .நடுநிலை வகிக்காமல் 111 ஓடு 2 ம் சேர்ந்தால்  அவரின்  பக்கமே வெற்றி நடுநிலை வகித்தால் மற்றைய அணி 112  பெற்று  வெல்லும்  

18 ஜூலை, 2022

அரசியல் சூழ்நிலை தொடர்பில் கலந்துரையாடிய தமிழ் கட்சிகளின் தலைவர்கள்

www.pungudutivuswiss.com

தற்போதைய அரசியல் நிலை குறித்து ஆறு தமிழ் தேசிய கட்சிகளின் தலைவர்கள் இணைய வழியில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

கோட்டாவை சிங்கப்பூரிலிருந்து வெளியேற பணிப்பு

www.pungudutivuswiss.com
கோட்டாபய தொடர்ந்து சிங்கப்பூரில் தங்கியிருப்பதால் பாதுகாப்புச் சிக்கல்கள் ஏற்படலாம். எனவே பதினைந்து நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாட்டு அரசாங்கம்

புதிய அரசுடனான அணுகுமுறை - தமிழ் சிவில் அமைப்புகள் கலந்துரையாடல்!

www.pungudutivuswiss.com


தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்காக, அமையப் போகின்ற இடைக்கால அரசாங்கம் மற்றும் அதன் பின்னர் நடைபெறும் பொதுத்தேர்தலை அடுத்து ஆட்சிப்பீடத்தில் அமரவுள்ள அரசாங்கம் ஆகியற்றுடன் எவ்வாறு முன்னகர்வுகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்காக, அமையப் போகின்ற இடைக்கால அரசாங்கம் மற்றும் அதன் பின்னர் நடைபெறும் பொதுத்தேர்தலை அடுத்து ஆட்சிப்பீடத்தில் அமரவுள்ள அரசாங்கம் ஆகியற்றுடன் எவ்வாறு முன்னகர்வுகளை மேற்கொள்வது என்பது தொடர்பில் சிவில் அமைப்புக்கள் கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளது.

இலங்கை நிலவரம்- செவ்வாயன்று அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு இந்திய அரசு அழைப்பு!தமிழர் நிலைமை குறித்துதி.மு.கவும் அ.தி.மு.கவும் வேண்டுகோள்

www.pungudutivuswiss.com



எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கை நெருக்கடி தொடர்பான அனைத்துகட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹ்லாட் ஜோசி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்கிழமை இலங்கை நெருக்கடி தொடர்பான அனைத்துகட்சி கூட்டத்திற்கு இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரஹ்லாட் ஜோசி தெரிவித்துள்ளார்

17 ஜூலை, 2022

விக்னேஸ்வரன் கூட்டமைப்பின் பேச்சாளர் அல்ல

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடு  நிலை வகிக்கும் எனக் கூறுவதற்கு விக்கினேஸ்வரன்  தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் அல்ல.இதுதொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 19ஆம் திகதி கலந்துரையாட இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களை ஆதரிக்கும் விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நடு நிலை வகிக்கும் எனக் கூறுவதற்கு விக்கினேஸ்வரன் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் அல்ல.இதுதொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்வரும் 19ஆம் திகதி கலந்துரையாட இருக்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்

வாக்கெடுப்பு குறித்து கூட்டமைப்பும் நாங்களும் ஒரே நிலைப்பாட்டில்

www.pungudutivuswiss.com


புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதென்ற நிலைப்பாட்டில் தற்போதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்கள் கூட்டணியும் உள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்கள் எம்முடன் கலந்துரையாடி எமது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில்  தமது நிலைப்பாடு மாறலாம்  என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் நடுநிலை வகிப்பதென்ற நிலைப்பாட்டில் தற்போதுவரை தமிழ் தேசிய கூட்டமைப்பும் தமிழ் மக்கள் கூட்டணியும் உள்ளன. ஜனாதிபதி வேட்பாளர்கள் எம்முடன் கலந்துரையாடி எமது கோரிக்கைகளுக்கு இணக்கம் தெரிவிக்கும் பட்சத்தில் தமது நிலைப்பாடு மாறலாம் என சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்

ரணிலை ஆதரிக்கும் முடிவு எந்தக் கொள்கையின் அடிப்படையிலானது! மகிந்த தரப்புக்குள் வெடித்த சர்ச்சை

www.pungudutivuswiss.com
எதிர்வரும் 20ஆம் திகதி நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தெரிவின் போது, பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக நிறுத்துவதற்கு ஆதரவு வழங்குவதாக

கோட்டா கோ கம இப்போது ரணில் கோ கம என பெயர் மாற்றம் – ரணிலின் கதையை முடிக்க தயாராகும் போராட்டக்காரர்கள்-

www.pungudutivuswiss.com
காலிமுகத்திடல் போராட்ட மைதானத்தை விட்டு செயற்பாட்டாளர்கள் மக்கள் ஆதரவு இல்லாத ரணில் விக்கிரமசிங்க பதவியை விட்டு வெளியேறும் வரை வெளியேறமாட்டார்கள் எனவும் அவருக்கு

அநுரகுமாரவும் போட்டியில் குதித்தார்!

www.pungudutivuswiss.com


புதிய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதிய இடைக்கால ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவும் போட்டியிடுவார் என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்

யாருக்கும் ஆதரவில்லை - கைவிரித்தார் மைத்திரி!

www.pungudutivuswiss.com


 எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்த ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளதாக கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவதாக சஜித் அறிவிப்பு!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில்  சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட போவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் பக்கத்தில் சஜித் பிரேமதாச இதனைத் தெரிவித்துள்ளார்

ரணிலை ஜனாதிபதியாக்க மொட்டு முடிவு!

www.pungudutivuswiss.com


புதிய ஜனாதிபதி தெரிவிற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உத்தியோகப்பூர்வமாக தீர்மானித்துள்ளதுடன் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்க போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.

புதிய ஜனாதிபதி தெரிவிற்கான பாராளுமன்ற வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன உத்தியோகப்பூர்வமாக தீர்மானித்துள்ளதுடன் முன்னாள் அமைச்சர் டலஸ் அழகபெருமவிற்கு ஆதரவு வழங்க போவதில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டார்

14 ஜூலை, 2022

யேர்மனியில் மிகவும் சிறப்பாக நடாத்தப்பட்ட தமிழர் விளையாட்டு விழா - 2022 பதிவேற்றுனர்: திரு வேந்தனார் திகதி: 12 Jul, 2022

www.pungudutivuswiss.com
breaking


யேர்மனியில் தமிழர் விளையாட்டு விழா கொரோனா விசக்கிரிமியின் தாக்கம் காரணமாக இணர்டு வருடங்கள் தடைப்பட்டிருந்தது. இந்த வருடம் டோட்முன்ட் நகரத்தில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

குருந்தூர் மலை சட்டவிரோத ஆக்கிரமிப்பு! விகாரை உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் உடன் அகற்றுக - நீதிமன்றம் அதிரடி உத்தரவு

www.pungudutivuswiss.com

உள்ளிட்ட அனைத்து கட்டுமானங்களையும் அகற்றுமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

தமிழன் இல்லாத இடமுமில்லை கோத்தா போக இடமும் இல்லை

தேசியத்தலைவரினதும் போராளிகளினதும் தியாகத்தின் நிமித்தம் உலகெங்கும் தமிழர் பரந்து கோலோச்சுவது கோத்தபாயாவுக்கு பெரும்பிரச்சினையாம் . உலகின் செல்வந்த நாடுகள்

இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசு கோரிக்கை!

www.pungudutivuswiss.com


இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம்  பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

இலங்கையில் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக இலங்கைக்கான தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு சுவிஸ் அரசாங்கம் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது

13 ஜூலை, 2022

பிரித்தானிய பிரதமர் போட்டியில் இருந்து விலகிய சஜித் ஜாவித்!

www.pungudutivuswiss.com

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யும் போட்டியில் இருந்து சஜித் ஜாவித் விலகியுள்ளார். பிரித்தானிய பிரதமராக செயல்பட்டு வந்த போரிஸ் ஜோன்சன் தமது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், புதிய தலைவரை தெரிவு செய்யும் முயற்சியில் கன்சர்வேடிவ் கட்சி ஈடுபட்டு வருகிறது. தற்போது வரையில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முன்னிலை பெற்று வருகிறார். இந்த நிலையில் சஜித் ஜாவித் தலைவருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்யும் போட்டியில் இருந்து சஜித் ஜாவித் விலகியுள்ளார். பிரித்தானிய பிரதமராக செயல்பட்டு வந்த போரிஸ் ஜோன்சன் தமது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், புதிய தலைவரை தெரிவு செய்யும் முயற்சியில் கன்சர்வேடிவ் கட்சி ஈடுபட்டு வருகிறது. தற்போது வரையில் முன்னாள் நிதியமைச்சர் ரிஷி சுனக் முன்னிலை பெற்று வருகிறார். இந்த நிலையில் சஜித் ஜாவித் தலைவருக்கான போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்

அதிமுக 'மாஜி'க்களின் ரகசியங்கள்: பொன்னையன் ஆடியோவால் 'லீக்'

www.pungudutivuswiss.com
அ.தி.மு.க.,வில் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் தொடர்பான பல்வேறு ரகசியங்களையும், கட்சியின் மூத்த தலைவர் பொன்னையன் புட்டுபுட்டு வைக்கும் 'ஆடியோ' வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கை நெருக்கடி: பசில் ராஜபக்ஷ துபாய் செல்ல எதிர்ப்பு - விமான நிலையத்தில் நள்ளிரவுப் போராட்டம்

www.pungudutivuswiss.comபரணி தரன்
  • பிபிசி தமிழ்

SLAF-AN Antonov-32: என்ற குறியீடு அடங்கிய ராணுவ விமானத்தில் தப்பி ஓடினார் கோட்டா: மாலை தீவில் தரையிறங்கியது

www.pungudutivuswiss.com
இன்று(புதன் கிழமை) அதிகாலை இலங்கை நேரப்படி சுமார் 1 மணி அளவில், இலங்கை வான் படை விமானமான அன்டனோவ் 32 என்ற விமானத்தில் ஏறி கோட்டபாய மாலை தீவு நோக்கிச் சென்றுள்ளார்

கோத்தாவை வெளியே கலைக்குக:மாலைதீவினுள் அழுத்தம்

www.pungudutivuswiss.com
இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை மாலைத்தீவில் இருநது வெளியேறுமாறு மாலைத்தீவு சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குனர் தைய்யிப் ஷாஹிம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பங்கீட்டு அட்டைக்கே இனி எரிபொருள்!

www.pungudutivuswiss.com


இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் எனும் பங்கீட்டு முறைமை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட இருப்பதனால் உடனடியாக எரிபொருள் விநியோக அட்டையினை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் எரிபொருள் அட்டைக்கே எரிபொருள் விநியோகம் எனும் பங்கீட்டு முறைமை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்பட இருப்பதனால் உடனடியாக எரிபொருள் விநியோக அட்டையினை விரைவாக பெற்றுக்கொள்ளுமாறு யாழ்.மாவட்ட அரச அதிபர் க.மகேசன் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்

3 வீடுகளில் கொள்ளை - 10 பேர் கைது

www.pungudutivuswiss.com


கோப்பாய் பொலிஸ் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட முதன்மை சந்தேக நபர் மற்றும் நகை கடை உரிமையாளர், உடந்தையாக இருந்தவர்கள் என 10 பேர் யாழ்பபாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் மூன்று வீடுகளில் திருட்டு மற்றும் கொள்ளையில் ஈடுபட்ட முதன்மை சந்தேக நபர் மற்றும் நகை கடை உரிமையாளர், உடந்தையாக இருந்தவர்கள் என 10 பேர் யாழ்பபாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்

போராட்டக் குழுவினரின் நிபந்தனைகள்!

www.pungudutivuswiss.com


கோட்டா – ரணில் பதவி விலகியதை தொடர்ந்து ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தின் பதவி காலம் நிறைவடைவதற்குள் புதிய அரசியலமைப்பு மக்கள் வாக்கெடுப்புடன் உருவாக்கப்பட வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள போராட்டகாரர்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அரசியல் பழிவாங்கல், கொலை, காணாமலாக்கப்பட்ட விவகாரம் ஆகியவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கும் வகையில் விசேட பொறிமுறை வகுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து காலி முகத்திடல் போராட்டகாரர்கள் அரசியல் கட்சி தலைவர்கள், உறுப்பினர்களிடம் தமது யோசனைகளை முன்வைத்தனர்.

கோட்டா – ரணில் பதவி விலகியதை தொடர்ந்து ஸ்தாபிக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தின் பதவி காலம் நிறைவடைவதற்குள் புதிய அரசியலமைப்பு மக்கள் வாக்கெடுப்புடன் உருவாக்கப்பட வேண்டும். தற்போது கைது செய்யப்பட்டுள்ள போராட்டகாரர்கள், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அரசியல் பழிவாங்கல், கொலை, காணாமலாக்கப்பட்ட விவகாரம்

ஆட்டம் முடிந்தது - ஓட்டம் பிடித்தார் கோட்டா!

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ விமானமொன்றில் மாலைதீவிற்கு தப்பியோடியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ விமானமொன்றில் மாலைதீவிற்கு தப்பியோடியுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்று இலங்கை அதிகாரிகள் AFPக்கு உறுதிப்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

12 ஜூலை, 2022

முப்படைத் தளபதிகளை சந்தித்த ஜனாதிபதி

www.pungudutivuswiss.com



ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிலேயே உள்ளார் என்றும் நேற்றுக்  காலை முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார் எனவும், டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டிலேயே உள்ளார் என்றும் நேற்றுக் காலை முப்படை தளபதிகளை சந்தித்துள்ளார் எனவும், டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது.

11 ஜூலை, 2022

அதிமுக  கலவரம் பரபரப்பு 
ஓ பி ஏ  தலைமை அலுலகத்துக்கு  வந்துருக்கிறார்  ஈ பி எஸ்  பொதுக்குழு மேடைக்கு  சென்று கொண்டிருக்கிறார்  தீர்ப்பு  9 மணிக்கு  வருகிறது அதிமுக தலைமை அலுவலகத்துக்கு  ஒப்பி எஸ்  வந்துள்ளார்  வரும் வழியெங்கும்  தொண்டர்கள்  புடைசூழ   பாதுகாப்பு கொடுக்க  வெற்றி வீரனாக  வந்திருக்கிறார்  தலைமை அலுவலக்   முன்றலில் இரு அணிகளும்  மோதிக்கொண்டன  ஓ பி எஸ்  தலைமை அலுவலகத்தை நெருங்கும் பொது  ஈ பி எஸ்    காவலிகள்  கல்லெறிந்து  எதிர்த்தனர்  அதனை பொருட்படுத்தாமல் ஓ பி  எஸ்  துணிச்சலோடு  வந்து சேர்ந்துள்ளார்  ஓ பி  எஸ்  ஜெயலலிதா  செய்வது போன்று  மேலே  நின்று  கொ டி அசைத்து காய் அசைத்து  தொண்டர்களை  உற்சாகப்படுத்துகிறார்   ஸ் டாலின் அரசு   என்று  தெரிந்து கொண்டே வேண்டுமென்றே  முன்பாதுகாப்பு  போதியளவு போலீசாரை வரவழைக்காமல்  தவிர்த்துவிடடதோ  என்ற  எண்ணம்  வருகிறது  அதிமுக வரலாற்றில் இது போன்ற  ஒரு நாள்  சம்பவங்கள்  நடந்ததாக  பதிவில்லை    தொண்டர்கள்  குண்டர்களின் தொகைக்கு  போதியளவு  போலீசார்  இல்லாமல் இருப்பது   தமிழக அரசுக்கு  அபகீர்த்தியை உண்டுபண்ணியுள்ளது   அவ்வை  சண்மு கம்  சாலை முழுவது  இரு அணிகளுக்கு பலத்த மோதல் கல் வீசிச்சுக்கள்  இடம்பெறுகின்றன  அனைத்து வாகனங்களின் வாகனகளினதும் கண்ணாடிகள்  உடைக்கப்பட்டுள்ளன .ஈ பி எஸ்  இந்த  போசுடர்கள்  எரிக்கப்பட்டு கிழிக்கப்பட்டுள்ளன ஓ பி எஸ்  வரும்போது  அவரது தொண்டர்கள்  ஓ பி எஸ்ஸை  சூழ்ந்து  பாதுகாப்பு கொடுத்து உளீ  செல்ல  வழிசமைத்தார்கள் 

10 ஜூலை, 2022

கோட்டா எங்கே? - நீடிக்கும் மர்மம்.

www.pungudutivuswiss.com


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுத் தப்பிச் சென்ற நிலையில், அவர் சென்ற இடம் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது உத்தியோகபூர்வ இல்லத்தை விட்டுத் தப்பிச் சென்ற நிலையில், அவர் சென்ற இடம் பற்றிய ஆதாரபூர்வமான தகவல்கள் இல்லை

9 ஜூலை, 2022

அம்பூலன்ஸ் வண்டியில் தப்பித்த கோட்டபாய: மெதமுலானையில் கோட்டபாய பதுங்கி உள்ளார்

www.pungudutivuswiss.com
கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில், 3 அடுக்கு பாதுகாப்பை தகர்த்து மக்கள் உள்ளே நுளைந்த வேளை.அங்கிருந்து வேகமாக புறப்பட்ட ஒரு அம்பூலன்ஸ் வாகனம் தொடர்பாக பலர்

பதவி விலகுவதற்கு தயார்! ரணில் அதிரடி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
நாடாளுமன்றில் சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைத்ததன் பிறகு தான் பதவி விலகுவதற் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு

இன்றைய போராட்டங்களுக்கு கூட்டமைப்பும் ஆதரவு!

www.pungudutivuswiss.com


நாடளாவிய ரீதியில் இன்று  முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் மற்றும் கோட்ட கோ ஹோம் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பூரணமான ஆதரவினை அளிப்பதாக அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் இன்று முன்னெடுக்கப்படும் பூரண ஹர்த்தால் மற்றும் கோட்ட கோ ஹோம் போராட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது பூரணமான ஆதரவினை அளிப்பதாக அறிவித்துள்ளது

8 ஜூலை, 2022

டி. ராஜேந்தர்- நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்உருத்திரமாரன் சந்திப்பு!

www.pungudutivuswiss.com



மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வருகை தந்திருந்த தமிழக பன்முக கலைஞரான திரைப்பட இயக்குனர், ஈழத்தமிழர் ஆதரவாளர் திரு.டி.ராஜேந்தர் அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்திருந்தார்.

மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு வருகை தந்திருந்த தமிழக பன்முக கலைஞரான திரைப்பட இயக்குனர், ஈழத்தமிழர் ஆதரவாளர் திரு.டி.ராஜேந்தர் அவர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சந்தித்து நலம் விசாரித்திருந்தார்

நாளை எந்த பேருந்துகளையும் இயக்கப் போவதில்லை! வெளியானது அறிவிப்பும்பரம்

www.pungudutivuswiss.com

கொழும்பில் மேலதிகமாக 5 ஆயிரம் இராணுவம், 3 பொலிசார் குவிப்பு

www.pungudutivuswiss.com


எதிர்வரும் ஒன்பதாம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி பாரிய ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ள நிலையில், கொழும்பின் பாதுகாப்புக்கு 8 ஆயிரம் பொலிஸாரும், இராணுவத்தினரும் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

எதிர்வரும் ஒன்பதாம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி பாரிய ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ள நிலையில், கொழும்பின் பாதுகாப்புக்கு 8 ஆயிரம் பொலிஸாரும், இராணுவத்தினரும் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

நாளை “கோதா-நீ-போப்பா” போராட்டம்!

www.pungudutivuswiss.com


9ம் திகதி சனிகிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி  நகர்வது, சுற்றி வளைப்பது, மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருகளுக்கு வந்த அமைதியான முறையில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என எதிர்கட்சிகள், காலிமுக போராளிகள், சிவில் சமூகத்தினர் ஆகியோருக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எதிரணி கட்சிகள் சார்பில் கலந்துக்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது,

9ம் திகதி சனிகிழமை கொழும்பில் ஜனாதிபதி செயலகத்தை நோக்கி நகர்வது, சுற்றி வளைப்பது, மற்றும் நாடெங்கும் தமது ஊர்களில் தெருகளுக்கு வந்த அமைதியான முறையில் அரசு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவது என எதிர்கட்சிகள், காலிமுக போராளிகள், சிவில் சமூகத்தினர் ஆகியோருக்கு இடையில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எதிரணி கட்சிகள் சார்பில் கலந்துக்கொண்ட தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் ஊடகங்களுக்கு கூறியதாவது

மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகம்! - ஆசிரியருக்கு விளக்கமறியல் நீடிப்பு.

www.pungudutivuswiss.com

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை மாணவிகள் பலர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

அரசுக்கு எதிரான போராட்டத்தை ஆரம்பித்தனர் பௌத்த பிக்குகள்

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவையும் அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மத குருமாரும் வீதியில் இறங்கி போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபஷவையும் அரசாங்கத்தையும் பதவி விலகக் கோரி தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிராக மத குருமாரும் வீதியில் இறங்கி போராட்டங்களை ஆரம்பித்துள்ளனர்

1 ஜூலை, 2022

அங்கீகரிக்கப்பட்ட நியமங்களைப் பின்பற்றும் தரப்பினருக்கு மாத்திரமே அமெரிக்க நிதியுதவி!

www.pungudutivuswiss.com


உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நியமங்களைப் பின்பற்றும் தரப்பினருக்கு மாத்திரமே தமது நாடு நிதியுதவிகளை வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு நியமங்களைப் பின்பற்றும் தரப்பினருக்கு மாத்திரமே தமது நாடு நிதியுதவிகளை வழங்கும் என்று இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்

22 ஆவது திருத்தம் - சுதந்திரக் கட்சி நிராகரிப்பு!

www.pungudutivuswiss.com


அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மக்களை ஏமாற்றும் மோசடி நடவடிக்கையாகும். 19 ஆம் திருத்தத்தை மீண்டும் ஸ்தாபிப்பதாக ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைர் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் மக்களை ஏமாற்றும் மோசடி நடவடிக்கையாகும். 19 ஆம் திருத்தத்தை மீண்டும் ஸ்தாபிப்பதாக ஜனாதிபதியின் வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது. அதனால் இதனை நாங்கள் முற்றாக நிராகரிக்கின்றோம் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உபதலைர் முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்

அம்பாள்குளத்திலிருந்து இளைஞனின் சடலம் மீட்பு!

www.pungudutivuswiss.com

அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்வம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.
நீராட சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் ஊற்றுப்புலம் பகுதியில் வசித்து வந்துள்ளார்.

அம்பாள்குளத்திலிருந்து இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்வம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. நீராட சென்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மாங்குளம் பகுதியை சேர்ந்த குறித்த இளைஞன் ஊற்றுப்புலம் பகுதியில் வசித்து வந்துள்ளார்

ad

ad